Archive for the ‘எபினேசர்’ Category

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி-தலித் என்றும் கூறி மிரட்டியது (2)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சிதலித் என்றும் கூறி மிரட்டியது (2)

Pastor Didde Ebenezer,victim- modus operandi-TV9 video

2015ல் ஜாமீனில் வெளியே வந்து, தனது செக்ஸ்குற்றங்களை தொடர்ந்து செய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].

Pastor Didde Ebenezer, victim complains - many-TV9 video

மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொதுகூட்டத்தில் வெளிவந்த உண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.

Edde Ebenezer- woman-explains-how-she was cheated-3

இரட்டை வேடம் போட்ட செக்ஸ் குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Nirodh recovered

நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.

Nude worship allowed in Christianity - Mail online

கிருத்துவத்தில் ஏன் நிர்வாண பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!

Nude worship allowed in Christianity - theology

எட்டி எபனேசர். தான் எஸ்.சி / தலித் என்ற ஆயுதத்தையும் பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன்ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார்”.

© வேதபிரகாஷ்

07-11-2017

Pastor Didde Ebenezer,makes publicity himself.

[1] TheNewsMinute, Women tell tales of abuse by village church pastor to Andhra women’’s commission chief, Thursday, October 19, 2017. 09.16 IST.

[2] http://www.thenewsminute.com/article/women-tell-tales-abuse-village-church-pastor-andhra-womens-commission-chief-70211

[3] https://www.youtube.com/watch?v=5p3ckYfGaXE

 

[4] https://www.youtube.com/watch?v=vCIHBMqY2zw

[5] https://www.youtube.com/watch?v=lbIgpYe75PQ

[6] Asianet-newsable, Andhra pastor sexually abused women in the name of church, By Team Asianet Newsable | 01:47 PM October 19, 2017.

[7] http://newsable.asianetnews.com/andhra-pradesh/andhra-pastor-sexually-abused-women-in-the-name-of-evil-church

[8] https://in.linkedin.com/in/pastor-d-ebenezer-didde-5796a414

[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.

[10]  http://www.dailymail.co.uk/news/article-2556548/And-naked-not-ashamed-Church-allows-nude-worship.html

[11] The Hindu,  Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003

SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.

[12] http://www.thehindu.com/2003/03/05/stories/2003030501410400.htm

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

திசெம்பர் 4, 2010

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

நடிக்கும் அரசியல்வாதியும், அரசியல்வாதி-நடிகனும்: நடிகர் நடிப்பார், வசனம் பேசி நடிப்பார், அதுதான் அவரின் தொழில். அரசியல்வாதியும் அப்படியே. ஆனால், தமிழ்நாட்டில், இருவரும் ஒருவராக இருப்பதால், இவர்கள் பேசுவது இவர்களுக்கே தெரியாது எனலாம், அதாவது, குடித்து போதையில் உலறுவதைப் போல, ஏதாவது பேசுவார்கள். கருணாநிதி,” என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் / மழலைச் செல்வங்கள் “தாத்தா, தாத்தாஎன என்னை சூழ்ந்து கொண்டு கைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்”, என்று பேசியதற்கும்[1], விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றதும், விவேக் ஜோக் போல வேடிக்கையாக இருந்தது.

 

செக்யூலரிஸ போதையும், கிருத்துவ வன்புணர்ச்சிகளும்: செக்யூலரிஸம் என்று வந்துவிட்டால், இந்திய அரசியல்வாதிகளுக்கு கிரக்கம், பித்தம், பைத்தியம், போதை, இழுப்பு, ஞாபக மறதி என்ற சகல வியாதிகளும் வந்துவிடும். இவர்களே டாக்டர்களாகி விடுவர், டாக்டர்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவர். நர்ஸுகளின் கதி அதோகதிதான். ஆனால், “நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான்”, என்று பேசியபோது, ஏன் அத்தனை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற கிருத்துவர்கள், தமிழகத்திலேயே, லட்சக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை காமக்குரூர பாலியல் வன்புணர்வர்களுக்கு உடபடுத்தினார்கள்[2] என்று விளக்கவில்லை. அங்கு அன்பு இல்லையா, இல்லை, அன்பே காமமாக இருந்ததால், மயக்கத்தில் மறந்து விட்டாரா?. இவர்களுக்கு டாக்டர் பட்டங்களையும், சிறுவர்களுக்கு பைபிள்களையும் கொடுப்பதில்[3] என்ன விஷயம் உள்ளது?

நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்: சென்னையில், நடந்த நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய தேமுதிக தலைவர் விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றது வேடிக்கையாக இருந்தது. சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செயல்படும் சர்வதேச தேவாலய மேலாண்மை நிலையம் (ஐஐசிஎம்) விஜயகாந்துக்கு வழங்கியது. சென்னை எம்எம்சி வளாகத்தில் இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் சனிக்கிழமை[4] நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை நிலையத்தின் நிர்வாகி ஜான் வில்லியம்ஸ் பட்டத்தை வழங்கினார்[5].

சிறுபான்மையினர் இல்லை. நீங்களும் பெரும்பான்மையினரே. விஜயகாந்த் பேசியது: டாக்டர் பட்டம் வழங்கி என்னை கௌரவித்த திருச்சபைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வழங்கும் டாக்டர் பட்டம் தங்களுக்கே கிடைத்து விட்டதாக நினைத்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்த கட்சித் தொண்டர்களுக்கு இந்த பட்டத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.  சிறுபான்மையினர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். முதலில் சிறுபான்மையினர் என்பதே இல்லை. நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்களும் பெரும்பான்மையினரே. நீங்கள் பெரும்பான்மையினராகும் செய்தி இன்னும் 7 மாதத்தில் தெரிந்து விடும்.   எனக்கு இதுநாள் வரை டாக்டர் பட்டம் கிடைத்துவிடக் கூடாது என்று சிலர் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி இந்த திருச்சபை எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எப்படி வந்தது: இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, கிருத்துவத்தில் எதுவும் நடக்கும். அரசியல் ரீதியில் உலகம் முழுவதும் நடத்தப் படும் அந்த மதம் எதையும் செய்யக்கூடியது[6]. ஜெயலலிதாவிற்கு கொடுத்தபோது எப்படி கொடுத்தார்கள்? திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை[7]. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்[8].

இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார்: நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். எனக்கு இந்த டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இல்லாதவர்களுக்கு நான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்குகிறேன். இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார் என்று என்னை பற்றி தவறாக சிலர் பேசுகின்றனர். ஆனால் நான் இல்லாத ஏழைகளுக்குத்தான் உதவி செய்கிறேன்.  நான் ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்பேன் என்று கூறி வருகிறேன். வறுமையை ஒழிப்பேன் என்றால் வருமானத்தை பெருக்குவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

என்னை யாராலும் அழிக்க முடியாது: என்னை எப்படியாவது அசைத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். நான் ஆலமரம். எனக்கு விழுதாக தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் அழிக்க முடியாது. அதே போல் நான் இருக்கும் வரை தொண்டர்களை அழிய விட மாட்டேன் என்றார் விஜயகாந்த்.  நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதிஷ், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஏசிஐ சபை பேராயர் எபினேசர், தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் எஸ். மைக்கேல் ராயப்பன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருத்துவர்கள் விஜய்காந்திடம் எதிர்பார்ப்பது என்ன? கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் “டாக்டர்” பட்டங்களை காசு கொடுத்தே / நிதியுதவி செய்தே / பணத்தை தானம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம். “டாக்டர் ஆஃப் டிவினிடி” என்று பட்டம் பெற்று “டாக்டர்” பட்டத்துடன் உலாவருவர். ஆக, அவர்கள் விருது போல கொடுக்கிறார் என்றால், ஏதோ எதிர்பார்த்து செய்கின்றனர் என்று தெரிகிறது. முன்பு ஜெயலலிதாவிற்கு படம் / விருது கொடுத்ததும் “மதமாற்ற”ச் சட்டத்தை திரும்பப்பெற்றுவிட்டார். இனி விஜய்காந்த என்ன செய்வார் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்[9].

வேதபிரகாஷ்

© 04-12-2010


[1] தினமலர், என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் : முதல்வர் அறிக்கை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2010,23:27 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 04,2010,00:03 IS

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138913

[3] வேதபிரகாஷ், மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு , https://christianityindia.wordpress.com/2010/12/03/conversion-attempts-at-government-schools-tamilnadu/

[4] சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. ……என்றுள்ளது. சனிக்கிழமையே வரவில்லையே, அவ்வளவு அட்வான்ஸாக கொடுத்து விட்டார்களா, இல்லை நடு ராத்திரி கொடுத்தார்களா? ஒருவேளை அர்த்த ராத்திரி ஜெபநிகழ்ச்சியில் கொடுத்தார்களோ என்னமோ?

[5] தினமணி, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன், First Published : 04 Dec 2010; http://www.dinamani.com/edition/story.aspx?Title=………….SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

[6] “டா வின்சி கோட்” போன்ற படங்கள் அந்த உண்மைகளை வெளிப்படுத்திக் காட்டியதால்தான், அப்படங்கள் இந்தியாவில் தடைசெய்ய வேண் டும் என்று கலாட்டா செய்தார்கள் கிருத்துவர்கள். ஏனென்றால், அத்தகைய உண்மைகள் இந்தியர்கள் \அறிந்து கொள்ளக்கூடாது என்பதுதான் சர்ச்சின் திட்டம்.

[8] டாக்டர் பட்டம் இலவசமாகக் கொடுக்கப் பட்டதா, அல்லது விஜயகாந்த எவ்வளவு காசு கொடுத்தார் / பெற்றார், என்ற விஷயங்களை அவர்கள் தாம் சொல்லவேண்டும்.

[9] வேதபிரகாஷ், சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது!, https://christianityindia.wordpress.com/2010/11/25/doctorates-conferrerd-by-the-churches-on-indians/