Posts Tagged ‘ஹாரிஸ் ஜெயராஜ்’

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

திசெம்பர் 4, 2010

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

நடிக்கும் அரசியல்வாதியும், அரசியல்வாதி-நடிகனும்: நடிகர் நடிப்பார், வசனம் பேசி நடிப்பார், அதுதான் அவரின் தொழில். அரசியல்வாதியும் அப்படியே. ஆனால், தமிழ்நாட்டில், இருவரும் ஒருவராக இருப்பதால், இவர்கள் பேசுவது இவர்களுக்கே தெரியாது எனலாம், அதாவது, குடித்து போதையில் உலறுவதைப் போல, ஏதாவது பேசுவார்கள். கருணாநிதி,” என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் / மழலைச் செல்வங்கள் “தாத்தா, தாத்தாஎன என்னை சூழ்ந்து கொண்டு கைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்”, என்று பேசியதற்கும்[1], விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றதும், விவேக் ஜோக் போல வேடிக்கையாக இருந்தது.

 

செக்யூலரிஸ போதையும், கிருத்துவ வன்புணர்ச்சிகளும்: செக்யூலரிஸம் என்று வந்துவிட்டால், இந்திய அரசியல்வாதிகளுக்கு கிரக்கம், பித்தம், பைத்தியம், போதை, இழுப்பு, ஞாபக மறதி என்ற சகல வியாதிகளும் வந்துவிடும். இவர்களே டாக்டர்களாகி விடுவர், டாக்டர்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவர். நர்ஸுகளின் கதி அதோகதிதான். ஆனால், “நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான்”, என்று பேசியபோது, ஏன் அத்தனை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற கிருத்துவர்கள், தமிழகத்திலேயே, லட்சக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை காமக்குரூர பாலியல் வன்புணர்வர்களுக்கு உடபடுத்தினார்கள்[2] என்று விளக்கவில்லை. அங்கு அன்பு இல்லையா, இல்லை, அன்பே காமமாக இருந்ததால், மயக்கத்தில் மறந்து விட்டாரா?. இவர்களுக்கு டாக்டர் பட்டங்களையும், சிறுவர்களுக்கு பைபிள்களையும் கொடுப்பதில்[3] என்ன விஷயம் உள்ளது?

நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்: சென்னையில், நடந்த நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய தேமுதிக தலைவர் விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றது வேடிக்கையாக இருந்தது. சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செயல்படும் சர்வதேச தேவாலய மேலாண்மை நிலையம் (ஐஐசிஎம்) விஜயகாந்துக்கு வழங்கியது. சென்னை எம்எம்சி வளாகத்தில் இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் சனிக்கிழமை[4] நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை நிலையத்தின் நிர்வாகி ஜான் வில்லியம்ஸ் பட்டத்தை வழங்கினார்[5].

சிறுபான்மையினர் இல்லை. நீங்களும் பெரும்பான்மையினரே. விஜயகாந்த் பேசியது: டாக்டர் பட்டம் வழங்கி என்னை கௌரவித்த திருச்சபைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வழங்கும் டாக்டர் பட்டம் தங்களுக்கே கிடைத்து விட்டதாக நினைத்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்த கட்சித் தொண்டர்களுக்கு இந்த பட்டத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.  சிறுபான்மையினர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். முதலில் சிறுபான்மையினர் என்பதே இல்லை. நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்களும் பெரும்பான்மையினரே. நீங்கள் பெரும்பான்மையினராகும் செய்தி இன்னும் 7 மாதத்தில் தெரிந்து விடும்.   எனக்கு இதுநாள் வரை டாக்டர் பட்டம் கிடைத்துவிடக் கூடாது என்று சிலர் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி இந்த திருச்சபை எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எப்படி வந்தது: இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, கிருத்துவத்தில் எதுவும் நடக்கும். அரசியல் ரீதியில் உலகம் முழுவதும் நடத்தப் படும் அந்த மதம் எதையும் செய்யக்கூடியது[6]. ஜெயலலிதாவிற்கு கொடுத்தபோது எப்படி கொடுத்தார்கள்? திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை[7]. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்[8].

இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார்: நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். எனக்கு இந்த டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இல்லாதவர்களுக்கு நான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்குகிறேன். இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார் என்று என்னை பற்றி தவறாக சிலர் பேசுகின்றனர். ஆனால் நான் இல்லாத ஏழைகளுக்குத்தான் உதவி செய்கிறேன்.  நான் ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்பேன் என்று கூறி வருகிறேன். வறுமையை ஒழிப்பேன் என்றால் வருமானத்தை பெருக்குவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

என்னை யாராலும் அழிக்க முடியாது: என்னை எப்படியாவது அசைத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். நான் ஆலமரம். எனக்கு விழுதாக தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் அழிக்க முடியாது. அதே போல் நான் இருக்கும் வரை தொண்டர்களை அழிய விட மாட்டேன் என்றார் விஜயகாந்த்.  நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதிஷ், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஏசிஐ சபை பேராயர் எபினேசர், தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் எஸ். மைக்கேல் ராயப்பன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருத்துவர்கள் விஜய்காந்திடம் எதிர்பார்ப்பது என்ன? கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் “டாக்டர்” பட்டங்களை காசு கொடுத்தே / நிதியுதவி செய்தே / பணத்தை தானம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம். “டாக்டர் ஆஃப் டிவினிடி” என்று பட்டம் பெற்று “டாக்டர்” பட்டத்துடன் உலாவருவர். ஆக, அவர்கள் விருது போல கொடுக்கிறார் என்றால், ஏதோ எதிர்பார்த்து செய்கின்றனர் என்று தெரிகிறது. முன்பு ஜெயலலிதாவிற்கு படம் / விருது கொடுத்ததும் “மதமாற்ற”ச் சட்டத்தை திரும்பப்பெற்றுவிட்டார். இனி விஜய்காந்த என்ன செய்வார் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்[9].

வேதபிரகாஷ்

© 04-12-2010


[1] தினமலர், என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் : முதல்வர் அறிக்கை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2010,23:27 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 04,2010,00:03 IS

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138913

[3] வேதபிரகாஷ், மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு , https://christianityindia.wordpress.com/2010/12/03/conversion-attempts-at-government-schools-tamilnadu/

[4] சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. ……என்றுள்ளது. சனிக்கிழமையே வரவில்லையே, அவ்வளவு அட்வான்ஸாக கொடுத்து விட்டார்களா, இல்லை நடு ராத்திரி கொடுத்தார்களா? ஒருவேளை அர்த்த ராத்திரி ஜெபநிகழ்ச்சியில் கொடுத்தார்களோ என்னமோ?

[5] தினமணி, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன், First Published : 04 Dec 2010; http://www.dinamani.com/edition/story.aspx?Title=………….SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

[6] “டா வின்சி கோட்” போன்ற படங்கள் அந்த உண்மைகளை வெளிப்படுத்திக் காட்டியதால்தான், அப்படங்கள் இந்தியாவில் தடைசெய்ய வேண் டும் என்று கலாட்டா செய்தார்கள் கிருத்துவர்கள். ஏனென்றால், அத்தகைய உண்மைகள் இந்தியர்கள் \அறிந்து கொள்ளக்கூடாது என்பதுதான் சர்ச்சின் திட்டம்.

[8] டாக்டர் பட்டம் இலவசமாகக் கொடுக்கப் பட்டதா, அல்லது விஜயகாந்த எவ்வளவு காசு கொடுத்தார் / பெற்றார், என்ற விஷயங்களை அவர்கள் தாம் சொல்லவேண்டும்.

[9] வேதபிரகாஷ், சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது!, https://christianityindia.wordpress.com/2010/11/25/doctorates-conferrerd-by-the-churches-on-indians/