மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு

மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு

பைபிளைப் படித்தால் பாதிரிகள் மாதிரி கெட்டுப்போவார்கள்: தென் மாவட்டங்ளில் கிருத்துவர்கள் மதம் மாற்றும் செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை[1]. மேலும் இப்பொழுது கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர் பல குற்றங்களில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்[2]. குறிப்பாக, சிறுவர்-சிறுமியர்கள் பாலியலில் ஈடுபட்டு[3], பிஞ்சு உடல்களை காமத்தீயினால் வருத்து எடுத்துள்ளனர்[4]. குழந்தை பாப்பகங்களின் காமக்களியாட்டங்கள் வெட்டவெளிச்சாமாகி விட்டன[5]. அதை மறைப்பதற்காக இப்படி நாடகம் ஆடுகின்றனரா, திசைத் திருப்புகின்றனரா என்பது போகப்போகத் தெரியும்[6]. முதலில் அவர்கள் தமது கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களை நல்வழி படுத்தவேண்டிய நிலையில் உள்ளார்கள்[7]. முதலில் சிறுவர்-சிறுமியர்களை ஒழுங்காக நடத்தட்டும். அதை விட்டிவிட்டு பைபிளைக் கொடுத்தால் என்ன வரும்? அதைப் படித்து கெட்டுதான் போவார்கள்.

புகைப்படங்கள்: தினமலர். நன்றியுடன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

பந்தல்குடி பள்ளிகளில் பைபிள் விநியோகம்[8]: உடலைக் கெடுத்தப் பிறகு, பைபிளைக் கொடுத்து உள்ளங்களை கெடுக்க முடிவு செய்துள்ளனர் போலும். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர்.

புகைப்படங்கள்: தினமலர். நன்றியுடன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

பைபிள் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம்: கேடுகெட்ட கிருத்துவர்கள், கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்துள்ளனர். அப்படி நல்லது நடக்கும் என்றால், முதலில் இந்த பாலியலில் ஈடுபட்டு கேடுகெட்ட காமக்குரூர செயல்களை தடுத்திருக்கலாமே? புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர். அதாவது அவர்களுக்கே தெரியாமல் ஏதோ தாங்கள் கிருத்துவை ஏற்றுக் கொண்டோம், என்பது போல அப்படி கையெழுத்து வாங்குவதும் அடாவடி செயல்தான்.

புகைப்படங்கள்: தினமலர். நன்றியுடன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர்களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்றாண்டுகளாக நடந்து வரும் அயோக்கியத் தனம்: இந்து பெயர்களை வைத்துக் கொண்டுள்ள இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிகிறது.

  • “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’
  • “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன்.
  • மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது.

இப்படி கூறியுள்ளதே, முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. பொறுப்புள்ள ஆசிரியர்கள், இதில் ஈடுபட்டுள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது. அதாவது, காசுக்காக இப்படி குழந்தைகளைக் கெடுக்க தயாரகி விட்டார் என்று தெரிகிறது. இனி, ஸ்பெக்டரம் போல, இந்த ஊழலையும் ஆராய வேண்டியதுதான். சென்ற மாதத்தில், இதே மாதிரியான நிகழ்ச்சி உள்ளது.

அரசு பள்ளியில் மத பிரசாரம் முன்சிறையில் பா.ஜ., மறியல்[9]: புதுக்கடை: முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ராஜம்மேரி. இவர் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய “ஆயிரம் ஸ்தோத்திர பலிகள்‘, “குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருமறைஆகிய இரண்டு புத்தகங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் கிறிஸ்தவ போதனை புத்தகங்களை வழங்கி, மாணவர்களை மதம் மாற்ற தூண்டும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. முன்சிறை அரசு பள்ளி முன் நடந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கமலதாஸ் தலைமை வகித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யப்படுவார் எனவும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது: பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய பொதுச்செயலாளர் வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாலத்தடி விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார், பொதுச்செயலாளர் ஐயப்பதாஸ், மாவட்ட இந்து முன்னணி தலைவர் குழிச்சல் செல்லன், விளாத்துறை நகர தலைவர் மோகன், பைங்குளம் நகர தலைவர் சந்தோஷ்குமார், நகர இளைஞரணி தலைவர் பிஜூ, ஏழுதேசம் நகர தலைவர் ராஜகுமார், கொல்லங்கோடு பஞ்., துணைத்தலைவர் பத்மகுமார், முன்சிறை பஞ்., யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ராம்குமார், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன் வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. சம்பவ இடம் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன், குளச்சல் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் அகியோரிடம் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யப்படுவார் எனவும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கு சந்திரகுமார் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்சிறையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.அரசு கல்வி நிறுவனங்களில் மத பிரசாரத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கடை நகர காங்., தலைவர் துரை தெரிவித்தார்.

ராஜம் மேரியும், மதபோதை குற்றவாளிகளும்: ராஜம் மேரியின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மதபோதையில் இருக்கும் அவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் அத்தகைய வேலையை செய்து கொண்டுதான் இருப்பார்கள். எப்படி போதை மருந்து அடிமைகள், குடிப்பவர்கள், செக்ஸ் விரும்பிகள் முட்ப்ஹ்பலிய்போர் அட்ப்ஹ்ப்ட்ப்ஹ்பகைய வேலைப்களை செய்கின்ப்றனரோ, மத்பம் மாற்றிகளுப்ம் அப்படியே.

வேதபிரகாஷ்

© 03-12-2010


[4] வேதபிரகாஷ்,மாணவியருக்கு பாலியல் தொந்தரவு :கிறிஸ்தவ போதகரின் காப்பகம் மூடல், https://christianityindia.wordpress.com/2010/09/28/மாணவியற்கு-பாலியல்-தொந/

https://christianityindia.wordpress.com/2010/10/14/ குழந்தைகள்-காப்பகம்–கடத/

[8] தினமலர், மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு, டிசம்பர் 02,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

https://christianityindia.wordpress.com/2010/01/10/ கிருத்துவர்கள்-பாலியல்-க/

[9] தினமலர், அரசு பள்ளியில் மத பிரசாரம் முன்சிறையில் பா.ஜ., மறிய, நவம்பர் 04,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119705

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , ,

ஒரு பதில் to “மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு”

  1. கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்! & Says:

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: