Posts Tagged ‘லவ் ஜிஹாத்’

கிருத்துவ-துலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவை -ஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

ஏப்ரல் 23, 2019

கிருத்துவதுலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவைஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

Jihad, Crusade, ideology-2

அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியன: பாலஸ்தீன படுகொலைகள், பொகோ ஹராம் குரூர கொலைகள், ஐசிஸ் கொடூர-குரூர கொலைகள் முதலியவை போன்று, இலங்கை குண்டுவெடிப்புகள் மக்களை பாதித்துள்ளது. இலங்கையில், இனம், மதம் முதலிய காரணிகளால் போர், கொலை முதலியவை நடந்தது தெரிந்த விசயமாக இருந்தாலும், சில தனிமனிதர்கள், குழுக்கள் முதலியவர்களால் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணாக்கான மக்கள் பலியாவது, வன்முறைக்கு பாதிக்கப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கிருத்துவர் மற்றும் துலுக்கர் இடைகாலத்திலிருந்தே, அத்தகைய பகைமை வளர்த்து வந்துள்ளார்கள். இஸ்ரேல்-பாலஸ்தீனம் வைத்து, இரு கும்பல்களும், வன்முறை, குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றெல்லாம் வளர்த்தன. அமெரிக்க இரட்டை கோபுர குண்டுவெடிப்பு முதலியவையும் அவ்வாறே, அப்பாவி மக்களை கொன்றது. ஜெருசலேத்தை மீட்போம் என்று ஆரம்பித்த, மதசண்டைகள், இப்பொழுதும், வேறு வடிவங்களில் நடந்தேறி வருகின்றன. தொடர்ந்து துலுக்கர் தீவிரவாதத்தில் ஈடுபட்டதால், ஒருநிலையில், தீவிரவாதத்தை அவர்களுடன் தொடர்பு படுத்தப் பட்டது.

Crusade, ideology, propaganda

இறையியலை அடிப்படைவாதத்துடன் இணைத்து, வன்முறையுடன் தீவிரவாதத்தில் முடிந்த நிலை: தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்[1], இதெல்லாம் எப்படி கவனித்தால், குண்டு வைத்தவன், குண்டினாலேயே சாவான் போலும்! தற்கொலை செய்பவன் மறுபடியும் பிறப்பானா? சொர்க்கம் எப்படி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. வினை, செய்வினை, செயபாட்டு வினை, எதிர்வினை, தொல்வினை என்ற நம்பிக்கைகள் வளர்ந்து விட்டதும் வினையென்று தான் சொல்ல வேண்டும்! நம்பிக்கையின் பெயரில், இப்படி நம்பிக்கையாளர்கள் கொன்றுக் கொள்வதை, குவிப்பதை எப்படி ஜேஹோவா, அல்லா ஏற்றுக் கொள்கிறார், என்று தெரியவில்லை. முன்பு இஸ்லாமிக் குண்டு என்றார்களே, அதுதானா இது? இனி ஜேஹோவா, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து குண்டுகள் எல்லாம் வருமா? ஆம்கெதன் போர் [Armageddon War ] வருமா, யார் வருவாரோ, வந்தால் போரில் வெல்வாரா, குண்டுக்கு பதில் குண்டா, அணுகுண்டா, கத்தியா? எது? இவையெல்லாமே, பைபிள் மற்றும் குரானில் உள்ள வசனங்கள் மீது ஆதாரமாக எழுப்பப் பட்ட விசயங்கள், கேள்விகள் மற்றும் விவகாரங்கள் ஆகும்.

Crusade, ideology, propaganda-2

நாத்திகர், இந்துவிரோதிகள் இப்பிரச்சினையைக் குழப்புதல்: இறைவன் பெயரால் புனித போர்கள் நடத்துவதால், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்கள் மட்டும் இறப்பதில்லை, உங்களது இறைவனே இறக்கிறான்! கடவுள் நம்பிக்கையாளன், என் கடவுள் தான் கடவுள்; உன் கடவுள், கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டான். சொன்னால் கடவுளே இல்லை. உன் கடவுள், நான் தான் கடவுள்; என்னையன்றி வேறு கடவுள் பூமியில், பூமிக்குக் கீழ், மேல் இல்லை என்றால், அத்தகைய சந்தேகம் எப்படி வருகிறது? நாத்திகன் கடவுள் இல்லை என்கிறான்; உன் கடவுளோ என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறான்! திராவிட நாத்திகனோ இந்து கடவுள் இல்லை என்கிறான்!

Jihad, Crusade,2

இடைகாலத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏன் போர்களில் ஈடுபட்டது?:

  1. சிலுவைப்போர்கள் – குருசேட் [Crusades], இடைகாலத்தில் அடிப்படைவாத கிருத்துவர்கள் நடத்திய மதவெறி கொண்ட குரூர போர்கள் ஆகும்.
  2. மத்தியத் தரைகடல் பகுதிகள், குறிப்பாக, ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்கும் போர்வையில் நடத்தப் பட்டன!
  3. கிருத்துவ நம்பிக்கைகளை ஏற்காத எவரையும், கிருத்துவர் உட்பட, கொல்லுதல் என்ற ரீதியில் நடத்தப் பட்ட போர்கள் ஆகும்.
  4. ஆதாமின் பாவம், ஆண் இன்றி கன்னி குழந்தை பெற்றெடுத்தல், திரியேகத்துவம், சிலுவையில் அறைதல், சிலுவையில் மரித்தல், உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல், ரொட்டியும் மதுவும் மாமிசம்-ரத்தமாக நம்புதல், ஏசுவின் ரத்தம் ஆதாமின் பாவத்தைத் துடைக்கும், ஆதாம்-ஏவாள் வழி பிறந்தவர் எல்லோருமே பாவிகள், முதலியவற்றை நம்பாதவர்களைக் கொல்லுதல் முதலியவையும் அடங்கும்!
  5. இதனால், கோடிக்கணக்கில் பேகன் [Pagan, heathen, Gentile, idolaters etc] என்கின்ற நம்பிக்கையாளர், மற்ற கிருத்துவர், துலுக்கர் முதலியோர் கொல்லப் பட்டனர்.
  6. ரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களுக்கு இடையே, பலவிதமான, இறையியல் சித்தாந்த போட்டிநிலைமைக்குத் தீர்வு காணவும் நடத்தப் பட்டன.
  7. குறிப்பாக கிழக்கத்தைய ஆசார சர்ச் [Eastern Orthodox Church] மற்றும் ரோமன் கத்தோலிக்க [Roman Catholic] சர்ச்சுகளுக்கு, எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்தது.
  8. பிதா, சுதன், ஆவி என்ற திரியாகவ தத்துவத்தில், இரண்டிற்கும் முரண்பாடு உள்ளது.
  9. கிழக்கத்தைய ஆசார சர்ச் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
  10. கிழக்கத்தைய ஆசார சர்ச், மடாதிபதிகள் மற்ற சாமியார்கள் திருமணம்செய்துகொள்ள அனுமதிக்கிறது, ஆனால், ரோமன் கத்தோலிக்க சர்ச் அனுமதிப்பதில்லை.

Jihad, Crusade,3

மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தை எதிர்த்த கிருத்துவ இறையியல்: பைபிளில் உள்ளவற்றிற்கு எதிராக விஞ்ஞான உண்மைகளை எடுத்துக் காட்டியவர்கள், பெண்கள், சிறுவர்கள் முதலியோரும் தப்பவில்லை, அவர்களும் சிலுவைப் போர்களில் கொல்லப்பட்டனர். உலகம் உருண்டை, சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றுகின்றன, ரத்த ஓட்டம் உள்ளது, என்று சொன்ன விஞ்ஞானிகள் தண்டனைக்குள்ளானார்கள். ஜிரார்னோர்டோ உரோனே உயிரோடு எரிக்கப்பட்டார். கலிலியோ முதையோர் தண்டிக்கப்பட்டனர். உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல் நியூட்டனின் விதிகளுக்கு முரணாக இருந்ததால், கொடுமைப் படுத்தப் பட்டார். சில ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார். மதக் கொடுமையினால், பைபிளைப் பற்றி தான் நியூட்டன் 80% எழுதியுள்ளார், மற்ற 20% தான் விஞ்ஞானமும், கணிதமும், கால்குலஸும்! துலுக்கரும் சளைத்தவர் இல்லை, குரான் படி, ஏசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிரோடு இருந்து பிறகு மரித்தார் என்றனர். இதனால், துவேசம் அதிகமாகி, சிலுவை போர்கள், கடுமை, கொடுமை, குரூரம் ஆகியதை அவர்களே திரைப்படங்களில் காட்டுகிறார்கள்!

Jihad, Crusade,4

கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்:

  1. முதலாவது சிலுவைப் போர்  1097 CEல்,
  2. இரண்டாவது சிலுவைப் போர்  1149 CEல் ,
  3. மூன்றாவது சிலுவைப் போர்  1189 CEல்,
  4. நான்காவது சிலுவைப் போர்  1204 CEல்,
  5. ஐந்தாவது சிலுவைப் போர்  1218 CEல்,
  6. ஆறாவது சிலுவைப் போர்  1228 CE ல்,
  7. ஏழாவது சிலுவைப் போர்  1248 CE ல்,
  8. எட்டாவது சிலுவைப் போர் 1269 CEல் நடைபெற்றன.

இன்று கூட அதே வெறியுடன் “குருசேட்” கூட்டங்கள் என்று நடத்தி, மக்களை, கிருத்துவர்களைப் பிரித்து வருகிறார்கள். இந்தியாவில் லவ் ஜிஹாத் போன்று லவ் குருரேட் செயல்பட்டு வருகிறது. இந்த உண்மைகள் எல்லாம் தெரியாமல், புரிந்து கொள்ளாமல், மறைக்கப்பட்டன, ரகசியமாக இருந்தன என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நியூட்டன் விஞ்ஞானியா, மெய்ஞானியா, பைத்தியமா, கிருத்துவக் கிருக்கா, ரசவாதியா? யார்? இந்தியாவைப் பற்றி நியூட்டன் சரித்திரம் எழுதியுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்? மதரீதியிலான போர், சண்டை முதலியவை முடிவதில்லை. குறிப்பாக கிருத்துவ-துலுக்க சண்டைகள் தொடந்து நடந்து வருகின்றனர். நவீனகாலத்தில், ஆயுதங்கள் தான் மாறியுள்ளவே அன்றி, மற்ற எதுவும் மாறவில்லை. எவ்வளவு படித்திருந்தாலும், உண்மைகள் அறிந்திருந்தாலும்,  ஏதையோ மனத்தில் வைத்துக் கொண்டு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு, பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற ரீதியில், சிலுவை-ஜிஹாத் கூட்டங்கள் செயல்பட்டு வருவதால், அமைதி என்றாலும், அதனை குலைப்பதில், ஈடுபட்டு வருகிறார்கள். கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்.

வேதபிரகாஷ்

22-04-2019

Jihad, Crusade,5

[1] பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.