Posts Tagged ‘புணர்ச்சிகள்’

திருச்சி சி. இ. பள்ளியில் ஆசிரியர்கள் அடித்துக் கொண்டது ஏன் – சில்மிஷமா, கல்மிஷமா?

ஜூலை 17, 2011

திருச்சி சி. இ. பள்ளியில் ஆசிரியர்கள் அடித்துக் கொண்டது ஏன் – சில்மிஷமா, கல்மிஷமா?

 

திருச்சியில் ஃபீடோஃபைல் (சிறுமியைப் புணையும் காமக்கொடூரன்): கடந்த மாதம் ஜூன் 21 அன்று ஜே. டெரன்ஸ் பிலிப் (65) என்ற ஆசிரியர் டியூசனுக்கு வந்த மாணவியை செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தியதால் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதா (9) மற்றும் அவளது சகோதரன் கடந்த ஒரு வருடமாக இந்த ஆசிரியரிடம் டியூசன் பயின்று வருகின்றனர். சமீபத்தில் ஒரு நாள் சகோதரனை ஏதோ சாக்கு சொல்லி வெளியில் அனுப்பிவிட்டு, கவிதாவிடம் முறைத்தவரி நடந்து கொள்ள முயன்றுள்ளார் டெரன்ஸ் பிலிப். அம்மாணவி பயந்து டியூசன் செல்வதற்கே பயந்தாளாம். பிறகு பெற்றோர்கள் விசாரிக்க உண்மையைச் சொல்லியுள்ளாள். அவர்கள் கோல்டன்ராக் பெண்கள் போலீஸ் நிலையத்தில் (Golden Rock All Women Police Station) புகார் கொடுத்தார்கள். கைது செய்யப்பட்ட டெரன்ஸ் பிலிப் ஐந்தாவது அமர்வு நீதிபதி முன்பு (Judicial Magistrate Court V) கொணரப்பட்டு, அவரது ஆணைப்படி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

ராஜரத்தினத்தின் வழியில் அதிகமாகும் கிருத்துவ காமக்கொடூரர்கள்: வயதானாலும், சிறுமிகளை, இளம் பெண்களை புணரவேண்டும், வற்புறுத்தி செக்ஸ் பெறவேண்டும் என்று தொடர்ந்து ஏன் கிருத்துவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. ராஜரத்தினம் பல கன்னியாஸ்திரீகளை புணர்ந்தார் என்று மேரி குற்றஞ்சாட்டப் பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மற்ற பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் அப்பாதையில் செல்லும்போது, ஆசிரியர்களும் சேர்ந்து விட்டது பெற்றோர்களுக்குப் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறது. கடந்த மாத நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இம்மாதமும் அத்தகைய காமக்கொடூர நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் இரண்டு வகை விளக்கங்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

 

பள்ளியில் ஆள் வைத்து அடிக்கும் ஜேம்ஸ்: மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்[1]: திருச்சியில், 8ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்த தமிழ் ஆசிரியரை, அடியாட்களை கூட்டிக் கொண்டு போய் சரமாரியாக அடித்து உதைத்தனர் பெற்றோர்கள்[2]. தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி உதை விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, வண்ணாரப்பேட்டையில் சி.இ மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக இருப்பவர் பன்னீர். இவர் தான் பாடம் சொல்லித் தரும் 8ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

சில்மிஷமா, கல்மிஷமா: இதனால் அதிர்ச்சியுற்ற அந்த மாணவி தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற பெற்றோர், பலரை கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர். ஆசிரியர் பன்னீரைப் பார்த்து அவரை சரமாரியாக திட்டியபடி அடித்து உதைத்தனர். கிட்டத்தட்ட 30 பேர் சேர்ந்து ஆசிரியரை அடிப்பதைப் பார்த்த சக ஆசிரியர்கள் ஓடி வந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து தாக்கியவர்கள விலக்கி விட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மாணவியிடம் சில்மிஷம்? பள்ளியில் புகுந்த கும்பல் தாக்கியதில் 4 ஆசிரியர் காயம் (Dinakaran version): பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கிய தலைமை ஆசிரியர் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்[3]. திருச்சி வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் சி.இ.துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை 11 மணியளவில் தமிழ் ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியர்கள் லேமேக், பிரபு, உடற்பயிற்சி ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 4 பேர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 2 வேன்களில் வந்த கும்பல், அந்த பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் தலைமையில் திடீரென்று பள்ளிக்குள் புகுந்து, 4 ஆசிரியர்களை தாக்கினர். இதில் 4 பேரும் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில், தமிழாசிரியர் பன்னீர்செல்வம், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாகவும், இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் வந்து தாக்கியதாக கூறப்பட்டது.

 

அரசு அனுமதியின்றி செயல்படும் மாணவியர் விடுதி: ஆசிரியர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘சி. இ .துவக்கபள்ளியில் அரசு அனுமதியின்றி மாணவியர் விடுதி செயல்படுவதாக முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் சென்றுள்ளது. அந்த புகாரை நான்தான் கொடுத்தேன் என்று நினைத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ், 50 பேருடன் பள்ளிக்குள் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி என்னை தாக்கினார் ’’ என்றார். விசாரணையில், ‘முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகாரால் ஆத்திரமடைந்த துவக்க பள்ளியின் தலைமையாசிரியர் ஜேம்ஸ், பன்னீர்செல்வத்தை பழி வாங்க மாணவியின் பெற்றோரிடம் தவறான தகவல்களை கூறியது தெரியவந்தது.  இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்[4].

 

மாணவியர் விடுதி ஏன் வைக்கப்பட்டுள்ளது?அரசு அனுமதியின்றி மாணவியர் விடுதி வைக்கப்பட்டுள்ளது, செயல்படுகிறது என்றால் அது எப்படி சாத்தியமாகிறது? ஏற்கெனெவே கிருத்துவ கல்லூரி, பள்ளிகள் மற்றும் சர்ச்-வளாகங்கள் முதலியவற்றில் சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள், கன்னியாஸ்தீரிகள் முதலியோர் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், ஆசிரியர்கள் என பலர் செக்ஸ் டார்ச்சர்கள், பலாத்காரங்கள், கற்பழிப்புகள், வன்கலவிகள், புணர்ச்சிகள் செய்து வருவதாக பல செய்திகள் வெளிவந்து விட்டன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்; சிலர் பிணையில் வெளிவந்துள்ளனர்; சிலர் சிறையில் உள்ளனர்; இந்ந்திலையில் மாணவியர் விடுதி வைத்துள்ளதற்காக ஆசிரியர்கள் அடித்துக் கொள்கிறார்கள் என்றால், முதலில் அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும். ஒருவேளை அவர்களே மாணவியர்களிடம் ஒரு மாதிரி நடந்து கொள்கிறார்களா, இல்லை அதில் போட்டி-பொறாமை என்று ஏற்பட்டு அடிதடியில், ஆள் வைத்து அடிக்கும் வரையில் இறங்கியுள்ளார்களா என்று தீர அராய வேண்டும்.