Posts Tagged ‘நாடார்’

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?

மார்ச் 22, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?

பீட்டர் அல்போன்ஸ், சரத்குமார் வாதம் 1996-2001

தமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது[1]: “கன்னியாகுமரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறவே முடியாது. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. இப்போதைய நிலை வேறு. தற்போது அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் அ.மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்[2].

பீட்டர் அல்போன்ஸ் கருவை சந்திப்பது 2011

பீட்டர் அல்போன்ஸின் பின்னணி: காங்கிரஸுக்கும் தலைவர், ஆனால் தன்னுடை மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் வந்தார். அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார், என்று சரத்குமார் கேட்டாடர். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார், என்றெல்லாம் கேட்டு சாடினார். இது பழைய சமாச்சாரம் என்றாலும், இன்றும் பொருந்துகிறது.

Inigo Hrudayaraj, political- in SDPI on tolerance meeting Jan.2016

இனிகோ இருதயராஜ் பேசியதாவது[3]: அனைத்து திருச்சபை கிறிஸ்துவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சாந்தோம் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசியதாவது[4]: “தமிழ்நாட்டில் 45 லட்சம் கிறிஸ்துவ மக்கள் வாழ்கிறார்கள். தேவாலயங்கள், கல்வி சட்டங்களை உருவாக்கி வளர்த்து வந்த கிறிஸ்துவ மிஷினரி மார்க்கம் அரசியலில் மட்டும் யாரையும் உருவாக்காமல் அதாள பாதாளத்தில் உள்ளது. கிறிஸ்துவர்கள் தூங்கியது போதும். காக்காய் கூட்டமாக நாம் வாழ்கிறோம். தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அங்கே சென்றுபொக்கேகொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அரசியலில் நமக்கு உரிய பங்களிப்பு வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மை உபயோகப்படுத்துகிறார்கள்.

 Ezra Sargunam in SDPI on tolerance meeting Jan.2016

இனிகோ சொல்ல வருவது என்ன?: திருவாளர் இனிகோ தொடர்கிறார், தமிழ்நாட்டில்கோடி வாக்காளர்களில் 17 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் எங்கேயும் நமக்கு அங்கீகாரம் இல்லை. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. நமது சமுதாயத்தில் உள்ள பிளவை ஒற்றுமைப்படுத்துவது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். எனவே அத்தனை திருச்சபையும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். 2 சதவீத ஓட்டு வைத்திருப்பவர்கள் முதல்அமைச்சர் கனவு காண்கிறார்கள். 5 சதவீத ஓட்டு உள்ளவர்கள் முதல்அமைச்சராக நினைத்து பவனி வருகிறார்கள். கிறிஸ்துவர்களாகிய நம்மிடம் 17 சதவீதம் ஓட்டு உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எனவே நாம் கிறிஸ்துவ கட்சியை உருவாக்குவோம். அது உடனடியாக முடியாது. அதுவரை நம்மை அரவணைப்பவர்களை நாம் அரவணைக்க வேண்டும். கிறிஸ்தவர்களை எந்த கட்சி ஆதரிக்கிறதோ அவர்களை ஆதரிப்போம். இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அதை நாம் செயல்படுத்த வேண்டும்”, இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார். இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[5].

karu-with-xian-cap

கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது மார்ச்.2, 2016: சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் இளைஞர் எழுச்சி மாநாடு 02-03-2016 அன்று நடைபெற்றது[6]. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று பேசியதாவது: “சிறுபான்மை மக்களை அரவணைக்கும் கட்சிகளுடன் நாம் பாலமாக இருப்போம். அந்த வகையில் தி.மு.. நமக்கு பல்வேறு உதவிகளை செய்து பாதுகாப்பாக உள்ளது. கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே தி.மு.. தலைவர் கருணாநிதியை சந்தித்து முறையிட முடிகிறது. தி.மு.. தலைவரை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது. மு..ஸ்டாலினையும் எளிதில் அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. தி.மு.. ஆட்சியில் கிறிஸ்துவர்களுக்கு அங்கீகாரம் கேட்டபோது அதற்காக அரசு ஆணை வெளியிட்டனர். கிறிஸ்துவர்களை அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில் தி.மு..தான் எப்போதும் நம்மை ஆதரிக்கும் அமைப்பாக உள்ளது. ஜெயலலிதாவை கூட்டத்துடன் சந்தித்தது, விழா எடுத்தது, கேக்கை வாயில் ஊட்டியது எல்லாம் மறந்து போய் விட்டது போலும்!

jeya-eats-chinnappa-cake

கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் யாரை ஆதரிப்பார்கள்?: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா? நாடார்கள் அங்கு நாடார்களாக செயல்படுவார்களா, கிருத்துவர்களாக செயல்படுவார்களா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

22-03-2016

[1] தினமலர், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது: பேராயர் சின்னப்பா வேண்டுகோள், மார்ச்.14.2016. 01.59 PM.

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/4778

[3] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.

[4] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.

[5] http://www.maalaimalar.com/2016/03/14130243/Christians-to-create-new-party.html

[6] மாலைமலர், தி.மு.. கூட்டணிக்கு கிறிஸ்துவ அமைப்பு ஆதரவு: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 03, 10:38 AM IST

[7] http://www.maalaimalar.com/2016/03/03103820/Christian-organization-Support.html