Posts Tagged ‘அய்யா வழி’

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)!

மார்ச் 10, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)!


கணக்கு, தணிக்கை என்றதுமே ஆடிப்போன கிருத்துவர்கள்: வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றதுமே, சர்ச்சுகள் பயந்து விட்டன. இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட ரூ. 54 கோடி பணம் பெற்றது தெரிய வந்துது[1]. இதெல்லாம் சோனியா மெய்னோ கிருத்துவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை அல்ல. ஆனால், கிருத்துவர்களுக்கிடையில் நடக்கும் நாடகம்[2]. இதனை முன்பே எடுத்துக் காட்டியாகி விட்டது[3]. இல்லையென்றால், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு தைரியம் வராது[4]. பிரதமர் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்ட முடியாது. இப்படி பல விஷயங்கள் அநாவசியமாக வெளிவருவதை கிருத்துவர்கள் விரும்பவில்லை.

பங்குத் தந்தைகளிடம் பங்குக் கேட்பார்கள் கிருத்துவர்கள்: முன்பெல்லாம், சர்ச்சுகள் / கிருத்துவர்கள் கோடிகளில் பணத்தைப் பெறுகிறார்கள் என்றுதான் சொல்வார்கள், ஆனால், இப்பொழுது அப்படி கோடிகளில் இன்னார்-இன்னார்களிடமிருந்து இவ்வளவு பெற்றனர் என்பதும், மற்றவர்கள் கணக்குக் கேட்கத்தான் செய்வார்கள். இப்பொழுது கார்டினல்கள், பிரஷப்புகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள், கிருத்துவ ஐயர்கள், கிருத்துவ முதலியார்கள்  முதலியொர் அவ்வளவு அள்ளுகின்றனர், அமுக்குகின்றனர் என்பது தெரிந்து விடும். இங்கு தமிழகத்தில் கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் நாடகம் போடுகிறார்கள். ஆனால், கிருத்துவ மீனவர்களை, இத்தாலியக் கிருத்துவர்களே சுட்டுக் கொன்றபோது, வாடிகன் முதல் நமது உள்ளூர் பிஷப் வரை வக்காலத்து வாங்கி பேசுகிறார்கள்[5]. அங்கு வாடிகனின் அப்பட்டமான தலையீடு வெளிப்படுகிறது. இதே மமதை, ஆணவம், கொழுப்பு, திமிர் முதலியவை சின்னப்பாவின் வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றன, “இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பல பிஷப்புகள் கூடங்குள விவாகாரத்தில் எதிர்ப்பாளிகளை ஆதரித்துப் பேசுவது ஏன்: ஏ. எம். அருளப்பா (சென்னை), யுவான் ஆம்புரோஸ் (தூத்துக்குடி), வின்சென்ட் எம். கன்செஸ்ஸியோ (தில்லி) என்று பலர்[6] வக்காலத்து வாங்கி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கெனெவே அனைத்துலக ரீதியில், கிருத்துவர்கள் நடத்தி வரும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை சந்தோஷமாக ஆதரித்தும், பணவுதவி செய்தும் மற்ற சர்ச்சுகள் செய்திகளை வெளிப்படையாக வெளியிட்டுள்ளன.

இருகுரலில் பேசும் வேடதாரி கிருத்துவ பிஷப்புகள்: தமிழக பிஷப் கவுன்சில், இப்படி மத்திய அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஒப்பாரி வைக்கும் நேரத்தில், மற்ற பிஷப்புகள் மத்திய யு.பி.ஏ. அரசு அவ்வாறு செயல்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்கள்:

  • ஜி. தெய்வசகாயம் என்ற சி.எஸ்.ஐ. பிஷப் அம்மாதிரி ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை என்று சொல்லியுள்ளார்[7]. “நாங்களும் தான் தர்ம காரியங்களை செய்து வருகிறோம். ஆனால், அரசு எங்கள் மீது எந்த விதமான அழுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. நாங்கள் இப்போராட்டத்தில் குறிப்பிட்ட நிலயை எடுத்துக் கொள்ளவில்லை”.
  • ஜெபசந்திரன் என்ற எவாஞ்செலிகல் சர்ச் ஆப் இந்தியா (Head of the Evangelical Church of India) பேசும்போது, “அவர்கள் அந்நிய நாட்டு பணத்தை உபயோகிக்கக் கூடாது. தணிக்கைக்கள் உள்ளன. ஆகையால் அயல்நாட்டுப் பணத்தை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் தார்மீக ரீதியில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம்”, என்று விளக்கம் அளித்தார்.
  • மற்றொரு பிஷப் எஸ்ரா சர்குணம்  (Bishop Ezra Sargunam ), பேசும்போது, ”யு.பி.ஏ. அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, அவர்களைத் துன்புறுத்துகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. உண்மையில் அது சிறுபான்மையினருக்கு பல சலுகைகளை அளிக்க முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கிருத்துவர்கள் அந்நியபணத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்பதையும் நம்பவில்லை”, என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த எஸ்ரா சற்குணம் மிகவும் பலமானர் மற்றும் சட்டங்களை மதிக்காமல் செயல் படுவதிலும் வல்லவர்[8].

கூடங்குளம் போராட்டத்தை மைய்யமாக வைத்து கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துகிறது மத்திய அரசு-பிஷப் சின்னப்பா[9]: கூடங்குளத்தில் நடந்து வருவது மக்களின் போராட்டம். அதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எந்தவிதமான தொடர்பும்

இந்த சின்னப்பாவே பற்பல வழக்குகளில் சிக்கியுள்ளார். இதைப் பற்றி கேட்க வந்த. நிருபரை பூட்டி வைத்து அடித்துள்ளார்[10]. ஒரு ஆசிரியையை பதவி உயர்வு கொடுக்காமல் சதாய்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதைத்தவிர, கோடிக்கணக்கில் நில அபகரிப்பு வழக்கும் நிலுவயில் உள்ளது.[11]

இல்லை. அது கிறிஸ்தவர்களின் போராட்டமும் அல்ல. ஆனால் இந்தப் பிரச்சினையை வைத்து சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை மத்திய அரசு இழிவுபடுத்துகிறது என்று கிறிஸ்தவப் பேராயர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை மயிலை மறை மாவட்ட பேராயருமான சின்னப்பா, தூத்துக்குடி பேராயர் இவான் அம்புரோஸ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமும், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்கமும் சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுக்கு வரும் நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 32 கேள்விகள் அடங்கிய ஒரு விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டிருந்தனர். நாங்கள் அதற்கு பதில் அனுப்பினோம். பின்னர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

வேதபிரகாஷ்
10-02-2012


[7] Times of India, Church divided on govt action against N-stir, Karthick S, TNN | Mar 10, 2012, 01.21AM IST, http://timesofindia.indiatimes.com/city/chennai/Church-divided-on-govt-action-against-N-stir/articleshow/12203039.cms

[8] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

https://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

[9] ஒன்-இந்தியா-தமிழ், கூடங்குளம் போராட்டத்தை மைய்மாக வைத்து கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துகிறது மத்திய அரசு-பிஷப் சின்னப்பா. வெள்ளிக்கிழமை, மார்ச் 9, 2012, 8:56 [IST]

http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-centre-harassing-christians-archbishop-am-chinnappa-aid0091.html

[10] வேதபிரகாஷ், பத்திரிக்கையாளர்கள்தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் –பிஷப்பும் உடந்தையா?!, https://christianityindia.wordpress.com/2010/09/16/பத்திரிக்கையாளர்கள்-தாக/

தினகரன், பிஷப்ஹவுசில்வைத்துதாக்கியதுஏன்?, 15-09 2010, http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6835