Posts Tagged ‘முகமது நபி கிண்ணம்’

மோசன் மாவுங்கல் – அருங்காட்சியகத்தில் ஏசுவின் உடை, மொஹம்மதுவின் சின்னம், யூதாஸின் காசுகள் என்றெல்லாம் இருந்தன – அரசியல் தொடர்புகள் அமைதி காத்தன (2)

ஒக்ரோபர் 5, 2021

மோசன் மாவுங்கல் – அருங்காட்சியகத்தில் ஏசுவின் உடை, மொஹம்மதுவின் சின்னம், யூதாஸின் காசுகள் என்றெல்லாம் இருந்தன – அரசியல் தொடர்புகள் அமைதி காத்தன (2)

பலவித தொல்பொருட்கள் இருந்ததாக சொல்லிக் கொண்டது: ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கள் பழமையான பொருட்களை விற்பனை செய்து வந்ததுடன்,  புரூனே சுல்தானின் கிரீடம்,  சதாம் உசேன் பயன்படுத்திய திருகுரான், முகமது நபி பயன்படுத்திய கின்னம், திருவிதாங்கூர் மன்னரின் சிம்மாசனம், இயேசுவை காட்டி கொடுத்து யூதர்கள் பெற்ற நாணயங்களை வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் கதைகட்டி காட்டிய பொருட்களை சமூகவலைதளங்களில் பார்த்து பிரம்மித்துவிட்டு விஐபிக்களே அவரது இல்லத்துக்கு பயணப்பட்டனர். கேரள காவல் துறையின் முன்னாள் இயக்குநர் லோக்நாத் பெகாராவும் மாவுங்கலை நம்பி அவர் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அங்கு லோக்நாத் பெகாரா ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ள, பக்கத்தில் உதவி இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் வாளைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமல்லாது, கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தொடங்கி, நடிகர் மோகன்லால் வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். அதையெல்லாம் புகைப்படமாக எடுத்து தனது அருங்காட்சியகத்திலேயே வைத்த மாவுங்கல், தன்னை நம்பவைக்க அதைப் பயன்படுத்திக்கொண்டார்.

சினிமாவில் நடித்தது, போட்டோக்கள் போட்டுக் கொண்டது: ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மாவுங்கலுக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தன்னையும் ஒரு நிழல் உலக தாதாவாக கருதிக்கொண்டு நாயுடன் புகைப்படம், மொட்டை மாடியில் இருந்து பின்னால் பத்துபேருடன் நடந்து வருவது போல் புகைப்படம் என பதிவிட்டு அந்தத் தளத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார்.  இதற்கெல்லாம், சாதாரண மக்கள் ஏமாறுவார்கள், ஆனால், போலீஸ், அரசியல் அதிகாரிகள், போன்றோர் எப்படி ஏமாறுவார்கள் என்று தெரியவில்லை. உலக அமைதி கவுன்சில் உறுப்பினர், கேரளர்களின் சர்வதேச சங்கம் எனப் பல அமைப்புகளிலும் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். சர்வதேச மலையாளிகள் சார்பில், பினாராய் விஜயனுக்கு விருது கொடுக்கிறேன் என்றேல்லாம் விழா நடத்தியிருப்பதாக மலையாள ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், பல விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிரமுகர்களோடு தொடர்பு இருந்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் பார்த்துக்கொண்டார்” என்றனர்.

அரசியல் புள்ளிக்கு தொடர்பா?: இதனிடையே மோன்சன் மாவுங்கல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பிண்ணனியும் இருப்பதாகக் கூறப்படுகிறது, என்று குறிப்பிட்டாலும் விவரங்கள் கொடுப்பதில்லை. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து, 2020 நவம்பர் வரையிலான காலத்தில் தான் கிரீடம் விற்ற பணம் வருவதாகச் சொல்லி பத்து கோடி ஏமாற்றியிருக்கிறர் மாவுங்கல். இதில் கடந்த 2018 நவம்பரில் வெளிநாட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வருவதில் டெல்லியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி இப்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வாக்கு கொடுத்ததால்தான் ரூ.25 லட்சம் பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். தனக்கு மாவுங்கலை தெரியும் என சொல்லியிருக்கும் சுதாகரன், நிதிப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என பலரும் கேரளாவில் மோன்சன் மாவுங்கலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

முதலமைச்சர் விளக்கம் தேவை என்ற கோரிக்கை: கேரளா போன்ற மாநிலத்தில், அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆதரவு முதலியன இல்லாமல், இத்தகைய மோசடிகளை செய்து விட முடியாது. 2017 என்று எடுத்துக் கொண்டால் கூட, நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்து, இப்பொழுது திடீரென்று வெளி வந்து விடாது. போலியான பொருட்களை மோன்சன் மாவுங்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மோசடி மன்னனுக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது[1]. இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன், மோன்சனால் சாதாரண மக்கள் மட்டுமின்றி கால்வதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் அலுவலகத்தை சேர்ந்த சிலர் மோன்சனுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டுமென்றார்[2].

பழம்பொருள் சேகரிப்பாளர் என்ற பிம்பத்தை உருவாக்கியது: மோன்சன் தன்னை ஒரு பழம்பொருள் சேகரிப்பாளராக சில வருடங்களாகவே தன்னை ஊடகங்களில் முன்னிறுத்திக் கொண்டு இருந்தார். அவர் தன் வசம் இருக்கும் அரிய பொருட்கள் என்ற பல பேட்டிகளில் காட்டிய பொருட்கள் – வேதவியாசரால் நேரடியாக எழுதப்பட்ட மஹாபாரத சுவடி, கடலை இரண்டாக பிளக்க மோசஸ் பயன்படுத்திய கைத்தடி, இயேசு கிறிஸ்த்துவை ஒற்றிக் கொடுக்க யூதாஸ் வாங்கிய வெள்ளி நாணயங்களில் இரண்டு ….. என்று போகிறது பட்டியல் .வழக்கம் போல மார்த்தாண்ட வர்மாவின் வாள் , திப்புவின் எஸ்டைப் நாற்காலி ஆகியவையும் உண்டு .இதையெல்லாம் பெரும் பொருட்செலவில் olx வழியாக வாங்கியதாக கூறுவார். ஆனால் அக்காலகட்டத்தில் வெட்டி யூட்யூபர்கள் கூட இதை கிண்டல் செய்யவில்லை. கமுக்கமாக பேட்டி எடுத்து வந்தனர் . மோன்சன் ஒவ்வொரு தினமும் சில லகரங்கள் வரை செலவு செய்வார் . மேற்படி அரும்பொருட்களை கண்டு வியந்து புகைப்படம் எடுத்து வந்தவர்கள் பட்டியலில் முன் கேரள டிஜிபியும் அடக்கம் .அவர் டிஜிபியாக இருந்த போது தான் மோன்சனின் அருங்காட்சியகத்திற்கு சென்றாரா என்று தெரியவில்லை . இப்போது தான் ஒரு வழியாக மோன்சனை பண மோசடி வழக்கில் 26-09-2021 அன்று கைது செய்திருக்கின்றனர் .

யார் அந்த பிரபல நடிகர்?: போலீசார் தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் பெயரிலும் ரூ.50 மோசடி செய்ய  முயன்ற தகவல் வெளியாகி உள்ளது.   இதுகுறித்து கொச்சி மாட்டான் சேரியில்  புராதன பொருள்கள் விற்பனை செய்யும்   கடை வைத்துள்ள சலாம் என்பவர் கூறியதாவது: “நான் மாட்டான்சேரியில்   புராதன பொருள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன்.    மோன்சன் என்னிடம் வந்து ரூ.50 கோடிக்கு கடையை வாங்கி  கொள்வதாக   கூறினார். தான் தமிழ் நடிகரின் பினாமி. கடையை பார்க்க நடிகர் வருவார் என்றதை  நம்பி விட்டேன். அவர் கடை வாங்குவார் என கருதிய நிலையில் அவரும்,    நடிகரும் வரவே இல்லை. இதன் மூலம் எனக்கு பல  கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

நடிகர் பாலாவுக்கும், மோன்சனுக்கும் தொடர்பு: மோசடி மன்னனுக்கும் நடிகர் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் பாலா. அஜித் நடித்த வீரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்து உள்ளார். மோன்சனுக்கும் அவரது டிரைவர் அஜித்துக்கும் தகராறு ஏற்பட்டது. இது பற்றி அஜித் கொச்சி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் அஜித்தை தொடர்பு கொண்ட நடிகர் பாலா, மோன்சன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். அஜித்தும், பாலாவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ பரவியதன் மூலம் மோசடி மன்னன் மோன்சனுக்கும் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து பாலா கூறியதாவது: “நான் கொச்சியில் இருந்தபோது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால், அவருக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால், அவரை எல்லாருக்கும் பிடிக்கும். அவர் செய்த மோசடி குறித்து எனக்கு தெரியாது. அஜித் என்னிடம் வேலை பறிபோய் விட்டது என்று கூறினார். அப்போது தான் அஜித் புகார் அளித்தது தெரியவந்தது. அப்போது அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினேன். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்று கூறினார்[4].

© வேதபிரகாஷ்

05-10-2021


[1] தினத்தந்தி, பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டுமென்றார்.  பழங்கால பொருட்கள் விற்பனையில் மோசடிபிரமுகர்களுக்கு தொடர்பு..?, பதிவு : அக்டோபர் 04, 2021, 08:24 PM

[2] https://www.thanthitv.com/News/India/2021/10/04202427/2763158/Fraud-in-the-sale-of-antiques.vpf

[3] தினகரன், கைதான மோசடி மன்னனுடன் தொடர்பா? நடிகர் பாலா பேட்டி, 2021-09-29@ 00:44:13.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708587

மோசன் மாவுங்கல் – “கடவுளின் சொந்த தேசமான” கேரளாவில் பழங்காலப் பொருட்கள், அருங்காட்சியகம் என்றெல்லாம் சொல்லி கோடிகளில் மோசடி செய்த அகழாய்வு நிபுணர்! (1)

ஒக்ரோபர் 5, 2021

மோசன் மாவுங்கல் – கடவுளின் சொந்த தேசமானகேரளாவில் பழங்காலப் பொருட்கள், அருங்காட்சியகம் என்றெல்லாம் சொல்லி கோடிகளில் மோசடி செய்த அகழாய்வு நிபுணர்! (1)

கடவுளின் சொந்த தேசமானகேரளாவில், கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்யப் பட்டு வரும் மோசடிகள், குற்றங்கள் முதலியன: “கடவுளின் சொந்த தேசமான” கேரளாவில், கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்யப் பட்டு வரும் மோசடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆனால், மெத்தப் படித்த மாநிலமானத்தவர்கள், பெரும்பாலான விசயங்களை மறைத்து விடுகின்றனர். திடீரென்று ஏதாவது பிரச்சினை எழும் போது, பல விவகாரங்கள் வெளி வருகின்றன. இருப்பினும் அவை சில நாட்களில் அடங்கி விடுகின்றன, மறைக்கப் படுகின்றன. கேரளாவின் என்ன போலி புராதனப் பொருட்கள், டுபாகூர் கலைப் பொருட்கள், பழமையான கருவிகள், 200-300 ஆண்டுகளுக்கு முற்பட்ட புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் தயாரிக்க, உருவாக்க முடியுமா? அத்துனை சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள், தொல்லியல் வல்லுனர்கள் என்றேல்லாம் இருக்கும் போது, அவர்களையும் மீறி அவ்வாறு ஆயிரக் கணக்கானப் பொருட்களை உருவாக்கி, எல்லோரும் நம்பும் படி, அருங்காட்சியகம் வைத்து விட முடியுமா?

ஆல் இன் ஆல் அழகு ராஜா மோன்சன் மாவுன்கல்: ஒரே சம்பவத்தால் ஒட்டுமொத்த மலையாளிகளும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டார் மோன்சன் மாவுங்கல்[1], என்று தி இந்து.தமிழ் சொல்வது தமாஷாக இருக்கிறது. நூதனமுறையில் இவர் நடத்திய மோசடிகளும், சினிமா ப்ரியரான இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன[2]. கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர், அழகியல் வல்லுனர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர், தெலுங்கு நடிகர், உலக அமைதி போற்றுபவர், யு-டியூப் வெளியிடுபவர் என பலதளங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர். சரி, அதிகமான படிப்பு-எழுத்தறிவு கொண்டவர்கள் என்ற கேரளத்தவர்கள் இவற்றையெல்லாம் எப்படி நம்பினர், ஒப்புக் கொண்டனர்? சேர்த்தலா, எர்ணாகுளத்தில் இவருக்கு பிரம்மாண்ட இல்லமும் இருக்கிறது. இந்த இல்லத்தில் பழம்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். இதனை மையமாக வைத்தே மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி வந்திருக்கிறார் மாவுங்கல்.

1984 முதல் 2017 வரை ஸ்கிராப் டீலராக இருந்து கோடீஸ்வரன் ஆன கதை: 1969ல் சாக்கோ தம்பதியருக்குப் பிறந்த மோன்சன் கிறிஸ்தவன். ஆரம்ப பள்ளியில் படித்த அவன், 1984ல் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தான். தந்தை இறந்தவுடன், அவ்வேலை, மோன்சனின் சகோதருக்குக் கிடைத்தது. இதனால், முதலில் ஸ்கிராப் வியாபாரம் செய்து,பிறகு மின்னணு பொருட்களை, கேரள-தமிழ்நாடு எல்லையில் கடை வைத்து, விற்று வந்தான். பிறகு பழைய கார்களை வாங்கி விற்க ஆரம்பித்தான். 1990களில் இவ்வியாபாரத்தில் கணிசமாக சம்பாதித்தான். அப்பொழுதே, பழங்காலப் பொருட்களையும் வாங்கி, விற்க ஆரம்பித்தான். ஆனால், மாட்டிக் கொண்டான். ஆனால், விவரங்கள் தெரியவில்லை. அதனால் செர்தாலாவுக்கு திரும்பினான். கொச்சியில், தேவாராவில் ஒரு அடுக்குமாடி வீடு வாங்கி தங்கினான். பிறகு கலோரில், விலோபிள்ளித் தெருவில், ஒரு தனி வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறினான். 2000களில், காஸ்மோஸ் அழகு கிளினிக் ஆரம்பித்தான். அப்பொழுது சினிமா நடிகைகள்-நடிகர்கள் மற்றவர்கள் வந்து சென்றனர். அப்படித்தான், காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தோல் வியாதி சிகிச்சைக்காக அங்கு சென்றதாக கூறுகிறார். 

ஆயிரக் கணக்கான தொல்லியல் பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் வைத்தது: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கல் என்பவர், பழங்கால பொருட்கள் வைத்திருப்பதாக கூறி அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வந்தார்[3], என்று விகடன் குறிப்பிட்டாலும், விவரங்கள் ஒன்றையுயும் கொடுக்கவில்லை. அரிய பொருட்கள் என்பதால் இதனை அதிக விலை கொடுத்து வாங்க பிரபலங்கள் உட்பட பலரும் முன்வந்தனர்[4], என்கிறது, ஆனால், யார், எவ்வாறு அவ்வாறு வந்தனர் என்று குறிப்பிடவில்லை. இதை வைத்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மோன்சன், கேரளாவில் ஒரு விஐபி போலவே வந்தார். இதனிடையே அவர் விற்ற பொருட்கள் அனைத்தும் போலி என தெரியவந்த நிலையில் மோன்சனை போலீசார் கைது செய்தனர். இத்தனை போலித் தனம் பற்றி பேசாமல், இப்பொழுது, எல்லாமே போலி என்பதும் வேடிக்கையான விசயம் தான். இவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மோன்சனின் பங்குதாரரான சரத் என்பவர் துன்புறுத்தி வந்ததாகவும் அது தொடர்பான புகாரை திரும்பப் பெறுமாறு மோன்சன் தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்தார்[5]. இதன்பேரில் போலீசார் மோன்சன் மீது வழக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]

வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாகவும், இதற்கு ரூ.10 கோடி தரவேண்டும் எனவும் மோசடி செய்தது: இந்த நிலையில் இவர் விற்பனை செய்த பல பொருட்கள் போலியானது என தெரியவந்தது இது பற்றி பலரும் போலீசில் புகார் செய்தனர், என்று ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம், வேறு விதமான, நிதி மோசடி விவகாரமும் வெளிப்படுகிறது. இதுபோல மோன்சன் மாவுங்கல் பற்றி கோழிக்கோடு பகுதியை சேர்ந்த யாக்கோபு, சித்திக், சலீல், சமீர், அனீஸ், அகமது, சானிமோன் ஆகியோர் முதல் மந்திரி பினராய் விஜயன் அலுவலகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினர்[7]. அதில் மோன்சன் மாவுங்கல் தங்களுக்கு வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாகவும், இதற்கு ரூ.10 கோடி தரவேண்டும் எனவும் கூறினார். அதனை நம்பி நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி தங்களுக்கு தொழில் செய்ய கடன் தரவில்லை. மேலும் தாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்[8]. போலீஸுக்கு புகார் கொடுக்காமல், முதல் மந்திரி பினராய் விஜயன் அலுவலகத்துக்கு ஏன் புகார் கொடுத்தனர் என்பதனை க்வனிக்க வேண்டும். ஒருவேளை, போலீஸார் புகாரை பதிவு செய்யவில்லையா?

புருனே சுல்தான் கிரீடம் என்று ஆரம்பித்து பணம் வசூல் செய்தது: புருனே சுல்தானின் கிரீடத்தை தான் விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி பணம் வர உள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டார்[9]என்கிறது நியூஸ்.18.  அவ்வாறு சொல்லி பணம் திரட்ட முயற்சித்தார்[10]. வளைகுடா நாடுகளில் உள்ள மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பழங்கால பொருட்களை விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு வங்கியில் ரூ. 2,62,000 கோடி மாட்டிக்கொண்டதாகவும், ரூ.10 கோடி தந்தால், பணத்தை மீட்டு, வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாவும் கூறினார்[11]. அந்தப் பணத்திற்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்தான் தன் கணக்கிற்கு பணம்வரும் என்றெல்லாம் சொல்லி, ஷாஜி என்பவர் உள்பட பலரிடமும் ரூ.10 கோடி மோசடி செய்திருக்கிறார்[12]. இப்படி சுருக்கமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. கோடிகளில் பணத்தை கேரளத்தவர்கள் கொடுத்தார்கள் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் காசு விவகாரத்தில் அவ்வளவு கச்சிதமாக இருப்பர். அவர்கள் ஏன் கொடுத்தனர் என்பதும் ஆராயத் தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இப்போது சிறையில் இருக்கிறார் மோன்சன் மாவுங்கல். ஆனால் இந்த நூதன மோசடியை அவர் அரங்கேற்றிய விதமே அவரைக் கேரளாவின் பேசுபொருள் ஆக்கியுள்ளது.

© வேதபிரகாஷ்

05-10-2021


[1] தமிழ்.இந்து,  விஐபிகளுடன் நெருக்கம்.. கோடிகளில் முறைகேடு.. கேரளாவை உலுக்கிய மோசடி மன்னன் மோன்சன் மாவுங்கல் யார்?, என்.சுவாமிநாதன்,Published : 02 Oct 2021 06:39 AM; Last Updated : 02 Oct 2021 07:39 AM.

[2] https://www.hindutamil.in/news/india/722123-who-is-monson-mavunkal.html

[3] விகடன்,  சுல்தானின் கிரீடம் விற்றதில் ரூ.70,000 கோடி வரவிருக்கிறதுமோசடமோன்சன் மாவுங்கல் கைது!, சிந்து ஆர், Published: 28 Sep 2021 2 PM; Updated:28 Sep 2021 2 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-police-arrested-the-monson-mavunkal

[5] தினத்தந்தி, பழங்கால பொருட்கள் என கூறி மோசடிமோன்சன் மாவுங்கல் மீது மேலும் ஒரு புகார், பதிவு : அக்டோபர் 04, 2021, 02:47 PM

[6] https://www.thanthitv.com/News/India/2021/10/04144751/2763134/kerala-menson-case-filled.vpf.vpf

[7] மாலை மலர், பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்தவர் கைது, பதிவு: செப்டம்பர் 27, 2021 12:37 IST.

[8] https://www.maalaimalar.com/amp/news/national/2021/09/27123719/3048531/Tamil-News-Antique-dealer-arrested-in-Kochi.vpf

[9] NEWS18 TAMIL, புருனே மன்னனுக்கு கிரீடம் விற்பனைரூ.70,000 கோடிக்கு வரி கட்டணும்: ஹைடெக் மோசடி மன்னன் சிக்கியது எப்படி?, LAST UPDATED: SEPTEMBER 29, 2021, 17:15 IST.

[10] https://tamil.news18.com/amp/news/national/kerala-monson-mavunkal-held-for-cheating-mur-573473.html

[11] கலைஞர்.செய்திகள், ரூ.2.62 லட்சம் கோடி பேங்க்ல மாட்டிக்கிச்சு.. 10 கோடி கொடுத்தா மீட்டுடுவேன்” : பயங்கர மோசடி மன்னன் கைது!, Vignesh Selvaraj, Updated on : 28 September 2021, 04:52 PM.

[12] https://www.kalaignarseithigal.com/india/2021/09/28/kerala-fake-antiques-seller-arrested