Posts Tagged ‘ஜோசுவா இமானுவேல்’

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

ஒக்ரோபர் 22, 2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

joshua-immanuel-raj-raper-and-priest

மறுபடியும் கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டதும், செய்தி வெளியீடும்: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[1].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[2]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[3]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[4]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-immanuel-raj-xian-problem-or-social

கல்யாணம் ஆகாமல் இருந்து, பைபிள் படித்து, மதபோதகர் ஆகி, அறக்கட்டளை வைப்பது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (வயது 35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார் என்று ஒரு நாளிதழ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  பைபிள் படிப்பதற்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டுமா அல்லது கல்யாணம் ஆகாத கிருத்து பையன்கள் பைபிளைப் படிக்கலாமா என்று தெரியவில்லை கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். ஆக, பைபிள் படித்து மதபோதகர் என்றாகி விட்டால், நல்ல காசு-பணம்-துட்டு எல்லாம் கிடைக்கும் போல, உடனடியாக, அறக்கட்டளை வைத்து விடலாம் போல! பிறகு, இவர் ஊர், ஊராக சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார், என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஊர்-ஊராக செல்வது எதற்கு என்றால், அவர்களே இப்படி செய்திகளைக் கொடுத்துள்ளாற்கள்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

இவர் ஊர், ஊராக சென்றுஅழகான இளம் பெண்களை காதல் விலையில் வீழ்த்தி கற்பழிப்பழிக்கும் போதகர்: ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். மதபோதகர் இப்படி செய்யலாமா அல்லது கிருத்துவ இளம் பெண்கள் அப்படி மாட்டலாமா என்று தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார். எப்படி அப்பெண்களின் பெற்றோர் ஒப்புக் கொள்வர், ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை. சென்று விட்டனர் என்பதால், சம்பதித்துள்ளனர் என்றாகிறது. பின்னர் லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்கள் எப்படி ஜோசுவா இமானுவேல் ராஜுடன் ஒத்துழைப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. ஆக, அப்பெண்கள் காமத்திற்கு, கொக்கோக இச்சைக்கு, உடலுறவு கொள்ளும் அளவுக்கு, இவன் எப்படி ஊக்க்குவிக்கிறான் என்பது தெரியவில்லை. ஆபாசப்படம் எடுக்கிறான் என்றால், கேமரா எல்லாம் இருக்க வேண்டும். பிறகு, அப்பெண்களுக்கு அறிவில்லாமல், அந்த அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன விசயம் அது?

joshua-immanuel-raj-xian-porn-dangerous-trend-in-tamilnadu

மானம் கெட்டப் பிறகு புகார் கொடுத்த பெண்கள்: மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை போலீசார் 17-10-2016 அன்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:

  1. “தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். [அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார் என்கிறது நக்கீரன்[5]] உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களை வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன். என்னை பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்னேன். பயந்த போன அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்து கொண்டேன்.
  2. கொடிங்குளத்தில் ஒரு பெண் [கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார் என்கிறது நக்கீரன்] தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.
  3. பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை [நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார் என்கிறது நக்கீரன்[6]] வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்,” இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

22-10-2016

joshua-immanuel-raj-xian-porn-dangerous-way

[1] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[3] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[4] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[5] நக்கீரன்,  இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 19, அக்டோபர் 2016 (20:11 IST); மாற்றம் செய்த நாள் :19, அக்டோபர் 2016 (22:34 IST)

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=175723