Posts Tagged ‘சாக்கர்’

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

பிப்ரவரி 27, 2012

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

மறுபடியும் நாராயணசாமியின் குற்றச்சாட்டு: கூடங்குளம் பிரச்சினையில், கிருத்துவர்களின் தேவையற்ற தலையீடு[1] பலவழிகளில், அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது[2]. தமக்கு அனைத்துலக ஆதரவு உள்ளது என்ற மமதையில் பிஷப்புகள் வேலை செய்வதும் தெரிகிறது[3]. இதில் வியாபார நோக்கம் அதிகமாக உள்ளதாகத்தான் தெரிகிறது என்று முன்னமே விளக்கப்பட்டது[4]. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தின் மதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அமைப்புக்கு 54 கோடி நிதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 11 நிதிநிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. இப்படி சொன்னதையே திரும்பத்திரும்ப ஏன் சொலிறார் என்றும் தெரியவில்லை.

ஐடியாஸ், ஸவீடன் அமைப்பிலிருந்து உதயகுமாருக்குப் பணம்: வெளிநாட்டு நிதி பெற 9 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முறையாக கணக்கு பராமரிக்காததால் 3 நிறுவனங்களின் உரிமர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளதாகவும், “ஐடியாஸ்” என்ற ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து[5] உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சாக்கர் என்ற அமைப்பில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக உள்ளனர்[6]. சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே 32 லட்சம் நிதி வந்துள்ளது. சாக்கர் என்ற நிறுவனத்திற்கு சுவீடன் நாட்டிலிருந்து முதற்தவணையாக ரூ. 38 லட்சமும், மற்றொரு முறையாக ரூ. 5.2 கோடியும் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[7]. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால் சோனியாவின் வருவாய் பற்றி உதயகுமார் கேட்கிறார் என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க வருமான வரித்துறைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்[8].

உதயகுமார் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசியுள்ள பிரதமர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருவதாகவும், அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்ற அர்த்தத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சை படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்[9]. மேலும், எனக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும், போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அமெரிக்காவில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக எனக்கு எதிராகவும், போராடும் மக்களை அவதூறாகவும் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்[10].

டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[11]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[12] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[13]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கிருத்துவர்கள் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற நிலையில், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? ஒன்று அவருக்கு உண்மையிலேயே அத்தகைய தைரியம் / அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது எல்லோருமே சேர்ந்து போடும் நாடகமாக இது இருக்க வேண்டும். யார் பணம் பெருகிறார்களோ இல்லையோ, தேவையில்லாமல், தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் மூன்று மாதங்களாக அவதிப் படுகிறர்கள். இதில் கூட்டணி மாறப்போகிறதா, அணுஉலை உதிரிகள், பராமரிப்பு முதலியவற்றிற்கு ரஷ்யா அல்லது அமெரிக்கா சப்ளை செய்யப் போகிறதா, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, யாருக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் இருக்கும் நிலையில் நாடகம் தொடரத்தான் போகிறது.

வேதபிரகாஷ்

27-02-2012


[5] The International Institute for Democracy and Electoral Assistance (International IDEA) is an intergovernmental organization that supports sustainable democracy worldwide. International IDEA’s mission is to support sustainable democratic change by providing comparative knowledge, and assisting in democratic reform, and influencing policies and politics.  http://www.idea.int/

[6] Mr. Narayanasamy sent the reply after Mr. Udayakumar threatened to sue him for the allegations that the NGO run by him had received funds. He stated that Mr. Udayakumar and his wife Meena, the trustees of SACCER, an NGO, had registered with IDEA’s Reconciliation Resource Network as its organisation.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2932944.ece

[13] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.