Posts Tagged ‘உசிலம்பட்டி’

2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா?

ஜூன் 24, 2019

2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன்குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா?

Kollialai child traffickig Bangalore woman arrested

30 ஆண்டுகளாக நடந்து வரும் குழந்தை விற்பனை விவகாரத்தில் பலர் கைது: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்து,

  1. ராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி,
  2. அவரது கணவர் ரவிச்சந்திரன்,
  3. சகோதரர் நந்தகுமார்,
  4. கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன்,
  5. ஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன்,
  6. சேலம் நர்ஸ் சாந்தி,
  7. பெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா மற்றும்
  8. புரோக்கர் ஹசீனா,
  9. புரோக்கர் அருள்சாமி,
  10. புரோக்கர் லீலா,
  11. புரோக்கர் செல்வி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Gideon Jacob arrested by CBI in 2017

உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

Child traficking in India

வாடகை தாய் விவகாரம் இதில் ஏன் சம்பந்தப் பட வேண்டும்?: இதில் ரேகா என்ற பெண்ணை, பெங்களூரிலிருந்து கைது செய்தது, “வாடகை தாய் விவகாரம்,” என்று குறிப்பிடப் பட்டுள்ளது[1]. இது பற்றி தமிழ் ஊடகங்களில்  எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அரியலூரை அடுத்த ஆரியூர்நாடு கிழக்குவளவு – புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி [45] என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பாதிரியார் பொன்னுசாமி கொல்லிமலை பகுதை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலரிடம் விற்பனை செய்தது ஆதார பூர்வமாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[3]. கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்புலிநாடு புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4].

Kollimalai child traficking pastor Krupakaran arrested 12-2001

2001 மற்றும் 2019 கைதுகள்: 2001 ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நடந்து வந்த குழந்தைகள் கடத்தல் விவகாரம் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்த போது, கொல்லிமலை பாதிரி கைது செய்யப் பட்டது மறந்திருபர். திருப்பதியில் நடந்த அக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த குற்றவாளிகள்[5]

  1. காவிரி[6] [Lotus Child Adoption Agency[7]] மற்றும் இன்னொரு நபர் கைது செய்யப்பட்டனர். தவிர,
  2. அவளுக்கு உதவிய சித்தூரைச் சேர்ந்த வினோத்குமார்
  3. சென்னையை சேர்ந்த சித்தீகி அப்துல் ரஹிம் மற்றும்
  4. கொல்லிமலையைச் சேர்ந்த கிருபாகரன் என்ற ஒரு கிருத்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டனர்.

 தவிர சென்னையை சேர்ந்த உஷா மற்றும் வசந்தா என்ற இரண்டு பெண்மணிகளும் குழந்தைகளை ஆகவே பார்த்துக் கொள்வது மற்றும் அவர்களுக்கு வேண்டிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் டிசம்பர் 2001 நடக்கிறது[8]. இங்கே கொல்லிமலையை சேர்ந்த கிருபாகரன் என்ற பாதிரி சம்பந்தப்பட்டிருப்பது தான் கவனிக்கப் பட வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில், 2019ல் நடக்கின்ற இந்த குழந்தை கடத்தல் விற்பனை, கடத்தல் முதலிய குற்றங்களிலும், அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற பாதிரி கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டும். அதாவது கொல்லிமலைப் பகுதிகளில் பல சர்ச்சுகள் இருக்கும் நிலை என்ன என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறிய பகுதியில், சுமார் 50 சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன? கத்தோலிக்க சர்ச் தவிர மற்ற சர்ச்சுகள் அதிகமாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறுகின்றன. எனவே இத்தகைய சூழ்நிலையில் நினைவுபடுத்திக்கொண்டு ஆண்டாண்டு காலமாக இது ஒரு தொழிலாக வியாபாரமாக செய்து வருகின்றனர் என்ற சந்தேகம் நியாயமான முறையில் பெறுகின்றது.

Churches in Kollimalai - Google

கொல்லிமலையில் இருக்கின்ற சர்ச்சுகள்: ஒரு சிறிய இடத்தில் இத்தனை சர்ச்சுகள் ஏனிருக்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

பெயர் முகவரி
ரோமன் கத்தோலிக்க சர்ச் வளவந்தி நாடு, Tamil Nadu 637411
கிரேஸ் ரிபார்ம்ட் பேப்டிஸ்ட் சர்ச் Grace Reformed Baptist Church, Karavallicombai R.F., Tamil Nadu 637411
டையோசியன் மிஷனரி பிரேயர் பேன்ட் சர்ச் DMPB [Diocesan Missionary Prayer Band] Karayaankadu, Kariyankattu Patti Rd, Karayankattu Patti, Tamil Nadu 637411

 

தமிழ் பேப்டிஸ்ட் சர்ச் Strict Baptist Church, Valavanthinadu, Tamil Nadu 637411
நேஷனல் மிஷினரி சொசைடி ஆப் இந்தியா சர்ச் NMSI Church, Valavanthinadu, Tamil Nadu 637411
கே சுன்டே நாகிங் சர்ச் GSWG [Gay Sunday Walking Group]
கிரைஸ்ட் சர்ச், பிரான்ட் மெமரி சர்ச் Christ Church, Brand Memory Ministry
டாக்டர் பால் பிரான்ட் மெமோரியல் சர்ச் Dr Paul Brand Memorial Church
கொல்லிமலை சி.இ.ஆர்.எஸ்.டி சர்ச் Kollimalai CGRIST Church
ஜியோன் கன்மலை சர்ச் Zion Kanmalai Church
St Vasantha Church
அன்னை ஆரோக்கிய சர்ச் Annai Arogya church

இவற்றில், கிருபாகரன் மற்றும் பொன்னுசாமி எந்த சர்ச்சில் பாஸ்டர், பாதிரியாக இருந்தனர் என்று தெரியவில்லை. ஊடகங்கள் மறைத்து தான் வருகின்றன.

Namakkall child traffiking case

30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி[9]: இந்த இரு 2001 மற்றும் 2019 பாதிரிகள் கைது வைத்துப் பார்த்தால், சர்ச்சுகளின் சம்பந்தம் இதில் தெளிவாகிறது. இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா? “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்!

Kollimalai child traficking pastor Ponnusamy arrested 21-06-2019

மனித ஆள் கடத்தல் சர்வதேச பிரச்னையாக உள்ளது: தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10% பேர் வெளிநாடுகளுக்கும், 90% பேர் மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றனர். அதில் 80% பேர் பாலியல் தொழிலுக்கும், மீதமுள்ள 20% பேர் பிற தொழில்களில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணையக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர்[10]. இதில் 11,000 குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி குழந்தை கடத்தல் தொடர்பாக 6,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96% அதிகம்[11]. இந்தியாவில் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆள் கடத்தல் அதிகமாக உள்ளது.  இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது[12]. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. னால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

22-06-2019

Churches in Kollimalai - baptism

[1] Police said 40-year-old Rekha of Bengaluru was arrested, based on a statement of another accused in the case, Ms. Hasina. Ms. Rekha, who had allegedly been a go-between surrogate mothers who lend their embryos for a fee to help childless couples conceive through in-vitro fertilization techniques and potential parent-clients, had sourced babies from Amudha and allegedly sold them to affluent childless couples in Bengaluru.

DECCAN CHRONICLE. Baby sale case in Namakkal: Police arrest Bengaluru woman,| ZAKEER HUSSAIN, Published May 19, 2019, 1:58 am ISTUpdated May 19, 2019, 1:58 am IST

https://www.deccanchronicle.com/nation/crime/190519/baby-sale-case-in-namakkal-police-arrest-bengaluru-woman.html

[2] தினத்தந்தி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார்சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை, பதிவு : ஜூன் 21, 2019, 03:22 PM

[3] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/21152251/1040772/Namakkal-Rasipuram-Babysale-Issue.vpf

[4] தினகரன், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை குழந்தைகள் விற்பனை வழக்கில் கொல்லிமலை மதபோதகர் கைது, 2019-06-22@ 00:41:12

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504537

[5] The Hindu, Child lifting racket busted, Saturday, Dec 22, 2001.

[6] Ms.Kaveri, the owner of `Lotus Child Adoption Agency’, was said to be the kingpin of the racket She was assisted in the crime by Vinodkumar of Vijayapuram in Chittoor district, Siddiqui and Abdul Rahim of Chennai, apart from a pastor, Krupakaran of Kollimalai in Tamil Nadu. She utilised the services of two Chennai-based sisters Usha and Vasantha for taking care of the children when the visa and passport were being readied. In case of abducted children, these women used to act as their mothers for passport and other purposes.

[7] https://www.lotusadoption.com/index.html;

[8] https://www.thehindu.com/2001/12/22/stories/2001122203080300.htm

[9]என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்தகுழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின்அதிர்ச்சி ஆடியோ!, Press Trust of India | Updated: April 27, 2019 08:52 IST.

[2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840

[10] தினமணி, உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்!, By PTI | Published on : 08th July 2018 09:35 PM

[11] https://www.dinamani.com/latest-news/2018/jul/08/55000-children-kidnapped-in-2016-in-india-2955887.html

[12] தினமலர், ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல், Added : ஜூலை 09, 2018 09:02.

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=2057993

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).

செப்ரெம்பர் 8, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).

கிடியோன் ஜேகப் - பேஸ் புக் படம்

கிடியோன் ஜேகப் – பேஸ் புக் படம்

திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் அல்ல[1]: தமிழ்.இந்துவில் செய்தி இவ்வாறுள்ளது. “திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்தினராக இருக்க வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்தது[2]. இதுகுறித்து, உசிலம்பட்டியில் 25 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுப்பில் ஈடுபட்டுள்ள வெட் டிரஸ்ட் நிர்வாகி தர்மாந்தி கூறும்போது, ‘உசிலம்பட்டி பகுதியில் 1992க்குப் பின்னர் பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்து, தற்போது இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. 1000 குழந்தைகளுக்கு ஒரு பெண் சிசு கொலை நடப்பதாகக்கூட தகவல் இல்லை. 3 முதல் 4 பெண் குழந்தைகள் உள்ள வீடுகளும் உள்ளன. ஒன்று அல்லது 2 கிராமங்களில் இருந்து மொத்தமாக குழந்தைகளை பெற்றோ, கடத்தியோ கொண்டுபோய் வளர்ப்பது என்பது நடக்காத ஒன்று. காவல் நிலையத்திலும் மொத்தமாக குழந்தைகள் காணவில்லை என எந்த புகாரும் இல்லைஎன்று தெரிவித்தார்”, என்று வெளியிட்டுள்ளது[3]. ஜெர்மானிய நண்பரே உடன்பாடாக இருக்கும் போது, தமிழ்.இந்து இவ்வாறு முரண்பாடாக செய்தி வெளியிட்ட நோக்கம் என்று தெரியவில்லை.

மைக்கேல் போன்டிர் - இந்திய பெண்கள் தரமற்றவர்கள் - ஜூலை 2010

மைக்கேல் போன்டிர் – இந்திய பெண்கள் தரமற்றவர்கள் – ஜூலை 2010

இந்தியப் பெண்களை பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” [Hundred of “worthless” girls] என்று ஜெர்மானிய பெண்மணி குறிப்பிட்டது (ஜூலை.2010): ஜெர்மானிய ஊடகங்களில் இந்திய பெண்களைப் பற்றி தரக்குறைவாகத்தான் எழுதி வருகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. “பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” என்று தான் அவர்கள் வர்ணிக்கின்றார்கள்[4]:

Hundred of “worthless” girls

When, in 1989. Church in Trichy was attacked by radical Hindus, Gideon, who are still living in Hamburg, he decided with his wife to come back to India and speak about God. – I started to build a church with the help of God’s word. I said that as Christians we are called not only to pray but also action. And because a few hundred kilometers away killed the girl, which according to the Indian mentality have no value, we printed 100 thousands. leaflets with the words: “Do not kill” and we give it away to the nearby villages. Already in the first beat us Hindus, warning: “Do not come here again and do not touch our traditions!” So I started to adopt these children – recalls the beginnings of Trichy. To this day, thanks to the house for unwanted girls Mose Ministries, he managed to save almost a hundred of them.

1989ல் கிடியோன் ஜேகப் ஹாம்பர்க்கில் இருந்தபோது, அடிப்படைவாத இந்துக்கள் திருச்சியில் சர்ச்சை தாக்கினர். அப்பொழுது அவர் தனது மனைவியுடன் திருச்சிக்குத் திரும்பிச் சென்று கடவுளைப் பற்றி பேச முடிவு செய்தார். கிருத்துவர்களாகிய நாம் வெறும் பிரார்த்தனை மட்டுமல்ல, காரியத்திலும் இறங்க வேண்டும் என்று நான் சொன்னேன், ஒரு பெண் சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் கொல்லப்பட்டபோது, “கொல்லாதே” நூறாயிரம் நோட்டிசுகள் அச்சடித்து அருகிலிருந்த கிராமங்களில் விநியோகித்தோம். இங்கு வராதீர்கள், எங்களது பாரம்பரியங்களில் தலையிடாதீர்கள் என்று இந்துக்கள் எச்சரித்தனர். அப்பொழுது தான் அந்த பெண்களை நான் தத்தெடுத்துக்கொண்டேன். அதுதான் திருச்சியில் ஆரம்பமாக இருந்தது, அவர் அந்த வேண்டாத பெண்களை மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்துக் கொண்டார், என்று என்ற பெண்மணி எழுதியுள்ளார்[5]. அதாவது, இந்திய பெண்களே இவர்களால் தான் வாழ்கிறார்கள், இவர்கள் தாம் வாழ்க்கையினைக் கொடுக்கிறார்கள் என்பது போல மைக்கேல் போன்டிரா என்ற அப்பெண் எழுதியிருப்பது நோக்கத்தக்கது[6].

மைக்கேல் போன்டிர் ஜெர்மானிய பெண்மணியின் பதில் ஜூலை 2010

மைக்கேல் போன்டிர் ஜெர்மானிய பெண்மணியின் பதில் ஜூலை 2010

ஜேகப்பை தியாகி போன்று விவரித்தது (ஜூலை.2010): மேலும், ஜாக்கப் பற்றி, இந்தியர்களை நோக்கி கூறும்போது, “நீ அவருக்கு விசம் கொடுத்தாய், அடித்தாய், கொலை செய்வேன் என்று மிரட்டினாய், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டாய்”, என்று சொல்லி விட்டு, “இந்தியாவில் நற்செய்தியை போதித்த பாஸ்டர் கிடியோன் ஜேகக் கூறுகிறார், “நான் இறப்பைத் தவிர எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன்”, என்று அவர் சொன்னதாக, இவர் குறிப்பிட்டு அக்கதையினை ஆரம்பித்து எழுதியுள்ளார்[7]. இத்தகைய ஆக்ரோஷமான வார்த்தைகள் அவர்களது உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஜூலை 2010ல் இந்த பெண்மணி ஜெர்மனியில் இவ்வாறு எழுதவேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், இப்பிரச்சினை திருச்சியில் அப்பொழுதே ஆரம்ப்த்து விட்டதா?

New Year 2014 - Good Shepherd World Prayer Center, Trichy - girls singing at.2

New Year 2014 – Good Shepherd World Prayer Center, Trichy – girls singing at.2

மைக்கேல் போன்டிரா இவற்றை ஏன் கண்டுகொள்ளவில்ல?: கிறிஸ்தவர்கள் இங்கு செய்துள்ள பாலியல் கொடுமைகளை, செக்ஸ்-கொடூரங்களை, பிடோபைல் குற்றங்களை, வன்புணர்ச்சிகள்-கற்பழிப்புகளை எல்லாவற்றையும் மறந்து அல்லது ஒன்றுமே நடக்காதது போல, இப்பெண்மணி எழுதியிருப்பது கடவுளுக்கே பொறுக்காது எனலாம். ஜேக்கப் தான் ஹாம்பர்கிலும் வசிக்கிறார், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்களே, பிறகு இந்தியாவில் அவர் எத்தனை நாட்கள் இருக்கிறார்? அந்த நாட்களிலேயே, இவ்வளவு பிரச்சினை செய்கிறாரா அல்லது செய்து விட்டு போகிறாரா? இப்பொழுது கூட, இவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தைரியம் இருந்தால், தான் எந்த தவறோ, குற்றமோ, சட்டமீறாலோ செய்யவில்லை என்றால், எல்லோருடைய சோதனைகளை இவரே நேரிடையாக சந்தித்திருக்கலாமே? பிரதிநிதிகளை வைத்து சமாளிக்க செய்ய வேண்டிய அவசியம் என்ன? இனி இவர் யார் என்று தேடிப் பார்த்தால், இவரைப் பற்றி, சர்ச் இணைதளங்கள் அதிகமாகவே விவரித்துத் தள்ளியுள்ளன.

Mose Ministries Trichy - Gideon Jacob evangelist-different postures

Mose Ministries Trichy – Gideon Jacob evangelist-different postures

கிடியோன் ஜேகப் பற்றிய வாழ்க்கை விவரங்கள்[8]: கிடியோன் ஜேகப் 1954ல் விழுப்புரத்தில் ஏ. ஜேகப் மற்றும் ஒரு ஜெர்மானிய பெண்மணிக்கு பிறந்தார். பாஸ்டராக வளர்க்கப்பட்டார். ஆங்கிலிஸ்டிக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் ஹாம்பர்கில் இறையியல் பட்டங்களைப் படித்துத் தேறினார். ஹாம்பர்கில் 1987ல் “இளைஞர்களுக்கான ஒரு மிஷன்” என்ற இயக்கத்திற்காக வேலை செய்தார். 1989ல் “இந்தியர்களுக்கான கிருத்துவ ஆரம்பம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். திருமணம் செய்து கொண்டு, ஒரு மகன் இருக்கிறான். 2001ல் மலேசியாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். அடிக்கடி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, போலந்து என்று பலநாடுகளுக்கு சென்று வருகிறார். தனது கிருத்துவ வேலையைப் பற்றி கூறி, இந்தியர்களை தமது வாழ்வினை ஏசு கிறிஸ்துவுக்கு அர்பணிக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவ்விவரங்களை ஒரு இணைதளம் கொடுக்கிறது[9]. பேஸ் புக்கில் சில புகைப்படங்கள் உள்ளன[10]. பாவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இதே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ?

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-89-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7610572.ece

[2] இச்சந்தேகம் வேலுச்சாமிக்கு ஏற்பட்டதா, தமிழ்.இந்துவுக்கு ஏற்பட்டதா அல்லது அவ்வாறு செய்தி வெளியிட யார் தூண்டினார்கள் என்று தெரியவில்லை. உசிலம்பட்டியின் தொடர்பை ஏன் மறைக்க வேண்டும் என்று நோக்கத்தக்கது.

[3] அ.வேலுச்சாமி / தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.

[4] http://fakty.interia.pl/prasa/przewodnik-katolicki/news-doswiadczylem-wszystkiego-oprocz-smierci,nId,884153

[5] Czytaj więcej na http://fakty.interia.pl/prasa/przewodnik-katolicki/news-doswiadczylem-wszystkiego-oprocz-smierci,nId,884153#utm_source=paste&utm_medium=paste&utm_campaign=chrome

[6] Michael Bondyra, I  experienced  everything  except  death,  Friday, 23 July 2010 (10:09).

[7] You tried to poison him, repeatedly beaten, threatened with death, Folding false accusations against him in court. In India, for preached the Gospel, Pastor Gideon, Jacob, as he says, he experienced everything except for death.

[8] Dr Gideon Jacob was born in 1954 in Villupuram in South India and is the son of a Pastor. He grew up in the “Good Shepherd Evangelical Mission” which he now leads today. He graduated in Economics and Anglistic in India and then studied Theology in Hamburg. In 1987 he worked for “Youth with a Mission” in Hamburg. In 1989 he founded the “Christian Initiative for India” in Germany and today he is the first president of this organization. Gideon Jacob is married and has one son. In 2001 he was made an Honorary Doctor (Dr.div.) by “Vision International USA” in Malaysia. Gideon Jacob often travels throughout Germany, Austria and Switzerland, as well as in Poland. He tells of the work in India and encourages people to commit their lives fully to Christ.

[9]  http://www.cifi.de/en/christians-in-india-church-and-bible-school/gideon-jacob-biography

[10] https://www.facebook.com/gideon.jacob.718

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).

செப்ரெம்பர் 8, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).

Mose Ministries- Trichy - Gideon Jacob evangelist

Mose Ministries- Trichy – Gideon Jacob evangelist

காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் கூறிய விவரங்கள்: காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாவது: “கடந்த, 1990ம் ஆண்டு உசிலம்பட்டியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, குழந்தைகள் மீட்பு மையம் துவக்கினோம். இதில், 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர். அதில், இரண்டு பெண் குழந்தைகள், நோய் பாதித்து இறந்து விட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை, அவர்களது பிறந்த நாளாக கணக்கிட்டு, பதிவு செய்தோம். இந்த குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் கிடையாது. உசிலம்பட்டி மையத்தில் இருந்த குழந்தைகளை, கடந்த, 1994ம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம்”, இவ்வாறு, அவர் கூறினார். 1990, 1989 மற்றும் 1997 வருடங்கள் என்றாலே, அவ்வருடங்களில் சேர்க்கப்பட்ட பெண்குழந்தைகளுக்கு இப்பொழுது வயது முறையே 25, 26 மற்றும் 18 என்று வருகிறது. மேலும் 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர், எனும்போது, குழந்தைகள் மீட்பு மையம் துவங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் அவர்களிடத்தில் இருந்த என்றாகிறது.பிறகு குழந்தைகள் அவர்களிடத்தில் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டனர் என்று புரியவில்லை.

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்

காப்பகத்திலிருந்து சிறுமிகள், பெண்கள் வெளியே வர மறுப்பு: காப்பகத்தில், 02-09-2015 அன்று மாலை, 3.30 மணிக்கு விசாரணை முடித்த, குழந்தைகள் நலக்குழுவினர், அரசு மருத்துவக்குழுவினரை வரவழைத்து, குழந்தைகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அவர்களின் வயதை உறுதி செய்தனர். தொடர்ந்து, போலீஸ் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, திருச்சி கிழக்கு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் காப்பகத்துக்கு வந்தனர். அவர்கள் காப்பகத்தில் உள்ள நிலையை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, வேறு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், குழந்தைகள் அனைவரும், காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டு, அங்கேய ஜெபம் செய்யத் துவங்கினர்[1]. மனோதத்துவ நிபுணர், மனவியல் மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் என்று மூவர் அடங்கிய குழு அச்சிறுமியர் மற்றும் இளம்பெண்களிடம் பேசி, அறிவுரை கூறியுள்ளனர்[2]. ஆனால் எந்த பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்பட ஒப்புக்கொள்ளாவில்லை என்று டாக்டர். பிரனேஸி கூறினார். மாலை, 6.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தைகள் வெளியேற மறுத்து விட்டதால், அரசு துறை அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாமல் காப்பகத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

Good Shepherd World Prayer Centre - Trichy - Gideon Jacob evangelist

Good Shepherd World Prayer Centre – Trichy – Gideon Jacob evangelist

பென்டகோஸ்ட் மூளைசலவை முறைகள் சிறுமியர் மற்றும் இளம்பெண்களை பாதித்துள்ளதா?: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சமூக நலத்துறை அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, காப்பக நிலைமையை குறித்து குழந்தைகளிடம் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை வெளியே கொண்டு வந்தால் தான் காப்பகத்துக்கு சீல் வைக்க முடியும் என்றார்[3]. குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி கூறுகையில, காப்பகத்திலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டவுடன், பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் மாத்துாரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், படிக்கும் குழந்தைகள் அந்தந்த பள்ளி அருகே உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்றார்[4]. முதலில் சிறுமியர் மற்றும் இளம்பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குட்பட தயங்கினர், மறுத்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[5]. அப்படியென்றால், அவர்களை அவ்வாறு பணித்துள்ளனர் என்றாகிறது. பென்டகோஸ்ட் கிறிஸ்தவர்கள் உடம்புக்கு அசௌகரியம் வந்தால், மருந்து-மாத்திரை சாப்பிடக் கூடாது, ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும், அப்படியிருந்தால், கர்த்தர் கிருபையினால் நோய்-நொடி எல்லாமே பறந்து போய்விடும் என்று மூளைசலவை செய்து வைத்திருப்பது வழக்கம். எனவே அம்முறையில் அவர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் போலும். அல்லது அந்த கல்லூரி மாணவர்களின் ஆய்வில் வெளியானது போல, அப்பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆய்வில் தெரிந்து விடும் என்றதால், காப்பக அதிகாரிகள் மிரட்டி வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பெந்தகோஸ்தே நம்பிக்கை இவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று தெரிகிறது.  அத்தொடர்பும் ஒரு ஜெர்மானிய மிஷனரியின் புத்தகத்திலிருந்து தெரிய வருகிறது.

Mose Ministries- Trichy - Gideon Jacob evangelist carries on the work of his father

Mose Ministries- Trichy – Gideon Jacob evangelist carries on the work of his father

ஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[6]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் . ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்றும் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்.”

Gideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

Gideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

1972 முதல் 1980 வரை ஜேக்கப் விவகாரத்தில் நடந்தவை: ஆக, அந்த ஜெர்மானிய தொடர்புகளில் இங்கு தெரிய வரும் விவரங்கள்:

1.       1972ம் ஆண்டு கார்ல் பெக்கர் என்ற ஜெர்மானிய மிஷனரி, ஏ. ஜேக்கப் என்ற, கிதியோன் ஜேக்கப்பின் தந்தையை திருச்சியிக் சந்தித்தார்.

2.       சைலோம் என்ற தனது சர்ச்சை அங்கு ஆரம்பிக்க, ஏ. ஜேக்கப்புடன் பேசியுள்ளார்.

3.       ஒப்புக் கொண்டவுடன், அவருக்கு நிதியுதவியும் செய்துள்ளார்.

4.       ஏ. ஜேக்கப் ஒரு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றால், அவர் ஜெர்மனிக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது அப்பெண்மணி இங்கு வந்திருக்க வேண்டும்.

5.       ஏ. ஜேக்கப் பல கம்பெனிகளை ஆரம்பித்தார், அதாவது, ஜெர்மனியிலிருந்து நிதியுதவி நன்றாகவே கிடைத்துள்ளது.

6.       ஆனால், ஒருவேளை ஏ. ஜேக்கப் கார்ல் பெக்கரிடம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை போலும், அதனால், “அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது”, என்று நொந்து கொள்கிறார்.

7.       ஏ. ஜேக்கப்பின் நிறுவனங்களில் அந்நிய-நிதியுதவி, அவற்றின் போக்குவரத்து கணக்கு, பணம் கையாடல், வரியேப்பு போன்றவை நடந்துள்ளது போலும்.

8.      அதனால், 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்று கார்ல் பெக்கரே குறிப்பிடுள்ளார்.

9.       இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது”, என்று புலம்பியுள்ளார்.

10.   அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை”,. என்றும் கார்ல் பெக்கர் ஒப்புக்கொள்கிறார். ஜெர்மனியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

11.    பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்’, அப்படியென்றால் 1980களுக்குப் பிறகும், நிதியுதவி தொடர்ந்துள்ளது என்றாகிறது.

பொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] தினமலர், அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் சோதனை: வேறு காப்பகத்துக்கு மாற மறுத்து குழந்தைகள்அடம், செப்டம்பர்.4, 2015.07:05.

[2] Secondly, the District Social Welfare officer S Usha and District Child Protection Officer, Saravanan, held a discussion with the staff of the home, after which they roped in a Psychologist, Psychiatrist and Pediatrics. Joint Director of Health Service (JDHS), Dr Bhiranesi told Express that they sent a medical team after DSW office communicated them, as it was necessary. “We received a communication and sent a three-member doctor team as per request,” she said, adding that she learnt that no child was willing to go for the medical check up.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Home-With-55-Minor-Girls-to-be-Shut-For-Improper-Records/2015/09/04/article3009626.ece1

[3] தினகரன், தனியார் காப்பகத்துக்கு சீல் வைப்பதில் இழுபறி, பதிவு செய்த நேரம்:2015-09-05 11:53:38.

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=487507&cat=504 .

[5] The premises of the home, which was expected to be sealed on Thursday evening, was tense till around 8 pm, as the children showed reluctance in undergoing medical check up and move to other places making the officials’ efforts futile.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Home-With-55-Minor-Girls-to-be-Shut-For-Improper-Records/2015/09/04/article3009626.ece1

[6]  Michael Bergunde, The South Indian Pentecostal Movement in the Twentieth Century, Wm.B. Eerdmans Publishing Co., U.K, 2008,  p.76.