Posts Tagged ‘இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை’

கத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது!

ஜனவரி 11, 2011

கத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது!

கத்தோலிக்க பிஷப் மற்றும் அகில உலக பகுத்தறிவு மாநாடுகள் கருணாநிதி நாத்திக ஆட்சியில் ஒரே நேரத்தில் நடப்பது: கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் இன்டியா (சி.பி.சி.ஐ / CBCI) சென்னையில் நடப்பது, கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்[1]. திருச்சியில் திகவினர் அகில உலக பகுத்தறிவாளர் மாநாடு நடத்தும்[2] அதே வேலையில் இதுவும் நடப்பது பரிசுத்த ஆவியின் சித்தமா, பெரியாரின் ஆவியின் மகத்துவமா என்பதனை தேவன் தான் தீர்மானிக்க வேண்டும் அல்லது பரலோகத்தில் இருக்கும் பரம பிதா அருள்வாக்குக் கூறவேண்டும். எதிர்பார்த்தபடியே, ஒரிஸ்ஸாவைப் போன்ற மத கலவரங்கள் அஸ்ஸாமில் நடக்க ஆரம்பித்துள்ளன. இதுவும் இவர்களது புண்ணிய காரியமா அல்லது பரிசுத்த ஆவியின் வேலையா என்பது பிறகுதான் தெரியவரும்! தங்களது மாநாட்டு அட்டவணையில் நிகழ்ச்சி நிரல், இவ்வாறு – அதாவது “லத்தீன் சடங்குமுறைப்படி நடக்கும்” – சூசகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, அந்நியத்தை இந்திய கிருத்துவர்கள்மீது திணிக்க முயல்கிறது என்று தெரிகிறது[3].

06-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)[4]
07-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite) Holiday for the Chancery
08-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
09-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite) Prayerful Wishes
10-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
11-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
12-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)

ஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடந்துகொண்டிருக்கிறது[5]. இக்கூட்டத்தில், முன்பு கார்டினெல் ரெட்ஸிங்கர்[6] இருந்தது மாதிரி இப்பொழுது, போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ (Salvatore Pennacchio) பங்கேற்றார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் (Sacred Heart Seminary) 06-01-2011 அன்று துவங்கியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது[7]. 2000ற்கு பிறகு இப்பொழுது சென்னையில் மறுபடியும் நடக்கிறது எண்பது குறிபிடத்தக்கது. மும்பை ஆர்ச்பிஷப் கூறும்பொழுது கார்டினெல் ஓஸ்வால்ட் கிரேஸியஸ் (Cardinal Oswald Gracias) குறிப்பாக நன்னடத்தை, ஒழுக்கம், தார்மீகம் முதலியவற்றிற்கு முக்கியம் கொடுப்பார் என்று தெரிவித்தார். அதாவது, செக்ஸ், குழந்தைப் பாலியல் குற்றங்கள், மற்றும் பணம் கையாடல் முதலியவற்றில் இந்திய பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்களே நூற்றுக்கணக்கில் பலர் சிக்கியுள்ளதால், மறைமுகமாக “இறைவனுடைய வார்த்தை”யின் (“The Word of God”) பற்றியதாகிய விவாதம் மறுபடியும் தொடர்ந்து நடத்தப் படும் என்றார். சமூகத்தின் தார்மீகத்தை வளர்க்க பாடுபடப்போவதாக கூறினார்.

மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், பிறகு கேரளாவிற்கு சென்றார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் பெற்றோர்களது மனங்களிலும் நம்பிக்கை வளர்க்க முயற்சிக்கப் போவதாக கூறினார்[8]. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்[9].

சேகர்ட் ஹார்ட் செமினரியில் (திருஇருதய குருத்துவக் கல்லூரியில்) கெடுபிடி: குறிப்பிட்ட ஆயர்கள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் தவிர யாரும் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. வெளியிலிருந்து வருபவட்ர்கள் வாசலிலேயே தடுக்கப் பட்டு, திரும்ப அனுப்பபடுகின்றனர். 12-01-2011 அன்று மட்டும், ஊடகக்காரர்களுடன் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே ஏகப்பட்ட செக்ஸ் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதால், அவ்விவரங்கள் பற்றி விவாதங்கள் வருவதால், பல எரியூட்டும் சர்ச்சைகள் எழும் என்று தெரிகின்றது. திருச்சி பிஷப்பின் செக்ஸ்-விவகாரம், மற்றொரு பாதிரியின் மர்மமான இறப்பு, ஊட்டியில் அமெரிக்க பிஷப் மறைந்திருந்தது, மதுரை பிஷப் இத்தாலியில் செக்ஸ்-குற்றத்தில் மாட்டிக் கொண்டது முதலியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

சர்ச்சுகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது[10]: இப்படி அறிவுரைக் கூறுவது வந்திருக்கும் போப்பின் பிரதிநிதிதான். சிரிய-மலபார் சைனாடை விளிக்கும் போது, “நமது கிரியை-சடங்குகளில் பல வேறுபாடுகள் இருக்கும்போதும், நாமெல்லாம் ஒரே சர்ச்சைத் தேர்ந்தவர்கள். இந்த வித்தியாசங்களை சர்ச் பலவீனமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றை வலுவாகவே பாவிக்கின்றது. பல மலர்களினால், பூஞ்செண்டை செய்தால், அத்லிருந்து வரும் வாசனை எப்படியிருக்குமோ அதுபோல பாவிக்கிறது”, தொடர்ந்து, ……………..“இந்தியாவில் பல மதங்கள் இருப்பதனால் உரையாஅடல் அவசியமாகிறது. சமீபத்தில் எகிப்து மற்றும் இராக்கில் நமது சர்ச்சுகள் தாக்கப்பட்டபோதிலும், நாம் பரஸ்பர மதங்களுக்குள்ளான உரையாடல்களை ஊக்குவிக்கவே செய்கிறோம். மற்ற மதங்கள் இருப்பது, அவர்களுடன் கடவுள் பேசுகிறார் என்று தெரிகிறது”. இரண்டாம் போப் ஜான்பால் இந்தியாவிற்கு வந்த நிமித்தமாக, வெள்ளிவிழா கொண்டாடுமாறு பணித்தார். கொச்சியில் 10-01-2011 அன்று நடந்த நிகழ்சியில் அவ்வாறு பேசினார்.

பெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்[11]: இவர் இப்படி பேசும்போது, அதே கேரளாவில்-கொச்சியில், செபாஸ்டியன் அடயந்த்ராத் (Sebastian Adayanthrath) என்ற பிஷப், “இந்த உலகமே நம்மை கிருத்து மற்றும் சர்ர்ச்சின் சின்னங்களாகப் பார்க்கின்றது.  நாம் நமது வாழ்க்கையினை பெரிய அர்ப்பணிப்போடு சீர்திருத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்”,  என்று அங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் [The Conference of Religious Women in India (CRWI)] பேசினார்.

வேதபிரகாஷ்

11-01-2011


[1] மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்: http://www.cbcisite.com/

[2] ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். http://viduthalai.in/new/archive/858.html

[3] இந்தியாவில் கிருத்துவத்தின் தொன்மையைக் காட்டிக் கொள்ள பல மோசடி வேலைகளை கிருத்துவர்க செய்து பார்த்தனர். ஆனால், அவை எல்லாம் எடுபடாமல் போகவே, மறுபடியும், பழைய உண்மைகளை மறைத்து, ஒழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு, லத்தீன் சடங்கு-கிரியை முறைகள் படித்தான் நடக்கும் என்று கூறுகிறார்கள் போலும். ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது.

[5] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160658

[6] இந்த ரெட்ஸிங்கர்தான் இப்பொழுது போப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

[8] Cathnews India, Bishops aim to strengthen Indians’ ‘moral fiber’, Published Date: January 6, 2011, http://www.cathnewsindia.com/2011/01/06/bishops-aim-to-strengthen-indians%E2%80%99-%E2%80%98moral-fiber%E2%80%99/

[9] இவரே பல வழக்குகளில் சிக்கியுள்ளது, சமீபத்தில் ஒரு ஊடக நிருபரை அடித்து அறையில் பூட்டிவைத்தது முதலிய நிகழ்ச்சிகளை நினைவு கூற வேண்டும்.

[10] Express News Service, Churches told to maintain unity in diversity,  First Published : 11 Jan 2011 03:37:03 AM IST; Last Updated : 11 Jan 2011 09:38:29 AM IST