Posts Tagged ‘பிரசன்டேசன் சிஸ்டர்ஸ்’

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

திசெம்பர் 21, 2013

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

 Archbishop, Ireland ambassador etc.20-12-2013

இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள்: இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. “தி இந்து” கத்தோலிக்க நானோ நேகிளை பற்றிய தொண்டு பாராட்டப் பட்டதடென்று செய்தி வெளியிட்டது. ஆனால், “இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன்” என சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி [ Archbishop of Madras-Mylapore Most Rev. George Antonysamy] கூறினார்[1], என்று “தினமலர்” வெளியிட்டது. இதனால், என்ன இந்த விசயம் என்று ஆராய்ந்த போதுதான், இது வேண்டுமென்றே இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள் என்று தெரிய வந்தது.

Archbishop, Ireland ambassador etc.20-12-2013 - Nano Nagle

 நானோ  நேகிளை  மரியாதைக்கும்  கண்ணியத்துக்கும்  உரியவர்  என்று வாடிகன்  வெளியிட்டதாம்: கத்தோலிக்க திருச்சபையில், பிரசன்டேசன் சிஸ்டர்ஸ் [Presentation Congregation] அமைப்பை நிறுவிய, நானோ நேகிளை [Venerable Nano Nagle], மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் உரியவர் என அக்டோபர் மாதம், வாடிகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது[2]. இது, புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையாகும்[3]. வாடிகன் வெளியிட்ட அறிவிப்பை கொண்டாடும் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது[4]. இதில் சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி, இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர் ராஜீவ் மேச்சேரி [Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri ] உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[5].

20-12-2013 - Nano Nagle-mission statement etc

நானோ  நேகிள்  போல  புத்தகங்கள்  படிக்க  வேண்டும், பேஸ்  புக்  பார்க்கக்  கூடாது: இதில், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசியதாவது:நானோ நேகிள், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்த போதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதை, சகோதரிகள் உணர வேண்டும். இறை வார்த்தையையே, வேதமாக நினைத்து செயல்படும் சகோதரிகள், அவருடைய வார்த்தைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனில், நிகழ்காலத்தின் தேவையை உணர்ந்து, சேவை புரிய வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என, நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன். நானோ நேகிள் காலத்தில், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லை. அவருக்கு நிறைய நூல்கள் படிக்க கிடைத்தன. அதனால், தான் பயணிக்கப் போகும் பாதையை புரிந்து கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். இளைய தலைமுறையினர், நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அதன் மூலம், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்“, இவ்வாறு, அவர் பேசினார்[6].

20-12-2013 - Nano Nagle- sufferings of Indian women by the catholics

இந்தியப்  பெண்மணிகள்  கத்தோலிக்கர்களால்  கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  போது  அந்நியப்  பெண்ணின்  பாராட்டுவிழா என்ன?: அதெல்லாம் சரிதான், அதே நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிகள் தினமும் இந்தியப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்களே, இதைப் பற்றி ஏன் ஒன்றும் கூறாமல், கண்டிக்காமல் இருக்க வேண்டும். இவர்கள் என்ன செய்தித் தாள்களைப் படிக்காமல் இருக்கிறார்களா இல்லை, அந்த பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை இவருக்குத் தெரியாதா அல்லது அவர் ஒன்றும் விவகாரங்களை இவருக்கு அறிவிக்கவில்லயா? பிறகென்ன, ஒரு அந்நிய பெண்ணின் புகழை இங்கு பாடிக் கொண்டு, இந்தியப் பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான், அந்த அம்மணியின் புகழ் பாடும் லட்சணமா? அபார்ஷண் செய்தி ஐந்து மாதச சிசுவைக் கொன்று சர்ச்சின் வளகத்தில் உள்ள கல்லறையில் ஒரு பாதிரி புதைத்துள்ளான். அப்படியென்றால், கத்தோலிக்கக் கன்னிமார்களுக்குக் கூட இரக்கம் இல்லையா? இந்தியப் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமாகி விட்டனரா?

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

காலனிய  ஆதிக்கத்தை  எதிர்த்த  பெண்மணி  என்றால், எந்தகாலனிய  ஆதிக்கம்,   எங்கு  என்று  சொல்லாமல் கதை  அடிப்பது  ஏனோ?: ராஜீவ் மேச்சேரி பேசும் போது[7], உங்களுடைய குறிக்கோள் மற்றும் தூரப்பார்வை சமூகத்தின் தேவைகளுக்காக இருக்க வேண்டும். சாதாரண மனிதன் தான் எதனை நம்புகிறானோ அதற்காகப் போராட வேண்டும். நானோ நேகிள் அயர்லாந்தில் கத்தோலிக்க படிப்பிற்காக தொண்டாற்றியவர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து ஏழை மக்களுக்கு பள்ளிகள் அமைத்துள்ளார். பிரசன்டேசன் காங்கிகேஷன் பல பள்ளிகளை உலகம் முழுவதும் நிறுவியுள்ளது, என்று விளக்கினார். “தி ஹிந்து” இதன் விவரங்களை விழாக்கு முன்னர் மற்றும் பின்னர் நன்றாகவே வெளியிட்டுள்ளது[8]. காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த பெண்மணி என்றால், எந்த காலனிய ஆதிக்கம், எங்கு என்று சொல்லாமல் கதை அடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

Action against sex-cardinals, bishops, pastors etc Dec.2013

யார்  இந்த  நானோ  நேகிள்  –  இந்தியாவிற்கு  என்ன  சம்பந்தம்?: நானோ கேகிள் (1718-1784) அயர்லாந்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் போது வாழ்ந்தவர். அதாவது ஆங்கிலேயர் புருடெஸ்டென்ட் கிருத்துவர்கள், இவர்கள் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்பதினால், சுன்னி-ஷியா முகமதியர்களைப் போல அடித்துக் கொண்டிருந்தனர். இந்த அம்மையாரைப் பற்றிய விவரங்கள் அதிகாரப் பூர்வமாக ஒன்றும் தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்திருப்பதாக நம்பப்படுகிறது என்றெல்லாம் தான் கதை சொல்கிறார்கள். இன்னொரு கதையின் படி, பார்ட்டிகள், கிளப்புகள் என்று ஜாலியாகச் சுற்றி வந்த பெண்மணி என்றும் சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர்[9]. பிரெஞ்சு நாட்டில் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ்ந்த சீமாட்டி என்றும் கூரப்படுகிறதாம்! எது எப்படியிருந்தாலும், இந்தியர்களுக்கு, இப்பொழுது இந்த கதைகள் எல்லாம் தேவையா என்ற கேள்விதான் எழுகின்றது. தொடர்ந்து நடந்து வரும் கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், களியாட்டங்கள், கொக்கோக பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், பிடோபைல் குரூரக்குற்றங்கள், சிசு வதைகள் முதலியவற்றை மறைக்கத்தான் இந்த விழா நாடங்கள் என்றே தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] The announcement by the Pope brings the declaration of Sainthood for Nano Nagle a step closer, as her life of heroic virtue has been officially acknowledged by the Vatican, speakers noted.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[3] Nano Nagle has been declared Venerable by Pope Francis – October 31, 2013.  Vatican website announcement , Vatican City, 31 October 2013 (VIS) – Today, during a private audience with Cardinal Angelo Amato S.D.B., prefect of the Congregation for the Causes of Saints, Pope Francis authorised the Congregation to promulgate the following decrees: HEROIC VIRTUES: Servant of God Honora “Nano” Nagle (John of God), Irish foundress of the Union of the Presentation Sisters of the Blessed Virgin Mary (1718-1784) and all Presentation Sisters around the world.

[4] தினமலர், இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு, பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:35 IST

[5] தினமலர், “இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு“, டிசம்பர் 21,2013,08:57 IST

[7] “Your vision and mission should be according to the needs of the society,” he added. Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri said the event reiterated the fact that an ordinary person could be extraordinary if they are willing to fight for what they believe in. Nano Nagle is acknowledged as one of the greatest pioneers of Catholic education in Ireland. She defied the colonial order and was successful in setting up schools for the poor. The Presentation Congregation has set up schools in many parts of the world.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[8] Time to celebrate, December 20, Sacred Heart, Church Park, 4.30 p.m – Sacred Heart conducts an event to celebrate the veneration of Nano Nagle (the founder of The Presentation Sisters) by Pope Francis. The Archbishop of Madras —Rev. Dr. George Antonyswamy will grace the occasion as the chief guest and The Honorary Consul of Ireland in Chennai, Rajeev Mecheri will be the guest of honour in the presence of The Presentation Sisters (PBVM) of the South East Region.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/from-the-diary/article5463610.ece

[9] According to one account she had a hectic social life in Paris – “balls, parties and theatre outings, all the glamour of the life of a wealthy young lady”. It was after one of these parties that she noticed a group of wretched-looking people, huddled in a church doorway and was taken aback by the contrast between her wealthy, privileged life and that of the Paris poor.

http://www.independent.ie/lifestyle/education/nano-nagle-remains-an-influential-educator-1722506.html