Posts Tagged ‘கிருஸ்துவம்’

“கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” – புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு.

ஜனவரி 5, 2015

“கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” – புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு.

1. Stage - Prayer- standing - KSP

1. Stage – Prayer- standing – KSP

நூல் வெளியீட்டு விழா: “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்றது[1]. வர்ஷன் பிரசுரம், சென்னை இந்நூலை வெளியிட்டுள்ளது[2]. இப்புத்தகதைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்புத்தகம் அனைபவருக்கும் கொடுக்கப்பட்டது. இறைவணக்கத்திற்குப் பிறகு, ஆ. ராமலிங்கம், டிரஸ்டி, ராம் டிரஸ்ட் நிகழ்ச்சிற்கு வந்திருந்த விருந்தினர்கள், மற்றவர்களை வரவேற்று, நூலாசிரியர் மற்றும் அந்நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்ற வந்தவர்களை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டப்படி ஶ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், ஶ்ரீ காசி திருமடம், திருப்பனந்தாள் வரமுடியவில்லை. சிறப்புரையாற்ற கீழ்கண்டவர்கள் வந்திருந்தனர்:

2. Stage- Krishnaswamy, Kasivelu, S. Kalyanaraman, Vedantham, Sami Thyagarajan, S. Ramachandran, K.V.Ramakrishna Rao, G.P.Srinivasan-KSP

2. Stage- Krishnaswamy, Kasivelu, S. Kalyanaraman, Vedantham, Sami Thyagarajan, S. Ramachandran, K.V.Ramakrishna Rao, G.P.Srinivasan-KSP

  1. எஸ். வேதாந்தம், விஸ்வ ஹிந்து பரிசத், தலைவர்.
  2. சாமி தியாகராஜன், திராவிட சான்றோர் பேரவை, தலைவர், கும்பகோணம்.
  3. எஸ். கல்யாணராமன், சரஸ்தி ஆய்வு மையம், சென்னை
  4. எஸ். ராமசந்திரன், தொல்பொருள் ஆய்வாளர்.
  5. கே. வி. கிருஷ்ணசாமி, தலைவர், இந்துஸ்தான் தேசிய கட்சி.
  6. கே. வி. ராமருஷ்ண ராவ், ஆய்வாளர், சென்னை.
  7. ஜி.பி.ஶ்ரீனிவாசன், பத்திரிக்கையாளர், திருச்சி.
  8. கா. பிரியதர்ஷிணி, நூலாசிரியர் மகள்.
  9. சா. காசிவேலு, நூலாசிரியர்

இது தவிர, ஆர். எஸ். நாராயணசாமி (மூத்த பத்திரிக்கையாளர்), பிரபாகரன் (தர்ம ரக்ஷண சமிதி நிதியாளர்), வி.எஸ். கிருஷ்ணா, ராஜேஸ் ராம் (ஏபிவிபி), சாரி,  இன்னும் பலர் வந்திருந்தனர். பி.ஆர். ஹரண் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

5. Screen backdrop-Book release-KVR

5. Screen backdrop-Book release-KVR

ஊல் அறிமுகம்: சாமி தியாகராஜன் நூல் அறிமுகப்படுத்தி, விவரங்களைக் கொடுத்தார். வேதாந்தம், நூலை வெலியிட, முதல் பிரதி எஸ். கல்யாணராமன் பெற்றுக் கொண்டார். நூல்பிரதி, சிறப்புரை ஆற்றவந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. சிறப்புரை ஆற்றவந்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். பிறகு, அவர்கள் தங்களது உரையினைத் தொடங்கினர். ஒவ்வொருவரும் பேசியவற்றிலிருந்து முக்கியமான விசயங்கள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாகப் பேசிய விசயங்கள் விடப்படுகின்றன.

16. Vedantam speaking -Haran

16. Vedantam speaking -Haran

கிருத்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகள்: எஸ். பகவந்தம், விஸ்வ ஹிந்து பரிஸத், தலைவர், கிருத்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றைத் தடுத்து நிறுத்த செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் பேசினார். இன்றைய சூழ்நிலைகளில், குறிப்பாக மேனாட்டுத் தாக்கத்தினால், சமூகம் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இந்துக்கள் தங்களது மதத்தைப் போற்றிக்காக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டினார்.

17. Sami Thyagarajan speaking - Haran

17. Sami Thyagarajan speaking – Haran

பார்ப்பன துவேசம்: சாமி தியாகராஜன், திராவிட சான்றோர் பேரவை, தலைவர், கும்பகோணம், பொதுவாக புத்தகம் எவ்வாறு பலவிசயங்களை, பல நூல்களிலிருந்து தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டினார். ஒரு நூலை எழுதுவதை விட, தொகுப்பதில் உள்ள சிரமங்களையும் அவர் எடுத்துக் காட்டினார். தொல்காப்பியத்தில் ஐயர், அந்தணர் மற்றும் பார்ப்பனர் என்ற சொல்லாடல்கள் உள்ளனவென்றும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எடுத்துக் காட்டினார். பொதுவாக, நாத்திக-திராவிட சித்தாந்திகள், கிருத்துவர்களை ஆதரிக்கும் நேரத்தில், பிராமண துவேசத்தை வளர்க்கிறார்கள். ஆனால், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தமிழகத்தில் ஏற்கெனவே இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது என்று எடுத்துக் காட்டினார்.

 18. S. Kalyanaraman speaking-Haran

இந்தியாவின் தொன்மை: எஸ். கல்யாணராமன்[3], சரஸ்தி ஆய்வு மையம், சென்னை, ராபட் டி நொபிலி போன்றவர்களின் யுக்திகளைப் பற்றி விளக்கி, இந்திய வரலாற்றுத் தொன்மையினை, சரஸ்வதி நதி நாகரிகம் மூலம் விளக்கினார். அப்பொழுது போலவே, இப்பொழுதும், கிருத்துவ மிஷனரிகளுக்கு, அயல்நாடுகளிலிருந்து நிதியுதவி கிடைத்துக் கொண்டிருப்பதால், இத்தகைய பிரச்சாரங்களை தங்களது  வேலைகளை போலவே செய்து வருகிறார்கள், அதற்கு சம்பளமும் கொடுக்கப் படுகின்றது என்றார். இந்தியத் தொன்மையின் காரணத்தினால், இந்திய இல்லக்கியங்களின் தொன்மையும், மற்றஇலக்கியங்களைவிட தொன்மையாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டிப் பேசினார்.

9. S. Ramachandran speaking-Haran

9. S. Ramachandran speaking-Haran

ஆத்திகதிராவிடகிருத்துவ பண்டிதர்களின் இரட்டைவேடங்கள்: எஸ். ராமசந்திரன், தொல்பொருள் ஆய்வாளர் திருநெல்வேலியில் உள்ள விபூதி சபை போன்றோர், எப்படி கிருத்துவ மிஷினரிகளின் பிரச்சாரத்தை எதிர்த்துள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டினார்.  1970ல் திக நடத்திய ஊர்வலத்தில், பார்வதி-சிவன் படங்களை ஆபாசமாக சித்தரித்து எடுத்துச் சென்றதை ஞாபகப்படுத்தினார்[4]. தமிழக நாத்திகக் குழுக்களின் போலிநாத்திகத்தை எடுத்துக் காட்டினார். சமீபத்தில் காலமான பார்ப்பனர்-அல்லாத ‘திராவிட பண்டிதர்’ எம்.எஸ்.எஸ். பாண்டியன் [Mathias Samuel Soundra Pandian[5]] போன்றோரது, கிருத்துவசார்பு சித்தாந்தத்தையும் எடுத்துக் காட்டினார்[6]. காமராஜ் தான் இந்துமதமும், பார்ப்பனியமும் தமிழகத்தில் வேரூன்ற காரணம் என்று அவர் பதிவுசெய்துள்ளதையும் எடுத்துக் காட்டினார். “தேவரடியார்” சோழர் காலத்தில் மிக்கவும் உயர்ந்த நிலையில் இருந்ததனர். ஆனால், நாத்திகவாதிகள் “தேவதாசி” என்று சொல்லி அவர்களை இழிவுபடுத்தினர், என்று பலவிசயங்களை எடுத்துக் காட்டினார். அதாவது, இந்துமதத்தை விமர்சிக்கும், கிருத்துவர்கள், நாத்திகத்தைப் பின்பற்றுவதுபோலக் காட்டிக் கொள்ளும்போது, எப்படி இரட்டைவேடம் போடுகிறார்கள் என்பதனை எடுத்திக் காட்டினார்.

20. K.V.Krishnasami speaking-Haran

20. K.V.Krishnasami speaking-Haran

இந்துமயமாக்கப் பட்ட பைபிள்: கே. வி. கிருஷ்ணசாமி, தலைவர், இந்துஸ்தான் தேசிய கட்சி,  தி நியூ கம்யூனிடி பைபிள்[7] [The New Community Bible (NCB)]  என்ற பைபிளை 2008ல் வெளியிட்டு, அதில் பைபிள் வசனங்களுக்கு இணையாக, வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சுலோகங்ளை ஒப்புமையாக கொடுத்தனர். இதெல்லாம், இந்துக்களை மதமாற்ற செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றாகும் என்றார். இதில் வேடிக்கையென்னவென்றால், சில கிருத்துவர்களே, இதனை எதிர்த்துள்ளனர்[8]. “இந்துமயமாக்கப் பட்டுள்ளது’ என்று அவர்கள் குறைகூறி ஆட்சேபித்ததால், அவை நீக்கப்பட்டுள்ளன.

21. K. V. Ramakrishna Rao speaking - Haran

21. K. V. Ramakrishna Rao speaking – Haran

இந்து மதத்திற்கு எதிரான கிருத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்வது எப்படி?: கே. வி. ராமகிருஷ்ண ராவ்[9], ஆய்வாளர், சென்னை, வாடிகன் கவுன்சில் – II (Vatican Council – II) ஆவணங்கள்[10], “மதங்களுக்கு இடையில் உரையாடல்” (Inter-religious dialogue),  “உள்-கலாச்சாரமயமாக்கல்” (Inculturation)[11], கிருஸ்துவயியல் (Christology), ஏசு, கிருஸ்து மற்றும் ஏசு கிருஸ்து என்ற மனிதர் இருந்திருக்கவில்லை (myths of Jesus, Christ  etc) முதலியவற்றைப் பற்றி விளக்கினார்.

KVR with PP presentation

KVR with PP presentation

“பவர் பாய்ன்ட்” மூலம் புத்தகங்கள், ஆவணங்கள் முதலிய ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்.

Ramesh interacting with KVR

Ramesh interacting with KVR

இவர் பேசும் போது, உரையாடலும் ஏற்பட்டது. பார்வையாளர்களில் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதிலும் கொடுத்தார். தொடர்ந்து பேசும்போது, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தகம், இந்த ரீதியில், ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. எழுபது வயதுக்கும் மேலான திரு. காசிவேலு பெரும் முயற்சி எடுத்து, இந்நூலை எழுதி முடித்திருக்கிறார், இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் படித்து, “கிருத்துவயியல்” நுணுக்கங்களை அறிந்து இந்துக்கள் கிருத்துவர்களின் போலித்தனமான சரித்திரப் புரட்டுகள், பொய் பிரச்சாரங்கள், புரட்டு ஆராய்ச்சிகள் முதலிவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இம்மாதிரியான முயற்சிகள் தொடரட்டும், என்று முடித்தார்.

22. GPS speaking-Haran photo

22. GPS speaking-Haran photo

இப்புத்தகம் உருவானது எப்படி?: ஜி.பி.ஶ்ரீனிவாசன், பத்திரிக்கையாளர், திருச்சி, இப்புத்தகம் எப்படி எழுதப்பட்டது, தொகுக்கப்பட்டது, விவரங்கள் சேகரிக்கப்பட்டது, ஆசிரியர் எவ்வாறு கஷ்டப்பட்டு, தனது பணத்தைப் போட்டு, இப்புதகத்தை வெளியிட்டுள்ளார் என்ற விவரித்துக் கூறினார். இப்புத்தகத்தில் உள்ள குறைநிறைகளை அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும் என்றார். இவர் தாம், இங்கு வந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைய வைத்ததற்கு காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.

24. Priyadarshini speaking

24. Priyadarshini speaking

தந்தையின் உழைப்பை எடுத்துக் காட்டும் மகள்: கா. பிரியதர்ஷிணி, நூலாசிரியர் மகள் எப்படி தனது தந்தை நூலை வெளியிட உழைத்தார் என்பதை எடுத்துக் காட்டி, வந்துள்ள எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கிட்டத்தட்ட 1200 புத்தகங்களை ஆய்வு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து, ஆதாரங்களுடன் இயற்றப்பட நூல் இது. நூலாசிரியரான தன் தந்தையாரின் உழைப்பை நேரில் கண்டவரும், அவருக்கு ஊக்கமும், உதவியும் அளித்தவருமான அவரின் அன்பு மகள் பிரியதர்ஷினி தன்னுடைய கருத்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

23. Kasivelu speaking

23. Kasivelu speaking

சா. காசிவேலு, நூலாசிரியர், நூலில் உள்ள அம்சங்கள் மட்டுமல்லாது, பைபிளில் உள்ள முரண்படுகளைப் பற்றி விவரித்தார். நூலை அனைவரும் படித்து, விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

25. Publisher hounoured

25. Publisher hounoured

சிற்றுண்டியுடன் விழா நிறைவு: நூலை பதிப்பித்த வர்ஷன் பிரசுரம் பதிப்பகத்தின் உரிமையாளர் எல்.கார்த்திகேயன் அவர்களை நூலாசிரியர் காசிவேலு பாராட்டி கௌரவித்தார்.

26. Book designer honoured

26. Book designer honoured

நூலை வடிவமைத்த வடிவமைப்பாளர் திரு.பிரபுவையும் நூலாசிரியர் காசி வேலு பாராட்டி கௌரவித்தார். இந்த விழாவை ஒருங்கிணைத்து மற்ற ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதற்காக பி. ஆர். ஹரணையும் காசிவேலு பாராட்டி கௌரவித்தார்.

27. B.R. Haran honoured

27. B.R. Haran honoured

பிறகு நூலாசிரியர் காசி வேலு ஏற்புரை ஆற்றினார்.

28. Kasivelu honoured by Jayanti

28. Kasivelu honoured by Jayanti

ஸ்ரீ ராம் டிரஸ்டின் உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார். இறுதியாக வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் சாரதி அவர்கள் வந்தேமாதரம் பாட விழா இனிதே நிறைவுற்றது. பிறகு, வந்திருந்தவர்களுக்கு, சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

வேதபிரகாஷ்

© 05-01-2015

[1] ஶ்ரீ சங்கராலயம் அரங்கம், 66, மேயர் ராமனாதன் சாலை (ஸ்பர் டேங் ரோடு), சேத்துப்பட்டு, சென்னை – 600 031.

[2] வர்ஷன் பிரசுரம், புதிய எண்.33, ரங்ஃப்கன் தெரு, தி.நகர், சென்னை – 600 017.

[3] இந்து-சரஸ்வதி நாகரிகத்தைப் பற்றிய பயனுள்ள எல்லா விவரங்களையும், தனது இணைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

[4] துக்ளக் அப்படங்களை வெளியிட்டபோது, அதன் பிரதிகளை திவினர் எரித்தனர். ஆனால், ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கை அப்படங்களை வெளியிட்டது.

[5] http://indianexpress.com/article/cities/delhi/noted-historian-and-jnu-teacher-pandian-dies/

உதாரணத்திற்கு இவரது ஒரு கட்டுரையினை இங்கே வாசிக்கலாம்; http://ispepune.org.in/PDF%20ISSUE/2000/JISPE3400/010PANDIAN.PDF

[6] http://sanhati.com/articles/11941/

[7] The New Community Bible (NCB) is highly controversial in India. It has been described as a “New Age” bible and a “Hindu-ised” bible. When it was introduced in 2008, there was a Catholic outcry against its commentaries and drawings. It was withdrawn by the Bishops’ Conference of India and a “Revised” edition was brought out in 2011. The revised edition is not much less syncretized than the first. Its commentaries smack of relativism and religious pluralism.

[8] http://ephesians511blog.com/2013/05/25/the-indian-churchs-syncretized-st-pauls-new-community-bible-now-exported/

[9] தனது உரையடங்கிய நகலை முன்பாக அனைவரும் விநியோகித்தார்.

[10] http://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/index.htm

[11] http://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/documents/vat-ii_decl_19651028_nostra-aetate_en.html