Archive for the ‘மைந்தன்’ Category

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

ஏப்ரல் 28, 2013

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

Yeshua Ben Maryam Al-Masih

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்தவர் வியாசேஸ்லவ் (49), தான் கடவுளின் மைந்தன், “மேசியா” என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றியுள்ளாராம்[1]. ஏனெனில் அவன் எப்பொழுதும் “பரிசுத்த ஆவி”யுடன் பேசிக்கொண்டு இருப்பானாம்[2]. அதனால் ஏசுவைப் போல தானும் ஜெருசலேம் சென்றால், அவ்வாறே மாறிவிடலாம் என்று நினைத்துக் கொள்கிறானாம். ஏசுவைப் போலவே தலைமுடு வளர்த்துக் கொண்டு, உடையை அணிந்து கொண்டு, பொது இடங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தனது பெயரை 4 முறை மாற்றி, குடும்பப் பெயர், தனிப்பெயர் முதலியவற்றைச் சேர்த்து பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்துள்ளார்.

Photo1011

அங்கு வந்து பதிவு செய்யும், போது, இருந்த பெண் அதிகாரி “என்ன பெயரை இப்படி எழுதியிருக்கிறீர்களே”, என்ற கேட்டபோது, “நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன்”, என்று உறுதியாக சொன்னானாம். Photo1008

இம்முறை, அவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் தனது பெயரை ‘யஷுவா பென் மர்யம் அல்-மசி’ (Yeshua Ben Maryam Al-Masih) என்று மாற்றிக் கொண்டுள்ளார், அதாவது யூதராக பதிவு செய்துள்ளார். மேற்கண்ட எபிரேய பெயருக்கு தமிழில் ‘மேரியின் மகனும் கிருஸ்துவுமான இயேசு’ என்று பொருள்[3]. Photo1010இந்த தகவலை வெளியிட்ட உள்ளூர் செய்தி நிறுவனம், ‘வியாசேஸ்லவ் எப்போதுமே சுவிசேஷம் பற்றி பேசி வந்தார்[4]. Photo1015

ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் ஏசு கிருஸ்து வாழ்கிறார்” என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டது. இயேசு கிருஸ்து என்று பெயர் மாற்றிக் கொள்வதால், ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்லவும், இஸ்ரேல் நாட்டின் குடிமகனாகவும் வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கருதி இருக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது[5]. Photo1012

ஆனால் அவன் அவ்வாறே ஜெருசலேத்திற்குச் சென்று, ஒரு வீட்டில் மனைவி, மகன் உடன் வசித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கும் பைபிளில் வரும் பெயர்களை வைத்துள்ளான். ஒரு கழுதையினையும் வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மீது சவாரி செய்து கொண்டு வருகிறான்[6], என்றும் செய்திகள் வந்துள்ளன. Photo1013உள்ளூர் மக்கள், யாத்திரிகள் அவரை தமாஷாகப் பார்க்கிறார்களாம். ஏனெனில், பண்டிகைகளின் போது, அவ்வாறு வேடமிட்டு நடித்துக் காட்டுவது சகஜமான விஷயம்தான். இருப்பினும், இவர் விஷயம் அப்படியில்லை, ஏனெனில், இவர் தம்மையே ஏசுகிருஸ்து என்று சொல்லிக் கொள்கிறார். அவ்வாறே மாறத்துடிக்கிறார். Appearing in Russin websiteஇதில் வேடிக்கை என்னவென்றால், ஏசுகிருஸ்துவும், தன்னை “மேசியா” என்றுக் காட்டிக் கொள்ள[7], இதே மாதிரி கழுதைக் குட்டி மீது உட்கார்ந்து கொண்டு, ஜெருசலேத்தில் நுழைந்தாராம்[8]. ஆனால், யூதர்கள் அவரை “ஒரு வேடதாரி, போலி” என்று சொல்லி ஒதுக்கி விட்டது[9], என்று பைபிள் கூறுகிறது. இவ்விவரங்கள் முழுவதையும் கீழ்கண்ட யூ-டியூப்பிலும் காணலாம்[10].

வேதபிரகாஷ்

28-04-2013


[5] மாலைமலர், இஸ்ரேலில்குடியேறவசதியாகஇயேசுகிருஸ்துஎன்றுபெயரைமாற்றிக்கொண்டரஷ்யர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2:19 AM IST

[8] Donkeys and mules were used by important persons and kings in the Old Testament (for example, Judg 10:4; 12:14; 2 Sam 13:29; 18:9), including David himself (1 Kings 1:33), but the contrast in this context in Zechariah 9 is between the warhorses (v. 10) and the donkey on which the king rides (v. 9) is a striking image of humility.

[9] Accursed – Margin, “Anathema” (ἀνάθημα anathēma); see the Acts 23:14 note; Romans 9:3 note; compare 1 Corinthians 16:22Galatians 1:8-9. The word is one of execration, or cursing; and means, that no one under the influence of the Holy Spirit could curse the name of Jesus, or denounce him as execrable and as an impostor.