Archive for the ‘சௌகரியம்’ Category

பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

மே 5, 2013

பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

pope-francis-and-benedict on arrival at Vatian 02-05-2013

பழைய போப் வரவேற்கப் பட்டார்: இரண்டு போப்புகள் ஒரே இடத்தில் இருக்கலாமா, கூடாதா என்று ஏற்கெனவே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில்[1], பழைய போப் 02-05-2013 (வியாழக்கிழமை) அன்று ஹெலிகாப்டரில் வந்து வாடிகன் நகரத்தில் இறங்கினார்[2]. பிப்ரவரி 28, 2013லிருந்து கோடைக்கால அரண்மனையான காஸ்டல் காண்டோல்ஃபோ [Castel Gandolfo, the papal summer palace] என்ற இடத்தில் தங்கிவிட்டு திரும்பியுள்ளார்[3].  புதிய போப் அவரை ஹெலிபாடிற்கே வந்து வரவேற்றார்[4], இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்[5]. “நாங்கள் இருவரும் சகோதரர்கள்”, என்றார். பிறகு இருவரும் ஒன்றாக தொழச் சென்றனர். மக்கள் இருவரும் ரொட்டியைப் பிளப்பதைப் பார்த்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தனர்.

Two popes met together

தங்க தனியான மாளிகை: புதிப்பிக்கப்பட்டுள்ள மாஸ்டர் எக்லிஸியா அல்லது ( Mater Ecclesiae) தலைமை பீடம் என்ற இடத்திற்குச் சென்றார்[6].  இது செயின்ட் பீடர் பேஸிலிகாவிற்குப் [Saint Peter’s Basilica] பின் புறம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடகக்காரர்கள் என்று எல்லோரும் இவரை வந்து பார்க்கக் கூடும். இவருக்கு இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன[7]. வசதியாக இருந்து கொண்டு வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வருவதையும் எதிர்கொள்ளும் வகையில் ஒரு படுக்கையறையும் உள்ளது[8]. இருவரும் சேர்ந்து கத்தோலிக்க சர்ச்சின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார்கள் போலும்.

Two popes met together - 2013

பணிவிடை செய்ய நான்கு பெண்கள்: தினசரி பணிவிடை செய்ய நான்கு பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முன்னர் நான்கு கன்னியாஸ்திரிக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இங்கு அவருக்கென்று பிரத்யேகமாக வழிபாடு செய்ய சர்ச் / சேபல், படிக்க நூலகம் என்று எல்லாமே உள்ளன[9]. மற்றவற்றைப் பற்றி – ஆரோக்யம், மருத்துவம், பொழுது போக்கு – விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சௌகரியமான இடம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போப் கோடை மாளிகையிலிருந்து, திரும்பி வருதற்குள் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.

Pope topless - air blows away cape

ஐயோ தொப்பி பறந்து போ விட்டதே?

Pope topless - air blows away cape2

 

அட, என் தொப்பியும் பறந்து விட்டது, என்ன ஒற்றுமை!

Pope topless - air blows away cape -children look with fun

 

வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகள்!

இரண்டு போப்புகள் ஒரேநேரத்தில் இருக்க முடியாது: இரண்டு தலைச்சிறந்த இறையியல் வல்லனர்கள் போப் பெனிடிக்டை சந்திந்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஏனெனில், போப் என்பவர் என்றுமே பதவி விலக முடியாது அல்லது ராஜினாமா செய்ய முடியாது என்படு அவர்களது வாதம். சுருக்கமாக சொன்னால், ஒரு போப் உயிரோடு இருக்கும் போது, அடுத்தவர் போப்பாக முடியாது. ஆனால், 1990களில் போப் இரண்டு பாதிப்புகளினின்று (mild strokes) தப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் சகோதரி அத்தகைய உபாதைகளினால் இறந்துள்ளனர். பாதுகாப்பிற்காக ஆஸ்பிரினை தினமும் சாப்பிட்டு வந்தார். இதனால், கால்மூட்டி வலியும் (osteoarthritis in his knees) இருந்து வருகின்றது. மேலே ஏறுவதற்கு, நகரும் படிகட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[10]. மேலும் இவ்வாறு ஒரு வயதான, முதியவரான, தள்ளாடும் போப்பை உலகத்திற்குக் காட்ட நேரிடும் போது, கிருத்துவர்கள் லாயக்கற்ற ஒருவரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும். ஏனெனில் இன்றை நவீன காலகட்டத்தில், இளைஞர்களைக் கவர, இளைமைத் தோற்றம் கொண்ட, அனைவரையும் அடக்கிக்கி ஆளக்கூடிய அதாவது தனது கட்டுக்குள் வைத்திருக்கும் போப்பைத்தான் கிருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். எப்படியோ எல்லாம் தீர்மானம் ஆகிவிட்டது.

 

© வேதபிரகாஷ்

05-05-2013


[3] On the afternoon of May 2, 2013, Pope Emeritus Benedict XVI departed Castel Gandolfo, the papal summer palace where he had been staying since his resignation on February 28, to return to the Vatican.

[8] As Robert Moynihan reports, upon seeing his new home, Benedict declared, “The house is comfortable, one can work well here.” Benedict can also look forward to visits from his older brother, Msgr. Georg Ratzinger, for whom a guest bedroom has been prepared.

http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm

[9] Benedict’s life at Mater Ecclesiae will be quiet, accompanied only by Archbishop Gänswein and four consecrated women (not nuns, as some news sources have incorrectly reported) who will run the household. In addition to the small chapel where he will celebrate Mass and pray, the Pope Emeritus has a piano and a library stocked with the books that kept close as both cardinal and pope.

http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm

[10] Ratzinger survived two mild strokes in the early 1990s. Both his father and sister died of strokes. The pope takes aspirin as a preventive medicine. He is plagued by osteoarthritis in his knees, especially the right one. Walking is getting more difficult for him, and he now uses a rolling platform, which he mounts upon entering St. Peter’s Basilica, such as when he is wearing heavy garments.

http://www.examiner.com/article/pope-benedict-battles-prophecies-and-an-antipope-successpr