இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்

இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்


ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி கொலை: கணவன் கைது[1]: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சுவிளை ராஜவீதித்தெருயைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (62) இவரது மனைவி வசந்தா. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஓய்விற்குப் பிறகு கிருஸ்துவ பிரசங்கம் / மதப்பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு சொரூபா, மிஸ்பா என்ற இரு மகள்கள். மூத்தமகள் திருமணமாகி பெங்களூரில் கணவர் பிரின்ஸ், எஞ்சினியர், உடன் வாழ்ந்து வருகிறார். இவரது இளைய மகள் மிஸ்பா எபனேசர் ஜெய்ஹிந்த் (26). எம்.ஏ, எம்பில் படித்த மிஸ்பா நெல்லைக்கு அருகியேள்ள தாழையூத்து தென்கலத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் அருள் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வந்தார். இவர் சிறுவர்களுக்கான ஊழியம் செய்து வந்தார்[2]. இவர் நேற்று முன்தினம் (22-11-2011) இரவு வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார் அவரது கன்னத்தில் காயமும் இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் போலீசில் புகார் செய்த சவுந்தர்ராஜ் தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார்[3]. சம்பவத்திற்குப் பின் கணவர் அருள் மாயமானது சந்தேகத்தைக் கிளப்பவே இன்ஸ்பெக்டர் இசக்கியின் தலைமையிலான தனிப்படையின் திவிர தேடுதலில் அருள் பிடிபட்டார். விசாணையில் மிஸ்பாவை கணவரே கொலை செய்தது தெரியவந்தது[4].

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு: எம்.ஏ.படித்த மிஸ்பாவுக்கும் நெல்லை பக்கமுள்ள தென்கலத்தைச் சார்ந்த அருள் என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது. இவர்களுக்குத் குழந்தை இல்லை. மாமனார் வீட்டில் தான் அருள் வசித்து வந்தார். தனித்குடித்தனம் போக விரும்பினார். மனைவி மிஸ்பா விரும்பவில்லை. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு மூண்டது. அருள் பிளஸ் 2வரை படித்துள்ளார். மிஸ்பா எம்ஏ.பிஎட் படித்துள்ளார். தனது மனைவி தன்னை விட அதிகம் படித்தது இவருக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இதனால், மேலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே ஈகோ பிரச்னை வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது[5].

கணவன் செக்ஸ் வெறியர்: அருள் ஒரு செக்ஸ் வெறியர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. கால நேரம் தெரியாமல் மனைவியை உறவுக்கு அழைப்பாராம் அது மிஸ்பாவுக்கு பிடிக்கவில்லை[6] என்றெல்லாம் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.  நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் ஊழியம் முடித்துவிட்டுத் திரும்பிய அருள் இரவு மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார் (இரவு நேரம் தவறனாதா). தனக்கு உடல் நிலை சரியில்லை என மனைவி மறுத்ததால் வெறியிலிருந்த அருள் போர்வையால் மனைவியின் முகத்தை அழுத்தியுள்ளார் (இதனால் மோடிவ்/குறிக்கோள் என்ன என்று தெரியவில்லை). அதில் அவர் மூச்சுத் திணறி இறந்து விடவே பயந்து போன அருள் தப்பி ஒடி விட்டார்[7] (நடந்தது அவர்களுக்கும் கர்த்தருக்கும் தான் தெரியும்).


கணவனே கொலை செய்த கொரூரம்: வீடு திரும்பிய மிஸ்பாவின் தந்தை சவுந்தர்ராஜ் மகள் இறந்து கிடப்பதைக்கண்டு பதறியவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவர் தனது சந்தேகத்தையும் தெரிவிக்க தலைமறைவான கணவர் அருளை தேடிப்பிடித்து கைது செய்தனர்[8]. போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவலை சொன்ன கணவன் அருளைக் கைது செய்தனர். “உறவுக்கு, கட்டிய மனைவியே உடன்படாவிட்டலும், கரம்பிடித்த கணவனே பலாக்காரம் செய்தாலும் மனுநீதிப்படி குற்றம்தான் என்பதே தற்போதைய நடைமுறை”, இப்படி நக்கீரன் விளக்கம் அளித்திருப்பது வியப்பானது. கிருத்துவர்களுக்கும், மனுநீதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சம்பந்தப் பட்டுள்ளவர்கள், குடும்பங்கள் எல்லோருமே நம்பிக்கையுள்ள கிருத்துவர்கள், அதிலும் படித்தவர்கள், ஊழியம் / மதப்பிரசாரம் / போதனை செய்து வருபவர்கள். ஆகவே, அவர்கள் கிருத்துவ மத போதனகள், அவர்களது மதகுருமார்கள் நடத்தை, பழக்க-வழக்கங்கள் முதலியவற்றால் இர்ர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அருள் ஒரு பிடோபைலா – அதாவது சிறுவர் பாலியல் வன்மமுள்ள பாதிரியா? அருள் ஒரு அழகான வாலிபர். சிறுவர்களுக்கு ஊழியம் செய்து வருபவர், அதாவது சிறுவர்-சிறுமியர்களுடம் நெருங்கி பழகி வரும் கிருத்துவ போதகர், ஆலோசனை போதகர். டான் போஸ்கோ / தோன் பொஸ்கோ போன்றவர்[9]. ஆகையால், மனைவி ஒதுங்கியிருந்ததால், சென்ஸ் வக்கிரத்தை சிருவர்-சிறுமியர்களிடம் காட்டினாரா அல்லது அவர்கள் புகார் செய்து விடுவர் என்று மனைவியிடம் காட்டியுள்ளாரா. அத்தகைய செக்ஸ் செயல்களைக் கண்டு வெறுத்து, மனைவி பயந்து ஒதுங்கியிருந்தாளா? அதனால் பொறுக்காத கணவன் தன்னுடைய மனைவியை நெருங்கி வந்தானா, மறுத்ததால் கோபம் அதிகமாகி, அந்நிலை ஏற்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது, சிக்கிக் கொள்வது முதலியன தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில், கணவன்-மனைவி இருவருமே இளம் வயதினர், புரிந்து கொண்டு வாழவேண்டியவர்கள். அந்நிலையில், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டமானது.

சமூகப்பிரச்சினையா, மதப்பிரச்சினையா: இக்காலகட்டத்தில், அறிந்த-படித்த-தெளிந்த மக்கள் பல நேரங்களில் மதம்-ஜாதி போன்ற மனிதன் ஏற்படுத்திய கட்டுத்திட்டங்களைத் தாண்டி செயல்படுகிறார்கள். குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பலர் கிருத்துவர்களாக இருந்தாலும், இந்து சம்பிரதாயங்களைப் பின்பற்றுகின்றனர். சில ஜாதியினர் (குறிப்பாக நாடார்கள்) மதபேதத்தைப் பார்க்காமல் பெண்கொடுத்து, பெண் எடுக்கின்றனர். அதாவது இந்து-கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ-இந்துக்கள் போன்று இருக்கின்றனர். உறவுமுறை விட்டுப்போகக்கூடாது, சொத்து/வியாபாரம் பிரிந்து விடக்கூடாது என்று அவ்வாறு திருமணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அவ்வாறு நடக்கவேண்டும் என்றே சில திருமணங்களை கிருத்துவர்கள் ஊக்குவிப்பதாக புகார்களும் எழுந்துள்ளன. எது எப்படியாகிலும், வாலிப வயதில் உள்ள தம்பதியர்கள் வாழ்க்கையில் இத்தகைய கொடூரம் நிகழக்கூடாது. அந்நிலையில், இதனை மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மதநம்பிக்கைகளினால் குற்றங்கள் ஏற்படுகின்றன என்றால், நம்பிக்கையாளர்கள் தாம் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்: ஆனால், மதநம்பிக்கைகளில் மனங்கள் கட்டுண்டு செயல்பட்டால், மணங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்நிலையில் மதபோதனை, போதனையால் மூளைசலவை செய்யப்படுதல், மூளை-மனம்-எண்ணங்கள் அவ்வாறே செயல்படுவது, அதனால் பிரச்சினைகள் ஏற்படுவது என்றிருந்தால், அந்நிலையில் பாதிக்கக் கூடிய மதபோதனைகள் என்னவென்று கண்டறிந்து, விலக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு ஒரு தீவிர விசுவாசியான கிருத்துவப் பெண், சிறுவயதிலிருந்தே, தான் கிருத்துவிற்கு அடிமை, கிருத்துவின் உண்மையான காதலி, மனைவி, அர்ப்பணிக்கப்பட்டவள் என்றெல்லாம் போதிக்கப்பட்டு, பிறகு அவள் திருமணம் செய்து கொள்ள்வேண்டிய நிலை ஏற்பட்டால், கணவுடன் கூடும் போது கூட தான் குற்றம் செய்து விட்டோமோ என்று நிலைக்கலாம். அத்தகைய எண்ணத்தால் பாதிக்கப்படலாம். இது இந்து மதத்தில் மீரா-கிருஷ்ணன் போன்ற நிலையாகும். பக்தி ரீதியாக இதனை நாயகி-நாயக பாவம் என்றும் சொல்வதுண்டு. கிருத்துவ மதத்தில் அவ்வாறு பெண்கள் கிருத்துவிற்கு அர்ப்பணிக்கப் படுகின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிக்களாகின்றனர். தங்களது வாழ்க்கையை சேவைக்கு அர்ப்பணிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அவர்களை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். கத்தோலிக்கக் கிருத்துவம், அவர்களுக்கு பிரமச்சரியத்தை வலியுறுத்திகிறது. அதனால், பிரம்மச்சரியத்தைக் காக்க முடியாத அல்லது சபல மனங்கள் கொண்ட ஆண்களும், ஏன் பெண்களும் கூட ஒத்துழைத்தால், தவறுகள் நடக்கின்றன[10]. அவற்றை மறைக்கும் போது, குற்றங்கள் நடக்கின்றன. அவற்றைத்தான் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே பார்த்து வருகின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மதம், அதனை பின்பற்ருகிறவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் அமைதியாக இருக்க முடியாது, ஏனெனில், அவை சமுதாயத்தை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள், குற்றங்களாகவே மாறி, தொடர்ந்து நிகழும் போது, கண்காணிக்க, தடுக்கவேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

04-12-2011


 


[10] சமீபத்தில் ஆமென் என்று புத்தகம் எழுதிய கன்னியாஸ்திரி, இதனை விளக்கியுள்ளார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்”

  1. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/04/young-christian-ouple-sex-denied-leading-to-murder… […]

  2. கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்? | Says:

    […] [10] https://christianityindia.wordpress.com/2011/12/04/young-christian-ouple-sex-denied-leading-to-murder… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.