கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

கிருத்துவர்களின் நாடகம்: தூத்துக்குடி பிஷப்புகளின் அரசு சாரா நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறுவது பற்றி அமைச்சர் நாராயணசாமி தகவலை வெளியிட்டார். கிருத்துவ அமைப்புகளும் தங்களுள்ள நிலையை மறைக்கவில்லை[1]. மேலும் இறையியல் ரீதியில் அவ்வாறான ஒரு உலக முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அடிப்படைவாத கிருத்துவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது[2]. இதில் அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்வீடன் முதலிய நாடுகளின் பண வரவு, அவைகளின் வியாபார யுக்தி முதலியவை மற்றும் சோனியாவின் ரஷ்ய ஆதரவு முதலியன, இவையெல்லாம் ஒரு நாடகம் ஆடுகின்றன என்பதனையும் எடுத்துக் காட்டின[3]. ஏனெனில் அத்தகைய அரசியலில் ஆதாயம் அடையப் போகிறவர்கள் இவர்கள் தாம், மக்கள் இல்லை. கோடிகளில் பணம் வரும்போது, அவர்களின் வியாபாரம், அரசியல் பலம், அதிகாரம் இன்னும் அதிகமாகும்[4]. இந்நிலையில் இதில் சம்பந்தப் பட்டுள்ள பாத்திரங்களின் நடிப்பும் அதிகமாகி உள்ளன.

கிருத்துவ பிஷப்புகளின் நிறுவனங்கள் பணம் பெறும் விவரங்கள்: நாராயணசாமி, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறும் நிறுவனங்கள் என்று கீழ்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்[5]:

  1. தூத்துக்குடி ஆயர் சங்கம் [Tuticorin Diocese Association (TDA)]
  2. தூத்துக்குடி பல காரணங்களுக்காக அமைக்கப் பட்ட சேவை சங்கம் [Tuticorin Multipurpose Social Service Society]
  3. செயல்பாடு மற்றும் விடுதலைக்காக மக்கள் கல்வி இயக்கம் [ Madurai-based People’s Education for Action and Liberation ]
  4. பெயர் குறிப்பிடப்படவில்லை.

உதயகுமாரின் ஜெர்மன் நண்பர் தூத்துக்குடியில் செய்வது என்ன?: உள்துறை அமைச்சகம், இந்த நிறுவனங்கள் / அமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகளிலிருந்து பெற்றப் பணத்தை, கூடங்குள எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு செலவழிக்கிறன்றன[6]. ஆர்.கே.சிங் என்ற உள்துறை அமைச்சக செயலர், அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்காக வழக்குகள் இந்நிருவனங்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்[7]. அதுமட்டுமல்லாது, உதயகுமாரின் நண்பரான சோன்னேக் ரெய்னர் ஹெர்மான் [Sonnteg Reiner Hermann (49)] என்ற ஜெர்மானியர் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, சந்தேகம் ஏற்படும் முறையில், அவ்விடங்களில் சுற்றி வந்துள்ளார் மற்றும் உதய குமாரின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது[8]. உதயகுமாரும் இதனை மறுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அவரைத்தெரியும் மற்றும் தமது

கிருத்துவ இயக்கங்கள் / சங்கங்கள் பெறும் பணம்: பல நாடுகளிலிருந்து பெற்ற பணம் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது[9]:

வரிசை  எண் பணம் பெற்ற கிருத்துவ இயக்கம் / சங்கம் கொடுத்த நாடு கொடுத்த பணம் கோடிகளில்

1

தூத்துக்குடி ஆயர் சங்கம் ரூ.20.60 கோடி

2

சமூக சேவை சங்கம் ரூ. 44.14 கோடி

3

பிரான்ஸ் கொடுத்தது ரூ. 10.30 கோடி

4

இத்தாலி கொடுத்தது ரூ. 5.15 கோடி

சமூக சேவைக்கு என்று தான், இப்பணத்தைப் பெறுகிறது. ஆனால்;, இவ்வாறு தேசிய திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகிறது என்று உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது[10].

கிருத்துவ நிறுவனங்கள், இயக்கங்கள், கோடிகளில் அந்நிய நாடுகளினின்று பணம் பெருவது ஒன்றும் புதிய செய்தி இல்லை. பொதுவாக, ஆயர்கள் / பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்றுள்ளவர்கள்  அப்பணத்தை செலவழிப்பது போல காட்டி, தூத்துக்குடி கிருத்துவ சர்ச் பல சங்கங்களை வைத்துள்ளது:

  • மீனவர்கள் நல்வாழ்வு சங்கம் (1992),
  • வின்சென்ட் டி பால் சங்கம்,
  • நமது பெண்மணியின் லிஜென்,
  • நமது பெண்மணியின் நிரந்தர உதவி சங்கம்
  • தூய்மையாக பெற்றெடுத்த கருவுற்ற சங்கம்,
  • ஏசுவின் போராளிகள் சங்கம்,
  • புண்ணிய குழந்தைகள் சங்கம்,
  • கருவறை சேவை சங்கம்,
  • இளைஞர் இயக்க சங்கம்,

என்று சங்கங்கள் உள்ளன[11]. இவற்றின் பெயர்களே விசித்திரமாக உள்ளன. இவை என்ன செய்கின்றன என்று கர்த்தருக்குதான் தெரியும். வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றெல்லாம் வரும்போது தான், கிருத்துவ இயக்கங்கள் தங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்கள். பிறகு அவர்கள் தங்களது கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளலாமே. சாதாரண தரும காரியங்களுக்கு ஏன் இப்படி கோடிகளில் அந்நிய பணத்தை வாங்குகிறார்கள்?

வேதபிராகாஷ்

01-03-2012


[6] Reports gathered by the home ministry showed that funds received from the US and Sweden were diverted by local NGOs, including some church groups, to fuel the stir.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[7] “Cases have been registered against four NGOs for violation of the Foreign Contribution Regulation Act (FCRA),” home secretary R K Singh said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[8] Cases have been registered against four NGOs for violation the Foreign Contribution Regulation Act,” Union home secretary RK Singh told reporters in New Delhi, hours after the German, Sonnteg Reiner Hermann (49), was packed off. Hermann’s tourist visa was cancelled and he was put on a flight to Germany, after he was brought to Chennai on Monday night from Nagercoil.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/kudankulam-row-cases-against-ngos-german-expelled/articleshow/12077009.cms

[9] The returns filed by the two NGOs under the Foreign Contribution Regulation Rules for the past five years show that they received foreign funds to the tune of Rs.64.75 crore. While the Diocesan Association received Rs.20.60 crore between 2006 and March 31, 2011, the Social Service Society received Rs.44.14 crore as foreign funds in the same period. rance was the biggest donor to the first NGO, contributing half of the total amount it received. France-based entities gave Rs.10.30 crore while Rs.5.15 crore came from Italy. The group got Rs.3.22 crore from Germany and Rs.83 lakh from the US, the FCRA returns show. Read more at: http://indiatoday.intoday.in/story/kudankulam-row-government-lodges-criminal-cases-against-ngos/1/175745.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?”

  1. கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] [2] https://christianityindia.wordpress.com/2012/03/01/christian-organizations-opposing-or-supporting-the… […]

  2. கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] [2] https://christianityindia.wordpress.com/2012/03/01/christian-organizations-opposing-or-supporting-the… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.