கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

ரஷ்யாவிலிருந்து வந்த மன்மோஹன்சிங் மூலம் இரண்டு பிரச்சினைகள் வந்துள்ளன. அணுவுலையில் ஆபத்தில்லை, அதனால் உடனடியாகத் துவக்கப் படும் என்ற அறிவிப்பு, ஒரு பக்கம். ஆனால், மறுபக்கம் இப்பெடியெல்லாம் செய்திகள்:

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க முயற்சி: பெரும்பாலான …தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க நடந்து வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

பகவத் கீதை வழக்கில் 28-ந் தேதி தீர்ப்பு ரஷிய கோர்ட்டு உத்தரவு

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்க கோரும் வழக்கு, நேற்று சைபீரியா மாகாணத்தில் டாம்ஸ்க் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஷிய அதிகாரிகளுக்கு எதிரான 

ரஷியாவில் பகவத் கீதை நூலுக்குத் தடை? மக்களவையில் 

தினமணி – ‎4 மணிநேரம் முன்பு‎

புது தில்லி, டிச. 19:÷ரஷியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ÷இதற்கு எதிர்ப்பு 

ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடையா? மக்களவையில் கண்டனம்

தினகரன் – ‎5 மணிநேரம் முன்பு‎

புதுடெல்லி : பகவத் கீதைக்கு தடை கோரி சைபீரியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து மக்களவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை?: நாடாளுமன்றத்தில் அமளி

தினமணி – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுதில்லி, டிச.19: தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தி பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து இந்துக்களின் மத உரிமையைப் பாதுகாக்க 

இரஷ்யாவில் கீதைக்குத் தடை: மக்களவையில் கொதிப்பு

வெப்துனியா – ‎15 மணிநேரம் முன்பு‎

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த கீதை தீவிரவாதத்தையும் சமூக பிளவையும் தூண்டுகிறது என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் வழக்கு இரஷ்ய 

இந்து மத புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடையா

தினகரன் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

மாஸ்கோ: மகாபாரத புராணத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை கூறும் அது இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் புகழ் 

பகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு

தமிழ்வின் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி 

அமளி: லோக்சபா 4மணி வரை ஒத்திவைப்பு

தினமலர் – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுடில்லி: கேள்வி நேரம் முடிந்த உடன் ரஷ்ய கோர்ட்களில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும்என்பது தொடர்பாக எழுந்த அமளி காரணமாக லோக்சபாமதியம் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

.அபாயம் அணுவுலையிலிருந்து வரப்போகிறதா இல்லை பகவத் கீதையிலிருந்துவரப்போகிறதா என்று உதயகுமார் அல்லது பாதிரிகள் சொல்வார்கள் என நம்பலாம்! கிருத்துவர்கள் அணுவுலையில் தான் அரசியல் செய்கின்றனர் என்றால்[1], பகவத் கீதையிலும் பிரச்சினை செய்கின்றனர் என்று தெரிகிறது.

ரஷ்யாவிலிருந்து மன்மோஹன் இறக்குமதி செய்தது: மன்மோஹன்சிங், ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும், கூடங்குளம் அணுவுலை விரைவில் வேலைசெய்ய ஆரம்பித்து விடும் என்றதும், அரசியல்வாதிகள், அணுவுலை எதிர்ப்பாளிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். பாதிரிகள் வழக்கம் போல இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அன்னா ஹஸாரே “ரிமோட் கன்ட்ரோல்” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். சென்னையில் கூட, அதை மறக்காமல் சொல்லிக் காட்டினார். இந்நிலையில் தான், மன்மோஹனுடன், ரஷ்யாவிலிருந்து, இன்னொரு விவகாரமும் வந்துள்ளது. அதுதான் ரஷ்யாவில் பாதிரிகள் பகவத் கீதைமீது தடை விதிக்கப் போட்டுள்ள வழக்கு!

சோனியாவின் பங்கு இதில் உள்ளதா? இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்று-இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், இவ்விஷயம் இந்தியாவில் தெரிய வந்து, பாராளுமன்றத்தில், இதைப் பற்றி அரசியல் கட்சிகள் விவாதிக்க ஆரம்பித்துள்ளன.[2] அதுவும் மன்மோஹன்சிங் ரஷ்யாஅவிலிருந்து திரும்ப வந்ததும் இவ்விஷயம் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் பிரச்சினைகளை திசைத் திருப்ப இவ்விஷயத்தை கையால்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் ரஷ்யா சோனியா மெய்னோவிற்கு மிகவும் பிடித்தமான நாடாகும். தனது பிள்ளை ரவுல் ராபர்ட் என்று பெயர் வைத்து, ஒரு ரஷ்ய ஆர்தோடக்ஸ் சர்ச்சில் தான் பாப்டிஸம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதையும் இங்கு நோக்கத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[10]. உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவ்டமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றானர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், நேற்று (12-11-2011) அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? “பகவத் கீதை தடை” என்ற பிரச்சினைப் பற்றி, இனி பாரளுமன்றத்தில் விவாதிக்கப் படும். இதற்கு லல்லு பிரசாத் யாதவே ஆரம்பித்து விட்டார். பிஜேபி.காரட்களை முந்தி விட்டார் போலும்! கிருத்துமஸ் சமயத்தில் கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? பகவத் கீதை தடையை ஆதரிக்கப் போகிறார்களா அல்லது எதிர்க்கப் போகிறார்களா? ஏற்கெனவே, “தலித்” பிரச்சினையை நுழைத்துவிட்ட கிருத்துவர்கள் இதையும் குழப்புவார்களா இல்லையா என்று பார்ப்போம்.

கிருஸ்துவா, கிருஷ்ணாரா – என்ற கேள்வி கிருத்துவர்களால் என்று கிருத்துவர்கள் 400 ஆண்டுகளாக இந்தியாபில் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், கிருத்துவமோ, அயல்நாடுகளில் மறைய ஆரம்பித்து விட்டது. ஆனால், பகவத் கீதை, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், நிர்வாகத்திற்கு உதவும் என்று பேசப்படுகிறது. இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கத்தின் தாக்கம் அயல்நாடுகளில் அதிகமாகி வருகிறது.

 

வேதபிரகாஷ்

19-12-2011


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!”

  1. balu Says:

    இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்!
    http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_21.html

  2. Ryan Ellington z Says:

    ு ் ் ் ு ் ் ் ் ் ு ு ்.

  3. ரூ. 54 கோடி – இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட பணம் பெற்றது தெரிய வந Says:

    […] [8] https://christianityindia.wordpress.com/2011/12/20/russia-christians-kudangulam-bhagawat-gita-danger-… […]

  4. கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/20/russia-christians-kudangulam-bhagawat-gita-danger-… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.