ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் கணக்கு ஆசிரியரா, தலைமை ஆசிரியரா, மதப்பிரச்சாரகரா, தலைமறைவாகும் கோழையா, செக்ஸ்-பாலியல் குற்ற வல்லுனரா?

ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் கணக்கு ஆசிரியரா, தலைமை ஆசிரியரா, மதப்பிரச்சாரகரா, தலைமறைவாகும் கோழையா, செக்ஸ்-பாலியல் குற்ற வல்லுனரா?

கோரோனாவை விட கொடிய நோயைக் கொண்டுள்ள கிருத்துவ பாலியல் குற்றங்கள்-குரூரங்கள்: இது ஏதோ, ஒரு மதத்தைக் குறைகூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பல நிலைகளில் தமிழகத்திலேயே அதிகமாக நடந்து கொண்டிருப்பதால் எடுத்துக் காட்டப் படுகிறது. கிருத்துவ சர்ச்சுகள், கான்வென்டுகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எங்கு பார்த்தாலும், பிஷப் முதல் ஆசிரியர் வரை பெண்களைக் குறிவைத்து, பாலியல் தொல்லை செய்வது, காமக் களியாட்டங்களில் ஈடுபடுவது, கற்பழிப்பது என்றெல்லாம் தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களாக இருக்கின்றன. கேரள ஊதாரங்கள் எல்லைகளைக் கடந்தவை. அவற்றை மிஞ்சுவதாக தமிழக கோக்கோகங்கள் முந்துகின்றன. ஆனால், பொறுப்புள்ள கிருத்துவப் பெரியவர்கள், இவற்றைப் பற்றி கண்டிப்பதாக, விவாதிப்பதாக அல்லது சரிசெய்ய முயற்சிகள் செய்வதாக, தடுப்பதாக தெரியவில்லை. மாறாக அவற்றை மறைப்பது, ஊடகங்களில் கூட செய்திகள் வராமல் காப்பது, வந்தால் சீக்கிரம் அவற்றை அமுக்கி விடுவது, போலீஸ்-வழக்கு வராமல் தடுப்பது, நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் சரிகட்டுவது, என்ற திட்டங்களுடன் செயல்ப்ச்டுவதாகத் தெரிகிறது.

Photo courtesy: https://thennadu.com/?p=14461

தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் ஆசிரியரின் காமலீலைகள், பாலியல் சில்மிஷங்கள்: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு நிதியுதவி பெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது[1]. முன்பு குறிப்பிட்ட சென்னைப் பள்ளிக்கு குதித்தவர்கள், இப்பொழுது மௌனிகளாக இருக்கின்றனர். இங்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார். அப்போது அவர் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறுப்படுகிறது[2]. மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். மேலும், செல்போனிலும் அரட்டை அடிக்க முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி தலைமையாசிரியர் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர், கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இவையே, பொதுமானவை. பெண்கள் ஆணையம், பெண்ணிய அமைப்புகள், வீராங்கனைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது, செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கம் போல மிரட்டி, பணம் கொடுத்து சரிகட்டப் பார்த்தது: ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமையாசிரியரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்[3]. இந்த சூழலில் 28-12-2021 அன்று மாணவியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[4].  மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். சூதாரித்துக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அணுகி  இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் இதனை அப்படியே வெளியே தெரியாமல் மறைக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது[5].  இது எபிதாஸ் விவகாரம் போன்றே உள்ளது. அவனும் இன்று வரை கைதாகாமல் இருப்பது அதிசயமான நிலைதான். இதையடுத்து   மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி நிர்வாகம் திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசனுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்[6]. புகாரின் அடிப்படையில் டயோசீசன் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ்  தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்[7]. தென்னாடு என்ற இணைதளம் தனது செய்தியால் தான் சஸ்பென்ட் என்பது போல போட்டுள்ளது[8]. இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.

Photo courtesy: https://thennadu.com/?p=14461

பள்ளியில் புகார் அளித்து, டையோசீஸ் நடவடிக்கை எடுத்து, பிறகு போலீஸிடம் புகார் கொடுத்து, நீட்டித்தப் படலம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி சி.எஸ்.ஐ., பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது[9]. உடனே அவர் தலைமறைவானார்[10]. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ டயோசிஷன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார். இவர் பிளஸ் -2 மாணவிகளை செப்டம்பர் முதல் சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளிக்கு வரச் செய்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட போவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகாரின்பேரில், கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது திசையன்விளை போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸிடம் புகார் கொடுத்தப் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் தலைமறைவு: பிறகு 29-12-2021 அன்று அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர் தலைமறைவானார்[11]. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது[12]. ஆக, இது எதோ வழக்கமான உப்பு-சப்பில்லாத விவகாரம் போலாகி விட்டது என்ற தோறத்தை உண்டாக்குகிறது. கடவுள் நம்பிக்கை, விசுவாசம், சேவை என்றெல்லாம் கிருத்துவர்கள் பறைச்சாற்றிக் கொள்ளும் போது, ஓடி மறைய வேண்டிய அவசியம் என்ன? சமீபத்தில் பிரபல பாடகி புகார் வழக்கில் கூட அந்த மைத்துனர்-கிருத்துவ பிரச்சாரகர் திண்டிவனத்தில் மறைந்து கொள்ள போலீஸார் சென்று கைது செய்தனர். இத்தகைய நிகழ்வுகள் காலந்தாழ்த்தவா, அத்தாட்சிகளை மறைக்கவே, வேறுவிதமான பேரங்கள் பேசவா, அழுத்தம் எடுத்துவர வேற்கொள்ளும் செயல்களா என்பதெல்லாம் அவர்கள் தாம் சொல்லவேண்டும்.

சி.எஸ்.., சர்ச்சுகள் தொடர் சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளது: சி.எஸ்.ஐ., பலவிதமான குற்றங்கள், வழக்குகள் என்பதெல்லாம் சாதாரணமான விசயகள் ஆகிவிட்டன. நீதிமன்றங்களில் அறிவிக்கப் பட்ட தீர்ப்புகளை வைத்தே, எந்த அளவுக்கு பிஷப் முதல் மற்றவ்ர்கள் குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. திருநெல்வேலி டவுன் சி.எஸ்.ஐ., சாப்டர் மேல் நிலைப் பள்ளியில் டிச.17ல் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாயினர். அதில் கைதான தலைமையாசிரியை உள்ளிட்டவர்கள் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாலியல் புகாரில் தலைமை ஆசிரியர் தலைமறைவாக உள்ளார், என்று செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன. கைதானாலும் ஜாமீன், வழக்கு இழுப்பு, என்று சில நாட்களில் மறக்கடிக்கப் படும், மறக்கப் படும். பாதிக்கப் பட்ட மாணவிகளும் அவ்வாறே தெரியாமல் மறக்கப் படுவர். ஆனால், அவர்களின் மன-அழுத்தம், பாதிப்பு, தொல்லை முதலிவற்றை அவர்கள் தாம் அனுபவிக்க வேண்டும். மிருகங்கள் வேறு இறையைத் தேடிச் சென்று விடுகின்றன.

© வேதபிரகாஷ்

30-12-2021


[1] நியூஸ்7தமிழ், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம், by Arivazhagan CMDecember 29, 202

[2] https://news7tamil.live/sexual-harassment-of-a-school-student-headmaster-dismissed.html

[3] ஏபிபிலவ், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு , By: ரேவதி | Updated : 29 Dec 2021 05:55 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/tirunelveli/sexual-harassment-of-students-3-lakh-to-cover-up-wrongdoing-undercover-headmaster-32809

[5] புதியதலைமுறை, நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு, குற்றம், Durai Published :29,Dec 2021 12:45 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125867/The-headmaster-of-a-government-aided-high-school-who-sexually-harassed-students-has-been-fired–The-headmaster-has-disappeared

[7] தென்னாடு, தென்னாடு செய்தி எதிரொலி: திசையன்விளை பள்ளி ஆபாச தலைமையாசிரியர் சஸ்பெண்ட், By Thennadu -29th December 2021.

[8] https://thennadu.com/?p=14461

[9] தினமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சி.எஸ்.., பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு, பதிவு செய்த நாள்: டிச 29,2021 23:15

[10] https://m.dinamalar.com/detail.php?id=2925129

[11] தமிழ்.மின்ட், நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் தலைமறைவு…!, 29/12/2021

[12] https://tamilmint.com/school-head-master-abscond-after-suspended-from-school-for-sexually-harasssing-students/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.