கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (1)

கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (1)

பொருளாதாரக் குற்றங்களை ஏன் கேரளத்தவர் அதிகமாக செய்து வருகின்றனர்?: கேரளாவில் படித்தவர்கள் அதிகம், இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் அளவில் மலையாளிகள் எல்லா அரசுதுறைகளிலும் இருந்து வருகிறார்கள்.  ஏதாவது நடந்தால், ஒற்றுமையாக, தங்களைக் காத்துக் கொள்ள தயாராகி விடுகிறாற்கள். கிருத்துவர்கள், முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. போதா குறைக்கு கம்யூனிஸத்தை ஆதரிக்கும் கோஷ்டிகளும் அதிகமாகவே இருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் என்று அங்கேயே கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறி, மற்றவர்களை குறைகூறிவருவது, விமர்சிப்பது,  எதிர்ப்பது, தாக்குவது, ஏன் கொலை செய்யவும் தயங்குவதில்லை. சமீபத்தில் எஞ்சினியரிங் கல்லூரியில் அத்தகைய கொடூர சம்பவமும் நடந்துள்ளது. கோடிகளில் பணம் வருவதால் (தங்கக் கடத்தல் முக்கியமான விசயம்), பற்பல கட்டிடங்கள் கட்டப் பட்டு வருகின்றன. ஆனால், அங்கு போதிய அளவுக்கு மணல் இல்லாததால், கேரளா தமிழக ஆற்று மணலைக் கொள்ளையடித்து வருகின்றது. கடவுளின் தேசம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், இத்தகைய விசயங்களில் எந்த நியாயம், ஒழுக்கம், சட்டம் என்று எதையும் கடைப் பிடிப்பதில்லை. அத்த்கைய ஒழுங்கீனம் தான், இத்தகைய பொருளாதாரக் குற்றங்கள் செய்ய தோதுவாகிறது.

2020-2022 ஆண்டுகளில் நடந்தவை: இப்படித்தான், கேரள பாதிரிகள் கூட்டு சேர்ந்து, தமக்கு சொந்தமான நிலத்தை உப்யோகித்து, செயற்கை மணல், எம்.சான்ட் தயாரிக்கிறோம் என்ற போர்வையில், தொழிற்சாலை ஆரம்பித்து, ஆற்று மணலை, எம்-சான்ட் என்று பில் / இன்வாய்ஸ் போட்டு ஏமாற்றி, தமிழக மணலை லாரிகள் மூலம் கடத்தி விற்று வந்தனர். ஜி.எஸ்.டி மற்ற பதிவுகளையும் செய்து, அபாரமாக இந்த திருட்டு வேலையை செய்து வந்தனர். நிலமே, பிஷப்பின் சொந்தமானதால், யாரும் கேட்பதற்கும் இல்லை. எல்லாமே, கடவுளின் பெயரால், நடந்து கொண்டிருந்தது. ஆனால், புகார் கொடுத்ததே ஒரு கிருத்துவர்ரக இருக்கிறார். ஏனெனில், அவர்களது கொள்ளை எல்லைகளைக் கட்ந்து, அங்கிருக்கும் மக்களின் நீர்-ஆதாரங்களை பாதித்துள்ளது. அந்நிலையில் பொறுக்காத மக்கள் புகார் கொடுத்துள்ளனர். எதுவும் நடக்கவில்லை என்ற போது, நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.

மனுவேல் ஜார்ஜ் மீது மணல் திருட்டு விவகாரத்தில் ஏற்கெனவே ரூ.9.5 கோடி அபராதம் விதிக்கப் பட்டது: திருநெல்வேலியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், 2019ம் ஆண்டு நவம்பர் முதல் கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் எம் சாண்ட் தயாரிக்கும் “பூமி-எம்-சான்ட்டென்ற ஆலை நடத்தி வந்தார்[2]. அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் கேரளா மாநிலம் கோட்டயம் குண்டூர் செட்டிரோடு பகுதியை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ்[3]. மீது கடந்த சில மாதங்களுக்குமுன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீப் தயாள் ரூ.9.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதம் கட்டப் பட்டதா இல்லையா என்று தெரியவில்லை.

எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அங்கிருந்து 27,000 கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது: இது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, போலீசார் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி சப் – கலெக்டர் பிரதீக் தயாள் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்[4]. கடத்தலில் ஈடுபட்ட சமீர் கைது செய்யப்பட்டார். அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே 2021 ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.

05-02-2022 அன்று பிஷப், பாதிரிகள் கைது: அந்நிலையில், உரிய விசாரணைக்குப் பிறாகு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சனிக்கிழமை அன்று மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (வயது 69) மற்றும்

  1. ஜார்ஜ் சாமுவேல் (69),
  2. ஷாஜி தாமஸ் (58),
  3. ஜியோ ஜேம்ஸ் (37),
  4. ஜோஸ் சமதலாரி(69),
  5. ஜோஸ் கலவியால் (53) ஆகிய ஐந்து பாதிரியார்களை கைது செய்தனர்.

அவர்களை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி சிறையில் அடைத்தனர். அதற்குள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று பிஷப்பும், விகாரும் ஆஸ்பத்திரியில் அனுமதி ஆனார்கள். குற்றவாளிகளின் மனோதத்துவம், பாவம், தப்பித்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் ………இவற்றையெல்லா கவனித்தால், ஒரே மாதிரியாக இருக்கும்……………………கைதாகினால், நெஞ்சு வலி என்றெல்லாம் சொல்லி, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவார்கள். ஜாலியாக சகல் வசதிகளுடன் இருப்பார்கள்………….மெதுவாக பைலுக்கு மனு போடுவார்கள்………………….இதே தான் இப்பொழுதும் நட்டக்கிறது………………………..

பெரும் புள்ளிகள், உயர் அதிகாரிகள், அரசியல் ஆதரவு கொண்டவர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 2019 நவம்பர் மாதம் முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவர் எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். ஆனால், அவர் அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணலை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், எம்.சாண்ட் நிறுவனத்துக்கு சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ரூ.9.50 கோடி அபராதம் விதித்தார். இதனிடையே, கடத்தலில் ஈடுபட்ட சமீர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்[5]. அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்[6]. மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே உயர் அதிகாரிகள் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது: இதனிடையே பாதிரியார்களை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசிசன் நிர்வாகம் அவர்களை ஜாமீனில் எடுக்க நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மணல் கடத்தல் சம்பவம்  இரண்டு ஆண்டுகளுக்கு பூதாகாரமாக பேசப்பட்ட நிலையில்  தற்போது இச்சம்பவத்தில் 6 பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் உறவினர்களுக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் தொடர் விசாரனணயில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மணல் கடத்தல்: கேரள பிஷப், 5 பாதிரியார்கள் கைதுதமிழக சிபிசிஐடி அதிரடி, Written by WebDesk, February 9, 2022 11:22:43 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-bishop-and-5-priests-held-for-sand-mining-in-tamil-nadu-408769/

[3] தமிழ்.இந்து, அம்பாசமுத்திரம் மணல் கடத்தல் வழக்கில் கேரள பிஷப் உட்பட 6 பேர் கைது, செய்திப்பிரிவு,  Published : 09 Feb 2022 09:15 AM; Last Updated : 09 Feb 2022 09:15 AM

[4] https://www.hindutamil.in/news/crime/765443-ambasamuthiram-sand-smuggling-case.html

[5] தமிழ்.நியூஸ்.18, மணல் கடத்தல்: 6 பாதிரியார்கள் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 09, 2022, 06:31 IST

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/tirunelveli-district-sand-smuggling-case-six-priests-including-a-bishop-have-been-arrested-hrp-687861.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.