நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

narippaiyur-ramanathapuram-tamilnadu

நரிப்பையூரில் நரி போல நுழைந்த மில்லன் சிங்: நரிப்பையூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமநாதபுரம் தெற்கு பகுதியில் கடைசியில் இருக்கின்ற கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம். இது காலாடி வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும். இங்கு மீன் பிடித்தல் மற்றும் பனைத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை இங்கு செயல்பட்டு வருகிறது. இப்படி அமைதியாக இருந்த ஊரில் தான், “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, மில்லன் சிங் என்பவன் பிரச்சினையை ஆரம்பித்தான் போலும். இந்த ஆள் இப்பொழுது, சங்கரன்கோவில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சங்கரன்கோவில் பகுதி இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை எரித்ததாக பாதிரியார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்[1]. இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. இருவரும் காவேரிபாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்கிறது தி.இந்து[3].

sayalkudi-bus-standமாற்று திறனாளி பாதிரியார்[4]: நெல்லை அருகில் உள்ள மானூர் உக்கிரன்கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகன் மிலன்சிங் (Millan Singh  வயது 46). மாற்றுத் திறனாளியான இவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூரில் ஜீவனுள்ள தேவ சபையின் பாஸ்டராக / பாதிரியாராக இருந்து வந்தார். ஒரு சர்ச் நடத்தி வருகிறார் என்கிறது தி.இந்து[5]. இவருடைய மனைவி ஜீவிதா (40). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த காசிநாராயணன் மகள் காந்திமதி (30) என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.4½ லட்சம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார். பல நாள்களாகியும் அவர் வேலை வாங்கித்தரவில்லையாம். “அப்பாய்ன்ட்பென்ட் ஆர்டர்” இல்லையென்றால், காந்திமதி பாஸ்டர் மிலன்சிங்கிடம் பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம்[6]. அப்போது அவர் சங்கரன்கோவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வருமாறும், அங்கு வைத்து பணத்தையும், நகையையும் தருவதாகவும் கூறினாராம். இதையடுத்து 5-10-2016 புதன்கிழமை அன்று காலை காந்திமதி சார் பதிவாளர்அலுவலகம் அருகே வந்து நின்றாராம்[7]. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்திமதியை தொடர்பு கொண்ட பாதிரியார் மிலன்சிங், சங்கரன்கோவிலில் வேலைக்கான ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் அவரை அழைத்து சென்றார். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு காரில் இருந்த காந்திமதியை சாலையில் உருட்டி விட்டு மிலன்சிங் தப்பிச் சென்றார்[8]. மாற்றுத் திறனாளி என்றால், இத்தகைய மாற்றுத் திறமைகள் எல்லாம் அதிகமாக இருக்கின்றன போலும்.

m-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைப்பு: காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிலன்சிங்கை கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் குறித்து போலீசார் நடத்தியபோது, பல்வேறு பெண்களிடம் அவர் பழகி வேலை வாங்கித் தருவதாக பலகோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுச் செய்தனர். அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு, அவரை போலீஸ் காவலில் எடுத்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

m-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக திடுக்தகவல்கள்: அப்போது, கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி வந்த இளம்பெண்ணிடம் நகை, பணத்தை பெற்றுக் கொண்டு, அவரை கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக ‘திடுக்’ தகவலை மிலன் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மிலன்சிங் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஜெ.டி. நகரை சேர்ந்த ஞானம் மகள் அன்புச்செல்லம் (24). ஜி. அன்பு ஸ்டெல்லா [ G. Anbu Stella] என்கிறது தி.இந்து இவர், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, வீரிருப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தனியார் மில்லில் காவலாளியாக இருந்துள்ளார். காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறியதை நம்பி, 2 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை அன்புச்செல்லம் கொடுத்தாராம். அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

millan-singh-christian-priest-raped-30-women-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா இளம்பெண் கர்ப்பம்: படிப்பை முடித்த அன்புச்செல்லம் நெல்லை அருகில் உள்ள தருவையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ஜே.டி.நகர் பகுதிக்கு மத பிரசாரத்துக்கு சென்றபோது, என்னை தனியாக சந்தித்த அன்புச்செல்வம், தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார். அந்த வாலிபரிடம் பணம், நகையை வாங்கித் தருமாறு என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றதை நம்பி, ரூ.2 லட்சம் கொடுத்தார். பின்னர், அவரை எனது மனைவி ஜீவிதாவுடன் தர்மபுரி பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினேன். என்னிடம் நெருங்கி பழகினார். அவருடன் உல்லாசமாக இருந்தேன். அவர் கர்ப்பிணியானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், தனனை திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர், மறுத்ததோடு அன்புசெல்லத்தை கொலை  செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு பாதிரியார் மனைவி ஜீவிதாவும் உடந்தையாக இருந்தார்[9].

milam-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016அன்பு ஸ்டெல்லா கடத்திக் கொலை: இதனால், அவரை நானும், எனது மனைவியும் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து, உடலை எரித்தோம். முகத்தை தவிர உடல் பகுதி முழுவதும் எரிந்து விட்ட நிலையில் காவேரிபாக்கம் நான்குவழிச்சாலையில் உடலை வீசிவிட்டு, சங்கரன்கோவில் பகுதிக்கு திரும்பி வந்து விட்டோம். இதனிடையே அன்புசெல்லத்தை காணவில்லை என அவரது தந்தை ஞானம், குருவிகுளம் போலீசில் புகார் செய்தார்.  இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு  குருவிகுளம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சங்கரன்கோவில் வந்து மிலன்சிங் மனைவி ஜீவிதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை  காவேரிபாக்கத்திற்கு அழைத்து சென்றனர்[10]. இதனால், காந்திமதியை மோசடி செய்த வழக்கில் இப்போது சிக்கி கொண்டுள்ளேன், என தெரிவித்துள்ளார். இளம்பெண்ணை எரித்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக, மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், கடந்த 3.1.2016–ம் தேதி அன்புச்செல்லத்தை காணவில்லை என, தந்தை ஞானம் நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசாரிடம் புகார் செய்திருந்தது தெரிய வந்தது. அந்த போலீசார் மூலம் அன்புச்செல்லம் புகைப்படத்தை பெற்று, காவேரிபாக்கம் போலீசாருக்கு சங்கரன்கோவில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

milam-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016மனைவியிடம் விசாரணை: 05-10-2016 அன்று அந்த புகைப்படத்தையும், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் முகமும் ஒத்துப் போனதாக காவேரிபாக்கம் போலீசார் தெரிவித்தனர். பின்னர், அந்த போலீசார் சங்கரன்கோவில் வந்து நேற்று 05-10-2016 அன்று மாலையில் மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவை விசாரணைக்காக காவேரிபாக்கம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் அன்பு ஸ்டெல்லாவை கொன்றது, இத்தம்பதியர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது. ஜீவிதா, தன் கணவனுக்கு துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இப்படி ஒரு பெண்ணே பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது திகைப்பாக இருக்கிறது. மேலும், சர்ச், பாஸ்டர், ஊழியம் போன்றவற்றையும், இதற்காக உபயோகப்படுத்தியது, மேலும் ஆச்சரியமாக இருக்கிறது.

30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி[11]: பாதிரியார் மிலன்சிங், இதே போல், நெல்லை, பாளை, அம்பை, வி.கே.புரம் பகுதியில்  வேலை வாங்கித் தருவதாக 30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகள், பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசார், பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மிலன்சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்த பட்டியலும் தாயாரிக்கப்பட்டு வருவதாகவும், வேறு எந்த பெண்ணையாவது அவர் கொலை செய்திருக்கிறாரா? என்றும் தீவிர விசாரணையில் தான் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[12].

© வேதபிரகாஷ்

06-10-2016

[1] நெல்லை.ஆன்லைன், சங்கரன்கோவில் பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் கைது : 30 பெண்களை ஏமாற்றியது அம்பலம், புதன் 5, அக்டோபர் 2016 6:52:26 PM (IST)

[2] http://www.nellaionline.net/view/31_126301/20161005185226.html

[3]  Kaveripakkam police arrested Millan Singh and Jeevitha.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[4] தினத்தந்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சங்கரன்கோவில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்து உடலை எரித்த பாதிரியார் உடந்தையாக இருந்த மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நாள்: செவ்வாய், அக்டோபர் 04,2016, 9:44 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 1:00 AM IST.

[5] Millan Singh (46), a differently abled preacher from Ukkirankottai near Manur, was running a church at Narippaiyur in Ramanathapuram district.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[6] தினமணி, மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி: சங்கரன்கோவிலில் பாஸ்டர் கைது , By DIN  |   Last Updated on : 22nd September 2016 07:47 AM.

[7] http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/sep/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2568829.html?pm=378

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/04214414/Kidnapped-young-woman-KillPastor-burnt-body.vpf

[9] தினகரன், பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், Date: 2016-10-05@ 16:55:45.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250496

[11] தமிழ்முரசு, வேலை வாங்கி தருவதாக மோசடிபெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், 10/5/2016,  3:09:39 PM.

http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760

[12] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

ஒரு பதில் to “நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!”

  1. Babas in white robes: ‘God’ men and their misdeeds | IndiaFactsIndiaFacts Says:

    […] 1, 2, 3, 4 […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.