வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பிஷப், பெண் மத போதகர் – பாஸ்டர் மீது போலீசில் புகார்!

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பிஷப், பெண் மத போதகர் பாஸ்டர் மீது போலீசில் புகார்!

வியப்பான விவகாரம், புகார் முதலியன: இது ஒரு விசித்திரமான விவகாரமாக இருக்கிறது. ஒரு பிஷப், பெண் போதகர் மீது மோசடி புகார் கொடுப்பது, அவர்களுக்குள் இருக்கும் உள்-விவகாரப் பிரச்சினையா, மத பிரச்சினையா என்று வியப்பாக இருக்கிறது. இது வரை, மரியம் சிஸ்டர் அல்லது மரியம் செல்வம் என்றால் யாருக்கும் தெரியாது. இப்பொழுது, திடீரென்று அந்த பாஸ்டர் மீது “வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி, புகார்,” எனும் போது, உடனடியாக அத்தகைய நிகழ்வு நடக்குமா என்று தெரியவில்லை. கிறிஸ்தவ பாதிரிகளின் மகன்களை குறிவைத்து, இந்த பெண் மோசடி செய்து வந்தால், அதிலும், ஐந்தாண்டுகளாக செய்து வந்தால், ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கலாம். கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புரியாத நிலை தான் ஏற்படுகிறது. பணம் இருப்பவர்கள் சமாளித்துக் கொள்ளலாம், ஆனால், இல்லாதவர்கள் பரிதவித்து டான் போவார்கள். ஒரு  தீக்குளிப்பு சாவு இவ்விவகாரத்தில் நடந்திருப்பது அதனைக் காட்டுகிறது. எனவே, இது ஒரு சமுகப் பிரச்சினை, குற்றமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.

காட்ப்ரே வாஷிங்டன் நோபில் போலீஸாரிடம் கொடுத்த புகார்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்ப்ரே வாஷிங்டன் நோபில் (Godfrey washington noble); பேராயர்[1]. இவர், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார்[2]: “சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியா சிஸ்டர் என்பவர், என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்[3].  ‘நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில், மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன்என, கூறினார்[4]. அங்கு, மே 2க்குள் வேலையில் சேர வேண்டும் எனக் கூறி, வங்கி கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்தும், 8.50 லட்சம் ரூபாய் வாங்கினார்[5]. ‘விசாவந்தபாடில்லை. இதனால், இவர் தெரிவித்த கம்பெனியின் இணையதள பக்கத்தை பார்த்தேன். அதில்,’வேலை வாங்கித் தருவதாக, எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி யாரும் பணம் கேட்டால் தர வேண்டாம்என, எச்சரிக்கப்பட்டு இருந்தது[6]. பின், அந்த கம்பெனி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, மரியா சிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது[7]. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்,”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[8].

யார் இந்த காட்ப்ரே வாஷிங்டன் நோபில்: இவருm பெரும் சர்ச்சைகள், குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இவருக்கும், மோகன் சி லாசரஸுக்கும் சண்டை-சச்சரவுகள் இருந்துள்ளன. அவரது சகோதரியை மணந்திருந்தாலும், அத்தகைய விவகாரங்கள் திகைக்கக் வைக்கின்றன[9]. ரியல் எஸ்டேட், வேலை வாங்கி தருதல், சிறார் இல்லம் என்று பல வழிகளில் இவரது செயல்பாடுகள் இருந்தாலும், அவற்றிலும், சட்டமீறல்கள் முதலியன இருப்படாகத் தெரிகிறது. சில வீடியோக்கள் இணைதளங்களில் வெளிவருகின்றன. இவர் மீது புகார் அளித்து வழக்குகளும் பதிவாகியுள்ளன[10].  மைத்துனர் என்ற உறவையும் மீறியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி கட்சி என்றும் நடத்தி, தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்துள்ளதும் தெரிகிறது. எல்லா அரசியல்வாதிகளுடன் இருப்பது போன்று இவரது பேஸ்புக்கில் புகைப் படங்கள் காணப்படுகின்றன. பிறகு எப்படி அத்தனை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது புதிராக உள்ளது.

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதையே தொழிலாக ஐந்து வருடங்களாக செய்து வந்தார்: இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, ‘மரியா சிஸ்டர் என்பவரின் பெயர் மரியா செல்வம், 42. இவர், இலங்கையைச் சேர்ந்தவர். மத போதகராக செயல்பட்டு, ‘சர்ச்’சுகளுக்கு வருவோருக்கு, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதையே தொழிலாக செய்து வந்தார்’ என்பது தெரிய வந்தது. குறிப்பாக பாதிரிகளின் மகன்களை குறிவைத்து, அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து வருகிறார். புகார் கொடுத்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருக்கிறது. அதே முகவரியில் இருந்து கொண்டு, 100க்கும் மேலானவர்களை ஏமாற்றியுள்ளார், என்று பிஷப் சொல்வதாக, தினத்தந்தி வீடியோ உள்ளது[11]. இவர் மீது மோசடி உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பெதஸ்தா அப்போஸ்தலர் சபை என்று நடத்தி வருவதாக, புகைப் படம் மூலம் அறியப் படுகிறது. பிரச்சார ரீதியில், இருவருக்கும் தொடர்புகள் இருந்தது, புகைப்படம் வாயிலாகப் புலப்படுகிறது.

பிப்ரவரி 2022ல் தொழிலாளி தீக்குளிப்பு: தேனி மாவட்டம், க.விலக்கு அருகே, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மரியா செல்வம், 18 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிப்ரவரியில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், முனியாண்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதைப் பற்றியும், இப்பொழுது தான் விசயம் தெரிய வருகிறது. அத்தகைய ஏமாற்றுக்காரர்களைப் பற்றி எச்சரிக்கையாக செய்திகள் வெளியிட்டிருக்கலாமே?  புகார்கள் கொடுக்கப் பட்டவுடன், மற்ற விவகாரங்களில், கைது, தினம்-தினம் அறிவிப்புகள் என்று தொடர்கின்றன. ஆனால், இது போன்ற சமூகத்தை உண்மையில் பாதிக்கும் விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. இவை கிருத்துவர்களுக்குள் நடக்கும் உள்-சண்டை அல்லது விவகாரம் இல்லை, ஆனால், ஒட்டு மொத்த சமூகத்தை, தமிழகத்தைப் பாதிக்கும் விவகாரங்கள் ஆகும்.

© வேதபிரகாஷ்

20-05-2022


[1] தினமலர், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீசில் புகார், பதிவு செய்த நாள்: மே 20,2022 00:47.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3033683

[3] தினமணி, கிரீஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி, By DIN  |   Published On : 20th May 2022 12:31 AM  |   Last Updated : 20th May 2022.

[4] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82850-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-3847387.html

[5] தமிழ்.இந்து,  வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி; கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது: போலீஸார் வழக்குப் பதிவு, செய்திப்பிரிவு, Published : 20 May 2022 07:20 AM; Last Updated : 20 May 2022 07:20 AM

[6] https://www.hindutamil.in/news/crime/802073-christian-female-pastor.html

[7] டாப்.தமிழ்.நியூஸ், கிறிஸ்தவ பெண் மத போதகர் மரியா சிஸ்டரை பிடிக்க தனிப்படை, By KATHIRAVAN TR Fri, 20 May 202210:21:47 AM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/Private-to-catch-Christian-female-pastor-Maria-Sister/cid7444364.htm – :~:text=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1,%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D(42).

[9] நடுநிலை.காம், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்ததாக பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபிள் மீது வழக்கு பதிவு!,By nadunilai news -May 16, 2020.

[10] https://nadunilai.com/?p=3702

[11] தினத்தந்தி, பெண் பாதிரி மீது, பரபரப்பு புகார், மே.22, 2022;  https://www.youtube.com/watch?v=QjgHheGZOyo

குறிச்சொற்கள்: , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.