பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்காக தண்டனை கொடுத்த கிருத்துவப் பள்ளி! செக்யூலரிஸ போதையா, சட்டத்தின் அலங்கோலமா அல்லது இந்துக்களை அடக்கியாளும் தன்மையா? (1)

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்காக தண்டனை கொடுத்த கிருத்துவப் பள்ளி! செக்யூலரிஸ போதையா, சட்டத்தின் அலங்கோலமா அல்லது இந்துக்களை அடக்கியாளும் தன்மையா? (1)

School girls ad boys punished for celebrating Deepavali- 19-10-2017

பட்டாசு வெடித்தவர்களுக்கு தண்டனை, வெடிக்காதவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கிருத்துவப் பள்ளியில் நடந்த செக்யூலரிஸ வேடிக்கை: திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் செர்வைட் மெட்ரிகுலேசன் பள்ளி [Servite – a Christian minority matriculation school at Keezhapudur]  என்ற கிருத்துவப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்[1]. தீபாவளி பண்டிகை 18-10-2017 முடிந்து 19-10-2017 அன்று பள்ளி திறக்கப்பட்டது[2]. வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் காலை 9 மணி அளவில் இறை வணக்கம் தொடங்கியது. அப்போது தீபாவளி பண்டிகைக்கு யாரெல்லாம் பட்டாசு வெடித்தது என்றும், அவர்கள் கையை தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியை லில்லி அந்தோணியும் கேட்டுள்ளார்[3]. ஏழு பேரை தவிர மற்ற மாணவ-மாணவிகள் கையை தூக்கி உள்ளனர்[4]. அப்போது பட்டாசு வெடிக்காத மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மாணவ-மாணவிகளை கைகளை கட்டிக்கொண்டு இறை வணக்கம் முடியும்வரை தலை குனிந்து நிற்கும்படி கூறி தண்டனை வழங்கியதாக தெரிகிறது[5]. பட்டாசு வெடித்த மாணவர்களை தனியாக அழைத்து சென்ற லில்லி அவர்களை இருளின் பிள்ளைகள் என கடுமையாக சாடியுள்ளார் என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6].

Christians oppose henna

கையில் மருதாணி வைத்திருந்த மாணவிகளுக்கு அடி: இதேபோல் கையில் மெகந்தி / மருதாணி வைத்து இருந்த ஒரு மாணவியை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும் கூறப் படுகிறது[7]. தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்குமாறு தலைமை ஆசிரியை லில்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கையில் மருதாணி வைத்திருந்த மாணவிகளை தனியாக அழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஆன்ட்ரியோ போஸ் அடித்ததாகவும் கூறப்படுகிறது, என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[8]. இத்தகைய நிகழ்ச்சி வேறொரு கிருத்துவப் பள்ளியிலும் நடந்தேறியுளளது. சென்னை டவுட்டன் பள்ளியில், இதே போல, இரண்டாம் வகுப்பு குழந்தையிம் கையில் மருதாணி வைத்த நிறம் இருந்தது என்பதனால் ரூ.500/- அபராதம் விதிக்கப் பட்டது[9]. பள்ளியில் அவர்கள் மாணவ-மாணவியரிடம் எந்த வேறுபாட்டையும் காணப்படக் கூடாது என்ற நோக்கில் தான் அதனை தடுப்பதாக அறிவித்தனர்[10].

Servite Matericulation school- punished boys-girls-or celebrating Deepavali- 19-10-2017

தலைமை ஆசிரியையிடம் புகார்அவர் பதிலளித்தது: இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் 23-10-2017 மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளனர்[11]. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அங்கு திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டு, தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்[12]. அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில், “எங்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் [Tamil Nadu Pollution Control Board] இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவமாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தான் மாணவமாணவிகளை கண்டித்ததாகவும்” கூறி உள்ளனர்.  தலைமை ஆசிரியை பேசுவது வீடியாகவும் சுற்றில் உள்ளது[13]. ஆனால், வெறும் மாசுகட்டுப்பாடு என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளதாகத் தெரியவில்லை. இங்கு நிச்சயமாக, கிருத்துவ அடிப்படைவாதம் தான் அந்த கிருத்துவர்களின் வெறித்தனத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. மாசுக்கட்டுப்பாடு முதலியவை முகமூடிகள் தாம்.

TNPCB - circular 0n Deepavali 2017

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்:  “ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்,” என்று அச்சுற்றறிக்கை சொல்லியுள்ளது[14]. அதாவது, மறைமுகமாக வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று வற்புருத்தியுள்ளது தெரிகிறது. உள்ள 9 போர்ட் மெம்பர்களில் மூன்று முஸ்லிம், இரண்டு கிருத்துவர், பாக்கி 4 எப்படி என்று சொல்ல முடியாது. செக்யூலரிஸ நாட்டில், அதிலும், நாத்திக தமிழகத்தில் யார் எப்படியிருப்பர் என்று சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் பகுத்தறிவாளிகள் இருக்கலாம், செக்யூலரிஸ்டுகள் இருக்கலாம்….ஆனால், இவர்கள் தான் தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்[15]. அதாவது, தீபாவளி எதிர்ப்பு இதிலேயே காணப்படுகிறது. உண்மையில் இந்துத்துவவாதிகள் இதனை எதிர்த்திருக்க வேண்டும். இல்லை, இப்பொழுது கூட, கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, கிருத்துவர்களின் மத அடிப்படைவாதம் மற்றும் இந்துவிரோதத் தன்மையினை வெளிப்படுத்த,  இப்பிரச்சினையை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் செல்லலாம். பார்போம் என்ன செய்கிறார்கள் என்று.

TNPCB - circular 0n Deepavali 2017-Tamil

சட்டம் செக்யூலரிஸமாக்க வேண்டும்: சட்டம் செக்யூலரிஸமாக்க வேண்டிய அவசியம் உள்ளது, ஏனெனில், ஒத்தப் பிரச்சினைகள் ஓவ்வொரு மதத்திற்காக, தனியாக முடிவுகள், தீர்ப்புகள்ள், தீர்மானங்கள் என்று எடுக்க முடியாது. பண்டிகைக் கொண்டாட்டங்களில் மிருகவதை நடக்கிறது, அதனை, எந்த சாத்துவிகவாதி. அஹிம்சாவாதி எதிர்ப்பதில்லை. ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுவது எனது உரிமை என்று அலையும் போது, அதனை ஆதரிக்கிறார்கள். இவற்றில் உள்ள முரண்பாட்டையும் அவர்கள் கண்டு வெட்கப்படுவதில்லை. ஜீவகாருண்யம் என்று பேசுபவர்களே மாமிசம் உண்பதையும் வெட்கமில்லாமல் தெரிந்து கொண்டே ரசித்து வருகிறார்கள், ஆனால், சகிப்புத் தன்மை என்று வரும்போது, மாமிசம் உண்ணாதவனைப் பார்த்து, சகிப்புத் தன்மை இல்லாதவன் என்றும் குறைகூறுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர். தீவிரவாதிகளின் உரிமைகள் பேசப்படுகின்றன, ஆனால், அவர்களால் கொல்லப்படுகின்றவர்களின் உரிமைகள் அவர்களுடன் எரிக்கப்படுகின்றன. சட்டம் எப்படி எல்லா குடிமகன்களுக்கும் சமம் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-10-2017

TNPCB - circular 0n Deepavali 2017-Tamil-2

[1] பத்திரிக்கை.காம், தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால், மருதாணி வைத்தால் தண்டனை!: கிறிஸ்துவ பள்ளியை எதிர்த்து பெற்றோர் போராட்டம், Posted on October 22, 2017 at 6:37 pm by சுகுமார்

[2] https://patrikai.com/punishment-for-deepavali-megadhii-parents-protest-against-christian-school/

[3] சமயம், தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளி தண்டனை, TOI Contributor | Updated: Oct 22, 2017, 04:44PM IST

[4] https://tamil.samayam.com/social/the-school-was-sentenced-to-the-school-students-who-celebrated-diwali/articleshow/61172157.cms

[5] தினத்தந்தி, தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்கும், மெகந்தி வைத்ததற்கும் தண்டனை வழங்கிய தனியார் பள்ளி முற்றுகை, அக்டோபர் 22, 2017, 04:45 AM

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தீபாவளி கொண்டாடிய மாணவர்களை அடித்த கிறிஸ்துவ பள்ளி!… இருளின் பிள்ளைகள் என தூற்றிய அவலம்!!, Posted By:  Lakshmi Priya, Published: Monday, October 23, 2017, 9:42 [IST].

[7] http://www.dailythanthi.com/News/Districts/2017/10/22031811/Private-school-blockade-sentenced-to-disperse-fireworks.vpf

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/christian-management-school-punishes-children-celebrating-diwali-299231.html</p>

[9] The Hindu, School fines class II boy Rs.500 for applying henna, Special Correspondent, Chennai, October 10, 2015 00.00 IST, Updated: , October 10, 2015 05.33 IST.

[10] http://www.thehindu.com/news/cities/chennai/school-fines-class-ii-boy-rs-500-for-applying-henna/article7745121.ece

[11] பாலிமர் செய்தி, தீபாவளி பண்டிகை கொண்டாடிய மாணவ, மாணவிகளுக்கு தண்டனை, 22-அக்-2017 14:54

https://www.polimernews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/

[12]https://www.polimernews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/

[13] https://www.facebook.com/dpenagarajan/videos/1646341075426817/

[14] http://www.tnpcb.gov.in/pdf/Deepavali_Awareness41017.pdf

[15] http://www.tnpcb.gov.in/Boardmembers.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.