பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். ஐ. பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்!

பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். . பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்!

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- to be arrested

கௌடா தேவாசீர்வாதம், கோவட தேவாசீர்வாதம், கோவாட தேவாசீர்வாதம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இப்பிஷப் பல பொறுப்புகளில் பல இடங்களில் வேலை செய்துள்ளார், வேலை செய்து வருகிறார். தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) என்ற ஆங்கிலிகன் சர்ச்சைச் சேர்ந்த இந்த கிருத்துவப் பிரிவு, கத்தோலிக்கம் அல்லாத கோஷ்டிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றப் பிறகு, இச்சர்ச்சிற்கு கோடிக்கணக்கில் சொத்துகள் கிடைத்து விட்டதால், கம்பெனியாக மாற்றி அவற்றை வைத்து நன்றாக அனுபவித்து வருகிறார்கள். இதனால், பதவிகளுக்கு வரவே அதிக போட்டிகள் இருந்து வருகின்றன. எப்பொழுது பார்த்தாலும், உள்ளுக்குள் சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்து, நீதிமன்றங்களுக்கும் செல்கிறார்கள். இதனால், சமீபத்தில் இவர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஆண்கள்-பெண்கள் பிரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு ஊழியம் செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால், தாக்குப் பிடிக்காமல், பற்பல கொக்கோக செக்ஸ்-பாலியல் விளையாடல்களில் ஈடுபட்டு அங்கிகள் கழண்டுள்ளன. இதே நிலை இப்பொழுது இவர்களுக்கும் வந்து விட்டது. இவர்களுக்கு கல்யாணம் செய்து கொள்ளலாம், பிரமச்சரியம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இருப்பினும், இவர்கள் நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று கிளம்பிவிட்டார்கள் போலும். இந்நிலையில் கோவட தேவாசீர்வாதம் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

Gowda Dyvasirvadam

பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். . பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[1] (ஜூலை 2014): “பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். ஐ. பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்”, என்று தலைப்பிட்டு, “டுடி.ஆன்லைன்.நெட்” என்ற இணைதளம் வெளிப்படையாக செய்தி வெளியிட்டது[2]. இந்தியன் எக்ஸ்பிரஸில் சுருக்கமாக செய்தி வந்துள்ளது. ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் எண்ணம் (இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு.354) மற்றும் குற்றவுணர்வுடன் மிரட்டுதல் (பிரிவு.506) [He was booked under the IPC Sections 354 (intent to outrage the modesty of a woman) and 506 (criminal intimidation)] கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[3]. அவர்தான், தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயராக ஆந்திர மாநிலம், கிருஷ்ணா – கோதாவரி திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதம்[4]. ஆனால், மற்ற ஊடகங்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இதே மற்ற மதத்துடைய சாமியார் இவ்வாறு செய்திருந்தால், 24 x 7 ரீதியில் எல்லா அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அதிரடி செய்தியாகி, அனைவரையும் உசுப்பி விட்டுக் கொண்டிருக்கும் செய்தியாக மாறியிருக்கும். அத்தகைய பாரபட்சமான செய்தி வெளியீடு, ஊடகங்களின் நடுநிலையற்றத் தன்மை மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு முதலியவற்றை கவனிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 1

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்..) ஒரு கம்பெனியாகும்: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்பிரதேசம், அண்டை நாடான ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் தென்னிந்திய திருச்சபை என்ற அமைப்பு உள்ளது. தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) என்ற அமைப்பானது ஆங்கலிக்கன் திருச்சபை, மெத்தடிஸ்ட் திருச்சபை ஆகியவை இணைந்து உருவான அமைப்புதான் தென்னிந்திய திருச்சபை. இந்திய கம்பெனிகளின் பதிவுச்சட்டம் 1913 பிரிவு 26 இன் படி சி. எஸ். ஐ. டிரஸ்ட் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை 1947 செப்டம்பரில் உருவாக்கினார்கள். இதன்மூலம் மருத்துவ வசதி, கல்வி வசதி, சமூகசேவை ஆகியவற்றை ஏற்படுத்துவதே நோக்கமாகும். இதில் தென்னிந்தியாவின் 4 மாநிலங்கள், ஒருயூனியன் பிரதேசம், ஸ்ரீலங்காவிலுள்ள ஜாபானா உள்ளிட்ட 22 திருமண்டலங்களை உள்ளடக்கி தென்னிந்தியதிருச்சபை செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய திருச்சபையில் 40,15,000 உறுப்பினர்கள் உள்ளனர். இதனை நிர்வகிக்க சினாடு என்றஅமைப்பு உள்ளது. இதன் தலைவராக பிரதமப் பேராயர் (பேராயர்களுக்கெல்லாம் பேராயர்) துணைதலைவராக துணைப் பிரதமப் பேராயர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்களை கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகள். இந்த அமைப்புதான் சி. எஸ். ஐ. அமைப்பின் கீழ் உள்ள 22 திருமண்டலங்களையும் நிர்வகித்து வருகிறது.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 2

டுடி.ஆன்லைன்.நெட்என்ற இணைதளம் கொடுக்கும் விவரங்கள்: தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயராக ஆந்திர மாநிலம், கிருஷ்ணா – கோதாவரி திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் (2014) பதவி ஏற்றுக் கொண்டார். இவர்மீதுதான் கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா- கோதாவரி திருமண்டலத்தில் பாஸ்டராக இருப்பவர் ஜான் சாஸ்திரி. இவரது மனைவி டெவினா தனதுகணவரின் பணிமாறுதல் குறித்து பிரதமப் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதத்திடம் முறையிடச் சென்ற போது பலவந்தப்படுத்தி தனது கற்புக்கு பங்கம் விளைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[5]. இவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 506 இன்கீழ் சூர்யராவ் பேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 3

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் பிரதமப் பேராயராக ஆவது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது: இதுகுறித்து தென்னிந்தியதிருச்சபையின் நிர்வாகிஒருவர் நம்மிடம் கூறியதாவது: “சினாடு நிர்வாகம் மிகப்பரந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பொறுப்பில் உள்ளவர்கள் குட்டிஅரசு நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பிற்கு இந்தியாவில் பேரழிவுகள், பேரிடர்கள் நடந்தால் வெளிநாட்டு உதவிகள் கணக்கில்லாமல் வருகிறதுஇந்த உதவிகளை வைத்துக் கொண்டு பதவியில் இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இவர்களை எதிர்க்கும், தவறுகளை சுட்டிக்காட்டும் பேராயர்களை சஸ்பென்ட் செய்வது பதவியில் இருப்பவர்கள் செய்துவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் சி.எஸ்.. சினாடு அமைப்பிற்கு சென்னை ராயப்பேட்டையில்தான் தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதுஆனால் தமிழர்கள் எவரும் சினாடு அமைப்பின் உயர் பதவிக்கு வருவது என்றால் மிகவும் கடினம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்களே பிரதமப் பேராயராக வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு வெளிநாட்டு உதவிகளையும், சி. எஸ். . கிறிஸ்தவர்களின் காணிக்கை பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றனர்எனவே தமிழக முதல்வர் தலையிட்டு தமிழகத்தை மதத்தின் பெயரால் சுரண்டி வருபவர்களையும், பெண்ணின் கற்பை சூறையாடி வருபவருமான பிரதமப் பேராயர் மற்றும் அவரது கும்பல்களையும் அடையாளம்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு உதவிகள் செய்துவரும் தமிழக மாபியா கும்பல்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”, இவ்வாறு அவர்கூறினார்.

Participants at the IAWN regional consultation in South Asia. Photo-Ilona Sabera - ACO -Oct.2015

தமிழக முதல்வர் அம்மா இதனை கவனிப்பாரா?  கடைசி செய்தி[6]: ஒரு பேராயர் மீது கற்பழிப்பு புகார், திட்மிட்டு தாக்குதல் ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதியப்பட்டபின் அவர் தனது பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வது மரபு. ஆனால் இவரோ தலை மறைவுவாழ்க்கை நடத்திக்கொண்டு சட்டத்தை ஏமாற்றி வருகிறார். எனவே இவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோர்ட்படி ஏறவும், போராடவும் தயாராகி விட்டனர், என்று இன்னொரு செய்தி கூறினாலும், இதைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. இரண்டு தெலுங்கு டிவி-செனல்கள், இவரைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கின்றன.

© வேதபிரகாஷ்

05-05-2016

[1] டுடி.ஆன்லைன்.நெட், பாதிரியார் மனைவி பலாத்காரம்: சிஎஸ்ஐ பிரதமப் பேராய மீது ஆந்திர போலீசார் வழக்கு, திங்கள் 7, ஜூலை 2014 11:37:39 AM (IST).

[2] http://www.tutyonline.net/view/31_70687/20140707113739.html

[3] Indian Express, Cops Book Bishop for ‘Harassing’ Woman, By Express News Service, Published: 27th June 2014 07:34 AM, Last Updated: 27th June 2014 07:34 AM

[4] The Most Revd Dr Govada Dyvasirvadam; Address: St Andrew’s Cathedral Compound, Main Road, Machilipatnam – 521 002, Krishna-Godaviri District, Andhra Pradesh, India; Office: +91 (0)8672 220 623

Fax: +91 (0)8672 220 771.

[5]  The Suryaraopet police registered a case against Govada Dyvasirvadam, the moderator of the Church of South India (CSI) and Bishop of Krishna-Godavari Diocese of the CSI here Thursday. He was booked under the IPC Sections 354 (intent to outrage the modesty of a woman) and 506 (criminal intimidation). Deevena, wife of a pastor Konda John Sastry, has lodged a complaint at the One Town police station alleging that the bishop had misbehaved with her when she went to him to discuss her husband’s transfer issue. Circle-inspector of Suryaraopet police station M Srinivas said that they had registered a case, and investigation is on. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Cops-Book-Bishop-for-%E2%80%98Harassing%E2%80%99-Woman/2014/06/27/article2302950.ece

[6] http://m.dailyhunt.in/news/india/english/the-new-indian-express-epaper-newexpress/cops-book-bishop-for-harassing-woman-newsid-30312529

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். ஐ. பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்!”

  1. சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகரகுருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சி Says:

    […] [11] https://christianityindia.wordpress.com/2016/05/05/csi-bishop-dyvasivadam-involved-in-sexual-harassm… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.