பத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா?!

பத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா?!

ஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது[1]. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும். கிருத்துவர்களே இவர் மீது ஊழல் புகார் வேறு சொல்கின்றனர்[2].

பிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[3].

சின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை (15-09-2010) சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. வக்கீல்கள் விச்சரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.

உள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.

பாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[4]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தார் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ள சர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பா உள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத் தாக்கினர்[5].

சாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர்.    போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.    இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளீயே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒருவேலை, இந்த விதமாக விஷயத்தை அமுக்கப் பார்க்கிறாரோ என்னமோ?


[1] Archbishop Arulappa vs Acharya Paul – Madras High court 1985.

[2]http://www.ephesians-511.net/home.htm ;  http://www.ephesians-511.net/reports.htm

[3] தினமலர், டிவிகுழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561

[4] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=73219434-2107-4564-a1ad-76a3fd10d362&CATEGORYNAME=TCHN

[5] http://www.thenaali.com/newsinner.php?id=1374

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா?!”

  1. vedaprakash Says:

    பத்திரிகையாளர்களைத் தாக்கிய பேராயர்
    http://www.viduthalai.periyar.org.in/20100916/news18.html

    சென்னை , செப். 16- சென்னையில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை மயிலை கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் சின்னப்பாவிடம் விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம நியமித்துள்ளது.

    இதையடுத்து அந்த நேற்று பேராயர் சின்னப்பாவிடம் அவரது வீட்டில் விசாரணை நடத்தியது.

    இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற `டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி செய்தியாளர் விக்ரம் கோபிநாத், கேமராமேன் மனீஷ் தனானி ஆகியோரை சின்னப்பாவின் வீட்டில் இருந்தவர்களும் அவரது உதவியாளர்களும் தாக்கினர்.

    அவர்களது கேமராவை பிடுங்கி, அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.

    இது குறித்து புகார் தரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏராளமான பத்திரிகையாளர்கள் சாந்தோமில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதையடுத்து அங்கு வந்த கூடுதல் ஆணையர் ஷகில் அக்தர், இணை ஆணையர் சக்திவேலு, துணை ஆணையர் பெரியய்யா, உதவி ஆணையர் சக் பால்ராஜ் ஆகியோர் பத்திரிகை யாளர்களை சமாதானப்படுத்தினர்.

    பேராயர் சின்னப்பாவும் அங்கு வந்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பத்திரிக்கையாளர்களைத் தாக்கியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மைலாப்பூர் காவல் நிலையத் தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  2. Annie Thomas Says:

    இப்படி பேராயர்கள் ரௌடிகளைப் போல செயல்படுவது கண்டு வெட்கிக் குனிய வேண்டியதுள்ளது.

    இப்படி தன் மீதே இத்தனைக் குற்றங்கள், குறைகள், பழிகள் முதலியன இருக்கும் போது, இவர்களுக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற என்ன தகுதி, யோக்கியதை உள்ளது?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.