கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!

கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!

கிட்டத்தட்ட, இது கல்கி பகவான் பிரச்சினைப் போன்றே செல்கிறது. முதலில், அரசிலால் தான், கல்கி பகவான் மாட்டிக் கொண்டார்.

அதாவது, கருணநிதிக்கு, நான்தான் மஞ்சள் துண்டு கொடுத்தேன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபருக்குச் சொல்ல அந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.

நேமத்தில் இருந்த ஆசிரமத்தில் போலீஸ் நுழைந்து அட்டகாசம் செய்தனர். இதே மாதிரி, உறவினர்களை வைத்து பல புகார்கள் (மகன்-மகள் கடத்தல், சொத்து அபகரிப்பு) கொடுக்கப் பட்டன.

கடைசியாக, அந்த சீடர்கள்-சீடைகள் எல்லோருமே மெரினா கடற்கரைக்கு எடுத்துவரப்பட்டனர்.

ஊடகக்காரர்கள், மற்றவர்கள் அவர்களை பல கேள்விகள் கேட்டனர்.

அப்பொழுது, ஒரு பெண் சீடை கேட்ட கேள்வி, சில ஊடகக்காரர்களை சிந்திக்க வைத்தது, வாயடைத்து விட்டனர். அவள் கேட்டாள்,

“ஒருவர் தமது மகள் இஞ்சியர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அனுமதிக்கின்றனர்; டாக்டர் ஆக ஆகவேண்டும் என்று விரும்பினால் அனுமதிக்கின்றனர்; ஏன் நடிகை ஆகவேண்டும் என்று விரும்பினால் கூட அனுமதிக்கின்றனர்; பிறகு துறவி ஆகவேண்டும், சேவை செய்யவேண்டும் என்றால் ஏன் எதிர்க்கிறீர்கள்”

நித்யானந்தாவின்-சீடைகள்

நித்யானந்தாவின்-சீடைகள்

இளம்பெண்கள் பெற்றோர்கள் மீது புகார்: சென்னை:  நித்யானந்தா ஆசிரமத்தில் பணியாற்ற, தங்கள் பெற்றோர் தடையாக இருப்பதாக இரண்டு இளம்பெண்கள், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மகள்கள் கிருஷ்ணவேணி(29), சித்ரேஸ்வரி (28). இருவரும், நித்யானந்தரின் சீடர்களாக சேர்ந்து தங்கள் பெயரை நித்யபிரீத்தானந்தா மற்றும் நித்யபிராவணானந்தா என மாற்றிக் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் இருவரும் எம்.ஏ., பொருளாதாரம் படித்துவிட்டு, பிஎச்.டி., படித்து வருகிறோம். எங்கள் பெற்றோர் அனுமதியோடு, பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பி.எஸ்.பி., ஹீலர் நித்யானந்தம் வகுப்பில் படித்து தேர்வு பெற்று, ஆசிரமத்தில் பிரமச்சாரினிகளாக பணிபுரிந்தோம். எங்கள் தந்தை சிவபாலன், நித்யானந்தா மீது மரியாதை கொண்டு, அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து எங்களையும், நித்யானந்தாவையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் ஆசிரமத்தில்  ஏற்பட்ட பிரச்னையின் போது, எங்களை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யவும், கட்டாய திருமணம் நடத்தி வைப்பதற்கும் பெற்றோர் முயற்சித்தனர். இதற்கு உடன்படாமல் எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்தப்பா விஸ்வரூபானந்தா வீட்டிற்கு வந்துவிட்டோம்; பெங்களூரு செல்லவுள்ளோம். தற்போது எங்கள் பெற்றோர், “நித்யானந்தா உங்களை ஆட்களை வைத்து கடத்திச் சென்றுவிட்டார் என்று போலீசாரிடம் புகார் கொடுத்து, உங்களையும், அவரையும் கைது செய்ய வேண்டிய நடவடிக்கை எடுப்போம்’ என்று, பயமுறுத்துகின்றனர். யாருடைய தூண்டுதலுமின்றி, வற்புறுத்தலுமின்றி, சுய நினைவோடு ஆன்மிக பணி ஆற்றுவதற்காக மீண்டும் ஆசிரமம் செல்கிறோம். எங்கள் மீதோ, நித்யானந்தா மற்றும் ஆசிரமம் மீதோ எங்கள் பெற்றோர் புகார் தெரிவித்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்,

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்: பெண் சீடர்கள் இருவருக்கும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள். உரிய ஆதாரங்களோடுதான் நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ பட ஆதாரமும் உண்மையானது. எனவே நீங்கள் இருவரும் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் பேச்சை கேட்டு திருமண பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் பெண் சீடர்கள் இருவரும் நாங்கள் எடுத்த முடிவில் இருந்து மாறமாட்டோ ம் என்று பதில் அளித்துவிட்டு சென்றனர்.

ஒருவேளை இதுதொடர்பாக பெண் சீடர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுப்போம்’ என்று அந்த அதிகாரி கூறினார். பெண் சீடர்கள் இவ்வாறு புகார் கொடுக்க வந்தது போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவர்கள் இருவரையும் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:-

கேள்வி:- நித்யானந்தாவின் சீடர்களாக நீங்கள் மாறியது ஏன்? உங்கள் பெற்றோர் அறிவுரைபடி நீங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கலாமே?

பதில்:- நித்யானந்தா மீது எங்கள் பெற்றோரும் முதலில் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எங்களது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவர் மன அழுத்த நோயால் மிகவும் அவதிப்பட்டார். அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று சொல்லுவார். நித்யானந்தாவை சந்தித்த பிறகு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டார். அதன்பிறகுதான் எங்கள் குடும்பத்தினருக்கு நித்யானந்தா மீது மரியாதை ஏற்பட்டது. எங்கள் பெற்றோரின் அனுமதியோடும், அவர்கள் கொடுத்த உத்தரவாத கடிதத்தோடும்தான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்தோம்.

அவரது ஆசிரமத்தில் எங்களை போல் 300 இளம் பெண்கள் அவரது சீடர்களாக பணிபுரிகிறார்கள். நாங்கள் சம்பளத்துக்காக அங்கு வேலைபார்க்கவில்லை. ஆன்மிக பணியில் எங்களை அர்ப்பணித்துக்கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டும் ஆன்மிக பணியை செய்யலாம். திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாக இருந்தும் ஆன்மிகத்தில் ஈடுபடலாம். நாங்கள் 2-வது வழியை தேர்ந்தெடுத்துள்ளோம்.

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் எங்களைபோன்ற இளம் பெண்கள் மட்டுமல்லாமல், எத்தனை கணவன்-மனைவிகள் கூட தங்கியிருக்கிறார்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபட்டுவிட்டால் அழகு, ஆசை, வயது எதிலும் ஈடுபாடோ டு இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் தங்க நகைகள் அணிந்துகொள்ளவில்லை. எங்களுடைய வாழ்க்கையை முடிவு செய்துகொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் இந்த வாழ்க்கையை நாங்கள் தேர்வு செய்தோம்.

இப்போது திடீரென்று பிரம்மச்சாரியத்தை கைவிட்டு, விட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு வரும்படி எங்கள் பெற்றோர் சொல்லுகிறார்கள். நித்யானந்தா மீது போலீசார் போட்டுள்ள வழக்கை அடிப்படையாக வைத்து எங்கள் பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

நாங்கள் நித்யானந்தாவை நம்புகிறோம். அவர் விரைவில் நிரபராதி என்று போலீஸ் வழக்கில் இருந்து விடுதலை பெற்று வருவார்.

நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து வெளியிடப்பட்ட சி.டி. படத்தை நாங்கள் நம்பவில்லை. போலீஸ் வழக்கு விசாரணை இருப்பதால் நாங்கள் இப்போது இதற்குமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நித்யானந்தா மோசமானவராக இருந்திருந்தால் நாங்கள் மீண்டும் அவரது ஆசிரமத்துக்கு போக விரும்புவோமா? இதுவரையில் அவருக்கு எதிராக எந்த பெண்களும் புகார் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

நித்யானந்தாவுக்கு அடிமையாக்கி சொத்துக்களை அபகரிக்க முயற்சி : திடுக் தகவல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=30369

இதுகுறித்து, அந்த இருவரின் தந்தை சிவபாலன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் எனது பிள்ளைகளுக்காக, ஏராளமான சொத்துகள் சேர்த்து வைத்துள்ளேன். கால்நடைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான், ஓய்வூதிய பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளேன். எனது சகோதரர் கண்ணன், எனது மகள்களை நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். அவர்களை நித்யானந்தாவின் சீடர்களாக்கி, வெளிநாட்டில் ஆசிரமம் அமைத்து தருவதாக கூறியுள்ளார். இதன் மூலம் எங்களிடமிருந்து, எனது மகள்களை பிரித்த எனது சகோதரர், தற்போது அவர்களுக்கு உரிய சொத்துக்களை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கிறார். ஆசிரமத்தில் பிரச்னை ஏற்பட்ட போது அங்கிருந்து வெளியேறிய எனது மகள்கள் எனது வீட்டுக்கு வரவில்லை. சென்னையில் கண்ணன் வீட்டில் தங்கியுள்ளனர். மகள்களை ஆசிரமத்தில் சேர்த்து விட்ட பின்னர் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மெயில் டிரான்ஸ்பர் மூலம் கொடுத்துள்ளேன். மகள்களுக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்க முயற்சிப்பதாக கூறுவது பொய். இது பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினர்.

லெனின் கருணாநிதியை சந்தித்த மர்மம்: செம்மொழி மாநாட்டில், ஜூன் 25 அன்று, கோபால் “நித்து, நித்து” என்று கொஞ்சிக்கொண்டே ரஞ்சிதா கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்ததன் மர்மம், இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும். இவ்வாறு, நித்து மயக்கத்தில், பித்துப் பிடித்து “மெட்டி ஒலி” கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வேலையில், லெனின் கருணாநிதியை சந்தித்த ரகசியத்தைப் போட்டு உடைத்தார் திருவாளர் நக்கீரன் கோபால்! லெனின் தன்னுடன், ஏதோ மலரைக் காட்டுவதற்கு சென்றிருந்தாராம்! இங்கு “மலர்” என்றால் கருணநிதியின் பரிபாஷையில் எடுத்துக் கொள்ளவேண்டுமா, லெனின் பரிபாஷையில் எடுத்துக் கொள்ளவேண்டுமா, கோபால் பரிபாஷையில் எடுத்துக் கொள்ளவேண்டுமா, என்ரு அவர்கள்தாம் சொல்லவேண்டும். ரஞ்சிதம் கூட மலர் தான்!

சகாய ஜார்சின் பொய் புகார்: மேமாதம் 20ம் தேதி, பாளையங்கோட்டை சாமாதனபுரம் பேரின்ப தெருவை சேர்ந்த பழ வியாபாரி சகாய ஜார்ஜ் தனது  மனைவி ஆரோக்கிய விமலா குழந்தைகள் அருண் பிரகாஷ், அஜய் அண்ட்ரோ முதலிவர்களை நித்யானந்தா தமது ஆஸ்ரமத்தில் அடைத்து வைத்ததாக புகார் கொடுத்தார். ஆனால், அதே மனைவி தான்தான் தன்னிச்சையாக அங்கேயிருப்பதாக பதில் புகார் அளித்ததும், ஊடகங்கள் மௌனமாகிவிட்டன.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!”

  1. நெட்டிமையார் Says:

    முதலில் பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை மதம் மாற்ற உரிமை உள்ளதா?

    குழந்தைகளின் உரிமைகளை இப்படி மீறுவதற்கு, அதிலும் கட்டாயத் திருமணம், மதம் மாற்றுதல் முதலியன சரியா என்று தெரியவில்லை.

    மேலும், இவ்விஷயத்தில் மதம் மாறவேண்டும் என்ற எண்ணம், கருத்து, பிரச்சினை என்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

    ஆக, இவர்களை யாரோ தூண்டி விட்டு, அத்தகைய விளம்பரத்தை ஏற்பச்டுத்துவது போன்று தெரிகிறது.

  2. மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்! « பெண்களின் நிலை Says:

    […] […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.