Posts Tagged ‘ஏரி’

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

திசெம்பர் 30, 2015

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

Indian pentacostal mission, Tambaram google map

Indian pentacostal mission, Tambaram google map

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு: பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூரில்,  உள்ள ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான கிருத்துவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். முதலில் தற்காலிகமாக கூரைப் பந்தல் போட்டுக் கொண்டு இக்கூட்டம் நடந்து வந்தது. கூரை ஓடக்கூடாது என்ற தடை வந்தவுடன், கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. அப்பொழுதும், சிறுபான்மையினர் என்றதாலும் அப்பகுதி ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை விற்க ஈடுபட்டவர்களுக்கும் இதில் லாபம் பெற விருப்பம் இருந்ததினால் மறைமுகமாக அமைதியாக அதரவு கொடுத்து வந்தனர்.

Pentacostal mission, Irumpuliyur, Tambaram - flooded Dec.2015

Pentacostal mission, Irumpuliyur, Tambaram – flooded Dec.2015

ஆனால், வழக்கு தொடரப்பட்டதினால், பென்டகோஸ்டல் மிஷன் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு சி.எம்.டி.ஏ மூலம் ஆணையிட பரிந்துரைக்கப்பட்டது[1]. இருப்பினும் பென்டகோஸ்டல் மிஷன் தடை உத்தரவு வாங்கி இழுத்து வந்தது. பாஸ்டர் மானஸா இதற்கு ஈடுபடுத்தப் பட்டிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான வேலை நடப்பதை ஒப்புக்கொண்டு, பிறகு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதாகவும் எடுத்துக் காட்டினார்[2]. சென்னை உயர்நீதி மன்றம் இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட்.27, 2014 அன்று ஆணையிட்டது[3].

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

பலசர்ச்சைகளில் சிக்கியுள்ள இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: இந்த சர்ச் கடந்த ஆண்டுகளில் பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், இவர்களால் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று புகார் அளித்தாலும், போல்லீஸார் மற்றும் இதர ஊராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கன்வென்ஷன் நேரத்தில் வரும் கிருத்துவர்கள் பலவிதங்களில் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். போதகுறைக்கு அந்நேரங்களில் தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டு கடைகளை வைத்து இடைஞ்சல் செய்கின்றனர். இதனால், கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலசங்கம் வழக்கும் தொடர்ந்தது. ஏற்கெனவே வழக்குகளில் சிக்கியுள்ள  பென்டகோஸ்டல் மிஷன், சட்டப்படி, தனது அந்தஸ்த்தைத் ஸ்திரப்படுத்திக் கொள்ள, இதிலும் ஈடுபட்டு வருகிறது. சுதர்சன் ராஜ் என்பவருக்கு 11.03.2015லிருந்து 15.03.2015 வரை கடைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால், வழக்கு போடப்பட்டது[4]. ஆனால், இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே கன்வென்ஷன் நடந்து முடிந்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து விட்டது[5]. பிரதிவாதிகளையும் மனுக்களை வாபஸ் பெற ஆணையிட்டது[6].

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாற்ற முயற்சி[7] (மார்ச்.2014): வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரியை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விஜயகுமாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வக்கீல் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார். பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப் பூர்வமாக எழுதித்தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்[8]. அதைத் தொடர்ந்து விஜயகுமாரி தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் ஐகோர்ட்டை நாடவுள்ளோம் என்றார்[9]. 2012ல் லட்சுமி பிரியா என்ற ஆந்திர மாநிலத்து பெண்ணை மதம் மாற்றியதில், சர்ச்சையில் சிக்கியது[10].

hindu-girl-forcefully-converted

hindu-girl-forcefully-converted

சி.எம்.டி.., ‘நோட்டீஸ் மதிக்காத இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை[11].

Irumpuliyur map

Irumpuliyur map

தமிழக அரசு வரன்முறை செய்து பிறப்பித்த உத்தரவும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளும்: சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்[12]:

  1. பத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.
  1. அந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.
  1. கட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும்.
  1. இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.
  1. அதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
  1. மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.
  1. வளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும்.
  1. திட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
irumpuliyuur church encroachment

irumpuliyuur church encroachment

இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார் அதாவது, ஏரி ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு என்றெல்லாம் நடந்த பிறகும், பென்டகோஸ்டல் மிஷனுக்கு சாதகமாக இத்தகைய உத்தரவு வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-12-2015

[1] Petition filed under Article 226 of the Constitution of India praying for issue of Writ of Mandamus directing the 1st respondent [The Member Secretary, Chennai Metropolitan Development Authority, Gandhi Irwin Road, Egmore, Chennai] to enforce the stop work notice dated 17.09.2013 and further direct the 1st respondent to seal and demolish the unauthorised constructions being carried out by the 3rd respondent [The Pentecostal Mission, Rep. By Pastor Maanasa, Roja Street, Irumbuliyur, Tambaram (East), Chennai] in Survey No.84 situate in Irumbuliyur, Tambaram Taluk, Chengalpet District. http://indiankanoon.org/doc/23860348/

[2] Learned counsel for respondent no.3, thus, concedes that a part of the construction is without planning permission obtained, though application is pending consideration for regularization before the concerned authority. http://indiankanoon.org/doc/23860348/

[3] Madras High Court, C.V.Ramadas vs The Member Secretary on 27 August, 2014; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.08.2014 – CORAM – THE HON’BLE MR.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and THE HON’BLE MR. JUSTICE M.SATHYANARAYANAN, W.P.No.28655 of 2013 and  M.P.No.1 of 2013

[4] Madras High Court, Kalaignar Karunanidhi Nagar … vs The District Collector on 30 June, 2015,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, Dated: 30..06..2015 Coram: The Honourable Mr.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM, W.P.No.6693 of 2015.

[5] Petition filed under Article 226  of the Constitution of India praying for the issue of a writ of Mandamus, forbearing the 2nd respondent from permitting the fifth respondent to put up shops in the Roja Street, K.K.Nagar, Peerkankarani, Srinivasan Nagar (Post), Chennai 600 063, from 11.03.2015 to 15.03.2015 during the period of convention conducted by the fourth respondent. http://indiankanoon.org/doc/168574778/

[6] The Order of the Court was made by The Hon’ble The Chief Justice) Learned counsel for the petitioner states that since the convention is over, though the problem is repeatedly created, in order to ensure that in future, such a situation does not come to pass, he will file a fresh petition specifically raising the plea that there cannot be any construction on the roadside, in view of the provisions of the Tamil Nadu District Municipalities Act, 1920. He thus submits that the issue is not one of not adhering to the terms of the license, but absence of any provision in law, whereby the respondent can do so. He seeks to withdraw the petition. http://indiankanoon.org/doc/168574778/

[7] மாலைமலர், மதம் மாறிய பெண் விருப்பப்படி செல்லலாம்: வேலூர் கோர்ட்டு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 27, 3:44 PM IST

[8]http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/03/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article2133233.ece?service=print

[9] http://www.maalaimalar.com/2014/03/27154434/woman-can-optionally-converted.html

[10] https://christianityindia.wordpress.com/2012/11/06/1206-christian-missioneries-targeting-indian-women-for-conversion/

[11] தினமலர்,தேவாலய வரன்முறைக்கு 8 நிபந்தனைகள், டிசம்பர்.28,2015.00.30.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1420374