Posts Tagged ‘விபச்சாரம்’

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

Vatican changedd Bible in 1969-1

1969ல் வாடிகன் தினசரி பிரார்த்தனையில் மேரி மேக்தலீன் பற்றிய விவரங்களை மாற்றியது: இடைகாலத்தில் மேரி மேக்தலீன் கட்டுக் கதை எவ்வாறு பாரிஸில் வளர்க்கப்பட்டது என்பது விவரிக்கப் பட்டது. வாடிகனுக்கு ஆரம்த்திலிருந்தே, மேரி மேக்தலீனை உயர்த்து வைப்பதை குறைத்து வந்தது. மேரி என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விட, ஏசுவின் விறையை பாதுகாத்து, வம்சத்தைப் பெருக்குவாள் போன்ற கதைகள் இடித்தன, பயமூட்டின. ஆனால், பிரான்சில், இதை நம்பும் பக்தர்கள், விசுவாசிகள் அதிகமாகவே இருந்தனர். மேரிக்கு இணையாக வளர்ந்து விடுவாளோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், காலத்தின் கட்டாயம், அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 1969ல் வாடிகன், போப் பால் VIன் அனுமதியுடன்  தனது தினசரி லத்தீனில் செய்யப் படும் பிரார்த்தனையில் சிறிது மாற்றங்களை செய்தது.  லூக் பைபிளில் ஏழாவது அதிகரத்தில், ஒரு பெயர் குறிப்பிடாத பெண் ஏசு இருந்த வீட்டில் நுழைந்தாள் என்ற விவரம் உள்ளது.

Vatican changedd Bible in 1969-2

லூக்கா, அத்தியாயம்.7ல் உள்ளது: முதலில் மேரி மேக்தலீன் ஒரு வேசி, விபச்சாரி என்றெல்லாம் தான் அறியப் பட்டாள், சித்டரிக்கப் பட்டாள்: லூக்கா சொல்வது:

37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

………………………………………………..

47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இந்த கதையானது ஜான் பைபிளில் உள்ள 20 அத்தியாயத்தில் வரும் கதையை வைத்து மாற்றப் பட்டது. அங்கு அப்பெண் மேரி மேக்தலீன் என்று அடையாளம் காணப்படுகிறாள். அவள் பாவப்பட்டவள் என்பதால் அல்ல உயிர்த்தெழுந்த பின்னர், தன்னை அவளிடம் அடையாளம் காட்டிக் கொண்டதால், முக்கியத்துவம் பெறுகிறாள்.

Mary Magdalelene - raised to GODHEAD

ஜான், அத்தியாயம் 20ல் உள்ள விவரங்கள்: ஜான் அவள், ஏசு உயர்த்தெழுந்ததுடன் தொடர்பு படுத்துகிறது:

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

Mary Magdalene teaching apostles

இதுவரை, மேரி மேதலீனை விபச்சாரி, வேசி என்றெல்லாம் தான் அறியப்பட்டு வந்தது. ஆனால், அவள் தான் முதன்முதலில் உயிர்த்தெழுந்த ஏசுவைக் கண்டவள். அதனால், அவள் மதத்திற்கே மையக்கருவாக இருக்கிறாள். எது எப்படியாக இருந்தாலும், அடுத்த ஆண்டே, 1970ல் “ஜீசஸ் கிரைஸ்ட் சூப்பர் ஸ்டார்” என்ற படம் வந்து ஹிட் ஆனது. அதே போல 1971 மற்றும் 1973 ஆண்டுகளில் பாடல்கள் வெளியிடப் பட்டு பிரபலம் ஆகியது. ஆக இவ்வாறு, பைபிள் மாற்றப் பட்டுக் கொண்ட்தான் வருகிறது[1]. அவள் எப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடவுளாகப் பட்டாள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2].

Jesus in India books manufactured- 1

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை[3]: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”. இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது[4].

Jesus in India books manufactured- 2

கட்டுக் கதை வளர்க்கும் விதம் – ஆதரவு-எதிர்ப்பு[5]: “வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].

© வேதபிரகாஷ்

17-03-2019

Jesus in India books manufactured- 3

[1] Michael Haag, The Quest For Mary Magdalene: History & Legend, Profile Books, London, 2016.

[2] Beavis, Mary Ann. The Deification of Mary MagdaleneFeminist Theology 21.2 (2012): 145-154.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[4] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (1)

செப்ரெம்பர் 5, 2015

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (1)

May George, Zonta Research Centre, Madambakkam

May George, Zonta Research Centre, Madambakkam

திருமதி மே ஜார்ஜ் துவங்கிய இல்லங்கள் (2003-2007): தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பகுதியில் அமெரிக்க  உதவியுடன் திருமதி மே ஜார்ஜ் என்பவர் மகளிருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தது[1]. யார் இந்த மே ஜார்ஜ் என்று கூகுளில் தேடிய போது சில விவரங்கள் கிடைத்தன. மே ஜார்ஜ் [May George] என்ற பெண்மணி 1963 முதல் 1969 வரை பெண்கள் பாலிடெக்னிக்கில் முதல்வராக பணியாற்றினார். 1983 வரை தமிழக அரசு வேலை பார்த்து வந்தார். தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் முதல் பெண் எஞ்சினியர் என்று குறிப்பிடத்தக்கது. 1991ல் பெண்களுக்காக வேலைபயிற்சி நிலையத்தை பல்லாவரத்தில் ஆரம்பித்தார். அமெரிக்காவில், சிகாகோவில் உள்ள ஜோன்டா இன்டெர்நேஷனல் [Zonta International, a not-for-profit organisation based in Chicago] என்ற நிறுவனத்தின் உதவியுடன் அதனை ஆரம்பித்தார்[2]. அதில் பெரும்பாலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். பிறகு 2003ல் மாடம்பாக்கத்தில் இன்னொரு பெண்கள் பயிற்சி மையத்தை, டச்சு நாட்டின் “அமைதி பௌண்டேஷன்” [Amaidhi Foundation, a Dutch philanthropic foundation] நிதியுதவியுடன் தொடங்கினார்[3].

அமைதி ஜோன்டா ரிசோர்ஸ் மையம்,, மாடம்பாக்கம் - படங்கள்

அமைதி ஜோன்டா ரிசோர்ஸ் மையம்,, மாடம்பாக்கம் – படங்கள்

எச்..வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்என்று மாடம்பாக்கத்தில் ஆரம்பித்தது (2007): “எச்.ஐ.வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்” என்று ஆரம்பித்தபோது, உள்ளூர் மக்கள் எதிர்த்த போது, அது நிரந்தரமான அமைப்பல்ல, பெண்கள் அங்கு வந்து, தங்கி சென்றுவிடுவர் என்று சமாதானம் சொல்லப்பட்டது. டிசம்பர் 6, 2007 அன்று அது, அப்பொழுதைய சமூகநல அமைச்சர், பூங்கோதை ஆலடி அருணாவால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், பத்து நாட்களில் அவ்விடத்தின் மதிற்சுவர் உடைக்கப்பட்டது மற்றும் ஜன்னல் கதவுகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4], என்று “தி இந்துவில்” செய்தி வந்தது. முன்னர் மாணிக்கம் நகர மக்கள் அந்த “எச்.ஐ.வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்” அங்கு ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கபட்ட பெண்கள் அங்கு வந்து செல்வதால் மற்றும் நடமாடுவதால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்தனர்[5]. இருப்பினும், “மக்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்”, என்று சொல்லி, மே ஜார்ஜ் தொடர்ந்து செயல்பட்டார்[6]. அதாவது, உள்ளூர் மக்களின் உணர்வுகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்றாகிறது. ஜனவரி.25, 2014 சனிக்கிழமை அன்று காலமானார்[7]. இவர் எல்.டி.சுவாமிகண்ணுப் பிள்ளை [L.D. Swamikannu Pillai (1865-1925)] என்பவரின் பேத்தி என்றும் குறிப்பிடத்தக்கது[8]. இந்த சுவாமிக்கண்ணுப் பிள்ளை இந்திய காலக்கணக்கியலைக் குறைப்பதற்காக பணியில் ஆங்கிலேயரால் அமர்த்தப்பட்டவர் என்பதும் கவனிக்கத்தக்கது[9]. சரி, அதென்ன “ஜோன்டா” என்று பார்ப்போம்.

Zonta Research Centre, India and si Lanka with truncated Indian map

Zonta Research Centre, India and si Lanka with truncated Indian map

ஜோன்டா ரிசோர்ஸ் மையம்”, “ஜோன்டா அமைதி ரிசோர்ஸ் மையம்ஆனது எப்படி? (2004-2007): அமைதி பௌண்டேஷன் [Amaidhi Foundation] இணைதளம் கொடுக்கும் விவரங்களை இங்கு கவனிக்க வேன்டியுள்ளது. “ஜோன்டா ரிசோர்ஸ் மையம்” [Zonta Resourrce Centre] 2004ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கிருந்த பழைய கட்டிடம் மோசமாக இருந்ததால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது. இதற்கான நிதியுதவி “வைல்ட் கேன்ஸன்”[10] மற்றும் ஐ.சி.சி.ஓ அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டது[11]. ஆனால், அந்த சொத்து வாடகைக்கு விட்டதில் பிரச்சினை இருந்தது. 2004ல் ஜோன்டா மையத்திற்கான கட்டிடம் ஏற்கெனவே கட்டியாகி விட்டது. ஆனால், “ஜோன்டா அமைதி ரிசோர்ஸ் மையம்” [Zonta “Amaidhi” Resource Centre] என்ற பெயரில் சில ஆண்டுகள் இயங்கியப் பிறகு தான், ஜோன்டாவிற்கு சொந்தமானது. புதிய கட்டிடத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள், பழைய கட்டிடத்திலிருந்து, புதிய கட்டிடத்திற்கு மாற தடுத்தனர். அதாவது, 2004 முதல் 2007 வரை இருந்த பிரச்சினையை, இது விளக்குகிறது என்று தெரிகிறது. அந்த சொத்து வாடகைக்கு விட்டதில் பிரச்சினை இருந்தது என்றால், அமைதி மற்றும் ஜோன்டா பௌண்டேஷன்களுக்கு இடையே இருந்த பிரச்சினை என்ன என்று தெரியவில்லை. இல்லை, வேறு எவருக்காவது வாடகைக்குக் கொடுத்தனரா என்றும் தெரியவில்லை.

அமைதி ஜோன்டா ஆய்வு மையம்,, மாடம்பாக்கம் - கூறுவது - நெதர்லாந்து இணைதளம்

அமைதி ஜோன்டா ஆய்வு மையம்,, மாடம்பாக்கம் – கூறுவது – நெதர்லாந்து இணைதளம்

ஜோன்டா ரிரோர்ஸ் மையம் வளர்ந்த விதம் (2007-2012): 2012ம் வருடத்தில், “உரையாடல் – சமூக நீரோட்டங்களின் கால தொகுப்பு” என்ற இதழ் சில விவரங்களைக் கொடுக்கிறது[12]. சென்னையில் ஜோன்டா கிளப் 1966லேயிலிருந்து வேலைசெய்து வந்தது. 1989ல் “ஜோன்டா ரிசோர்ஸ் மையம்” ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்து, 1990ல் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கீழ்கண்டவர்கள் அதன் போர்ட் மெம்பர்களாக நியமிக்கப்பட்டனர்:

  1. திருமதி மே ஜார்ஜ், தொழிற்துறை வல்லுனர்.
  2. திருமதி சம்பூர்ண கரைன், ஆலோசக மனோவியல் வல்லுனர்.
  3. திருமதி கல்பனா ஷண்முகம், கட்டிடவியல் வல்லுனர்.
  4. திருமதி மைதிலி பாபு, கட்டிடவியல் வல்லுனர்.
  5. லதா ரமேஷ், சி.எஸ்.ஐ.எம், டைரக்டர்.

1990ல் மும்பையிலிருந்து விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கைவேலைகள் சொல்லிக்க்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் வாடகைக்கு எடுத்த கட்டிடத்தில் பாலவாக்கத்தில் இருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு இ.சி.ஆர். சாலையில் இடம் கொடுப்பதாக இருந்தது. ஆனால், அரசியல் போட்டிகளால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம் ரத்தானது. இதனால், மாடம்பாக்கத்தில் சொந்தமாக இடம் வாங்கி கட்ட்டம் கட்ட ஆரம்பித்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கட்டிடத் தொழிலாளிகளாக வேலைசெய்தனர். இந்த மையத்தின் தினசரி விசயங்களுக்காக திருமதி ஜானகி கிருஷ்ணன் என்பவர் நிறைய செய்திருக்கிறார். ஆர். அர்ச்சனா என்பவர் மே ஜார்ஜிடம் பேட்டி எடுத்து இவ்விவரங்களை பதிவு செய்துள்ளார்.

Zonta Research Centre, Madambakkam- donors, May george, Janaki

Zonta Research Centre, Madambakkam- donors, May george, Janaki

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/07/06034648/With-fake-documents3-arrested-for-property-seized.vpf

[2] Vidya Venkat, Featured in Harmony Magazine, February 2007.

[3] The first woman chief engineer of the Tamil Nadu Housing Board (she retired in 1983), 81 year-old May George has always bucked convention. Hailed as ‘a people’s technocrat’ for her low-cost housing designs, she defied contractors and threw in her lot on the side of the poor. From 1963 to 1969, George served as principal at the Polytechnic College for Women in Chennai, which taught her the importance of vocational training. In 1991, she opened a short-stay home and vocational training centre for needy women, most of whom are HIV positive. Zonta Resource Centre, in Pallavaram in Chennai, is run by Zonta International, a not-for-profit organisation based in Chicago. In 2003, George built another home in Madambakkam in Chennai with funds from Amaidhi Foundation, a Dutch philanthropic foundation. The home has been vandalised by people who don’t want HIV-infected people in their neighbourhood – George is standing firm.

http://www.harmonyindia.org/hportal/VirtualPrintView.jsp?page_id=4296

[4] The Hindu, Short stay home foer women in Madambakkam damaged, December.20, 2007.

[5] Ten days after it was dedicated by Social Welfare Minister Poongothai Aladi Aruna, a short stay home for women in Manickam Nagar, Madambakkam, near Tambaram, was damaged by a section of the residents of the area on Tuesday. The Zonta Resource Centre was opened with a simple function on December 6,2007. Run with assistance from the Central government through the Central Social Welfare Board and monitored by the Tamil Nadu Social Welfare Board, the home’s objective was to provide shelter, counselling, care and food to adolescent girls and women who required them. The inmates would include woman affected by HIV/AIDS. Residents of the Manickam Nagar objected to it on the grounds that they would be exposed to health hazards if they come into contact with women taking shelter in the home. They had earlier approached officials of the Madambakkam town panchayat . Officials promptly told them that the home was functioning legally and it was not within their powers to initiate action against it in any form. And on Tuesday, a few dozen men and women surrounded the short stay home and damaged its compound wall. Using wooden logs and stones, they broke the window panes. May George, chairperson, Zonta Resource Centre, said they were upset at the incident and regretted that such forms of stigma still persisted. Those living near the home would not be exposed to any forms of health hazard or risks as feared by the residents, she said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/short-stay-home-for-women-in-madambakkam-damaged/article1971287.ece

[6] http://www.thehindu.com/news/cities/chennai/may-george-womens-rights-activist-passes-away/article5620955.ece

[7] http://www.mylaporetimes.com/2014/01/may-george-woman-chief-engineer-who-created-housing-for-common-people-in-city-passes-away/

[8] http://www.thehindu.com/features/metroplus/first-woman-chief-engineer/article5642908.ece

[9]  ஜான் பென்லி போன்றோரின் விருப்பங்களுக்கேற்ப, இந்திய சரித்திர நொகழ்வுகளைலக் குறைத்து மதிப்பீடு செய்ய, இவரை வைத்து புத்தகங்களை எழுத வைத்தனர். அவரும் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக எழுதினார்.

[10] http://www.wildeganzen.nl/home/

[11] Aids is a big problem in India. Zonta Resource Centre is a shelter in Chennai for women with hiv and aids. They get a roof over their head, medical guidance and a practical way of spending the day. Amaidhi Foundation – supported by the funds Wilde Ganzen and ICCO– has subscribed money to build a new building for the women. The old building was too old and in a bad state.  Another disadvantage was that the property in question was rented. A new building was already built for the Zonta Resourrce Centre in 2004. But it was only put into use some years later under the name Zonta “Amaidhi” Resource Centre. Villagers who live around this new building impeded the move from the old to the new place for a few years. They also destroyed the surrounding wall and part of the building. They were against the arrival of women with aids to their village. In the meantime peace has returned and the women have been living in the house for a number of years .

http://www.amaidhi.nl/en/zonta-resource-centre#overlay-context=en/projects

[12] R. Archana, A Story of Toil and Rejuvenation, in “Conversations – A Chronicle of social Currents”, Volume 3,  Issue 12, December 2012, For Free Circulation Only.

கிருத்துவ அனாதை இல்லங்ளின் இரட்டை வேடம் – இளம் சிறுமிகள் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச படங்கள் தயாரிப்பு முதலியன!

மார்ச் 21, 2011

கிருத்துவ அனாதை இல்லங்ளின் இரட்டை வேடம் – இளம் சிறுமிகள் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச படங்கள் தயாரிப்பு முதலியன!

கிருத்துவ நிறுவனங்களின் இரட்டை வேடம்: அனைத்துலக கிருத்துவ நிறுவனங்கள், இந்த்யாவில் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புகின்றனர் என்றெல்லாம் புகைப்படங்கள், குறும்படங்கள், முதலியவற்றை எடுத்து, பிரபலப்படுத்தி, இந்தியப் பெற்றோர்கள் கொடியவர்கள் போலச் சித்தரித்துக் காட்டுகின்றனர். மாறாக, இந்தியர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளைக் காப்போம், சிறுவர்-சிறுமிகளைக் காப்போம், என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு, அவர்களது வாழ்க்கையினையே இப்படி சீரழித்து விடுகின்றனர். இப்பொழுது, மாட்டிக் கொண்ட இருவர் மற்றும் சென்னையில் மாட்டிக் கொண்டவர்கள் எல்லோருமே, இப்படி அனாட்தை இல்லங்கள் நடத்தும் கிருத்துவ நிறுவனங்கள் தாம்!

குழந்தைகள் காப்பகம் பெயரில் பிபச்சார இல்லங்கள்: டன்கேன் கிராண்ட் 1955ல் கொலபா என்ற இடத்தில் ஒரு காப்பகம், இல்லத்தை ஆரம்பித்தான்[1]. அதாவது 22 வயதிலேயே அங்கு வந்து இந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்று உறுதியாகவந்துள்ளது தெரிகிறது. ஆலன் வாட்டர்ஸ் என்பவனும், இங்கிலாந்திலிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு அத்தகைய இல்லத்தை ஆரம்பித்து, தொழிலைத் தொடங்கினான். சிறுவர்-சிறுமிகளுக்கு இடம் கொடுத்தல், இரவில் தூங்க  இடம் கொடுத்தல், என்று ஆரம்பித்து, மெதுவாக, அவகளது நலன்களை பதுபாப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினர். பிறகு தமது திட்டத்திர்கேற்றபடி சுற்றுலா விபச்சாரத்திற்கு, அந்த அப்பொழுது தான் வயதிற்கு வந்துள்ள 12-18 வயது சிறுவர்-சிறுமிகளை அந்நியர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் வளர்த்த விதம்: தெருவில் சுற்றும், வேலை செய்யும் சிறுவர்களுக்கு அங்கு இடம் கொடுக் பட்டது. 25-30 என்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப் பட்டு மூரத் மற்றும் பத்வர் பார்க் ஏரியாக்களில் உள்ள அந்நியதேச சுற்றுலா பயனிகளுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் அந்த  அந்நியர்களுக்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்து வந்தனர். ஒன்று வெள்ளைத்தோல் அந்நியர், இரண்டு அவர்கள் நிறைய பணம் பரிசுப் பொருட்கள் முதலியவற்றை கொடுக்கிறார்கள் என்ற காரணங்களினால், செக்ஸ் மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டாலும் முதலில் மறுத்தாலும் அல்லது ஏற்புடையதாக இல்லாமல் கர்தினாலும், பிறகு அவர்கள் பண ஆசை முதலியவற்ரை காட்டி உடன்பட செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் அவர்கள் செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் செய்து வந்தனர்.

மும்பை, கோவா முதலிய இடங்களில் சகஜமாக நடகும் விபச்சாரம்:  இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இது மிகவும் சகஜமான நிகழ்ச்சியாக உள்ளது. வில்ஹெலம் மற்றும் லிலி மார்த்தி என்ற தம்பதியர் டிசம்பர் 12, 2002ல் மும்பையில், ஒரு ஹோட்டலில், சிறுமிகளுடன் தகாத முறையில் செக்ஸ் வைத்துஇக் கொண்டதற்கசக கையும் களவுமாக பிடிப்பட்டனர். நீதி மன்றம் அவகளுக்கு ஏழாண்டு கடுங்காவல் மற்ரும் ரூ. 15,000/- அபராதம் விதித்தது. ஆனால், மார்ச் 15, 2004ல் ஆளுக்கு ரூ. ஆறு லட்சம், ஒரு லட்சம் என அபராதம் கட்டி விட்டு, அப்பணத்தை பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து விட்டி, தப்பித்து விட்டனர்[2].

டன்கேன் கிராண்ட் (67) மற்றும் ஆலன் வாடர்ஸ் (63) [Duncan Grant and Allan Waters ] இருவருமே மிகப் பெரிய சிறுவர் செக்ஸ் கொடூரர்கள். மும்பை 2008ல் அவர்களை எப்படியோ விடுவித்து விட்டது. ஆனால், உச்சநீதி கோர்ட்டில். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டனர். இதனால், அவர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்[3]. அவர்களுடைய இந்திய கூட்டாளி வில்லியம் டிசௌஸா[William D’souza]வும் இதில் சம்ம்பந்தப்பட்டுள்ளான்.  இவர்களும் எல்லோரும் சிறுவர் காப்பகத்தில் இருக்கும் சிறுவர்-சிறுமியர்களை செக்ஸ் வன்புணர்ச்சி முதலிய காரியங்களை செய்து வந்தனர்[4]. மானேஜராக இருந்த வில்லியம் டிசௌஸா (49) அந்த இருவர்களுக்கும் வேண்டிய சிறுவர்-சிறுமியர்களை அனுப்பி வைத்தான்[5]. இதனால் 2006ல் கைது செய்யப் பட்டனர்.

2008ல் மும்பை நீதி மன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்து விட்டது. இருப்பினும், அவர்கள் இந்தியவை விட்டு செல்லக் கூடாது என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது[6]. மேலும் ஆறு வருட கால சிறை தண்டனை அவர்க்க்க்களுக்கு அளித்தது மிகவும் அதிகம் என்று கூறியது. ஆனால், கண்ணால் பார்த்த சாட்சிகள் அவர்கள் சிறுவர்-சிறுமியர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிடுந்ததைப் பார்த்ததாக உள்ளது. ஆகவே, இதை சாதாரண பிரச்சினையாக விட்டுவிடமுடியாது என்ரு உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. அதாவது, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுடியும் கைத் செய்யப் படப்போகிறர்ர்கள்!

சைட் லைஒன் இந்தியா ஃபவுண்டேஷன் (Childline India Foundation) என்ற சிறுவர்-சிறுமியர்களின் உரிமைகளுக்குப் போராடும் நிறுவனம் தான், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று வெற்றிப் பெற்றது.

வேதபிரகாஷ்

21-03-2011