Posts Tagged ‘வசதி’

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

பிப்ரவரி 18, 2012

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

நில மோசடி, சொத்துக் குவிப்பு, வங்கியில் கோடிக்கணக்கில் பணம் முதலியவற்றில் ஈடுபட்ட சென்னை பிஷப்புகள்!

செப்ரெம்பர் 18, 2010

நில மோசடி, சொத்துக் குவிப்பு, வங்கியில் கோடிக்கணக்கில் பணம் முதலியவற்றில் ஈடுபட்ட சென்னை பிஷப்புகள்!

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு – அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

1980-90களில் மோசடியில் ஈடுபட்ட ஆர்ச் பிஷப், மற்ற பிஷப்புகள்: ஆர்ச் பிஷப் அருளப்பா (1912-1996) முதலியோர் “செயின்ட் தாமஸ்” மோசடியில், இதே மாதிரி லட்சங்களைக் கொட்டி, போலி ஆவணங்களை உருவாக்குதல், ஆதாரங்களை மறைத்தல், பணம் கையாடல், போப்பை சந்தித்து அத்தகைய மோசடி வேலைகளுக்கு சிறப்பூட்டல், முதலியவற்றில் ஈடுபட்டு, நீதிமன்றங்களில் வழக்காடி, ஒருவர் சிறைச் சென்று, நாறிவிட்டது[4]. இதிலும், செக்ஸ், சுகமான பயணங்கள் முதலியவையெல்லாம் உள்ளன. முக்கியமாக, இது தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றிற்கு எதிராக நடந்த மோசடிகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[5].

இறந்த பாதிரியாரின் வங்கி கணக்கில் கோடிக்கும் மேலான பணம், கோடிக்கணக்கில் சொத்து[6]: இந்த பாதிரியார்களின் மகத்துவமே அலாதியாக இருக்கிறது. முற்றிலும் துறந்த முனிகள் போல, இவர்கள் வெள்ளாடை அணிந்து வெளியில் உலா வருகிறார்கள். இகவுலக வாழ்வையே துறந்துவிட்டது மாதிரி பேசுகிறார்கள். அப்படியிருக்கும் போது, எப்படி இறந்த பாதிரியாரின் வங்கி கணக்கில் கோடிக்கும் மேலான பணம், கோடிக்கணக்கில் சொத்து முதலியன இருக்கும்? இப்படி கேட்பது நீதி மன்றம்:

The deceased Fr.Jacob Vettichirayil son of Thomas Vettichirayil was a priest and was serving as a Parish Priest in St.Antony’s Church, Park Towrr, Madras in the Diocese of Madras-Mylapore. The said priest had served other places also under the said diocese and he died on 10.6.1987. He had left behind the movable properties described in the schedule comprising of fixed deposits and money collected in the Savings Account in various banks. The total amount lying in such banks is shown as Rs. 1,04,967,27. The other important fact to be noticed is that the deceased Father Jacob is a christian belonging to the Roman Catholic faith and he had joined the seminary run by the appellant diocese in accordance with the canon law. After undergoing training for a period of seven years he was ordained as priest after taking the necessary vows, one of which is to sever his connection absolutely with his family and his properties. After such ordination a priest cannot own any property of his own except for administrative purpose. The appellant claimed as the spiritual head of the diocese as being entitled to receive the amounts shown in the schedule. On the banks insisting on a succession certificate the application is filed.

இதே மாதிரி, இன்னொரு முற்றும் துறந்த கத்தோலிக்கத் துறவி[7] 3000 நட்சத்திர தங்க பகோடாக்கள் – அதாவது 64,000 ஸில்லிங் / 165,000 ஃபணம் – வைத்திருந்தாராம்! அப்படியென்றால், கிருத்துவ பாதிரிகள் இந்தியாவில் அக்காலத்திலேயே, எந்த அளவிற்கு பணத்தைக் கொள்ளையடித்திருப்பர்? இப்படி பணம் இருக்கும் போது, ஆண்தன்மை படாதபாடு படுகிறது, கன்னித்தன்மையின்மீது பாய்கிறது.

1990-2000களில் நில மோசடியில் ஈடுபட்ட பிஷப்புகள்; கோடிக்கணக்கில் நடந்துள்ள நில மோசடியில், சென்னை பிஷப்புகள் ஈடுபட்டுள்ளதாக, சென்னை நீதிமன்ற தீர்ப்பு மூலம் தெரிகிறது[8]. எல். எம். மென்ஸிஸ் (L.M.Menezes), ஜோஸப் குரியகோஸ்  (Joseph C.Kuriacose) மற்றும் ஹெரால்ட் டி’சில்வா  (Harold D’Silva) என்ற மூவர் சர். ஜான் டி மான்டே[9] டிரஸ்டின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை, டிரஸ்டின் விதிகளுக்குப் புறம்பாக ஜேப்பியார் என்பவருக்கு விற்றுவிட்டதாக, சென்னை ஆர்ச் பிஷப், மற்ற பிஷப்புகள், கத்தோலிக்க பிஷப் குழுமம் முதலியவர்களின் மீது வழக்கு தொடர்ந்தனர்[10]. அதுமட்டுமல்லாது லாரன்ஸ் பயஸ் என்ற பிஷப், வெகுகால குத்தகைக்கு ஜேப்பியாருக்கு கொடுப்பதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்[11]. ரூ.600-650 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.75 கோடி மற்றும் மாதம் ரூ.15,000/- என்ற வீதத்தில் குத்தகைக் கொடுததும் பல கேல்விகளை எழுப்பின. இதில் வேடிக்கையென்னவென்றால், 2001-2002 வாக்கில், லாரன்ஸ் பயஸ் பிஷப்பே, அத்தகைய பேரத்தில் ஈடுபட்டு, பிறகு, ஒன்றும் தெரியாதது போல நடித்து வருகின்றார். இவையெல்லாம் 2001 – 2007 காலக்கட்டத்தில் நடந்தேறின.

ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் இப்படி நீண்டுள்ளது: இரண்டு வழக்குகள், தொடர்ந்த அப்பீல்கள் என வழக்காடுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் இப்படி நீண்டுள்ளது:

1.Rt.Rev.Dr.Lawrence Pius

2.Most Rev.Arul Das James

3.Rt.Rev.Tony Devotta

4.Rev.Fr.P.J.Lawrence Raj

5.Rev.Fr.Thomas Simon

6.Rev.Fr.K.S.Lawrence

7.Mr.Jeppiaar

8.Catholic Bishops Conference of India (CBCI),

rep.by its Secretary General

Most Rev.Oswald Gracias,

CBCI Centre, H1, Ashok Place,

(Near Gole Dakkhana),

New Delhi-110 021.

9.Most Rev.Archbishop of Goa,

Archbishop’s House, “Altinha”

Panjim, Goa-403 001.

(nominated as Supervisor of  the Trust by the Testator)…Respondents in O.S.A.83/2003

1.Most Rev.Arul Das James

2.Rt.Rev.Dr.Lawrence Pius

3.Rt.Rev.Tony Devotta

4.Rev.Fr.P.J.Lawrence Raj

5.Rev.Fr.Thomas Simon

6.Rev.Fr.K.S.Lawrence

7.Mr.Jeppiaar

8.Catholic Bishops Conference of India (CBCI),

rep.by its Secretary General

Most Rev.Oswald Gracias,

CBCI Centre, H1, Ashok Place,

(Near Gole Dakkhana),

New Delhi-110 021.

9.Most Rev.Archbishop of Goa,

Archbishop’s House, “Altinha”

Panjim, Goa-403 001.

(nominated as Supervisor of

the Trust by the Testator)

10.The John De Monte Trust

(created in and by the Will of

Sir John De Monte dated

18th July, 1820), rep.by its Trustee,

Archbishop’s House,

21, Santhome High Road, Chennai-4.

ஆனால், இதே ஆர்ச் பிஷப்புகள், பிஷப்புகள், பாதிரியார்கள் யோக்கியர்கள் மாதிரி மற்றவர்களைப் பற்றி கேவலமாகவும், அவதூறாகவும் பேசிக் கொண்டிருப்பர்.

2000-2010களில் செக்ஸ், பாலியல், பாலியல் வன்புணர்ச்சிகள், ஆபாசங்கள், அடிதடி, அடாவடித்தனங்களில் ஈடுபடும் பிஷப்புகள்; எந்த அளவிற்கு ஒரு ஆசிரியையை பாடுபடுத்தியிருந்தால், நீதிமன்றத்திற்கு சென்றிருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், ஏனெனில், இவர்கள் எல்லோரும் பொதுவாக, நீதி மன்றத்திற்குச் செல்லாமலேயே விஷயத்தை அமுக்கி தமக்குள் விவகாரங்களை முடித்துக் கொண்டு விடுவர்[12]. இதே நிலைதான், இப்பொழுது 2010ல் ஊடகக்காரகளை பிடித்து வைத்தது, அடித்தது, கேமராவைப் பிடுங்கு வைத்துக் கொண்டது போன்ற அடாவடித்தன வேலைகளில் தெரிய வருகிறது.


[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[4] இதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருப்பதால், இங்கு திரும்பவும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இணைதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Archbishop Arulappa vs. Acharya Paul – C. S. No. 318 of 1980 Arulappa vs Ganesh Iyer; Application No. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985

[5] அதனால்தான், இதே சின்னப்பா, அதே அருளப்பாவின் வழியில் தெய்வநாயகம் போன்ற போலி அர்ராய்ச்சியாளர்களை வைத்துக் கொண்டு அதே போன்ற மோசடிகளை செய்து வருகிறார் என்பதையும் நோக்கத்தக்கது.

[6]Rt. Rev. Casmir Gnanadickam … vs Unknown on 5 February, 1998;  http://www.indiankanoon.org/doc/1462442/

[7] Most. Rev. P.M.A. Metropolitan & … vs Moran Mar Marthoma & Anr on 20 June, 1995; http://www.indiankanoon.org/doc/634316/

Moran Mar Baselious Marthoma … vs State Of Kerala on 28 January, 2003; http://www.indiankanoon.org/doc/969460/

[8] http://www.rishabhdara.com/sc/view.php?case=73009

L.M. Menezes And Ors. vs Most Rev. Arul Das Jamas And Ors. on 6 January, 2003; http://www.indiankanoon.org/doc/1379270/

L.M.Menezes vs Rt.Rev.Dr.Lawrence Pius on 22 December, 2003; http://www.indiankanoon.org/doc/1852617/

“Memorandum of Setllement” dated 20-01-1985 between Arulappa and Acharya Paul, p.no.7.

[9] இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆள் சென்னையில் போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்த நிலங்களை, வளைத்துப் பிடித்து வாங்கியவர். மேலும் இவருக்கு “சர்” என்ற பட்டம் கொடுக்கப்படவேயில்லை! இதுதான் அவர்களது சரித்திரம்.

[10] The appellants herein made allegations against the respondents that the properties of the Trust were being mismanaged in violation of the instructions of the testator and a substantial extent of immovable properties were sold. One of the properties of the Trust is comprised in R.S.No.3923 of Mylapore Village of a total extent of 257 grounds and 81 sq.ft., consisting of buildings, which is commonly known as Bens Garden, which was proposed to be leased for long term to the seventh respondent, without proper advertisement or notice to the general public. The second respondent filed O.P.before the original side of this Court, seeking permission for long term lease to be given to the seventh respondent, which was also objected to by the appellants herein.

[11] The Hindu, Madras High Court refuses to approve the land lease agreements, Sunday, Jul 23, 2006, http://www.hindu.com/2006/07/23/stories/2006072305380400.htm

[12] Archbishop Arulappa vs. Acharya Paul – C. S. No. 318 of 1980 Arulappa vs Ganesh Iyer; Application No. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985. இது செட்டில்மன்ட் வழாக்கானதால் கோர்ட்டிற்கு செல்லவேண்டியதாயிற்று! இல்லையென்றால், இதுவும் மக்களின் பார்வைக்கு வந்திருக்காது, அத்தகைய மோசடிகள் வெளிவந்திருக்காது.