Posts Tagged ‘மைக்கேல் ஃபாரடே’

“வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்! [2]

மார்ச் 3, 2019

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [2]

Christian site criticizing the seminar Feb 18-20 -2019.3

கலவரத்தை உண்டாக்கவே கருத்தரங்கம்ஆனால் ஏசுவின் வருகை காட்டுகிறது[1]: இதனை சமீபத்தில் லயோலா கல்லுாரியில் நடந்த ஓவிய கண்காட்சி, திருச்சி ஜோசப் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் கருத்தரங்கம், கோவையில் நடக்க உள்ள வெளிச்சத்தை நோக்கி கருத்தரங்கம் போன்றவை மூலம் உணர முடியும். இவற்றி்ல் இவர்கள் பேசப் போவது அனைத்துமே பேத்தியை போலவே பாட்டி இருக்காங்க என்றுதான். அவர்கள் கருத்தரங்கம் குறித்து மிப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

அது தொடர்பாக கருத்து மோதல் வெடிக்கும், இந்துகள், கிறிஸ்தவர்கள் மோதிக் கொள்வார்கள். தங்கள் பெயர் பிரபலமாகும். திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள். இதனால் ஏசுவின் பெயராலே இந்த சாத்தான்கள் குளிர்காய்வார்கள்.  சமீபத்தில் திரைப்படங்களில் அரசியல் பேசி ஓடாத சினிமாவை ஓட வைப்பதற்கு இணையானது தான் இது

கிருத்துவர்கள் இந்த அளவிற்குத் தெளிவாக இருக்கிறார்கள். “திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள்” என்ற அளவிற்கு சிந்தித்து வைத்து செயல்பட்டுள்ளார்கள்! ஆனால், இந்த்துவவாதிகளின் நிலை, திட்டம், குறிக்கோள்? கிருத்துவர்களுக்கு உதவுவது தான்! அப்படியென்றால், இவர்களுக்கு இடையே ஏடாவது கூட்டு இருக்கிறதா?

போன்றவையும். எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அந்தி கிறிஸ்து வந்து விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தின சுவிஷேங்களில் காணப்படும் அடையாளங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள்[2].

Pandithurai, Johnson, Baskara, Vijayakanth, Thomas, Ramesh

இந்துத்துவ கிருத்துவஎதிர்ப்பு விற்பன்னர்களின் கூட்டம்: டிசம்பர் 2017ல் “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[3] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[4] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[5] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[6] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[7] நடுவராக இருந்தார்[8]. இதில் குறிப்பாக ஜடாயு மற்றும் ஏ.வி. கோபாலகிருஷ்ணன் கிருத்துவ விசயங்களில் மிக்கத் தேர்ந்த பண்டிதர்கள் என்று அறிமுகப் படுத்தப் பட்டனர்[9]. அவர்களும் அந்த சுவதேசி இந்தியவியல் மாநாட்டில் வெளுத்துக் கட்டினர். யாரும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப் படவில்லை. இவ்விதமாக இந்துகளின் “சுவதேசி இந்தியவியல் மாநாடுகள்” நடக்கின்றன. இப்பண்டிதர்களில் ஒருவர் தாராளமாக சென்று கலந்து கொண்டிருக்கலாமே. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஏழு பேர்களுக்கு பேஸ்புக்கிலகிவர்கள் நண்பர்களாக வேறூ இருக்கிறார்கள்! சரி, இப்பொழுதாவது, யாராவது சென்று கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. விசாரித்தால் மாநாடு நடந்ததா இல்லையா என்று கூட சரியாகத் தெரியவில்லை. கிருத்துவர்கள் தரப்பில், பொய்யான ஆராய்ச்சி என்றாலும், பி.எச்டிக்கள் மூலம் அரைத்த வாவை அரைத்து, பெருக்குகிறார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளோ, அடுத்தவர்களை அமுக்கி, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையில்லாத இவர்களால் இந்துக்களுக்கு லாபமும் இல்லை, பயனும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தொடர்ந்து காரியங்களை செய்து வருகிறார்கள்.

Christian seminar -Pandithurai with Moses Michael

மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” 1989ல் தோன்றியது: கிருத்துவர்களை எதிர்க்க வேண்டுமானால், ஒற்றுமையுடன் இந்துக்கள் செயல்பட வேண்டும். நான் 1989ல் “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” சார்பில், “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற சிறு-புத்தகத்தை வெளியிட்டேன். அது ஆராய்ச்சிப் புத்தகம் என்பதால், நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது[10]. “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” என்பது ஒத்தக் கருத்துக் கொண்ட எட்டு நண்பர்கள் மூலம் உருவாக்கப் பட்டது. பல நண்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள். ஒரு.ரூ ரூ, 5/- ரூ. 10 ரூ 50/- என்றெல்லாம் கொடுத்தார்கள், அதை வைத்து அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அதனால் தான் அப்புத்தகம் வெளியானது. அச்சிட்டவரே அதனை பாராட்டினார், ஏனெனில், அவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு புத்தகங்களை அசிட்டுக் கொடுத்து வந்தார்[11]. ஆனால், “செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – தொடர்கிறது” என்று சுமார் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் தயாரித்து, சிடியில் கொடுத்த போது, வெளியிடுகிறோம் என்று வாக்களித்தவர் 2008ல் வெளியிடவில்லை. மாறாக அவற்றில் உள்ள ஆதாரங்களை வைத்து, மற்றவர்கள் புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்படித்தான், இந்துக்களின், இந்துத்துவவாதிகளின் போக்கும், நடவடிக்கைகளும் இருக்கின்றன. முன்பு பணமில்லை, மனமிருந்தது. இப்பொழுது பணம்-அதிகாரம் இருக்கிறது, ஆனா, மனமில்லை. தங்களது நிலையை, பதவியை, இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்களே தவிர, கொள்கைக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இங்குதான் கிருத்துவர்கள் மாறுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-03-2019

Ezra, Sundar Singh etc

[1] நியூஸ்.டி.எம், தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !, பாரதி பித்தன் | Last Modified : 09 Feb, 2019 09:33 am.

[2] https://www.newstm.in/news/tamilnadu/55607-jesus-is-coming-soon.html

[3] M.Venkatesan is well known Tamil writer and publisher. He is an original thinker and dharmic activist. He has written books on Ambedkar, EV Ramasamy Naicker, the Dravidian movement and Justice Party. His books such as ஈவே ராமசாமியின் மறுபக்கம் (The Other side of EV Ramasamy), ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? (Why did Ambedkar Convert to Buddhism? ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare? )’, ‘ஹிந்துத்துவ அம்பேத்கர் (Hindutva Ambedkar) ‘ have been making a significant impact on the intellectual climate of Tamil Nadu.

[4]  N.A. Padmanabhan is a Tamil journalist and writer having a very rich experience in both Tamil print and visual media. He has authored books on Indian Philosophy and Hindu spirituality. His books such as ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே (Rejection of God is also Spirituality), தத்துவ தரிசனங்கள் (Indian Philosophical Perspectives: Dharsanas) are widely popular in the state. https://www.facebook.com/padman.anandapadmanaban?fref=ts

[5] Jataayu (R N Sankara Narayanan) is an IT professional. He is a well-known Tamil Writer and Hindutvaite thinker. He has been one of the editors of website Tamil Hindu and Valam magazine. He has a deep interest in Kambaramayanam and knows Sanskrit well. He has written a number of articles in Tamil Hindu and Thinnai websites. His most recent publications include பண்பாட்டைப் பேசுதல் (Talking on Culture), சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் (இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) – A New Perspective on Jati (with Aravindan Neelakandan), காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) Narasimham Over the Ages – Compendium of Articles on Culture).

[6] A.V.Gopalakrishnan is an engineer by profession and a passionate historical researcher on Bible and theology. For over fifteen years he has been writing blogs on the historicity of Bible under his pen name Devapriya ji.

[7] Professor, Department of Social Work, Mizoram University, https://www.facebook.com/mekanagaraj

[8] வேதபிரகாஷ், சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புஅறிக்கைஇந்துஎதிர்ப்பு மனப்பாங்குகலந்துரையாடல்கள் (5), டிசம்பர் 28, 2017.

[9] https://tamilheritage.wordpress.com/2017/12/28/swadeshi-indology-conference-discussion-on-hinduphobia-meyhodology/

[10] ஈஸ்வர் சரண் ஆங்கிலத்தில் விரிவான புத்தகத்தை வெளியியட்டார். இப்பொழுது 2019லும் அதன் விரிவான பதிப்பு வெளியாகி உள்ளது.

[11]  சமூக அறிவியல் புத்தகத்தை அச்சிட அவருக்கும் ஆர்டர் கிடைத்திருந்தது. ஆனால், அந்த விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே, பரிகாரமாக, இதனை அச்சிட்டுத்தருகிறேன் என்ற போது, அவருக்குள்ளும் இருந்த உணர்வு தெரிந்தது.

ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன?

ஜனவரி 21, 2011

ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன?

1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[1]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[2] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[3]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

முருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.

மொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.

மலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[4]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[5]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[6]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:

The Board of Governors

  • Dr. M. Israel – Chairman – எம். இஸ்ரேல்
  • Dr. G. John Samuel – Secretary – ஜான் சாமுவேல்
  • Dr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.

Members – உறுப்பினர்கள்

  • Mr. M.S. Venkatachalam
  • Dr. K. Malaisamy, M.P.
  • Dr. P. Subramanian
  • Dr. M.J. Mohan
  • Dr. Sundar Devaprasad
  • Mr. V.S. Ramalingam
  • Dr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.
  • Dr. Tsutomu Kambe
  • Dr. Y. Dennyson
  • Dr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.

இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-01-2011


[2] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, ல் காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[3] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.

[6] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)