Posts Tagged ‘மர்மம்’

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

ஏப்ரல் 1, 2013

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

கன்னியாஸ்திரிக்கள் குற்றங்களுக்கு ட் படுவது: கன்னியாஸ்திக்கள் சமீபகாலமாக மர்ம முறையில் இறப்பது, உடல் கிடப்பது, முதலியன சகஜமாக ஆகிவிட்டது. அயல்நாட்டில் நடப்பது போல, அவர்கள் இந்தியாவிலும் நடந்து கொள்வது, நடத்தப்படுவது கிருத்துவ நிர்வாக சீர்கேட்டைத்தான் காட்டுகிறது. அபயா கொலை வழக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஜார்க்கெண்டிலும் ஒரு கன்னியாஸ்திரி – வல்சா ஜான்[1] மாபியாவுடன் சம்பந்தப்பட்டதால்[2] கொலை செய்யப்பட்டாள்[3]. மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரியின் உடல் பூங்குளம் என்ற கான்வென்டின் பூமிக்கடியில் உள்ள நீர்த்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது (18-08-2011). ஆனால், அதன் மூடியை யாரோ நகர்த்தியுள்ளது தெரிகிறது. அத்தகைய முறை அபயா வழக்கை நினைவு படுத்துகிறது[4]. முதலில் அவள் காணவில்லை என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் நிலையுள்ளது பற்றி கிருத்துவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். பெண்ணியக்க, மாதர் சங்க, பெண்ணுரிமை குழுக்களெல்லாம் வழக்கம் போல அமைதியாகவே இருப்பார். சில நாட்களில் இவை மறக்கப்படும், மறைக்கப்படும்.

ஏஞ்சலின் நிர்மலா ரீனாஎன்ற கோவை கன்னியாஸ்திரியின் மர்மமான சாவு: கன்னியாஸ்திரி ஏஞ்சலின் நிர்மலா சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது[5].பட்டப்படிப்பு கோவை பீளமேடு, சவுரிபாளையம், மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரீட்டாமேரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். ஏஞ்சலின் நிர்மலா ரீனா, 26, என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 2004, டவுன்ஹால், பிரசன்டேஷன் கான்வென்ட் கிறிஸ்துவ சபையில், ஏஞ்சலின் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார். பயிற்சிக்காக மதுரை, கிணத்துக்கடவு பகுதிகளில் செயல்படும் கிறிஸ்துவ சபைகளுக்கு சென்றார்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவை, லாலிரோடு, ஜான் பிரிட்டோ சர்ச்க்கு சொந்தமான, புனித கன்னிகை அன்னை கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, பி.ஏ., படித்து வந்தார்.

விடுமுறையில் விடுதியில் தங்கியிருந்த ஏஞ்சல் ஏன் தற்ஜகொலை செய்து கொள்ள வேண்டும்: தேவாலய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார்[6]. தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் ஏஞ்சல் நிர்மலா சக தோழிகளுடன் விடுதியிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல காலையில் சாப்பிட்டு விட்டு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று தனது அறைக்குள் சென்று விஷம் / பூச்சி மருந்து[7] குடித்து மயங்கி கிடந்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற தோழிகள் நிர்மலா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[8].

மயங்கிக் கிடந்தவர் சாவு: நேற்று முன்தினம் காலை (சனிக்கிழமை), கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், ஏஞ்சலின் மயங்கி கிடந்தார். கன்னியாஸ்திரிகள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஏஞ்சலின் உடல்நிலை மோசமாகவே, அங்கிருந்து போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்; சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, ஆர்.எஸ்., புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் கன்னியாஸ்திரியாக பணியாற்றிய கிறிஸ்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மர்மம் இருப்பதால் உடலை வாங்க மறுப்பு: கன்னியாஸ்திரி சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் வைக்கப்பட்டிருந்த, ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். இறுதியில், ஏஞ்சலின் சடலத்தை கிறிஸ்துவசபை நிர்வாகிகள் பெற்று சென்றனர். இதுகுறித்து ஏஞ்சலின் சகோதரர் சார்லஸ் கூறியதாவது:“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டுக்கு வந்த ஏஞ்சலின், தங்கியிருக்கும் இல்லத்தில், பிற கன்னியாஸ்திரிகள், தன்னுடன் சரியாக பழகுவதில்லை, “டார்ச்சர்செய்கின்றனர் என்று கூறனார். இதில் சர்ச் அதிகாரிகள் மற்றும் சில கன்னியாஸ்திரிகளுக்குத் தொடர்பு உள்ளது”, என்றார்[9]. அவருக்கு நாங்கள் அறிவுரை கூறி அனுப்பினோம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் என் சகோதரி தங்கியிருந்த இல்லத்திலிருந்து போன் செய்த கன்னியாஸ்திரிகள், “உங்களது சகோதரி உடல்நல குறைபாடு காரணமாக, போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், உடனடியாக வாருங்கள்’ என்று கூறினர்.உறவினர்களுடன் போத்தனூர் மருத்துவமனைக்கு சென்றோம். என் சகோதரி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கிறிஸ்துவசபை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிர்வாகிகளின் செயல்பாடு சந்தேகிக்கும் வகையில் உள்ளது.அறிவுறுத்தல்நேற்று முன்தினம் காலை ஏஞ்சலின் மயங்கி கிடந்துள்ளார்; முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சகோதரியை பரிசோதித்த டாக்டர்கள், ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போத்தனூரிலுள்ள சர்ச்க்கு தொடர்புடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம்; போலீசில் புகார் செய்துஉள்ளோம். இவ்வாறு, சார்லஸ் கூறினார்.

தாயாரின் குற்றச்சாட்டு: எஞ்சலின் தாயார் அலிஸ் ரேடா மேரி, “ஒரு குறிப்பிட்ட கன்னியாற்திரியினால் என் மகள் கொடுமைப்படுத்தப் பட்டு வந்துள்ளாள். அவள் சர்ச் அதிகாரிகளிடம் இதைப் பற்றி புகார் கொடுத்திருந்தபோது, அவர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை[10]. அதனால், அந்த கொடுமையைத் தாங்காமல் இந்த முடிவுக்கு வந்துள்ளாள்”, என்று குற்றம் சாட்டுகிறார்[11]. இருவரும் குரடும்பக் காரணங்களுக்காகத் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சர்ச் நிர்வாகத்தார் சொன்னதை கடுமையாக எதிர்த்துள்ளனர்[12]. இது பற்றி அங்கிருந்த 7 கன்னியாஸ்திரிக்களிடம் கேட்டபோது அவர்கள் ஊடகத்தாருடன் பேச மறுத்தனர்[13].


[4] A nun was found dead in the underground water tank of a convent at Poonkulam near Kovalam in Thiruvananthapuram on Wednesday. Sister Mary Ancy, 48, who hailed from Kottayam, was a teacher at the Holy Cross Lower Primary School and was an inmate of the convent near the school.The nun went missing from her room where she had gone to sleep on Tuesday night after prayers and her body was found in the water tank in the morning by her inmates.The slab of the covered water tank was found displaced and this fuelled speculation of a murder, reminiscent of the Sister Abhaya episode. In 1992 Sister Abhaya was found dead in her convent at Kottayam. Police have registered a case of unnatural death.

http://indiatoday.intoday.in/story/thiruvananthapuram-nun-found-dead-in-convent-tank/1/148486.html

[7] While having breakfast on Saturday, she informed other nuns that she had consumed pesticide and fell unconscious.

http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[9] A Charles Irudhayaraj, 25, brother of the deceased. He alleged that church authorities and a few nuns were behind Angeline’s suicide.

[10] In recent days, he claimed that Angin had frequently complained about harassment from another inmate there. Members had taken up the issue with senior church officials, but to no avail.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

[11] Alish Reta Mary, mother of the deceased, said her daughter took the extreme step after she was tortured mentally. “My sister was studying BA (English literature) final year at Nirmala College for Women at Race Course. She was tortured by a nun. When she lodged a complaint about this with the authorities, they failed to take necessary action. She could not bear the torture and took the extreme step,” said. http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[12] They also took exception to statement by the church officials that Angin committed suicide due to her family situation.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

பாதிரி கொலை: இன்னொமொரு கத்தோலிக்க சாமியார் மர்மமான முறையில் கொலை!

பிப்ரவரி 17, 2011

பாதிரி கொலை: இன்னொமொரு கத்தோலிக்க சாமியார் மர்மமான முறையில் கொலை!

“குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராகசெயல்பட்டுவந்த பாதிரி: நெல்லையில் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்[1]. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானசவுந்தர் மகன் அமலன் (54). கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாரான இவர், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் “குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராக’ ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்.பாளையங்கோட்டை, சாந்திநகர், குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள  ஜூப்ளி அருட்பணி இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். அங்கேயே இருக்கும் தேம்பாவணி தோட்டத்தில், மாடியறையில் தங்கியிருந்தார்.

Fr. Amalan G.J

Fr. Amalan G.J

காதலர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மர்மம் என்ன?: இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள் மட்டுமல்ல, திஒனங்கள் / விழக்களும் வினோதமாகவே நடக்கின்றன அதாவது, ஒருவருக்குக் கொண்டாட்டம் என்றால், அடுத்தவருக்கு திண்டாட்டம் தான்! கோயம்புத்தூரைப் பொறுத்தவரைக்கும் பிப்ரவரி 14, தொடர்குண்டு, கொலை, சசவு, கலவரம் முதலியவைக் கொண்ட கொடுடூர-குரூரமான தினம். ஆனால், இம்முறை, ஒரு பாதிரியின் மர்மமான கொலை செய்திகளில் வர ஆரம்பித்தி இருக்கிறது.

சாந்திநகர் சர்ச் வளர்ந்த விதம்: 25 வருடங்களில், இந்த சாந்திநகர் வளாகம், மிகவும் பெரியதாக வளர்ந்து, அனைத்துலக ரீதியில் பல வேலைகளை செய்து வருகின்றது.  இதில் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன[2]. Franciscan Third Order, Youth Youth Women Association, Legion of Mary, Vincent De Paul, Good News Groups போன்றவை குறிப்பாக மாற்றம் மாற்றம் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன. இவையெல்லாம் அந்நிய பணவுதவி பெற்றுவருகின்றன. 1985ல் இங்கு, சிறிய சர்ச் கட்டப்பட்டது. அப்பொழுது அங்கு கத்தோலிக்கர் சிலரே இருந்தனர். 15-05-1990 அன்று, இது தனி “பாரிஷ்” ஆக அறிவிக்கப்படது[3]. மற்ற கத்தோலிக்க சாமியயர்கள் கூட, சாந்திநகருக்கு மாற்றம் செய்தால், நல்லது என்ற அளவில், அமோகமாகவே வளர்ந்து விட்டது. மேலும் விவரங்களுக்கு, கேழே தொடர்பு கொள்ளலாம்: Contact : Shanthinagar, Maharajanagar, Tirunelveli – 627 011; Telephone: 0462-2540312

14ம் தேதி மாலை-இரவு நடந்தது என்ன? மேலே விவரித்துள்ளபடி, இந்த வளாகத்தில், சாதாரணமாக, அப்படி யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. ஞாயிற்றுக் கிழமை 13-02-1011 அன்று வழக்கம் போல, திருப்பலி சடங்களில் கலந்து கொண்டிருப்பார்.கடந்த 14ம் தேதி-திங்கட்கிழமை இவரை கடைசியாக பார்த்துள்ளனர். கடந்த 14ம் தேதி அமலன் தனது பெற்றோருடன் செல்போனில் பேசினார். அதன்பின் அவர் யாருடனும் பேசவில்லை. 15ம் தேதி – செவ்வாய் கிழமை இவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமான விஷயம் தான்! 16ம் தேதி- புதன்கிழமை பிற்பகலில் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற பெண், அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் தெரிவித்தார். உள்ளே சென்று பார்த்த போது, அவர் படுத்திருந்த கட்டிலில் இரண்டு கால்களும் கட்டப்பட்டிருந்தன. கைகள் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. தலையணையை கொண்டு முகத்தை அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. சம்பவத்தின் போது அவர் லுங்கி அணிந்திருக்கிறார். திருச்சி பாதிரி கொலையும், இக்கொலையும், பலவிதங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

Counselling-ஆலோசனை கூறும் கிருத்துவ பாதிரிகள்

Counselling-ஆலோசனை கூறும் கிருத்துவ பாதிரிகள்

அமலனுக்கு நெருக்கமானவர்களே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்: ஆலய வளாகத்திற்குள் வேறு நபர்கள் யாரும் வரவாய்ப்பில்லை என தெரிவித்த போலீசார், அவரது உடலை பரிசோதனைக்கு, நெல்லை ஐகிரவுண்ட் – மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிரியார் அமலனுக்கு நெருக்கமானவர்களே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று (17ம் தேதி) பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது[4].

மற்றவர்களுக்கு அறிவுரை கூறிவந்தவர், தமக்கு நல்லமுடிவைத் தேடிக்கொள்ள முடியவில்லை! கிருத்துவர்கள் முன்பு, பாவ-மன்னிப்பு [கன்ஃபெஷன் – confession] என்ற முறையில், அடாத வேலைகளையெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது கவும்சிலிங் என்ற போர்வையில், இறங்கியுள்ளனர். அவ்வாறு வரும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள், தெரியவரும் போது, அவற்றை வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றனர். பெண்களாக இருந்தால், அவ்விஷயங்களை வைத்துக் கொண்டு, தமது காமப்பசிக்கு சமயம் வரும் போது தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், குடும்ப பிரச்னைகள், கணவன், மனைவி பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் போதகராக செயல்பட்ட இவருக்கு அதன் மூலம் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உடன் பணியாற்றும் பாதிரியார் அருள் புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாளையங்கொட்டை டையோசிஸில் இருக்கும் ஜி.ஜே. அமலன்[5] இவராக இருக்கலாம் போலிருக்கிறது. ஏனெனில், குறிப்பிட்டுள்ள விவரங்கள், அவருக்குப் பொருந்துகிறது. மேலும், புகார் கொடுத்தவர், அருள்[6] என்று இருப்பதாலும், அவரும், இவரைப் போன்ர பணிகளில் ஈடுபட்டுள்ளார் மற்றும் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்து வருவதாலும், இவரே அந்த அமலனா என்று ஆராயவேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

17-02-2011


[1] , நெல்லையில் பாதிரியார் கொலை, பிப்ரவரி 16,2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189443

[3] Taking into consideration of the spiritual needs of the faithful, the most Rev. Dr. S. Iruthayaraj, first Bishop of Palayamkottai, made Shanthinagar a separate parish on 15th May 1990.

[4] , கை,கால்களை கட்டி பாதிரியார் கொடூர கொலை , பிப்ரவரி 16,2011, ,http://www.dinamalar.com/district_detail.asp?id=189555

[5] Rev. Fr. Amalan, G. J, Secretary, Dialogue Commission, Jubilee Pastoral Centre, THEMBAVANI THOTTAM, Shanthi Nagar, TIRUNELVELI – 627011 Name: Rev. Fr. Amalan G J ; Date of Birth: 19.04.1957; Date of Ordination: 17.04.1983;

Ecumenism: Organizes services of worhip among different churches and communities. Strives to promote unity among Christian in facing some social changes. Conducts ecumenical prayer services, fasting etc. Gives special stress to the observance of the Unity Octave as per the norms of Church.

Education :This commission consists of 65 primary schools, 23 middle schools, 10 High Schools and 4 higher secondary schools, all aided by Tamilnadu Government and abides by the rules and regulations of the Tamilnadu Government, enjoying the minority rite privilege in appointing the teachers independently of the Government. It focuses on the education of poor students (mostly village poor students) not only on the academic education but also on catechism to the Christians, moral and value education to the non-Christians. Periodical training programmes and refresher courses are given to the teachers in order to update themselves to the signs of the times. It helps catholic trained teachers get job opportunities if and when vacancies arise in the schools, following seniority lists of the unemployed trained hands.

Healthcare: It focuses on the health care of the people, not only of the sound body but also the mind and the soul. Through 22 primary health care centres, supervised by T.S.S.S., it caters the health needs of the poor villagers. It also helps mentally and emotionally affected people by counseling and psychotherapy, having a centre called “Nesan Counselling Centre”. It also conducts periodical awareness programmes and free medical camps to help people to take preventive steps as to be free from sickness and to keep the home and the surroundings clean and neat.

[6] Rev. Fr.M. Arul, Secretary, Health care Commission, Jubilee Pastoral Centre, THEMBAVANI THOTTAM, Shanthi Nagar, TIRUNELVELI – 627011

Justice, Peace and Development : This commission known as Tirunelveli Social Service Society (T.S.S.S), a registered independent society in the Diocese, focuses on Justice, peace and development of the so called suppressed, oppressed and downtrodden of the society, irrespective of Caste and Creed. It also focuses on the development of women, through self-help groups, providing loans through banks. This commission also has homes to shelter the street children, abandoned babies and unwed mothers in the name of Saranalayam and Vidiyal . It goes hand in hand with Government schemes and developmental projects of the two districts of Tirunelveli and Thoothukudi.

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

மே 19, 2010

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067