Posts Tagged ‘மனைவி’

வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்ற மோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்!

நவம்பர் 10, 2017

வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்ற மோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்!

Vaiko refutes Lazarus claim - The Hindu Tamil- 09-11-2017

வைகோ கிறிஸ்தவராக மதம் மாறினாரா?[1]: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் 1944-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பிறந்தார் வை. கோபால்சாமி. இப்போது வைகோ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டக்கல்வியை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலையும், சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டக்கல்வியையும் படித்தார். திமுகவில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்து குடும்பத்தில் நாயக்கர் வகுப்பில் பிறந்த வைகோவின் தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக தமிழுக்காக பாடுபடுகிறார். சிறந்த படிப்பாளி. அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் வைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தற்போது கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, என்று ஈநாடு சிறப்பித்து தள்ளியது[2]. வைகோ அவர்கள் ஒரு பகுத்தறிவாதி, எந்த மதத்திற்கு ஆதரவாக இல்லாதவர் என்றுதான் இத்தனை வருடங்களாக பொதுமக்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று முடித்தது[3]. இதற்கு வைகோ என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்[4].

Vaiko converted to Christianity-09-11-2017-Asianet Newsable

மோகன் சி. லாசரஸ் – சர்ச்சைகளுக்குட்பட்ட மதபிரசிங்கி, மதபரப்பி[5]: கிறிஸ்தவ துாத்துக்குடி நாலுமாவடி மத போதகர் மோகன் சி. லாசரஸ், ஒரு சர்ச்சைக்குட்பட்ட கிருத்துவ மதப்பரப்பி. நக்கீரன் முன்பு, இவரைப் பற்றி தாறுமாறாக விவரங்களை வெளியிட்டது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. இப்பொழுது, அந்த பதிவும் காணப்படவில்லை[6]. ‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா சேனலை நடத்தி வருகிறார்கள். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள்[7]. பிறகு பாலியல் புகார்கள் வந்ததால், இவர்களது தொல்லை தாங்காமல் விலகியவர்கள், வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார்[8].

Vaiko refutes Lazarus claim - Daily Thanthi- 09-11-2017

மோகன் சி. லாசரஸ் வைகோ மற்றும் குடும்பம் முழுவதும் கிருத்துவர் ஆகி விட்டனர் என்றது: இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஜெபக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அவருடைய குடும்பமும் இயேசுவை விசுவாசிப்பதாக கூறினார்[9]. அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் அதனை பெரியப் பிரச்சினைப் போல எடுத்துக் கொண்டு விவாதிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வீடியோவில் மதபோதகர் மோகன் சி.லாசரஸ் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர் வைகோவின் மனைவி, அவருடைய பிள்ளை ரட்சிக்கப்பட்டு ஆலயத்தில் ஞானஸ்தானம் எடுத்து விட்டார்கள். ஆலயத்துக்கும் தவறாமல் செல்கிறார்கள். வைகோ ஒரு கட்சி தலைவராக இருப்பதால் திறந்த மனதோடு இன்னும் அவர் அறிவிக்கவில்லை. இயேசுவை விசுவாசித்து ஒரு நாளைக்கு 2 முறை பைபிள் வாசிக்கிறார். காலையிலும், இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்று என்னிடம் சொன்னார். எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று என்னிடம் கேட்டார். அதுகுறித்து அவரிடம் நான் விளக்கினேன். அதன்படி செய்கிறேன் என்று சொன்னார். இயேசுவை நேசித்து அவர் சொல்வதை கேட்கிற ஒரு கட்சி தலைவர் நமக்கு இருக்கிறார். வைகோவின் மகளும், மருமகனும் அமெரிக்காவில் ஊழியம் செய்கிறார்கள்”, இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்[10]. மதபோதகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vaiko refutes Lazarus claim - Webdunia- 09-11-2017

வைகோ நான் கிருத்துவன் அல்ல என்றது: பிரிச்சைனை சமூக வளைதளங்கள் பரவி விட்டதாலும், மேலும், லாசரஸ் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்ப்டையாக சொன்னதாலும், வைகோ விளக்கம் கொடுக்க வேண்டிட கட்டாயமாகி விட்டது. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது[11]: “அந்த கிறிஸ்தவ மத போதகர் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் என்னைப் பற்றி கூறியதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னுடைய குடும்பத்தில் என்னுடைய மகள்மருமகன் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார்கள்[12]. மூத்த சகோதரி கிறிஸ்தவ மத நம்பிக்கை உடையவர். என்னை பொறுத்தவரையில் நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை, நான் கிறிஸ்தவனும் அல்ல[13]. ஆனால் மனித வாழ்வை நெறிப்படுத்தும் அனைத்து மதங்களின் அற நூல்களையும் படித்து இருக்கிறேன். அதனை மேற்கோள் காட்டியிருக்கிறேன். தேவாரம், சைவ சமயத்தையும், வைணவ ஆழ்வார்கள் தமிழுக்கு செய்துள்ள தொண்டினையும், கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டினையும் என் உரையில் குறிப்பிட்டுள்ளேன். இது மட்டுமல்ல நான் தினமும் திருக்குறள் படிக்கிறேன். என்னுடைய உரையிலேயே அதிகமாக மக்களை கவர்ந்தது இளையராஜா சிம்பொனி விழாவில் நான் ஆற்றிய திருவாசகம் உரை தான். அதேபோல் சேக்கிழார் பாடல்களையும், திருப்பாவை பாசுரத்தையும் பல இடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறேன். இஸ்லாமியர்களின் திருக்குரானையும் மேற்கோள் காட்டுவேன்.

 Vaiko converted, Lazaraus claimed, Tamil paper- 08-11-2017

என்னைத்தவிர குடும்பத்தார் அனைவரும் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டது: வைகோ தொடர்ந்து சொன்னது, என்னுடைய பாட்டனார் எங்கள் ஊர் ஊராட்சி எல்லைக்குள் 97 ஆண்டுக்கு முன்பு கட்டிய சுந்தரராஜ பெருமாள், ஈஸ்வரன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களையும் நானும், என் தம்பியும் தான் பராமரித்து வருகிறோம். எங்கள் கலிங்கப்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு பெருமளவு தொகையை எங்கள் குடும்பம் அளித்து கோபுரம் அமைத்து கொடுத்து இருக்கிறோம். கடந்த நவம்பர் 2-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த எனது உதவியாளர் ராமைய்யாவின் திருமண விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். சட்டை அணியாமல் முருகன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினேன். கலிங்கப்பட்டியில் உள்ள எனது வீட்டு பூஜையறையில் முருகன், அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் இருக்கும். எனது தாயார் இருந்தவரை அதற்கு பூஜை செய்து எனக்கு நெற்றியில் திருநீர் இடுவார். சென்னையில் உள்ள வீட்டில் பூஜையறையில் எனது மருமகள் அனைத்து இந்து கடவுள்களின் படங்களையும் வைத்து பூஜை செய்கிறார். என்னுடைய மனைவி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று வருவார். நான் எந்த மதத்தினரையும் அவர்களின் வழிபாட்டையும் விமர்சித்தோ, புண்படுத்தியோ என்றைக்கும் பேசியது கிடையாது. நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை. திருக்குறளை படிப்பது போல, பைபிள், திருக்குரானையும் படிக்கிறேன்,” இவ்வாறு அவர் கூறினார்[14].

Vaiko converted, Lazaraus claimed, The Hindu 08-11-2017

தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சிய வைகோ: வைகோ லாசரஸிடம், இது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லி, வீடியோ குறித்து தான் கேட்டதாகவும் அதற்கு லாசரஸ், தான் ஒரு சிறிய கூட்டத்தில் பேசிய பேச்சு அது என பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்[15]. “அதீத ஆர்வத்தினால் ஏற்பட்ட விளைவு அது,” என்ற வைகோ, நம்மிடம் “நானும் எனது சகோதரரும் எங்கள் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின் பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறோம்” என்றார். மேலும், தன் மகள் ஒரு கிறித்துவரை மணந்துள்ளதாகவும், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி லசாரஸ் கூறியதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்[16]. இருப்பினும், ஒருபெரியார் தொண்டர் என்ற வைகோ (73), ஒரு கிருத்துவ மதபரப்பி, அவர் கிருத்துவர் என்று பிரகடனப் படுத்தும் அளவிற்கு முட்டாளாகவா இருக்கிறார், என்பது திகைப்பாக இருக்கிறது. ஏ.வி.எம். ராஜன் முதல் ஆட்டோ சங்கர் வரை பிரபலம் மற்றும் மோசமான குற்றவாளிகள் கிருத்துவர்கள் ஆகியுள்ளதால், அவர்களுக்கோ அல்லது கிருத்துவர்களுக்கோ என்ன பயன் என்று இந்துக்களும் யோசிக்கத்தான் செய்வார்கள். எச்சரிக்கை: மோஹன் லாசரஸ், இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ். கிருத்துவத்தைப் பற்றி மோசமாக பொய்களை சொல்லமாட்டார்கள் என்று சொல்லியிருப்பதை, இந்துத்துவவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்து, ரகசியமாக வேலை செய்யும் கிருத்துவர்கள், சாத்தானின் செய்தியைப் பரப்பும் மற்றும் இந்திய சமுதாயத்தை சீரழிக்கும் மதப்பரப்பிகளை விட அபாயகரமானவர்கள். ஆகவே, வைகோ மதம் மாறினாரா இல்லையா, அவரும், அவரது சகோதரரும் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின் பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறார்களா இல்லையா என்பதை விட, விளைவைப் பற்றிதான் ஆலோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

10-11-2017

Vaiko converted, Lazaraus claimed, News Today 08-11-2017

[1] ஈநாடு.இந்தியா, வைகோ கிறிஸ்தவராக மதம் மாறினாரா?, Published 08-Nov-2017 15:47 IST | Updated 15:51 IST.

[2] http://tamil.eenaduindia.com/State/Chennai/2017/11/08154752/Vaiko-denies-embracing-Christianity.vpf

[3] வெப்துனியா, வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா, நவம்பர். 6, 2017. 15.28 IST.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mdmk-leader-vaiko-and-his-family-converted-to-christianity-117110600040_1.html

[5] வினவு, வின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா!, ஜூலை 3, 2012.

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78347

[7] http://www.vinavu.com/2012/07/03/angel-tv-vincent-selvakumar/

[8] நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம். http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/; http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78347

[9] தினமலர், மதமா……..நானா!: வைகோ மறுப்பு, பதிவு செய்த நாள்: நவம்பர்.10, 2017.01.08.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1893423

[11] தினத்தந்தி, நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லைவைகோ பேட்டி, நவம்பர் 09, 2017, 03:45 AM.

[12] ஒன்.இந்தியா.தமிழ், நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனா? வைகோ விளக்கம், Posted By: Veera Kumar, Published: Wednesday, November 8, 2017, 17:44 [IST].

[13] https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-denied-the-viral-video-which-claim-that-he-had-converted-to-christianity-301158.html</p>

[14] http://www.dailythanthi.com/News/State/2017/11/09004209/I-have-not-joined-Christianity-Vaiko.vpf

[15] தி.இந்து, நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு, பி.கோலப்பன், நவம்பர்.8, 2017. 20.40; நவம்பர். 9, 2017. 11.56

[16] http://tamil.thehindu.com/tamilnadu/article20005001.ece

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!

ஒக்ரோபர் 18, 2015

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்

கன்னியாகுமரியில் சமீபகாலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள், வயது வந்த சிறுமிகள்-சிறுவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். “பிடோபைல்” – சிறார் கற்பழிப்பு, பாலியன் வன்புணர்ச்சி என்று விசயங்கள் வந்தாலும், அவற்றில் கிருத்துவர்களின் பங்கு இருப்பதனால் விசயங்கள் மறைக்கப்படுகின்றன. கேரளாவுக்கு அறுகில் இருப்பதனால், அங்கு குற்றம் செய்தவர்கள் இங்கு வந்து தங்குவதும், இங்குள்ளவர்கள் அங்கு சென்று மறைவாக வாழ்வதும் நடந்து வருகின்றது. போலீஸ் விசாரணைகளில் அத்தகைய நிலை வெளிவருகிறது. ஆனால், இவற்றினால் பாதிக்கப்படுவது பெண்கள் தாம். பெண்களின் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்று சில நிறிவனங்கள் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினாலும்[1], பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேசினாலும்[2], இத்தகைய குற்றங்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை. விபச்சாரம் நடப்பதும், கைது நடவடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன[3].

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி

கன்னியாகுமரி விபச்சாரத்தில் உள்ளூர்வாசிகளின் பங்கு: சுற்றுலா ஸ்தலம் என்றதால் விபச்சாரம் நடக்கிறது என்றாலும், உள்ளூர்வாசிகளின் பங்கும் வெளிப்படத்தான் செய்கிறது[4]. முறைகள் மாறினாலும்[5], விசயம் மாறாமல் தான் இருந்து வந்துள்ளன[6]. இங்கு சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்று பிரித்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், இங்கு கிருத்துவர்கள் தாம் அதிகமாக உள்ளனர். இதில் படித்தர்கள்-படிக்காதவர்கள்[7] என்ற வேறுபாடும் இல்லாமல் கலாச்சாரச் சீரழிவு நடந்து வருகின்றது[8]. இங்கு கிருத்துவர்களையோ, கிருத்துவமதத்தையோ குறைகூறுவதாக எண்ன வேண்டாம், ஆனால், அவர்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாலும், அவர்கள் மதரீதியில் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்வதினாலும், அவர்களில் பலர் ஏன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் கேள்வி. இந்நிலையில் தான் லீபுரம் போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் காமலீலை வருகிறது.

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - ஒரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - இன்னொரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - பெண்கள் வெளியே வருதல்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்.

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்

ஒழுக்கம் இல்லாத மதபோதகரும், அவரது கூடா ஒழுக்கமும், கணவன்வி உறவு பாதிப்பும்: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்[9]. கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். தற்காலிகமாக எனும்போதே, சர்ச் இப்பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தேரிகிறது. சிறிது காலத்தில், இவ்விசயம் மறக்கப்பட்டுவிடும், மறுபடியும் அதே ஆள் தனது வேலைக்கு வந்துவிடுவார் அல்லது வேறொரு இடத்தில் அதை செய்ய ஆரம்பிப்பார். போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், என்ற இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்[10]. இதுவே வேடிக்கையாக இருக்கிறது. மனைவிக்கும் மதபோதகருக்கும் தொடர்பு என்றால், அம்மதபோதகரின் ஒழுக்கம் சரியில்லை, அம்மதத்திலும் ஒழுக்கம் (இந்த கள்ள உறவைப் பொறுத்தவரையில்) இல்லை என்றாகிறது. கிருத்துவமதத்தில், அடுத்தவன் மனைவியை பார், அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொள் என்று போதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் தான் சந்தேகங்கள் எழுகின்றன. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர்[11]. அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது[12].

கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - மூன்றாவது பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – மூன்றாவது பெண்

போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் தனியாக மூன்று பெண்களுடன் என்ன செய்து கொண்டிருந்தார்?: கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். தொடர்ந்து குற்றம் செய்தாலும், ஜாமீனில் விடப்பாட்டார் என்றால், அதற்காக முறைப்படி, வக்கில் வந்துள்ளார், ஆவன செய்துள்ளாற் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஆரோன் எல்லாவற்றிற்கும் தயாகத்தான் இருக்கிறான் என்று தெரிகிறது. வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும் போது, மேலும் விசயங்கள் வெளிப்படுகின்றன. ஆரோன் போலிஸாருக்கு பயந்ததாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து மூன்று பெண்கள் வெளிவருகின்றனர். அவர்களில் ஒரு பெண் தான், கண்ணீர் விட்டு அழுகிறார். மற்ற இருவர்களும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். போலீஸாரின் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்கின்றனர். ஒருவருடன் மூன்று பெண்கள் ஏன் ஒரே அறையில் இருக்க வேண்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழலாம். ஆனால், கையும்-களவுவுனமாக மாட்டிக் கொண்டதால், உண்மை வெளிவந்தே ஆகவேண்டும்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்

பெண்களில் ஒருவரின் கணவர் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனு[13]: அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் சலவைத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியில் பணியாற்றினார். அவர் எனது மனைவியிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார் கொடுத்தேன். அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்தனர். அப்போது இருவருக்கும் கள்ளத்தனமான தொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில் அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில் விட்டுவிட்டனர்[14]. எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. கர்த்தர் இவர்களுக்கு சாந்தத்தையும், அமைதியையும் கொடுப்பாராக!

© வேதபிரகாஷ்

18-10-2015


 

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/prevent-violence-against-women-in-kanyakumari/article7468514.ece

[2]  Malar, a women’s movement for creating awareness of educating women and their rights, has urged the government to prevent violence against women in Kanyakumari district. At its 20-th district conference held here on Sunday, the movement passed a resolution to this effect. Other resolutions passed at the conference demanded permanent closure of Tasmac liquor outlets, replacement of old and damaged State Transport Corporation buses, permission for linguistic minorities to pursue education in their mother tongue and protection of rights of linguistic minorities as per the 1965 gazette notification. Effective steps to protect natural resources and desilting of all the ponds and waterbodies in the district were also demanded through resolutions. The conference was presided over by its district secretary Shelin Mary, and inaugurated by Indian Overseas Bank’s Senior Regional Manager C. Murugan. SBIOA general secretary T. Thomas Franco gave a special address. Tamil Nadu Science Forum’s State Executive Committee member Dinakaran spoke on ‘Life is a science’. NABARD District Development Manager Martin Prakasam, Lead District Manager Viswanathan among others participated.

The Hindu, Prevent violence against women in Kanyakumari, Nagarkoil, July.27, 2015; Updated: July 27, 2015 05:47 IST.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, விபச்சாரம்குமரி லாட்ஜில் 4 பேர் கைது, Published: Tuesday, September 29, 2009, 11:16 [IST].

[4] http://tamil.oneindia.com/news/2009/09/29/tn-kanyakumari-police-arrest-4-in-prostitution.html

[5]  குமரி.ஆன்லை.காம், விபச்சாரம்: பெண், அரசு பஸ் ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது, ஞாயிறு 21, ஜூலை 2013 9:33:19 AM (IST)

[6] http://kumarionline.com/view/31_52126/20130721093319.html

[7] மாலைமலர், நாகர்கோவில் அருகே முந்திரி தோட்டத்தில் நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 24, 4:29 PM IST.

[8]  பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.

 http://www.maalaimalar.com/2012/03/24162946/nagercoil-young-college-couple.html

[9] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: மதபோதகர் உள்பட 2 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 2:48 AM IST.

[10] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/16024806/In-Lodge-in-Kanyakumari-Recreation-2-arrested-including.vpf

[11] http://www.tamilcnnlk.com/archives/434024.html

[12] தமிழ்.சி.என்.என், லொட்ஜில் கள்ளக் காதலியுடன் மதபோதகரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸ், October 17th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.

[13] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST.

[14] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/17024356/In-Lodge-in-Kanyakumari-Recreation-Teacher-released.vpf

[15] http://angusam.com/2015/10/17/kanyakumari-recreation-christian-pastor-arrested/