Posts Tagged ‘பெந்தேகோஸ்தே பாலியல்’

30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன?

நவம்பர் 18, 2019

30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன?

Madhakottai, Tanjore location

தஞ்சைப் பகுதிகளில் அதிகமாகி வரும் சர்ச்சுகள், மதமாற்றங்கள் முதலியன: தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ஶ்ரீராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்டுவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், “இம்மானுவேல் பெந்தகோஸ்தே” என்று புதியதாக ஆரம்பித்துள்ளதாக இருக்கிறது. அதை ஸ்டான்லி பென்னி ராபர்ட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் பிரிவிலிருந்து, இன்னொரு கிருத்துவப் பிரிவுக்கு மாற்றும் வேலை நடந்து வருகிறது. அயல்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க, இத்தகைய, முறை கையாளப் படுகிறது என்பதும் புலனாகிறது. இதனால், அந்நிய செலாவனி சட்டத்திலும் மாட்டாமல் இருக்கலாம் என்று இம்முறையினை கையாளுகின்றனர் என்று தெரிகிறது. ஒன்று-இரண்டு என்று இப்படி செய்து விட்டு, மற்றபடி, பழைய வழியைத் தான் பின்பற்றுகிறார்கள்.

Tanjoe pastor rape 16-11-2019-4

பாஸ்டர் ஸ்டீபன் பென்னி ராபர்ட்அபிராமி காதல்: தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் -காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (வயது 21). பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார்[1]. மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபட் மகன், ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர்[2]. அப்படியென்றால், சர்ச் ஆரம்பிக்கிறது என்பது, ஏதோ கடை வைப்பது போல ஆகிவிட்டது போலும். கடந்த 2017 ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது[3]. அபிராமிடம், ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்[4]. கல்யாணம் ஆகாமலேயே, புருஷந்பெண்டாட்டி போல இருந்திருக்கின்றனர்.

Tanjoe pastor rape 16-11-2019-5

பாஸ்டர் ஸ்டீபன் பென்னி கல்யாண ஏற்பாடுஅபிராமி காதல் ஏமாற்றம்: இந்நிலையில், ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி, அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன், தான் பெந்தகேஸ்டை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அப்படியென்றால், அபிராமி வேறு பிரிவு கிருத்துவர் போலும். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 2019ல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்றான்[5]. அதாவது, ஏதோ பொய் சொல்லி சென்றிருக்கிறான்.  அந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி, பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்[6].

Tanjoe pastor rape 16-11-2019-2

மகளிர் போலீஸ் விசாரணை, உண்மை அறிதல்: தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு 12-11-2019 இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளனர். அதாவது, விவரம் அறிந்து அவன் சென்று விட்டான் என்றாகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tanjoe pastor rape 16-11-2019-3

பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்பது, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது: அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார்? அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர். இதனை அடுத்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதனால் இன்று நடைபெற இருந்த மதபோதகர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது[7].

Tanjoe pastor rape 16-11-2019

30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: தமிழ்நாடு நியூஸ்24, “30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது[8]. பாதிக்கப் பட்ட பெண்ணிடம் மட்டுமல்லாது, சர்ச்சிற்கு வரும் மற்ற பெண்களிடமும், இதே மாதிரியான ஆசை வார்த்தைகள் கூறியுள்ளான் என்று தெரிகிறது. பாதிரிக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது[9]. அவனது செல்போன் கால்களை ஆராய்ந்தால், அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள். இப்படி ஏதோ  “என்று தெரிகிறது,” “அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்,” போன்ற செய்திவெளியீடு, ஏதோ உசுப்பி விடும் போக்கில் உள்ளது. உண்மையில் விசாரித்து செய்தி வெளீட வேண்டும். கேரளாவில் 5 பாதிரிகள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீலாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்[10]. இத்தகைய விவகாரங்களை, தொடர்ந்து, கிருத்துவ மேலிடங்கள் அமுக்கியே வருகின்றன.

© வேதபிரகாஷ்

18-11-2019

Tanjoe pastor rape 16-11-2019-6

[1] மாலைமலர், காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த மதபோதகரின் திருமணம் தடுத்து நிறுத்தம், பதிவு: நவம்பர் 13, 2019 10:29 IST; மாற்றம்: நவம்பர் 13, 2019 10:42 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2019/11/13102934/1271066/Stop-of-missionary-marriage-near-thanjavur.vpf

[3] updatenews360, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு காதலன் வேறு பெண்ணுடன் திருமணம்:காவல் கண்காணிப்பாளரிடம் இளம்பெண் புகார்….!, 12 November 2019, 10:11 pm

[4] https://www.updatenews360.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

[5]  தினசரி, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு காதலன் வேறு பெண்ணுடன் திருமணம்: இளம்பெண் புகார்….!, 12 November 2019.

[6] https://dhinasari.com/latest-news/117065-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF.html

[7] தமிழ்நாடு நியூஸ்24, 30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம், நவம்பர் 13, 2019.

[8] https://www.tnnews24.com/thanjai-latest-news/.

[9] தமிழ்நாடு நியூஸ்24, 30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம், நவம்பர் 13, 2019.

[10] https://www.tnnews24.com/thanjai-latest-news

கனகராஜ் – தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்!

திசெம்பர் 24, 2017

கனகராஜ்தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்!

Murdered pastor, Kanakaraj, 73

06-10-2016 – கனகராஜ் பாதிரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது: துாத்துக்குடியில், பாதிரியார் கொலை வழக்கில், போதகர் உட்பட, மூவரை போலீசார் 12-2017 அன்று கைது செய்தனர்[1]. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் கனகராஜ், 73. சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (74), தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகொஸ்தே சபை போதகராக / பாதிரியாராக 1960ல் இருந்து, வேலை செய்து வந்தார், சபை ஊழியர்கள் தங்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கூரை அமைத்து தங்கியிருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. 2016 அக்., 6ல், படுக்கையில் இறந்து கிடந்தார்[2]. அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறி, உடலை அடக்கம் செய்ய சர்ச்சை சேர்ந்த சிலர் முயற்சித்தனர்.

Murdered pastor, Kanakaraj, 73-DTNext news

ஆனால், சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர் சுதர்சனன், போலீசில் புகார் அளித்தார்.  அவரது முகத்தில் காயங்கள் இருந்தன.  எனவே, உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். மதுரை, தடயவியல் ஆய்வக சோதனையில், பாதிரியார் கனகராஜ் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது. இருப்பினும், குற்றவாளிகளை கைது செய்வதில், சிப்காட் போலீசார் தாமதம் காட்டினர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கனகராஜின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.  03-10-2016 திங்கட்கிழமையன்று கனகராஜ் மரணம் அல்ல கொலை என்று சந்தேகிப்பதால், உறவினர் மற்றும் சர்ச் சார்ந்தவர், உரிய நடவடிக்கை எடுக்குமாற்ய் கலெக்டரிரம் புகார் அளித்தனர்[3]. அதற்குப் பிறகு சி.ஆர்.பிசி 174ம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

Murdered pastor, Kanakaraj, 73-Church people urged to take action

விசுவாசிகள் சந்தேகித்தது, போராடியது: சென்ற வருடமே, கனகராஜ் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று செய்திகள் வெளிவந்தன[5]. நாக்கு, உதடுகள் மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் காணப்பட்டதால், சர்ச்சின் நம்பிக்கையாளர்கள் அவ்வாறான கருத்தை வெளியிட்டனர். பஞ்சை வைத்து அடைத்து அவற்றை மறைத்து, காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை மூடி மறைக்கப் பார்க்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர். சர்ச்சிற்கு அருகில் வசிக்கும் சிங்கராஜ் என்ற வக்கீல், செவ்வாய்கிழமை காலையில், கனகராஜ் கத்திய கூக்குரல் தனது காதில் விழுந்தது என்றார். சர்ச்சை சேர்ந்த ஊழியர்கள், அங்குள்ள ஜேக்கப் என்ற பாஸ்டர் மீது சந்தேகப்படுவதாகக் கூறினர். பணப்பட்டுவாடா விசயத்தில் அவருக்குத் திருப்தியில்லை என்று சொன்னார்கள். மேலும் போலீஸாரும் இவ்விசயத்தை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்[6]. எப்படியிருந்தாலும், மற்ற கொலைகளை விட, இவ்விசயத்தில் விசுவாசிகள் அதிகமாகவே பாதிக்கப் பட்டது, அவர்கள் வெளியில் வந்து போராடியது மற்றும் ஊடகங்களில் விவாதித்தது, அவர்களது, ஜனநாயக அணுகுமுறையினைக் காட்டியுள்ளது[7]. வீடியோக்களும் அவர்கள் போராடிய முறையினைக் காட்டுகிறது[8]. ஒருவர் “பிளாக்கில்” முழுவிவரங்களையும், புகைப்படங்களுடன் விவரங்களைக் கொடுத்துள்ளார்[9]. அவற்றை இங்கே படிக்கலாம்[10].

Murdered pastor, Kanakaraj, 73-arrested Titus

விசாரணையில் வெளிவந்த கொடூர விவகாரங்கள்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அக்டோபர் 2016லிருந்து, இவ்வழக்கில் துப்பு துலங்காத நிலையில், எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிஹரன், தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம் சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சபையில் பணியில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார் விளையைச் சேர்ந்த டைட்டஸ் (31) என்ற மற்றொரு போதகரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்களது சந்தேகம் உறுதியானது[11]. இதையடுத்து அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட போதகர் கனகராஜ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கு வழக்குகளில் கறாராக இருந்துள்ளார்.

Murdered pastor, Kanakaraj, 73-Tamil news cutting-enquiry

டைட்டஸ் கூட்டாளிகளோடு கொன்றது எப்படி?: கன்னியாகுமரி மாவட்டம், வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர், கனகராஜ் சபையில் போதகராக இருந்தார். வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற போது, பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்துள்ளார். இப்பொழுதெல்லாம் சர்ச்சுகளில் இது சாதாரணமான விசயமாகி விட்டது. டிவி-நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கிருத்துவ பெண்கள், மற்ற சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய உண்மைகளை சொல்லிவருகிறார்கள். இருப்பினும், சர்ச் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மறைக்கப் பார்ப்பதால், இத்தகைய பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் பிஷப்புகளே செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே, டைடஸ் விசயத்தில் அவரை கனகராஜ் கண்டித்து, வெளியிடங்களுக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார். சுவைக் கண்ட பூனை சும்மா இருக்குமா? ஆத்திரமடைந்த டைட்டஸ், காய்கறி கடை நடத்தும் தன், 29 வயது தம்பி அன்றோ, மற்றும் அன்றோ நண்பரான கோட்டாறைச் சேர்ந்த ரகு 35 வயது முதலியோருடன் சேர்ந்து, பாதிரியாரை, தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர்[12].

Murdered pastor, Kanakaraj, 73-Tamil news cutting

கொலையை மறைக்க செய்த முயற்சிகள்: கொலையை மறைப்பதற்காக அதிகாலையே, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம், ‘இறப்பு மாரடைப்பால் நடந்தது’ என, போலி சான்றிதழ் பெற்றுள்ளனர்[13]. மேலும் கனகராஜுக்கும் வேறு போதகர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததைப்போலவும், கனகராஜ், பெண்ணுடன் இருந்தார் என ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாகர்கோவிலில் இருந்து ஒரு பாலியல் தொழிலாளியையும் ஏற்பாடு செய்துள்ளனர்[14].கனகராஜ் கொலை செய்யப்பட்ட, ஒரு ஆண்டுக்கு பின், தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கொலையை மாரடைப்பாக மாற்றி, போலி சான்றிதழ் வழங்கிய டாக்டரை கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tutocorin pastor murder- Dinamalar, 21-12-2017

இந்திய சர்ச்சுகள் கவனிக்க வேண்டியது என்ன?: சர்ச்சுகளில் தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுவருவது, இந்திய பாரம்பரியத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. கிருத்துவத்தைப் பொறுத்த வரையில், சர்ச்சுகளில் பல நேரங்களில், பல விழாக்கள், கூடுதல்கள் முதலிய நேரங்களில், ஆண்கள்-பெண்கள் நெருங்கி உரையாடுவதற்கு, வேலை / சேவை செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. மேலும், பாஸ்டர்கள், பாதிரியார்கள் மற்றும் மதகுருக்கள் முதலியோரிடமிருந்து சலுகைகள், ஆதாயங்கள் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள், இன்னும் நெருக்கமாகவே இருக்க வேண்டிய கட்டாயங்கள், அவசியங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. இதில் தான், இத்தகைய பாலியல் வன்மங்கள், பாலியல் சார்ந்த குற்றங்கள் ஏற்படுகின்றன, கேரளா அபயா வழக்கை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, முதலில் இந்திய சர்ச்சுகளில் ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆண்கள்-பெண்கள் விசயங்களிலும் கண்காணிப்பு அவசியமாகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர், விசுவாசிகள் இவற்றில் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

© வேதபிரகாஷ்

24-12-2017

Tutocorin pastor murder- The Hindu, 08-11-2016

[1] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் போதகர் கைது, Added : டிச 21, 2017  01:08.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1923091

[3] The Hindu, “Mystery shrouds death of Pastor”, THOOTHUKUDI:, NOVEMBER 08, 2016 00:00 IST, UPDATED: DECEMBER 02, 2016 14:13 IST

[4] The parishioners of Pentecostal church at Millerpuram raised doubts over the death of Pastor Kanagaraj, and thronged the Collectorate here on Monday (03-10-2016) seeking fair action in the case. The Pastor was declared dead after cardiac arrest on October 5, 2016. In a petition submitted to Collector M. Ravikumar, they said ahead of his burial, relatives of the pastor claimed that the pastor had been murdered by somebody and his body bore injury marks. On the subsequent day, a post-mortem was done and the report showed injuries on it. But, the Sipcot police filed a case under Section 174 of Cr.P.C. for suspicious death.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/%E2%80%9CMystery-shrouds-death-of-Pastor%E2%80%9D/article16439922.ece

[5] DTNext, Foul play suspected in death of Thoothukudi priest, Published: Oct 07,201601:21 AM

[6] However, church workers are of the view that the priest could have been murdered and to support their claim they pointed out that there were injuries in his throat, lips and chest. They also alleged that cotton was placed in two spots in his throat to cover the injuries and there were rashes at his chest and lips, which according to them, are clear signs of murder. Singaraj, a senior lawyer who has his house near the church, said that he heard a loud noise from on Tuesday and in the morning he came to know that the father had died. The church workers also alleged that another priest Jacob could have been involved in the murder as he was unhappy some of the decisions of Kanagaraj in allocating funds. “Police officials too are trying to cover up the murder and close down the case by claiming that Kanagaraj had died of heart attack,” they alleged.

DTNext, Foul play suspected in death of Thoothukudi priest, Published: Oct 07,201601:21 AM

http://www.dtnext.in/News/City/2016/10/07012123/Foul-play-suspected-in-death-of-Thoothukudi-priest.vpf

[7] TPM Tuticorin Kanagaraj Murder Protest (Part 1), https://www.youtube.com/watch?v=WlAoPkZdXJw

 

[8] TPM Tuticorin Kanagaraj Murder Protest (Part 2), https://www.youtube.com/watch?v=DQFoxFYvV-c

[9] https://www.fromtpm.com/blog/2016/11/03/face-of-tpm-brutality-pastor-kanagaraj-murder-case/

[10] https://www.fromtpm.com/blog/2016/11/10/707/

[11]தூது.ஆன்லைம், தூத்துக்குடியில் மதபோதகர் கொலையில் 3பேர் கைது: பரபரப்பு தகவல், வெள்ளி 15, டிசம்பர் 2017 10:30:26 AM (IST)

[12] http://www.tutyonline.net/view/31_150504/20171215103026.html

[13] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது: ஓராண்டுக்கு பின் துப்புத் துலங்கியது, Added : டிச 21, 2017  04:56.

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1923394

இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!

ஜூலை 25, 2010

இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!
பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்: பாதிரியார் கைது

http://www.dinamalar.com/district_main.asp?id=267

Christian-priest-sex-Ayanavaram

Christian-priest-sex-Ayanavaram

அயன்புரத்தில் கிருத்துவப் பிரச்சினைகள்: அயன்புரம் (25-07-2010): அயன்புரம் சமீபத்தில் 10-20 ஆண்டுகளாக, கிருத்துவர்களின் பிரச்சாரம், தாக்கம், ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.  அடிக்கடி கலாட்டா செய்து பிரச்சினைகள் செய்து வரும் தெய்வநாயகம் போன்றவர்களும் இங்குதான் உள்ளார்கள். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், கைத்துண்டு பிரசுரம், உதவிநியோகம், தின-ஜெபம், வாரக்கூடுதல் என்று அவர்களது பிரச்சார வேலைகள் அதிகமாகி வருகின்றன.

பெந்தகோஸ்தே சர்ச்சில் பாலியல்: அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52) என்ற கிருத்துவ பாதிரி. தனக்கு உதவியாக பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளான்.  உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் “டார்ச்சர்’ கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார். அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார். சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும் (34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.

வேலைப் பார்க்க வந்த பெண்களை கர்த்தர் பெயரைச் சொல்லி கவர்ந்தத்து: பாதிரி செல்வராஜுக்கு தன்னிடம் வேலை பார்த்து வரும் பெண்களின் மீது கண் இருந்தது. பல நேரங்களில் தன்னுடைய இச்சையை மறைமுகமாகவும், நேரிடையாகவும் பேச்சுகளால், செயல்களால் வெளிப்படுத்தியிருக்கிறான். இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார். அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த பெண்களுக்கு  தாம் அந்த காம-பித்தனிடம் வேலை செய்கிறோம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.

அதில் செல்வராஜ் தங்களுக்கு “செக்ஸ் டார்ச்சர்’ கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண்களிடமிருந்து பணம்-நகை பறித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

இந்து பத்திரிக்கை அவன் கற்பழித்ததாகக் கூறுகிறது:

Man arrested on charge of rape

Staff Reporter , The Hindu dated Monday, Jul 26, 2010

http://www.hindu.com/2010/07/26/stories/2010072658900200.htm

CHENNAI: A person running a prayer hall in Ayanavaram was arrested on charges of raping and cheating women here on Sunday.

According to police sources, two women lodged a complaint against Selvaraj (53), who runs a community prayer hall in his house in Ayanavaram. In their complaint, they had alleged that Selvaraj had raped them and cheated them of their cash and jewellery in the name of donation for the development of the prayer hall.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், அவன் கிருத்துவன் என்பதையேக் குறிப்பிடவில்லை! இதுதான் செக்யூலரிஸ பத்திரிகாதர்மம் போலும்! இங்குதான், பத்திரிக்கைகலின் கிருத்துவ சார்பு, அடிமைத்தனம் முதலியன வெளிப்படுகின்றன.

Pastor-sexploitation-Ayanavaram

Pastor-sexploitation-Ayanavaram

“ஃபைத் அசெம்பெளி சர்ச்” – நம்பிக்கையுள்ளவர்கள் கூடும் சர்ச் என்ற பெயரில் வேலை செய்யும் கிருத்துவர்கள், குறிப்பாக பாதிரியார் மற்றும் அந்த இரண்டு சேவகிகள்- இப்படி புருஷனையும், மகன்களையும் ஏமாற்றி, நம்பிக்கைத்துரோகம் செய்து, சோரம் போய் வாழ்க்கை நடத்துவது ந்இனைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஏசுவின் பெயரால் எப்படி கிருத்துவர்கள் இத்தகைய காம-இச்சைகளை, வெறி களியாட்டங்களைதொடர்ந்து செய்து வருகின்றனர் என்று தெரியவில்லை!

மெர்சி மேரியை 2004ம் வருடத்திலிருந்து பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறாராம். மணமாகி இரண்டு வளர்ந்த பையன்கள் இருந்தும் இவ்வாறு செய்தது வியப்பாக இருக்கிறது. இரண்டு பெண்கலிடமிருந்தும் நகையை கடனாகப் பெற்றுள்ளதால், அவற்றைத் திரும்பக்கேட்டபோது, கொடுக்காமல் அலைக்கழித்திருக்கிறான்.

கர்த்தர் பெயரைச் சொல்லி பெண்களை புணர யத்தனித்த காமுகன்: கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, மெர்சி மேரியை கடந்து ஆறு வருடங்களாக செக்ச் வைத்துக் கொண்டிருந்தான். பிறகு, “கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி”, சுகந்தியிடம் வலைவீயிருக்கிறான். இருவருமே தமது கணவன்மார்களிடம் தகராறு, சண்டை என்ற நிலையில் இவனுடன் கருத்துகளை பரிமாற்றாம் செய்து கொண்டபோது, அதனைப் பயன்படுத்தி இப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளான். இது அப்படியே ஜெசுவைட்ஸ் என்ற கிருத்துவ குருமார்களின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் “பெண்களை எப்படி கவருவது” என்றுள்ளதை கடைபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

“எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன