Posts Tagged ‘பிரதாப் சந்திர சாரங்கி’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-1

ராதாகன்ட நாயக் என்பவரின் வேலை: 2000 தேர்தலில் கூட மாநில பிஜேடிக்கும், காங்கிரஸுக்கும், இவர் விசயத்தில் மோதல் ஏற்பட்டது. மதமாற்றம் பிரச்சினையிலும், ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவோடு பிரசினை கொண்டார். இதே நாதாகன்ட நாயக் தன் மதத்தை மாற்றிக் கொண்டு லாபம் அடைய முதல்வதாக பிஜேடி தெரிவித்தது. மேலும், ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் நாயக் பெயர் இருப்பதைச் சுட்டிக் காட்டியது [1]. இந்த ராதா கன்ட நாயக், ஒரு பெரிய பணக்கார கிருத்துவர். IAS அதிகாரி, சோனியா காந்திக்கு வேண்டியவர். YMCA, “வார்ல்ட் விஷன்” [World Vision] போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர், உறுப்பினரும் கூட. இப்பொழுது, விவரங்கள் கொண்ட விசித்திரமாக, காந்தி அமைதி மையத்தின் உதவி-தலைவராகவும் இருந்தார்[2]. காந்தியின் பெயரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, எப்படி இத்தகைய ஆட்கள் தலைவராக இருக்க முடியும் என்று, எந்த அறிவுஜீவியும் கேட்கவில்லை, செய்திகளும் வெளியிடுவதில்லை. மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[3] என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவ்விசயத்தில் அந்த பிரிவுகளிடையே பதட்டம், மோதல்கள் ஏற்பட்டன. இதனால், ஒரிஸாவுக்கு வருவதையும் தவிர்த்தார், சோனியாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவையெல்லாம், இவர் இப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்று நன்றகவே புலப்படுகிறது..

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-2

இவ்விவரங்கள் மறைகின்றனமறைக்கப் படுகின்றன: இணைதளங்கள் எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டன[4]. இதைப் பற்றி, www.indiainteracts.com என்ற இணைதளத்தில் நான் பதிவிட்டிருந்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. www.sulekha.com என்ற தளத்தில் போட்ட கட்டுரைகளும் காணாமல் போய் விட்டன. வலதுசாரி தளங்களில் மட்டும் சில விவரங்கள் காணப்படுகின்றன[5]. குறிப்பாக காங்கிரஸ், World Vision தொடர்புகள் மறைக்க விவரங்கள் மறைகின்றன-மறைக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது[6]. இப்பொழுது குறிப்பிட்ட இந்த தளங்களில் உள்ள விவரங்களும் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த செய்திகளின் மீது ஆதாரமாக எழுதப் பட்டவை. ஆனால், அவையும் மறைய ஆரம்பித்துளன. இனி, ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றால், அந்தந்த மாநில ஆவண காப்பகங்கள் மற்றும் செய்திதாள் நிறுவனங்களிலிடமிருந்து விவரங்களைப் பெற வேண்டும். ஆகவே, இதைப் பற்றிய உண்மைகளை மறைக்க பார்க்கின்றனர் என்பது புலனாகிறது.

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-3

கொலைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரம்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்தா உட்பட 5 பேர் மர்ம நபர்களால் 23-08-2008 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 9 பேருடைய சாவை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.  இந்நிலையில், பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி நான்காவது நாளாக 27-08-2008 அன்று வன்முறைகளும், கலவரங்களும் தொடர்வதால், கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளதாக மண்டல வருவாய் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். பலிகுடா, உதய்கிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன், பெருமளவில் வந்த “மர்மக் கும்பல்” மோதலில் ஈடுபட்டதாகவும், தடிகளுடன் இரும்புக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். ராய்கா போன்ற வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், இதில் 2 அதிகாரிகள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “மர்மக் கும்பல்” என்பதும், “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், என்றெல்லாம் குறிப்பிடுவது, அது தெரிந்து செய்வது போலிருக்கிறது. இல்லை, நாடகமாகவும் இருக்கலாம்.

Jayswal visits Kandhamal

ஒரிசாவில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்!: இதற்கிடையில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் [மன்மோஹன் சிங் கீழ், காங்கிரஸ் கட்சி] ஒரிசா விரைந்தார்.  கந்தமால் மாவட்டத்தில் பரவிவரும் வன்முறைகள் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளதாக புவனேஷ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வி.எச்.பி. தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மூன்று நாட்களாகியும் கந்தமால் மாவட்டத்தில் கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை என்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குழுவினருடன் அங்க செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.  முன்னதாக, ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி.பந்தாரே, தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி, உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா, டி.ஜி.பி. கோபால் நந்தா ஆகியோருடன் அமைச்சர் ஜெஸ்வால் ஆலோசனை நடத்தினார்.

Naveen Patnaik at the Jalespata ashram,after the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

கிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்டம் இருக்கவேண்டும்: காங்கிரஸின் The National Herald[7], மற்றும் கம்யூனிஸ The wire[8] போன்ற “முற்போக்கு முகமூடி” ஊடகங்கள் அரைத்த மாவையே அரைத்து, ஏதோ கொலைசிகாரன் மந்திரியாகி விட்டான் என்பது போல, கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்கின்றன!  இவை ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியைத் தான் திரித்து, தமிழ் ஊடகங்கள் வெளியிடுள்ளன. நேஷனல் ஹெரால்ட் கூட, சாரங்கியின் தேர்தல் மனுவில் உள்ள விசயங்களை வைத்து தான், “செய்தி” வெளியிட[9] மற்றவை ஊதி பெரிதாக்கி இருக்கிறது. பிரதாப் சாரங்கி மீது வழக்கு ஜோடிக்கப் பட்டுள்ளன என்றால், முறைப்படி அதை எதிர்த்திருக்க வேண்டும். எம்,எல்.ஏவாக இருந்து, மத்திய அமைச்சராக வருபவருக்கு அது தெரியாமல் இருக்காது. அரசியல்வாதிகள் கைதாவது,, வெளியே வருவது என்பது சகஜமாக இருக்கிறது. ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலந்து கொண்டு கைதானவர்கள், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” என்ற ரீதியில் தான் நடந்து வந்துள்ளது. இதேபோல, வழக்குகள் நிலுவையில் உள்ளவர் என்று பல பிரபலங்கள் உள்ளன. அவர்களைப் பற்றியும், இதே போல செய்திகளை வெளியிடலாம். ஆனால், எல்ல்லோரையும் விடுத்து சாரங்கியை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பதால், அவரது பெயரை களங்கப் படுத்தவே, அவ்வாறு செய்கின்றனர் என்று தெரிகிறது.

Hindutwavadis has to counter such false propaganda 01-06-2019

இந்துத்துவ வாதிகளால் எதிர்கொள்ள முடியாத, எதிர்பிரச்சாரம் செய்யலாகாத, மறுக்க முயலாத பொய்பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு தீ வைத்து கொளுத்திய பிரதாப் சாரங்கி இப்பொழுது பாஜகவின் மத்திய அமைச்சர், என்ற பிரச்சாரத்தை, இந்துத்துவவாதிகள் எதிர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருக்கின்றனர். சுவாரஜ்யா[10] ஓரளவிற்கு மறுத்தாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஜே.என்.யூ எழுத்தாளர் போல, “உள்குத்து” குத்துகிறார்[11]. மேலும், இதே பிரிவுகளில் அருந்ததீ ராய், ஜே.என்.ஏ “டுக்டே-டுக்டே” கும்பல், பிரபல “அர்பன் நக்ஸல்கள்,” தமிழக நாத்திக-தேசவிரோத வகையறாக்கள் என்று பலர் உள்ளனர். அவர்கள் மீதும் இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்துத்துவவாதிகள் முறையாக செய்யாதலால், தமிழ் ஊடகங்கள் அள்ளி வீசுகின்றன. தமிழக பத்திரிகா தர்மம், ஊடக நாகரிகம், கருத்துரிமை குரூரம், விபச்சார ரசனை, சிந்தனா-அசிங்கம், இவ்வாறு வெளிப்படுகிறது! உண்மையில் 1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலை மற்றும் ஆகஸ்டு 23, 2008 சுவாமி லக்ஷமணானந்த கொலை, தனிதனியாக அலச வேண்டும். இரண்டிலும் மாவோயிஸ்ட்-கிருத்துவர்களின் தொடர்புகள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, with church

[1] …..the Naveen Patnaik-led party has accused Radhakanta Nayak – an Independent candidate backed by the Congress – of changing his religion twice to reap “undue benefits”. According to the BJD, Nayak’s name also figures on a list of “corrupt officials” prepared by the Central Vigilance Commission and posted on its website on February 24. Nayak is a retired IPS officer…………. the Congress is also believed to have convinced the other Independent legislators to back Nayak.

The Telegraph, CONGRESS, BJD LOCK HORNS , By FROM OUR SPECIAL CORRESPONDENT, Published 28.03.00

https://www.telegraphindia.com/india/congress-bjd-lock-horns/cid/901880

[2] VICE CHAIRPERSON, GANDHI PEACE CENTRE, Founder-Coordinator (Honorary) NISWAS 3
Chandrasekharpur Bhubneshwar, Orissa – 751023; Mob No. 08018265276:

E-Mail: rknayak2007@googlemail.com ; Dr. Radhakant Nayak associated with GPC since 2007. He also runs a reputed NGO –NISWAS at Bhubaneswar , Orissa. In addition to many social welfare activities it is also managing a School for Social Welfare which conducts 2-year MSW course. He retired as Secretary, Ministry of Rural Development, Govt. of India.

[3] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?

[4] http://yatratatrasarvatra.blogspot.com/2008/12/radha-kant-nayak-sonia-mainos-right.html

[5] http://indiafacts.org/laxmanananda-saraswati-unmourned-yet-again/

[6] https://www.scribd.com/document/16843413/a-Nayak-Murdered-Swami-a-Saraswati

[7] National Herald, Minister Pratap Sarangi has blood on his hands; an austere life is not a life without crime, Ashlin Mathew, Updated: 31 May 2019, 11:20 PM.

[8] The Wire, NDA 2.0: Social Media ‘Hero’ Pratap Sarangi Faces Serious Criminal Cases, the Wire staff, June.1, 2019.

https://thewire.in/politics/minister-of-state-pratap-sarangi-criminal-cases

[9] https://www.nationalheraldindia.com/india/minister-pratap-sarangi-has-blood-on-his-hands-an-austere-life-is-not-a-life-without-crime?fbclid=IwAR2bTlEHBXi0cgwc6snjEOjTcajc-pvNXF10ydSYmXGeFSb2ZGWFC4TL2pE

[10]  Pratyasha Rath, Pratap Sarangi And The Slander Fest Around Him, Jun 02, 2019, 4:44 pm

https://swarajyamag.com/politics/pratap-sarangi-and-the-slander-fest-around-him

[11] இதனை நான் பதிவு செய்து வெளிகாட்டியுள்ளேன்.

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ் கொலைவழக்கு விவரங்கள் [2]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ் கொலைவழக்கு விவரங்கள் [2]

Vinavu against Sarangi-1

மோடிக்கு எதிராக தமிழகத்தில் ஊடகக் கூட்டணி: இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தெரியாத சாரங்கியைப் பற்றி, தமிழ் ஊடகங்கள், ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு, எதிர்-எதிரான செய்திகளை, திரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக கவனித்தால், அதே திக-திமுக-கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட்-காங்கிரஸ் ஊடகங்கள் தான் இவற்றில் இறங்கியுள்ளன. வினவு[1], “ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்கிறித்துவ மிஷனரி குடும்பத்தின் படுகொலைக்கு பஜ்ரங் தளமும், தாரா சிங்கும்தான் காரணம் என வெளிப்படையாக தெரிந்த பின்பும் இந்தப் படுகொலைக்கு எந்தவித ஆதாரம் இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணை தெரிவித்தது,” திரிக்கிறது[2]. உண்மைகளை மறைத்து, திரித்து, பொய்யாக எழுதுவதில், இவர்களுக்கு இணை, இவர்கள் தான் – “உண்மையிலேயே குஜராத்தில் 2000 பேர் கொல்லப்படுவதற்குப் பின்னணியில் நின்றது குஜராத்தின் நரேந்திர மோடி என்றால், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை மட்டுமல்லாமல் ஒடிசாவில் நடந்த பல்வேறு இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாரங்கியை, ’ஒடிசாவின் நரேந்திர மோடிஎன்று அழைப்பதில் மிகை ஏதும் இல்லை.” இவர்களுக்கு உச்சநீதி மன்றம், தீர்ப்புகள் எதுவும் தேவையில்லை. அவர்கள் சொல்வது தான் செய்தி!

Vinavu against Sarangi-2

பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்த போது, ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை?: 2004-2014 வரை பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்தபோது, அவர் செய்த சேவைகளை ஊடகங்கள் சொல்வதில்லை.  தன்னுடைய எம்.எல்.ஏ வருமானத்தை வைத்து வனவாசிகளுக்கு பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் பள்ளிகளை திறந்து, நடத்தி வருகிறார். ஊழல், மது, சமூக அநீதி முதலியவற்றை எதிர்த்து போராடி வருகிறார். இந்த விவரங்களை, முதலமைச்சர் இணைதளம் கொடுக்கிறது[3]. இவற்றை எதிர்த்தால், பணக்காரர்கள், குறிப்பாக அந்த வியாபாரம் செய்பவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். போதாகுறைக்கு, வனவாசிகள், எஸ்.சி / எஸ்.டிகளுக்கும் சேவை செய்து வருவதாலும், மதம் மாற்றத்தைத் தடுப்பதாலும், கிருத்துவ மிஷனரிகளும் இவருக்கு எதிராகின. ஆக, இந்த உண்மைகளை விடுத்து, இப்பொழுது பொய் செய்திகளை வெளியிட்டு கேவலமான வேலையில் இறங்கியுள்ளன ஊடகங்கள்.

Vinavu against Sarangi-3

கிராம் ஸ்ட்ரௌட் ஸ்டைன்ஸ் புனிதமானவனா?: ஸ்டைன்ஸ் எல்லோரையும் போல, மதம் மாற்றத் தான் வந்துள்ளான். அதை யாரும் மறுக்கவில்லை.  மயூர்பஞ்ச் எவாஞ்செலிகல் சொசைடி [The Evangelical Missionary Society of Mayurbhanj (EMSM)[4]] என்று ஆஸ்திரேலியாவில் 1982ல் பதிவு செய்து கொண்டு, ஸ்டைன்ஸ் வந்துள்ளார். தொழு நோயாளிகள் இல்லத்தில் சேவை செய்ய வந்தவர் போல, இந்துக்களை மதம் மாற்ற ஈடுபட்டார். வனவாசிகளை, பிரிப்பதில், குழப்பத்தை உண்டாக்குவதில் ஈடுபட்டார். அவர்களது பாரம்பரிய கொண்டாட்டங்கள், சடங்குகள், கலச்சாரம் முதலியவற்றை மாற்ற முயன்றார். இதற்கு “வோர்ல்ட் விஷன்” [World Vision] போன்ற இயக்கத்தினர் உதவியாக இருந்தனர். காங்கிரஸுக்கும் இதில் பங்குண்டு. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, காங்கிரஸ் தலைவர் பங்குமுள்ளது. இதைப் பற்றி கீழே விவரிக்கப் படுகிறது. சங்கராந்தி சமயத்தில், வனவாசிகளுக்கு இடையில் பிரிவை உண்டாக்க, வேண்டுமென்றே, ஸ்டைன்ஸ், ஒரு விழாவை அங்கு ஏற்பாடு செய்கிறான். இதனால், வழக்கமாக மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், சுந்தர்கர் மாவட்டங்களில் சங்கராந்தி முதல் நாளில் போகி கொண்டாடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. நடனம் ஆடுவதிலும் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் தான்கீழ்கண்டவை நடந்தேறின[5]:

Hindu Given Death for Killing Missionary- New York times 2003

 1. ஸ்டைன்ஸ் கொலைவழக்கு – 22.01.1999, ஜீப்பிற்கு 60-70 கும்பலால் தீவைக்கப்பட்டது! 23-01-1999 தான் போலீஸுக்கு தெரிவிக்கப் பட்டது!
 2. ஒரிஸா போலீஸ் ஒழுங்காக விசாரணை மேற்கொள்ளாதலால், 04.1999 அன்று மாநில குற்றப்பிரிவுக்கு [State Crime Branch] ஒப்படைக்கப் பட்டது.
 3. 29-01-1999 – டி.பி.வாத்வா கமிஷனை, இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை வெளியிட, இந்திய அரசு நியமித்தது.
 4. 25-03-1999 அன்று இரண்டு மாதங்கள் என்பதை ஐந்து மாதங்கள் என்று திருத்தி ஆணையிட்டது.
 5. ஒரிஸா மாநில குற்றப்பிரிவும் முறையாக புலன் விசாரணை மேற்கொள்ளாதலால், 05.1999 அன்று, சிபிஐக்கு ஒப்படைக்கப் பட்டது.
 6. 21-06-1999 கமிஷன் தாரா சிங் தான் குற்றவாளி என்றும், வேறெந்த இயக்கத்திற்கும், இதில் தொடர்பில்லை என்று அறிவித்தது.
 7. சிபிஐ விசாரித்து 06.1999 அன்று 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது, ஒரு சிறுவன் ஜுவினைல் கோர்ட்டில் விசாரிக்கப் பட்டான்.
 8. 31-06-1999 அன்று மயூர்பஞ்ச் காட்டிலிருந்து, தாராசிங் கைது செய்யப் பட்டான்.
 9. 04-09-2000 அன்று குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப் பட்டது.
 10. 01-03-2001 – சிபிஐயால் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பித்தது.
 11. 18-08-2003 – அன்று விசாரணை முடிவுற்றது.
 12. குர்தா செசன்ஸ் நீதிபதி, 09.2003 மற்றும் 22.09.2003 தேதிகளில் அளித்த தீர்ப்பில், 14 பேருக்கும் தண்டனை வித்தித்தார், தாரா சிங்கிற்கு மரணம்!
 13. கண்சாட்சிகள் சொல்வதெல்லாம் நம்புகின்ற மாதிரி இல்லை, ஒப்புதல் வாக்குமூலங்களும் மிரட்டி, வற்புருத்தி வாங்கப்பட்டுள்ளன.
 14. தாராசிங்கிற்கு ஆயுட்தண்டனையாகக் குறைத்து, மஹேந்திர ஹெம்ப்ரமுக்கும் ஆயுட்தண்டனை கொடுத்து, மற்றவரை விடுவித்தது.
 15. கண்சாட்சிகள், ஆவணங்கள் முதலியவற்றை விசாரித்து, 05.2005  அன்று ஒரிஸா உயர்நீதிமன்றம், இவ்வாறு தீர்ப்பு மாற்றி அளித்தது.
 16. மே 2005 – கிளாடிஸ் ஸ்டைன்ஸுக்கு பத்மஶ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
 17. அக்டோபர் 2005ல் இரு தரப்பிலும் தாராசிங்-மஹேந்திர ஹெம்ப்ரம் மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்யப் பட்டது.
 18. 23-08-2008 – இந்நிலையில் தான், ஸ்வாமி லக்ஷ்மணானந்தர், மாவோயிஸ்ட்-கிருத்துவர்களால் கொலைசெய்யப் பட்டார்.
 19. 25-08-2008ல் கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இது பிறகு, ஜோடிக்கப்பட்டது என்றாகியது.
 20. 2010-11ல் உச்சநீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டில். இவ்வழக்கு விசாரிக்கப் பட்ட போதும், நீதிபதிகள் பல முரண்பாடுகளை கண்டனர்.
 21. 21-01-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கும் போது, இந்த இருவரும் குற்றவாளிகள் என்று மெய்ப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை என்றனர்.

Staies murder inconsistenciies - Nagin dance

உச்சநீதி மன்றம் கண்ட முரண்பாடுகள்: விசாரணையின் போது, உச்சநீதி மன்ற பல முரண்பாடுகளைக் கண்டது:

 1. கூட்டம் 40/50. 50/60, 60/70 என்று பலவாறு கூறப்பட்டது
 2. வைக்கோல் ஜீப்பின் கீழ்/ மேல், வைக்கப் பட்டது என்பதிலும் முரண்பாடு
 3. நடுஇரவில் பனி பொழிந்ததா-இல்லையா, பனி மூட்டமாக இருந்ததா-இல்லையா என்றெல்லாம் தெளிவாக சொல்ல முடியாது – சில கண்சாட்சிகள்
 4. நெருப்பு வைக்கப் பட்டது பற்றியும் முரண்பட்ட விவரங்கள் – ஒருவரா, இருவரா, கூட்டமா,
 5. நெருப்பு வைக்கப் பட்டது, மேலா-கீழா
 6. நாகின் நடனம் நடு இரவு முழுவதும் நடந்தது, முடிந்து விட்டது, தெரியாது…
 7. நாகின் நடனம் மற்றும் கண்சாட்சிகள் பார்த்த தூரமும் முரண்பாடாக கூறினர்.
 8. அருகில் வசதியான இடம் இருக்கும் போது, வைக்கோலை பரப்பி, காரில் ஏன், படுத்து உறங்க வேண்டும்?
 9. கிளாடிஸ் ஏன் தனியாக படுக்க வேண்டும்?
 10. இப்படி முரண்பட்ட சாட்சியங்கள், ஒப்புதல் வாக்குமூங்கள் தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும், கண்சாட்சிகள் மற்றும் மஹேந்திர ஹெம்ப்ரமின் ஒப்புதல் வாக்குமூலம் வைத்து, குற்றவாளிகள் என்று முடிவு செய்ததையும், தண்டனையும் ஒப்புக் கொண்டது. இவையெல்லாம் போதாது என்று எத்தனையோ உச்சநீதி மன்ற திர்ப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், இத்தகைய தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனும் போது, அரசிய தாக்கம், நிர்பந்தம், சுமை முதலியவை இருந்தன என்று தெரிகிறது. இதற்கு மறு-சீராய்வு மனு, மேல்முறையீடு செய்யவில்லை, அதனால், இருவரும் சிறையில் உள்ளனர்! இதைவைத்து இப்பொழுது அரசியல்..கீழ்நிலையில் இறங்கியுள்ள அந்த அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்தில் தூஷிக்கப் படுகின்றவர் பிரதாப் சந்திர சாரங்கி!

© வேதபிரகாஷ்

05-06-2019

Staines vehicle, burnt condition

[1] வினவு, எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின்கொலைகாரபின்னணி!, By அனிதா – June 4, 20193

[2] https://www.vinavu.com/2019/06/04/real-face-of-pratap-sarangi-is-simple-but-cruel-murder-of-graham-staines-and-he-lead-violence/

[3] SOCIAL ACTIVITIES:Opened schools Samrkara Kendra in hundreds of tribal village under Gana Shiksha Mandir Yojana in Balasore in Mayurbhanj district inspired social awareness and agitational programme against liquor corruption social injustice and police atrocity hundreds of patients were served

http://www.naveenpatnaik.com/MLA-Pratap-Chandra-Sarangi-of-NILAGIRI-constituency-1219.html

[4] registered in Australia, and has run the Mayurbhanj Leprosy Home since 1982

[5] உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்ளிலிருந்து தொகுத்து, புரிந்து கொள்வதற்கு சுலபமாக, காலக் கிரயமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

Nakkeeran against Sarangi

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: பிரதாப் சந்திர சாரங்கி மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற போது, பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் சிறுகுறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கரகோஷத்துடன் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, யார் இவர் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த நாளே அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால், உடனே, அவருக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. அவரது தேர்தல் விண்ணப்பத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றதை நேஷனல் ஹெரால்ட் என்ற காங்கிரஸ் நாளிதழ்  வெளியிட அதை வைத்து, மற்ற ஆங்கில நாளிதழ்கள், ஊதி பெரிதாக்கி செய்திகள் வெளியிட்டன. பிறகு, தமிழ் ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. உதாரணத்திற்கு “நக்கீரன்”…. “அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது, என்று “நக்கீரன்” பீடிகையுடன் ஆரம்பித்தது[1]. மற்றதை கீழே படிக்கலாம்.

Nakkeeran against Sarangi-2

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன: நக்கீரன் தொடர்கிறது, “64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது. அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்,” என்று வர்ணித்தது[2]..

Samayam against Sarangi

1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலையுடன் முடிச்சு போடுதல்: கமல்குமார் என்ற பெயரில், நக்கீரன் தொடர்கிறது[3], “இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுமேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன,” என்று முடிக்கிறது[4]

LankaSri- false propaganda against Sarangi.

சமயம் [Times of India, Tamil] இவ்வாறு வர்ணிக்கிறது[5], “ஆனால் சாரங்கியின் மறுபக்கம் மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஒடிசாவில் நடந்த பல்வேறு மத மோதல், வன்முறை சம்பவங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. …..இந்த கொலை வழக்கில் போலீசாரின் சந்தேகம் முழுக்க பிரதாப் சாரங்கியின் மீது தான் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் எப்படியோ அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். …..2002ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒடிசா சட்டசபை கட்டிடத்தை அடித்து சேதப்படுத்தியதாக சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும், ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி மீது வன்முறை, சூறையாடல், தீ வைப்பு, மத மோதல் என மொத்தம் 7 கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது…..,” மேலும், “ஆனால் பிரதாப் சாரங்கி அமைச்சரான உடன் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இதெல்லாம் நீர்த்து போகச் செய்யப்படும் என ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் ,” என்று முடிக்கிறது[6]. ஆனால், பின்னணி, முதலியவை எதுவும் சொல்லப் படவில்லை.

Satyam TV - on Sarangi-disappeared-full

பசுத்தோல் போர்த்திய புலியின் கதை: “பசுத்தோல் போர்த்திய புலியின் கதை,” என்று தலைப்பிட்டு, சத்திய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கிளிக்” செய்தால் காணவில்லை. 9962311611 / 9500 60660 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், சொல்லத் தயங்குகின்றனர். பிறகு எடுக்காமலேயே தவிர்த்தனர். லங்கஶ்ரீ என்ற இணைதளமும், “கிறிஸ்தவமத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்……………….மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு….” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதெல்லாமே, அந்த ஜாபுவா, கந்தமால் கற்பழிப்பு செய்திகள் போலவே இருக்கின்றன. அதாவது, அந்த கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கிருத்துவர்கள் தான் என்றதும் மூடிக்கொண்டு அமைதியானார்கள். அதேபோல, கந்தமால் கன்னியாஸ்திரீயின் முரண்பட்ட செய்திகள், வாக்குமூலம், சோதனைக்கூட அறிக்கை எல்லாம் வந்தவுடன், மறுபடியும் மௌனியானார்கள். ஏனெனில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டாள் என்று தெரிந்தது. மேலும், முதலில் தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தாள். ஆனால், இன்றைய தேதியில், இவையெல்லாமே இணைதளங்களிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், உலகம் முழுவதும், இந்துக்கள் கன்னியாஸ்திரீக்கள் தினம் தினம் கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது போல செய்திகளை வெளியிட்டனர்!

Sathyam TV news on Sarangi suppressed

தமிழ்.இந்து வக்காலத்து வாங்குவது: தி.இந்து.தமிழ் குறிப்பிடுவதாவது, “இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது[7], “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன். சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார். சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. தி.இந்து மற்றும் பிரென்ட் லைன் விசுவாசத்துடன் மற்ற விவரங்களை வெளியிடும் போது, இந்துக்கள் விசயத்தில் மட்டும், எதிரான விசயங்களை மட்டும், முக்கியத்துவம் கொடுத்து போடுவதேன் என்ற கேள்வியை, இந்துக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுதும், முழு விவரங்களை வெளியிடாமல், சாரங்கி சொன்னார் என்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Sarangi playing cricket on the road

[1] நக்கீரன், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), கமல்குமார்

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[3] கமல்குமார், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), நக்கீரன்.

[4]  https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[5] சமயம், ஏழை பங்காளன் பிரதாப் சாரங்கி மீது ஏழு கிரிமினல் வழக்குகள்அதிர்ச்சியூட்டும் பின்னணி..!, Samayam Tamil | Updated:Jun 1, 2019, 02:53PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/union-minister-odissa-s-pratap-singh-has-another-face-which-has-7-criminal-records-all-been-on-investigation/articleshow/69609653.cms

[7] தி.இந்து.தமிழ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்பிரதாப் சந்திர சாரங்கி, Published : 31 May 2019 18:29 IST; Updated : 01 Jun 2019 10:59 IST.

[8] https://tamil.thehindu.com/india/article27378851.ece