அரசு அங்கன்வாடி மையம், கிருத்துவப் பிரச்சாரம், மக்கள் எதிப்பு – தேவை நடவடிக்கை!
புளியந்தோப்பு கிறிஸ்தவப் பிரச்சினைகளில் அடிக்கடி அடிபடுகிறது[1]: வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர் மற்றும் கொடுங்கையூர் கொண்ட இப்பகுதி அதிகமாக குற்றங்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது[2]. பாலவாடியிலிருந்து சிறுமிகளைக் கடத்துவது[3] போன்ற நிகழ்சிகளும் நடந்துள்ளன. இப்பகுதியை சேர்ந்த ஒருவர் பலதார திருமண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு[4]. ஆகவே இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள். ரகசியமாகவே இருந்துள்ளன. இந்நிலையில் தான், அங்கன் வாடியில், கிருத்துவப் பிரச்சாரம் என்ற செய்தி வருகிறது.

ஷேக் தாவூத்தின் கும்பலில் அவனது மைத்துனர் வரதராஜு (வயது 52), வரதராஜுவின் முதல் மனைவி சலீமா, 2-வது மனைவி ஜெபக்கனி, ஷேக்தாவூத்தின் மைத்துனி நவ்ஜீன் (35), பெரியமேடு மசூதியில் பிச்சை எடுக்கும் சபீரா (50) ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. மே 2005
அரசுஅங்கன்வாடிமையத்தில்மதபிரசாரம்: கடும்அதிருப்தியில்பகுதிவாசிகள்[5]: புளியந்தோப்பில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்த மத பிரசார கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்னும், அங்கு அதுபோன்ற பிரசாரக் கூட்டம் நடந்து வருவதும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாததும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரியார் நகரில், அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இரண்டு பெண்களின் மேற்பார்வையில் உள்ள இந்த மையத்தில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், தினசரி வருகின்றனர்.
அங்கன்வாடிமையம்சொந்தஉபயோகத்திற்கு பயன்படுத்திவருவது – பலபுகார்கள்: அவர்களில், சமையலராக உள்ள பெண்ணின் வீடு, அதே பகுதியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அவர், அங்கன்வாடி மையத்தை, தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. குறிப்பாக, தனது உறவினர்களை, இரவில் தங்க வைப்பது, மையத்திற்கு உரிய ‘காஸ்’ சிலிண்டரை தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி விட்டு, குழந்தைகளுக்கான சமையலுக்கு, அடுப்புக் கரிகளை பயன்படுத்துவது, உணவுப் பொருட்களை கடத்துவது என, பல புகார்களை அவர் மீது பகுதிவாசிகள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை இதுகுறித்து, எவ்வித விசாரணையும் நடக்கவில்லை. மற்றவர்களின் சம்பந்தம், கூட்டு இருக்கும் போது இதெல்லாம் சகஜம் தானே?
பல மணிநேரம்கிறிஸ்தவ பிரச்சார கூட்டம் நடத்தப் பட்டது:
இதுதவிர, கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டத்தையும் அங்கன்வாடி மையத்தில், அவர் நடத்தி வருகிறார். நேற்று காலை 7:00 மணிக்கு, அங்கன்வாடி மையத்தில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டம் துவங்கிய போது, பகுதிவாசிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, நேற்று முற்பகல் 11:00 மணி வரை, கூட்டம் நடந்தது. ஓராண்டு காலமாக நடத்தி வரும் போது, ஏன் திடீரென்று விழித்துக் கொண்டு புகார் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவருடம் பழக்கப்பட்டவர்கள் 4 மணிநேரம் பிரச்சாரத்தை எப்படி பொறுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
இதுகுறித்துபகுதிவாசிகள்கூறியதாவது[6]: அங்கன்வாடி மையத்தின் சமையலர், கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை அங்கன்வாடி மையத்தில் நடத்தி வருகிறார். அரசு கட்டடத்தில், இவ்வாறு மதப் பிரசார கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம். ஆனால், அதைத் தட்டிக்கேட்டால், அவர் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் சிலரின் துணையுடன், எங்களை மிரட்டி வருகிறார். இப்படி நடப்பது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[7]. “இவ்வாறு மதப் பிரசார கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம்”, என்று சொல்கிறாறர்கள், ஆனால், ஓராண்டு காலமாக நடந்து வந்துள்ளது.
ரவுடிகள்சிலரின்துணையுடன், எங்களைமிரட்டுதல், அதிகாரிகளுக்குதெரிந்திருத்தல், அவர்கள்கண்டுகொள்ளாமல் இருத்தல்: இவையெல்லாம், வழக்கமான நிலையைக் காட்டுகிறது. முன்னரே குறிப்பிட்டப்படி, புளியந்தோப்பு கிறிஸ்தவப் பிரச்சினைகளில் அடிக்கடி அடிபடுகிறது[8]. வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர் மற்றும் கொடுங்கையூர் கொண்ட இப்பகுதி அதிகமாக குற்றங்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது[9]. இது போலீசுக்கே தெரிந்த விசயமாக உள்ளது. ஆகவே, உண்மையில் இப்பிரச்சினையைக் கட்டுப் படுத்த வேண்டுமானால், பெயர் குறிப்பிடப்படாத அந்த “அங்கன்வாடி மையத்தின் சமையலர்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலத்தில், சிறுமியர்-சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவது அதிகமாகியுள்ளது. இதில் தமிழகம் முன்னேறியுள்ளது. சென்னையிலேயே, பிடோபைல் போன்றவர்கள் பிடிபட்டுள்ளனர். ஆகவே, இவ்விசயம் பெரிதாகும் முன்னர் நடவடிக்கை எடுப்பது நலம்.
© வேதபிரகாஷ்
05-11-2013
[1] https://christianityindia.wordpress.com/2013/05/05/money-doubling-christian-priest-complaint-not-received/
[2] http://www.thehindu.com/news/cities/chennai/pulianthope-zone-emerges-as-hotbed/article4861023.ece
[5] தினமலர், அரசுஅங்கன்வாடிமையத்தில்மதபிரசாரம்: கடும்அதிருப்தியில்பகுதிவாசிகள் , பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013,23:59 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 04,2013,00:02 IST
[6] http://tamil.yahoo.com/photos/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8D-photo-165259447.html