Posts Tagged ‘பாஸ்டர்கள்’

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

ஓகஸ்ட் 18, 2019

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

MCC, Zoology dept-Raveen

ரவீன் ராஜாசிங் மற்றும் சாமுவேல் டென்னிஸன்பாலியல் சதாய்ப்புகளில் ஈடுபட்ட துணை பேராசிரியர்கள்: சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த 2019 ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு “கல்வி சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டனர்[1]. அப்பொழுது இவர்கள் எல்லைகளை மீறியபோது கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் பல வகைகளில் செக்ஸ்-ரீதியில் தொட்டும்-பேசியும் சதாய்த்துள்ளனர். ஜனவரி 9, 2019 முதல் 14 வரை என்ற சுற்றுலாவில் 46 மாணவிகள் சென்றுள்ளனர், அதில் 34 பேரிடமிருந்து புகார் அளிக்கப் பட்டுள்ளன[2]. அந்த ரவீன் ராஜாசிங் ஒரு மாணவியின் அறையுள் நுழைந்து, அவள் படுக்கையில் படுத்தாரா/னாம்! இந்த லட்சணத்தில் இருக்கிறது படிப்பு/ புரொபசரு! இதனால், சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்[3].  கல்லுரியில் அமைக்கப் பட்ட புகார்-விசாரிப்பு கமிட்டி [Internal Complaints Committee (ICC)] மூலம்விசாரிக்கப் பட்டது[4]. சுற்றுலாவின் போது, அவர்கள் தகாத முறையில் பேசியது, நடந்து கொண்டது ஊர்ஜிதம் ஆனது[5]. டென்னிஸன், ரவீனின் சில்மிஷங்களை, அடாவடித்தனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வந்தான்[6]. முன்னமே குறிப்பிட்டப் படி, ரவீன், ஒரு பெண்ணிம் அறைக்குள் நுழைந்து படுக்கையின் மீது படுத்துத் தூங்கினான்.

Samuel Tennyson

முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்த கல்லூரி: கல்லூரி முதல்வர், முதலில் புகார் கொடுத்த போது, இதெல்லாம், முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்து விட்டனராம். அதென்ன “முதன் முதலில்” என்ற சலுகை. ஒரு தடவை கற்பழித்தால் விட்டு விடுவார்களா? ஒருவேளை பரிசுத்த ஆவியோ, கர்த்தனோ, ஏசுநாதனோ[7] வந்து சரிசெய்து விடுமா? இதானால், பெற்றோர்கள் பயந்து விட்டார்கள் போலும்! பிறகு 30 பேர் கையெழுத்துப் போட்டு புகார் கொடுத்தப் பிறகு தான், கல்லூரி அதிகாரம் புகாரை அனுமதித்து, கமிட்டியை அமைத்தது[8].

MCC, Zoology dept-complaint letter

டென்னிஸனே அக்கமிட்டியில் இருந்தது வேடிக்கைதான். இதிலிருந்து, கல்லூரி விவகாரத்தை மறைக்கவே முயன்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த ரவீனுக்கு தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.[9]. ஏனேனில், இதை மனதில் வைத்துக் கொண்டு, மாணவிகளை பாதிக்க முயலும் என்பதால். மே 24, 2019 அன்று இருவருமே குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தது ரவீன் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டான். டென்னிஸன் அதற்குள் நீதி மன்றத்திற்கு சென்று விட்டான். இருப்பினும், கல்லூரி வளகத்திற்குள் வரக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.

Raveen Rajasigh, Christian Collge, Madras

வழிபாட்டு வளாகத்தில் நடப்பது தெருக்களில் நடந்தால், குற்றங்கள் அதிகமாகும்: வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது[10]. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11].  அதாவது, எப்படியாவது, வழக்கை இழுத்தடிக்க, டென்னிஸன் முயன்றுள்ளான். கல்லூரி தரப்பு பதிலை ஏற்று, பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்ச், மசூதி, கோவில் விட்டு, மதம் தெருக்களில் கடைபிடிக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நிகழத்தான் கூடும், அதிகமாகும்- நீதிபதி . அதாவது இப்பொழுதெல்லாம், தெருக்களில் நமாஜ் செய்வது, பிரச்சாரம் செய்வது முதலிய அதிகமாகி விட்டன.

MCC, Zoology dept-Samuel Tennyson

இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது[12]. எஸ். வைத்தியநாதன், நீதிபதி நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை / சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்தார்[13].  இப்பொழுதுள்ள நவநாகரிகமுள்ள காலத்தில் தான் இவ்வாறான கருத்துச் சொல்லப் பட்டிருக்கிறது என்பனை கவனிக்க வேண்டும்[14]. நிச்சயமாக அத்தகைய கருத்து, திடீரென்று வந்திருக்காது. இந்தியா முழுவதும் தொடர்ந்து சிறுவர் கற்பழிப்பு, கன்னியாஸ்திரிக்கள் கற்பழிப்பு, மற்ற பாலிய அத்துமீறல்கள் நடந்து வருவதை சுட்டிக் காட்டவே அவ்வாறு குறிப்பிட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவற்றில் சம்பந்தப்பட்டது எல்லாம் கிருத்துவ குருமார்கள், சாமியார்கள், பாஸ்டர்கள், பிஷப்புகள் முதலியோர் தாம்[15]. அதிக அளவில் உள்ள கிருத்துவ மழலையர் பள்ளிகள், கான்வென்டுகள் முதல் மகளிர் கல்லூரிகள் வரை அவர்கள் நிர்வாகத்தில், கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்தகைய அச்சம்ம் வந்தது நியாயமானது தான்[16]. மதம் மாற்றம் முதலியவற்றையும் மறைக்கத்தான் முயல்கின்றனர். இச்செய்தியும் பிடிஐ மூலம் வெளிவந்துள்ளதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[17].

Raveen Rajasigh, Christian Collge, Madras.at coorg

பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள்: பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-08-2019

MCC, Zoology dept

[1] Bangalore Mirror, MCC sexual harassment case: Madras HC says there is a general feeling that Christian institutions are unsafe, Gladwin Emmanuel, Uploaded: August 16, 2019, 16:5 IST.

[2] தினமணி, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? – உயர்நீதிமன்றம், By DIN | Published on : 17th August 2019 04:39 PM.

[3] https://www.dinamani.com/tamilnadu/2019/aug/17/christian-institutions-unsafe-for-girl-students-madras-hc-3215633.html

[4] https://bangaloremirror.indiatimes.com/news/india/mcc-sexual-harassment-case-madras-hc-says-there-is-a-general-feeling-that-christian-institutions-are-unsafe/articleshow/70700615.cms

[5] TheNewsMinute, In a win for students, Madras Christian College dismisses prof found guilty of sexual harassment, Jayarajan, Tuesday, July 16, 2019 – 18:39

[6] https://www.thenewsminute.com/article/win-students-madras-christian-college-dismisses-prof-found-guilty-sexual-harassment-105563

[7] தமிழில் கடவுளை அவன், இவன் என்று பேசுவது, எழுதுவது வழக்கம், அதனால், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

[8] கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம், WebDesk, Aug 16, 2019

[9] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-christian-college-women-students/

[10] தினமலர், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் பாதுகாப்பானதா ?, Updated : ஆக 17, 2019 18:16 | Added : ஆக 16, 2019 17:47

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2345457

[12] The Hindu, Sexual harassment case: HC refuses to interfere in show-cause notice to Madras Christian College staff, Legal Correspondent CHENNAI , AUGUST 17, 2019 01:05 IST. UPDATED: AUGUST 17, 2019 08:18 IST

[13]  https://www.thehindu.com/news/cities/chennai/hc-refuses-to-interfere-in-show-cause-notice-to-mcc-staff-college-took-the-step-against-teacher-after-34-students-levelled-charges-of-harassment/article29114275.ece

[14] Times of India, Christian institutions ‘unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST

[15] https://timesofindia.indiatimes.com/city/chennai/christian-institutions-unsafe-for-girl-students-hc-judge/articleshow/70708267.cms

[16] NDTV.News, Christian Co-Ed schools regarded ‘Highly unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST.

[17] https://www.ndtv.com/india-news/general-feeling-that-christian-co-ed-schools-highly-unsafe-for-girls-future-court-2086209

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

திசெம்பர் 21, 2013

இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

 Archbishop, Ireland ambassador etc.20-12-2013

இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள்: இந்திய பெண்கள் கத்தோலிக்கப் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பிடோபைல் போன்ற குற்றங்களை செய்து வரும் போது, தெரியாத ஏதோ ஒரு பெண்மணியை நினைவு கூர்ந்து பாராட்டு விழா நடத்தி அதைப் பற்றி செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. “தி இந்து” கத்தோலிக்க நானோ நேகிளை பற்றிய தொண்டு பாராட்டப் பட்டதடென்று செய்தி வெளியிட்டது. ஆனால், “இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன்” என சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி [ Archbishop of Madras-Mylapore Most Rev. George Antonysamy] கூறினார்[1], என்று “தினமலர்” வெளியிட்டது. இதனால், என்ன இந்த விசயம் என்று ஆராய்ந்த போதுதான், இது வேண்டுமென்றே இந்தியர்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத கத்தோலிக்க சமாசாரங்கள் என்று தெரிய வந்தது.

Archbishop, Ireland ambassador etc.20-12-2013 - Nano Nagle

 நானோ  நேகிளை  மரியாதைக்கும்  கண்ணியத்துக்கும்  உரியவர்  என்று வாடிகன்  வெளியிட்டதாம்: கத்தோலிக்க திருச்சபையில், பிரசன்டேசன் சிஸ்டர்ஸ் [Presentation Congregation] அமைப்பை நிறுவிய, நானோ நேகிளை [Venerable Nano Nagle], மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் உரியவர் என அக்டோபர் மாதம், வாடிகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது[2]. இது, புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையாகும்[3]. வாடிகன் வெளியிட்ட அறிவிப்பை கொண்டாடும் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது[4]. இதில் சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி, இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர் ராஜீவ் மேச்சேரி [Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri ] உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[5].

20-12-2013 - Nano Nagle-mission statement etc

நானோ  நேகிள்  போல  புத்தகங்கள்  படிக்க  வேண்டும், பேஸ்  புக்  பார்க்கக்  கூடாது: இதில், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசியதாவது:நானோ நேகிள், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும் கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்த போதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதை, சகோதரிகள் உணர வேண்டும். இறை வார்த்தையையே, வேதமாக நினைத்து செயல்படும் சகோதரிகள், அவருடைய வார்த்தைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனில், நிகழ்காலத்தின் தேவையை உணர்ந்து, சேவை புரிய வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு எதிராவன் என, நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில் செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன். நானோ நேகிள் காலத்தில், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லை. அவருக்கு நிறைய நூல்கள் படிக்க கிடைத்தன. அதனால், தான் பயணிக்கப் போகும் பாதையை புரிந்து கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். இளைய தலைமுறையினர், நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அதன் மூலம், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்“, இவ்வாறு, அவர் பேசினார்[6].

20-12-2013 - Nano Nagle- sufferings of Indian women by the catholics

இந்தியப்  பெண்மணிகள்  கத்தோலிக்கர்களால்  கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  போது  அந்நியப்  பெண்ணின்  பாராட்டுவிழா என்ன?: அதெல்லாம் சரிதான், அதே நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிகள் தினமும் இந்தியப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்களே, இதைப் பற்றி ஏன் ஒன்றும் கூறாமல், கண்டிக்காமல் இருக்க வேண்டும். இவர்கள் என்ன செய்தித் தாள்களைப் படிக்காமல் இருக்கிறார்களா இல்லை, அந்த பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை இவருக்குத் தெரியாதா அல்லது அவர் ஒன்றும் விவகாரங்களை இவருக்கு அறிவிக்கவில்லயா? பிறகென்ன, ஒரு அந்நிய பெண்ணின் புகழை இங்கு பாடிக் கொண்டு, இந்தியப் பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான், அந்த அம்மணியின் புகழ் பாடும் லட்சணமா? அபார்ஷண் செய்தி ஐந்து மாதச சிசுவைக் கொன்று சர்ச்சின் வளகத்தில் உள்ள கல்லறையில் ஒரு பாதிரி புதைத்துள்ளான். அப்படியென்றால், கத்தோலிக்கக் கன்னிமார்களுக்குக் கூட இரக்கம் இல்லையா? இந்தியப் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமாகி விட்டனரா?

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

காலனிய  ஆதிக்கத்தை  எதிர்த்த  பெண்மணி  என்றால், எந்தகாலனிய  ஆதிக்கம்,   எங்கு  என்று  சொல்லாமல் கதை  அடிப்பது  ஏனோ?: ராஜீவ் மேச்சேரி பேசும் போது[7], உங்களுடைய குறிக்கோள் மற்றும் தூரப்பார்வை சமூகத்தின் தேவைகளுக்காக இருக்க வேண்டும். சாதாரண மனிதன் தான் எதனை நம்புகிறானோ அதற்காகப் போராட வேண்டும். நானோ நேகிள் அயர்லாந்தில் கத்தோலிக்க படிப்பிற்காக தொண்டாற்றியவர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து ஏழை மக்களுக்கு பள்ளிகள் அமைத்துள்ளார். பிரசன்டேசன் காங்கிகேஷன் பல பள்ளிகளை உலகம் முழுவதும் நிறுவியுள்ளது, என்று விளக்கினார். “தி ஹிந்து” இதன் விவரங்களை விழாக்கு முன்னர் மற்றும் பின்னர் நன்றாகவே வெளியிட்டுள்ளது[8]. காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த பெண்மணி என்றால், எந்த காலனிய ஆதிக்கம், எங்கு என்று சொல்லாமல் கதை அடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

Action against sex-cardinals, bishops, pastors etc Dec.2013

யார்  இந்த  நானோ  நேகிள்  –  இந்தியாவிற்கு  என்ன  சம்பந்தம்?: நானோ கேகிள் (1718-1784) அயர்லாந்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் போது வாழ்ந்தவர். அதாவது ஆங்கிலேயர் புருடெஸ்டென்ட் கிருத்துவர்கள், இவர்கள் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்பதினால், சுன்னி-ஷியா முகமதியர்களைப் போல அடித்துக் கொண்டிருந்தனர். இந்த அம்மையாரைப் பற்றிய விவரங்கள் அதிகாரப் பூர்வமாக ஒன்றும் தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்திருப்பதாக நம்பப்படுகிறது என்றெல்லாம் தான் கதை சொல்கிறார்கள். இன்னொரு கதையின் படி, பார்ட்டிகள், கிளப்புகள் என்று ஜாலியாகச் சுற்றி வந்த பெண்மணி என்றும் சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர்[9]. பிரெஞ்சு நாட்டில் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ்ந்த சீமாட்டி என்றும் கூரப்படுகிறதாம்! எது எப்படியிருந்தாலும், இந்தியர்களுக்கு, இப்பொழுது இந்த கதைகள் எல்லாம் தேவையா என்ற கேள்விதான் எழுகின்றது. தொடர்ந்து நடந்து வரும் கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், களியாட்டங்கள், கொக்கோக பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், பிடோபைல் குரூரக்குற்றங்கள், சிசு வதைகள் முதலியவற்றை மறைக்கத்தான் இந்த விழா நாடங்கள் என்றே தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] The announcement by the Pope brings the declaration of Sainthood for Nano Nagle a step closer, as her life of heroic virtue has been officially acknowledged by the Vatican, speakers noted.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[3] Nano Nagle has been declared Venerable by Pope Francis – October 31, 2013.  Vatican website announcement , Vatican City, 31 October 2013 (VIS) – Today, during a private audience with Cardinal Angelo Amato S.D.B., prefect of the Congregation for the Causes of Saints, Pope Francis authorised the Congregation to promulgate the following decrees: HEROIC VIRTUES: Servant of God Honora “Nano” Nagle (John of God), Irish foundress of the Union of the Presentation Sisters of the Blessed Virgin Mary (1718-1784) and all Presentation Sisters around the world.

[4] தினமலர், இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு, பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:35 IST

[5] தினமலர், “இளையதலைமுறையினர்பேஸ்புக்கேகதிஎனஇருப்பதுதவறு“, டிசம்பர் 21,2013,08:57 IST

[7] “Your vision and mission should be according to the needs of the society,” he added. Honorary Consul of Ireland in Chennai Rajeev Mecheri said the event reiterated the fact that an ordinary person could be extraordinary if they are willing to fight for what they believe in. Nano Nagle is acknowledged as one of the greatest pioneers of Catholic education in Ireland. She defied the colonial order and was successful in setting up schools for the poor. The Presentation Congregation has set up schools in many parts of the world.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nano-nagles-contributions-hailed/article5485357.ece

[8] Time to celebrate, December 20, Sacred Heart, Church Park, 4.30 p.m – Sacred Heart conducts an event to celebrate the veneration of Nano Nagle (the founder of The Presentation Sisters) by Pope Francis. The Archbishop of Madras —Rev. Dr. George Antonyswamy will grace the occasion as the chief guest and The Honorary Consul of Ireland in Chennai, Rajeev Mecheri will be the guest of honour in the presence of The Presentation Sisters (PBVM) of the South East Region.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/from-the-diary/article5463610.ece

[9] According to one account she had a hectic social life in Paris – “balls, parties and theatre outings, all the glamour of the life of a wealthy young lady”. It was after one of these parties that she noticed a group of wretched-looking people, huddled in a church doorway and was taken aback by the contrast between her wealthy, privileged life and that of the Paris poor.

http://www.independent.ie/lifestyle/education/nano-nagle-remains-an-influential-educator-1722506.html

கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்!

திசெம்பர் 10, 2013

கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்!

போப் செக்ஸ் கமிட்டி அமைக்க உத்தரவிட்டார் 05-12-2013

“வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைக்க உத்தரவு: கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றால் நொந்து போன போப், ஒரு “வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைத்துள்ளார்[1]. இவர்கள் தேர்ந்தெடுக்குக் நிலைகளில் வடிகட்டி ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளத் தக்கவரை மட்டுமே அத்தகைய பதவிகளை வகிக்க வரைமுறைகள் வழிவகுக்கப் படுகின்றன. 100% தூய்மை எந்த கார்டினல், பிஷப், பாஸ்டர் போன்றவர்களில் இல்லை என்பது தெரிந்த விசயமாகி விட்ட நிலையில், இத்தகைய நீர்த்தமுறைகளில் சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன என்று தெரிகிறது. புதிய போப் பதவிக்கு வந்தவுடனே “சீர்திருத்தம்” என்றெல்லாம் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வந்தன[2]. இந்த கமிட்டியில் கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்தாம் இருப்பார்கள். அதாவது, குற்றஞ்சாட்டப் பட்டவர்களை, அதே பதவியில் இருக்கும் மற்றவர்கள் விசாரிப்பார்கள் என்றாகிறது[3].

Vatican sex enquiring committee Dec 2013

பலவிதமான செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ள / ஈடுபட்டிருந்த போப்புகள்[4]: போப்புகள் எத்தகைய செக்ஸுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு, கிருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்கள்:

  1. திருமணம் செய்து கொண்ட போப்புகள்.
  2. போப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்த போப்புகள்.
  3. போப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்தவர்கள் என்று நிலையில் இருக்கும் போப்புகள்.
  4. போப்பாக அறிவிக்கப் படும் நிலையேலேயே செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் / கொண்டிருந்த போப்புகள்.
  5. ஆண்களையே செக்ஸுக்கு உபயோகப்படுத்தி வந்த போப்புகள்.

போப்புகள் நிலையே இவ்வாறிருப்பதனால், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

Action against sex-priests etc Dec.2013

ஐக்கிய நாடுகள் சங்கம் வாடிகன் செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டது: ஐக்கிய நாடுகள் சங்கம் கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டிருந்தது[5]. இன்றைக்கு உலகம் முழுவதும் பெண்கள், சிறார், மனித உரிமைகள் முதலியவற்றிற்காகப் போராடி வரும் இயக்கங்கள், இவற்றைப் பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாடிகன் அவற்றைக் கொடுக்க மறுத்து விட்டது. சில நாட்களில் சிறுவர்களை பாதித்துள்ள செக்ஸ் குற்றங்களை ஆய்ந்து அவர்களுக்கு உதவி செய்ய 05-12-2013 அன்று ஒரு கமிட்டியைக் கூட்டத் தீர்மானித்து அறிவித்தார்[6]. ஏனெனில், உலகம் முழுவதும் அத்தகைய செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி நாறிவிட்டதால், பலர் வாடிகன் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர்[7]. ஆனால், இந்த கமிட்டியே ஒரு கண்துடைப்பு[8], புற்று நோயாளிக்குக் கொடுக்கப் படும் உதவி போன்றது என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர்[9].

Action against sex-cardinals, bishops, pastors etc Dec.2013

பகுதி பிரித்து, பங்குப் போட்டுக் கொண்ட செக்ஸ் சமாஜாரங்கள்: கிருத்துவத்தைப் பொறுத்த வரையிலும் செக்ஸ், பாலுறவு, சிறுமியர்-சிறுவர்-வன்புணர்ச்சி, காமக்களியாட்டங்கள், இறையியல் உணர்ச்சி கூடுதல்கள், கன்னியாஸ்திரிக்களின் கூட்டு விழாக்கள், முதலியன சகஜமாகி விட்டன. நவீன காலத்தில் அவர்களது செக்ஸ் நடத்தைகளும் நாகரிகமாகவே ஆகிவிட்டன. டையோசிஸ், பங்குத் தந்தை, வாரியம், ஊழியப் பகுதி என்றெல்லாம் இடங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு, சுழற்சி முறையில் செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். இந்தியாவிலேயே, கன்னியாஸ்திரிக்களை ஒரு இடத்திலிருந்து, மற்ற இடத்திற்கு இடமாற்றம் செய்து, பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் செக்ஸ் விளையாட்டு ஆடிகொண்டிருந்தனர். அபயா கொலைவழக்கு, எப்படி ஒரு கன்னியாஸ்த்ரியை இரு பாதிரிகள் புணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கன்னியாஸ்த்ரி பார்த்து விட்டதால், அவள் கொலை செய்யப் பட்டாள் என்று தெரியவந்தது. திருச்சி பிஷப்போ கன்னியாஸ்த்ரியை கற்பழித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

Indian cardinal Oswald Gracias

இந்திய மற்றும் தமிழக ஊடகங்களின் அணுகுமுறை: “கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ்” என்ற கூட்டமைப்பின் தலைமையகம் தில்லியில் உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரம் மிக்க மற்றும் அரசிலை ஆட்டி வைக்கக் கூடிய அசுடர பலம் கொண்ட நிறுவனம் ஆகும். வாடிகனின் இந்திய நீண்ட கரமாக செயல் பட்டு வருகின்றது. சோனியா மைனோ இருப்பதினால், பலமுறை கிருத்துவர்கள் தங்களுக்கு ஆதரவான ஆட்சி இந்தியாவில் உள்ளது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களை இது கட்டுப்படுத்தி வருகின்றது. இதனால், தமிழகத்தில் இத்தகைய கிருத்துவ கற்பழிப்புகள் காமக் களியாட்டங்கள் ஊடகங்களில் அமுக்கியே வாசிக்கப் பட்டது[10]. ஏனெனில், ஊடகங்களில் உள்ளவர்கள் பெரும்பான்யானவர்கள் கிருத்துவ சார்புடையவர்கள் மற்றும் கிருத்துவர்கள். தங்களுடைய மதத்திற்கு கெட்டப் பெயர் வரும் வகையில் எந்த செய்தி, விமர்சனம் மற்றும் தொடர்ச்சியான கருத்துருவாக்கம் போன்றவற்றிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் கவனமாகவே இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சென்ற நவம்பரில் புரோனோகிராபியில் ஈடுபட்டவர்கள் பலர் உலகமெங்கிலும் கைது செய்யப்பட்டனர்[11].

இதற்கு பதிலாக எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள் – உதாரணத்திற்கு கந்தமால் என்று செய்திகளை வெளியிடுவார்கள்[12].

பழைய போப்பிற்கு ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன[13].

போப் விலகியபோது கூட இத்தகைய காரணங்கள் எடுத்துக் காட்டப் பட்டன[14].

ஆகையால் தான், பல ஆண்டுகளாக கிருத்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த செக்ஸ் புகார்கள், கற்பழிப்புகள் பற்றி அனைத்துலக அளவில் விவாதங்கள் நடந்து வந்தாலும், இந்தியாவில் அவை அடக்கி வாசிக்கப் படுகின்றன, கத்தோலிக் பிஷப் மாநாடுகளில் குறுக்கப்பட்டு விடுகின்றன. ஊடகங்களுக்குக் கசிவது கூட அடைக்கப் பட்டு, கிருத்துவம் புனிதமாகவே காட்டப் பட்டு வருகிறது.

வேதபிரகாஷ்

© 10-12-2013


[3] Cardinal Sean O’Malley, the archbishop of Boston, announced the creation of the commission Thursday  (05-12-2013) at the conclusion of a meeting between Francis and his eight cardinal advisers who are helping him govern the church and reform the Vatican bureaucracy. Boston was the epicenter of the 2002 clerical sexual abuse scandal in the U.S.

http://www.huffingtonpost.com/2013/12/05/pope-francis-commission-sexual-abuse_n_4390452.html

[5] UN requested Vatican for information on alleged abuse by priests, nuns or monks, but Vatican refused to provide such information claiming that it is their internal matter and they take necessary action.

http://www.bbc.co.uk/news/world-europe-25235724

[6] Established by Pope Francis based on a proposal of the Council of Cardinals – A Commission for the protection of minors. Pope Francis has decided to establish a Commission for the protection of minors for the purpose of assisting him in the Holy See’s commitment to the protection of children and to pastoral care for victims of abuse. Cardinal Sean Patrick O’Malley, Archbishop of Boston, announced this in the Holy See Press Office today, 5 December, during a briefing at the end of the Council of Cardinal’s meetings.

http://www.osservatoreromano.va/portal/dt?JSPTabContainer.setSelected=JSPTabContainer%2FDetail&last=false=&path=/news/vaticano/2013/280q13-Sar–costituita-da-Papa-Francesco-su-propos.html&title=A%20Commission%20for%20the%20protection%20of%20minors&locale=en

[7] One of the main Italian associations of clerical abuse survivors has said it has “little trust” in the Vatican.Pope Francis has said dealing with sex abuse is vital for the Church’s credibility. Earlier this week the Pope expressed his compassion for the many victims of sex abuse by priests around the world.

http://www.bbc.co.uk/news/world-europe-25235724

[9] But the Survivors Network of those Abused by Priests (SNAP), a US campaign group, said the initiative was “meaningless” and just “a toothless church panel”, arguing secular authorities should deal with clergy sex crimes.”It’s like offering a band aid to an advanced cancer patient,” SNAP director David Clohessy said.”Only decisive action helps, not more studies and committees and promises,” he added.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h0DA5DwlrSp5N_AyqXaKStOvWioA?docId=c9823922-4201-4f3b-bb8d-cc3909bf522c

பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்: அடித்துக் கொள்வது ஏன்? கர்த்தர் என்ன செய்கிறார்?

மே 9, 2010

பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்: அடித்துக் கொள்வது ஏன்? கர்த்தர் என்ன செய்கிறார்?

கோவையில் பாதிரியாரைத் தாக்கியதாக பேராயர் கைது!
தினமணி, First Published : 08 May 2010 01:16:19 PM IST
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டால் விரோதம் வருமா? கர்த்தர் எப்படி மௌனமாக இருந்தாரோ? கோவை அருகே சிஎஸ்ஐ பாதிரியாரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராயர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் கவிராஜ். கடந்த ஏப்ரலில்  சிஎஸ்ஐ கிறிஸ்தவர் நலச் சங்கம் சார்பில் கோவை மறைமாவட்ட பேராயர் மாணிக்கம் துரையைக் கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிஎஸ்ஐ முன்னாள் பிஷப் திடீர் கைது

தினகரன் – ‎6 மணிநேரம் முன்பு‎
கோவை: கோவை சிஎஸ்ஐ பிஷப்பாக இருந்தவர் மாணிக்கம் துரை. திருச்சபைக்கு சொந்தமான ரூ.3 கோடி பணத்தை கையாடல் செய்து விட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிஷப் பாதிரியைத்தாக்குவது: இதையடுத்து இருவருக்கும் விரோதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அண்மையில் கூடலூர் சென்ற பாதிரியார் கவிராஜை மாணிக்கம்துரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கவிராஜ் கூடலூர் போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகுமாறு மாணிக்கம் துரைக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டபோதும், அவர் ஆஜராகவில்லை. ஆமாம், இந்த கிருத்துவர்கள்-முஸ்லீம்கள் என்றாலே இந்தியச் சட்டங்கள் ஒன்றுமே வேலை செய்யாது போலும்! இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

போதகருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் கோவை சி.எஸ்.ஐ

தினத் தந்தி – ‎4 மணிநேரம் முன்பு‎ கூடலூரில் போதகருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் கோவை சி.எஸ்.ஐ. முன்னாள் பிஷப்பை போலீசார் நேற்று கைது செய்தனர். சி.எஸ்.ஐ. முன்னாள் பிஷப் கோவை சி.எஸ்.ஐ.
இதையடுத்து, கூடலூர் எஸ்ஐ பசவராஜ் தலைமையிலான போலீஸார், கோவையில் ரேஸ் கோர்ஸ் வீட்டிலிருந்த பேராயர் மாணிக்கம் துரையை இன்று கைது செய்தனர்.

கோவையில் பாதிரியாரைத் தாக்கியதாக பேராயர் கைது

தினமணி – ‎18 மணிநேரம் முன்பு‎
கோவை அருகே சிஎஸ்ஐ பாதிரியாரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராயர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தில்
சட்டமீறல் புரட்சி: முன்பு டில்லி இமாம் ஒருவர் இப்படியெல்லாம் சட்டமீறல் புரட்சி செய்துள்ளார். அவரையும் வெப்றுவிட்டு புதிய சாதனை படைக்கக் கிளம்பியுள்ளார் போலும், இந்த பேராரர்-பிஷப்-ஏசுவின் பிரதிநிதி!

கோவை மண்டல சி.எஸ்.ஐ. பேராயர் கைது

வெப்துனியா – ‎21 மணிநேரம் முன்பு‎
கொலை மிரட்டல் வழக்கில் கோவை மண்டல சி.எஸ்.ஐ. பேராயர் மாணிக்கம் துரை திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். கூடலூர் சி.எஸ்.ஐ. பேராயர் சுவிராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக
ஆஹா, சட்டத்தின் அருமையே அருமை!
CSI-multicrore-fraud

CSI-multicrore-fraud
கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிக்லே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது.

கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்!

ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க?

இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கர்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்).

Bishops-brother-gets-bail

Bishops-brother-gets-bail

முதலில், சட்டம், நீதி, போலீஸ் முதலிய துறைகளில் மதம், சாதி, அரசியல்………..முதலியவைக் கலக்கக் கூடாது.
Fight-for-wealth-Christian-way

Fight-for-wealth-Christian-way

ஆனால், அத்தகைய நியமனங்கள் எல்லாமே அரசியல் ரீதியாகத்தான் நடக்கும்போது விபரீதம் ஆகிறது, போதாக் குறைக்கு “மைனாரிட்டி” என்ற பூதம் வேறு, அதனால் இவர்கள் எல்லோருமே தயங்குகிறர்கள், ஏன் பயப்படவும் செய்கிறார்கள்!

முந்தைய செய்திகள், விவகாரங்கள் (ஜனவரி 2010): கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் பிஷப் மாணிக்கம் துரை, சேலத்தில் உயர் பதவி வகிக்கும் இரு போலீசாரின் ஆதரவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் பிஷப்பாக இருப்பவர் மாணிக்கம் துரை. கோவை, தர்மபுரி, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சி.எஸ்.ஐ., பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்விக் கூடங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட இந்த எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள், சொத்துக்களின் பராமரிப்பு, நிர்வாகப்பணிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கண்காணித்த போதிலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், கோவை திருமண்டலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் பிஷப்பையே சார்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், பிஷப் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. “அவரிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தினர்.

Bishop-arrested-pastor-attack-case

Bishop-arrested-pastor-attack-case

போலி ஆவணம் தயாரித்ததாக புகார்;  பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு

மதுரை, பிப். 18 2010: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் உட்பட 2 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை பழங்கானத்தத்தை சேர்ந்த தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த போது, பசுமலை சி.எஸ்.ஐ. சபை நிர்வாகக் குழு தேர்தல் முறை கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்தேன். இதனால் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் என் மீது விரோதம் கொண்டார். என்னை ராமநாதபுரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனை தூண்டி விட்டு, பிஷப் எனக்கு தொல்லை கொடுத்தார். எனக்கு 22 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சேமநல நிதியிலிருந்து மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க விடவில்லை. 6-வது ஊதியக் குழு பாக்கி தொகையும் வட்டிப் பணமும் கிடைக்க விடாமல் செய்து விட்டனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் என் கையெழுத்தை அழித்தும், திருத்தியும் மோசடியாக போலி ஆவணம் தயாரித்து நஷ்டம் ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், பிஷப் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் தேவராஜ் அதிசயராஜ் மனுத்தாக்கல் செய்தார்.

தேவராஜின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பிஷப் கிறீஸ்டோபர் ஆசீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.

கடந்த 10ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிஷப் மாணிக்கம் துரை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணிக்கம் துரை தலைமறைவானார். சேலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு போலீசாரே ராஜமரியாதை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் தான், மாணிக்கம் துரையை சி.பி.சி.ஐ.டி.,யின் வலையில் இருந்து பாதுகாத்து, நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற வக்கீல்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னையிலுள்ள உயர்அதிகாரிகள் வரை புகார் சென்றுள்ளது. மாணிக்கம் துரை ஏற்கனவே கோவை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

கோவையில் கைதான மாஜி பிஷப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18461

Important incidents and happenings in and around the world

ஊட்டி : உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால், கோவை சி.எஸ்.ஐ., முன்னாள் பிஷப் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஊட்டி அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், நடுவட்டம் சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் கவிராஜை மிரட்டிய வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், கோவை சி.எஸ்.ஐ., திருச்சபை முன்னாள் பிஷப் மாணிக்கம் துரை, நேற்று முன்தினம் கோவையில் கைது செய்யப்பட்டார்.

கைதானவுடன் எப்படி நெஞ்சுவலி வருகின்றது என்று தெரியவில்லை: அங்கிருந்து கூடலூர் போலீசார், மாணிக்கம் துரையுடன் நடுவட்டம் பகுதிக்கு வரும் போதே, கூடலூர் கோர்ட் நீதிபதி விடுமுறையில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், ஊட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாணிக்கம் துரை நெஞ்சு வலி என கூறியதால், நீதிபதி சுப்ரமணி அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டார். ஊட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் இரவு அவர் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் ரகுநாத் கூறுகையில், ”மாணிக்கம் துரையை பரிசோதித்த போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. மேலும், இதயத்தில் சிறு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே இதய சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

கைது, நெஞ்சுவலி, ஆஸ்பத்திரி, சிகிச்சை, பிணை விடுதலை, கேஸ் அமுக்கப் படுதல்: பொதுவாக வழக்குகள் இப்படித்தான் செல்கின்றன…………………. முதலில் பரபரப்பான செய்திகள் வரும்………………… பிறகு, அப்படியே அதே வேகத்தில் குறைந்து, மறைந்து விடும்………….. குற்றஞ்சாட்டப் பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த “குற்றவாளிகள்” ஜாலியாக உலா வந்து கொண்டிருப்பார்கள்………….., வேலை செய்து கொண்டிருப்பார்கள்………………., இல்லை, தற்பொழுதைய நிலையில் – கற்பழித்துக் கொண்டிருப்பார்கள், ஊட்டியிலேயே உல்லாசமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள்; புளு-ஃபிளிமை எடுத்துக் கொண்டிருப்பார்கள், அப்-லோட் செய்வார்கள்;……………

மோசடி பிஷப் ஜாமீனில்: எதிர்பார்த்தபடியே அந்த பிஷப்பை ஜாமீனில் விட்டுவிட்டார்களாம்! இதே மாதிரித்தான் எல்லா மோசடி பேர்வழிகளும் வெளியே வந்து விடுகிறார்கள்!