பாத்திமா சோபியா கொலை வழக்கில் ஒரு பிஷப் மற்றும் நான்கு விகார்–கிருத்துவ சாமியார்கள் 12-08-2016 அன்று கைது!
பாத்திமா சோபியா கொலையும், தாய் சாந்தி ரோஷாலினின் நீதி போராட்டமும்: பாத்திமா சோபியா (Fathima Sofiya 19) மடாலய-குருகுலத்தில் ஜூலை 23, 2013 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சோபியாவின் கடிதத்தில் ஆரோக்கிய ராஜ் தன்னை பாலியல் ரீதியில் புணர்ந்துள்ளான் என்றும் எழுதியிருந்தாள். தற்கொலை என்று சர்ச் அதிகாரிகள் கூறி, பிணத்தை எடுத்துச் செல்லக் கூறினர். ஆனால், அவளது தாயார் [Shanthi Roselin] அது கொலைதான் என்றும், கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்ச் அதிகாரிகள் முதலியோருடம் மன்றாடி, கெஞ்சி மண்டியிட்டு கேட்டப்பிறகும், சர்ச் அதனை மூடி மறைக்கப் பார்த்தது. தொடர்ந்து கற்பழிப்பு, பாலியன் வபுணர்ச்சி, கொலைகள், கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்துதல், பிஷப் முதல் பாஸ்டர் வரை இக்குற்றங்களில் ஈடுபடுதல் என்றுள்ளதால், இவ்வழக்கை எப்படியாவது மறைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டது. கேரள கிருத்துவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசியல், அதிகாரம், பணம் முதலியவற்றையும் பிரயோகித்து, ஏப்ரல் 2014ல் அது தற்கொலை என்று வயலார் போலீஸ் வழக்கை மூடியது. இதனால், சாந்தி ரோஷாலின் பல அரசு அதிகாரிகள், முதலியோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சினார், முறையிட்டார். இதனால், இவ்வழக்கு மறுமடியும் திறக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாந்தி ரோஷாலின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு ஆணை பிறப்பித்தல்: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[1]. இதனால், 2015ல் எச். ஆரோக்கியராஜ் [Fr H Arockyaraj] என்ற சந்திரபுரத்தில் உள்ள சேயின்ட் ஸ்டான்லிசாலஸ் சர்ச்சின் பாதிரி [parish priest of St Stanlisalus Church in Chandrapuram] இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். இவனும் மறைந்து தான் இருந்தான். சாந்தி ரோஷாலின் புகார் கொடுத்து, அதை பாலக்காடு மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக் கொண்டு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு தான் நிலைமை மாறியது. மே 2016ல், பாலக்காடு மாஜிஸ்ட்ரேட், பிஷப் அக்வினாஸின் [Bishop Acquinas] பங்குள்ளதை விசாரிக்க ஆணையிட்டார். கோயம்புத்தூர் டையூசிஸின் விகார் ஜெனரல் ஜான் ஜோசப் ஸ்டைன்ஸ் [Coimbatore diocese vicar general Fr John Joseph Stains], ஆரோக்கிராஜை சர்ச்சிலிருந்து விலக்கி விட்டோம் என்றெல்லாம் வாதித்துப் பார்த்தார். சர்ச் அதிகாரம் பலவழிகளில் இதனை தடுக்கப் பார்த்தது.
ஜூலை முதல் ஆகஸ்ட் 2016 வரை பிஷப் மற்றும் பாதிரிகள் மறைந்திருந்தது முதலியன: போலீஸார், பிஷப் அக்வினாஸ், மற்றும் குலந்தை ராஜ், மடலை முத்து மற்றும் லாரன்ஸ் மெல்கியூர் [Bishop Acquinas and the priests — Kulantha Raj, Madalai Muthu and Lawrance Melcure, Coimbatore Kottur Christ King Church] என்ற மூன்று பாதிரிகள் என மொத்தம் நான்கு பேர்களை கொலையை மறைத்தக் குற்றத்திற்காக 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. டைம்ஸ் ஆப் இந்தியா, இப்பெயர்களை சிறிது மாற்றி குறிப்பிட்டுள்ளது.
- பிஷப் தாமஸ் அக்யுனிஸ் [Bishop Thomas Acunis],
- பி.எப்.மதுலை முத்து B F Madhulaimuthu, a priest from Kerala]
- குலந்தை ராஜ் [father Kulandiaraj]
- லாரஸ் மெல்கி, [father Lawrence Melque[3]].
மே 2016லேயே நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 201 [destroying evidence or giving false information, ஆதாரங்களை அழித்தல் மற்றும் போய்யான தகவல்களைக் கொடுப்பது] மற்றும் 202 [intentionally omitting information, வேண்டுமென்றே தெரிந்த தகவலை சொல்லாமல் மறைப்பது]ன் கீழ் வழக்கு பதிவு செய்து, இவர்களை கைது செய்ய ஆணையிட்டது[4]. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை.
பிஷப் கைதானாரா இல்லையா?: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[5]. பிறகு அதனை நீதிமண்ரமும் ஏற்றுக் கொண்டது. சோபியா எழுதிய கடிதம்[6] மற்றும் ஆரோக்கிய ராஜ்[7], குலந்தை ராஜ், மடலை முத்து முதலியோரின் தொலைபேசி பதிவுகள் முதலியவை கொலை என்று எடுத்துக் காட்டியதால், பிறகு பிரிவு 302ம் [கொலைக்குற்றம்] சேர்க்கப்பட்டது[8]. அவை எல்லாமே ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. மே முதல் ஆகஸ்ட் வரை ஜாமீன் கேட்டு காலம் தாழ்த்தினர்[9] மற்றும் மறைந்திருந்தனர்[10]என்றெல்லாம் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இப்பொழுது 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. பாலக்காடு போலீஸரிடம் சரணடைந்தனர் என்று மலையாள நாளிதழ்கள் கூறுகின்றன. இப்பொழுது கூட பிஷப் தலைமறைவாகி உள்ளார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன[12]. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்து பயப்படும், இப்பிஷப்பை என்ன செய்வது? கர்த்தர் இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா, ஆதரிக்கிறாரா அல்லது கண்டுகொள்ளவில்லையா?
12-08-2016 அன்று பிஷப் மற்றும் நான்கு பாதிரிகள் கைது என்ற விசயம் தமிழ் ஊடகங்களில் வராமல் இருந்தது: கோயம்புத்தூர் சம்பந்தப்பட்ட இவ்விவகரங்களை தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றனவா, இல்லை வேண்டுமென்றே செய்திகளாஇ போடாமல் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இணைதளத்தில் தேடிப் பார்த்தபோது, கேரளாவில் கூட மலையாள மனோரமா போன்றவை இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்தும் அவை ஏன் மௌனம் சாதிக்கின்றன என்று தெரியவில்லை. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாள் மற்றும் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை. இவற்றிற்கெல்லாம் சாதாரணமாகக் கொதித்தெழும் போராளிகள் அமைதியாக இருக்கின்றனர். 2013லிருந்து இவ்வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை போலும். ஆக இவர்கள் எல்லோருமே செக்யூலரிஸ போதையில் இருந்தால், ஒன்றுமே தெரியாது போலும்! இத்தகைய ஊடக பாரபட்சமும் இருப்பதால் தான், இதனை எடுத்துக் காட்ட வேண்டியதாகிறது.
© வேதபிரகாஷ்
20-08-2016
[1] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/
[2] Indian Express, Kerala: Bishop, three priests held for hiding info on woman’s death
Written by Shaju Philip | Thiruvananthapuram | Published:August 14, 2016 4:48 am
[3] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Fathima-murder-case-Court-orders-arrest-of-4-priests/articleshow/52486499.cms
[4] The Times of India, Fathima murder case: Court orders arrest of 4 priests, TNN | May 29, 2016, 07.26 AM IST
[5] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/
[6] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/
[7] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/
[8] In a sting operation carried out by a local television channel, father H Arcockiaraj had confessed to his crime. After that the Kerala police re-opened the case and changed the sections to 302 (murder).
[9] http://news.keralaonline.in/Fathima-Sofia-murder-case-4-priests-and-Bishop-arrested-1376301
[10] http://www.ucanindia.in/news/bishop-three-priests-held-for-hiding-info-on-woman%E2%80%99s-death/32794/daily
[11] http://www.bignewslive.com/fathima-sofia-murder-case-4-vicars-arrested/ – .V7enIlt95dg
[12] ഫാത്തിമ സോഫിയ വധം: നാല് വൈദികര് അറസ്റ്റില്; ബിഷപ്പ് ഒളിവില്; പാലക്കാട്ടെ പള്ളിക്കെട്ടിടത്തിലെ കൊലപാതകം പുറത്തു കൊണ്ടുവന്നത് ഒരമ്മയുടെ ഒറ്റയാള് പോരാട്ടം.
http://ml.southlive.in/newsroom/kerala/fathima-sofia-murder-4-priests-surrendered