Posts Tagged ‘பாதிக்கப்பட்ட ஆசிரியை’

ஜேகப் பாரா மெடிகல் காலேஜில் செக்ஸ் லீலைகள் எப்படி அரங்கேறின? பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?

மார்ச் 22, 2019

ஜேகப் பாரா மெடிகல் காலேஜில் செக்ஸ் லீலைகள் எப்படி அரங்கேறின? பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?

Jacob Ravi - father and son

கிருத்துவ நிறுவனத்தின் பாலியல் விவகாரம்: குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி – ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி [Jacob Paramedical College at Irachchakulam ] – ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்ஸிங்ஸ் லைப் பௌண்டெஷன் டிரஸ்ட் [Blessings Life Foundation Trust] என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பல கல்வி நிறுவனங்களில் இது ஒன்று[1]. சி. ஜேகப் [C. Jacob] என்பவர் இவற்றைத் துவக்கினார். அவரது மகன் தான் இந்த ஜே. ரவி[2] அதாவது ஜேகப் ரவி என்ற காமக்கொடுங்கோலன். வழக்கம் போல ஊடகங்களும் செக்யூலரிஸ ரீதியில் ரவி கைத்து என்றே போட்டுள்ளனர். பெண்களுக்கு [Women Training Program, Awareness program..] பயிற்சி திட்டங்கள் என்று வைத்துக் கொண்டு அவர்களுக்கு தையல், கைத் தொழில்…போன்றவை சொல்லிக் கொடுக்கும் சாக்கில் கூட இவன் பாலியல் வேலைகளை செய்திருப்பான் போலிருக்கிறது. இங்கு ஆசிரியைகள் உள்பட 10 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார்[3]. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது[4]. இருப்பினும், இது வரை அவை மறைக்கப் பட்டு வந்துள்ளன. மேலும் இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும், கல்லூரி நிறுவனர் ரவி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். அந்த ஆசிரியையை கல்லூரி நிறுவனர் ரவி, அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பேசுவார். அந்த அநியாயமும் விசுவாசத்துடன் அமுக்கப் பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு இதுபோல நிறுவனர் ரவியின் அறைக்கு ஆசிரியை சென்றார். சிறிது நேரத்தில் நிறுவனர் அறையில் இருந்து ஆசிரியை அழுதபடி வெளியே ஓடி வந்தார். ஆசிரியை அழுதது பற்றி உடன் பணிபுரிவோர் கேட்டனர்[5]. அப்போது நிறுவனர் ரவி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை கூறினார்[6].

  Blesings Life Foundation

பாலியல் புகார் கொடுத்த ஆசிரியை, குடும்பம் தாக்கப்படுதல்: அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேராசிரியை தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் மற்றும் ஊழியர்கள் பேராசிரியையின் உறவினர்களை தாக்கினார்கள். இதிலிருந்து, அக்கூட்டம் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறாது என்ற் தெரிகிறது. பிறகு, சாதாரண மக்கள் அவனிடம் சஎன்ன செய்யமுடியும்? கல்லூரிக்குள் நடந்த மோதல் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

Jacob para-medical collge - 19-03-2019

பாதிக்கப் பட்ட ஆசிரியை விளக்கம் அளித்தல்: அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியை போலீசாரிடம் கூறியதாவது[7]: “கல்லூரி நிறுவனர் ரவி, அவரது அறைக்கு அடிக்கடி என்னை அழைத்து பேசுவார். அவரது பேச்சு எனக்கு பிடிக்கவில்லை. இதனால் நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனது அறைக்கு வந்த பின்பு கல்லூரி பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் என்னை சமரசம் செய்ய வந்தனர். பின்னர் நிறுவனர் ரவி, என்னை அழைப்பதாக கூறி அவரது அறைக்கு மீண்டும் என்னை அனுப்பி வைத்தனர்[8]. அங்கு சென்றதும் நிறுவனர் ரவி, என்னை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். நான், அவரை உதறி தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்தேன். இந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் கல்லூரிக்கு சென்று நிறுவனர் ரவியை சந்தித்து விளக்கம் கேட்டனர். அவர், எங்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு ஆசிரியை கூறினார்[9].

Jacob para-medical collge - 19-03-2019-2

இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுதல்: இதையடுத்து நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது[10]. இதில் கல்லூரி நிறுவனர் ரவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்து வந்தது உறுதியானது[11]. மேலும் முரண்டு பிடிக்கும் மாணவிகளை கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்து விடுவதாக மிரட்டி அவர்களை பணிய வைத்ததும் தெரிய வந்தது. கல்லூரி நிறுவனர் ரவிக்கு, பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் உடந்தையாக இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கல்லூரி நிறுவனர் ரவி, பேராசிரியைகள் நளினி, கலா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Jacob para-medical collge - 19-03-2019-3

பாதிக்கப் பட்ட மற்ற பெண்கள் யார்?: ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற மாணவிகள் யார் யாருக்கு? இந்தக் கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு பாலியல் பிரச்னை காரணமாக பல ஆசிரியைகள் வேலையை விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது[12]. ரவியின் பாலியல் தொல்லையை எதிர்க்காமல் இருந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் எந்தப் பிரச்னை ஏற்படுத்துவது இல்லை என்றும் எதிர்த்தால் அவர்களுக்கு அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது[13]. மேலும், இந்தக் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் சின்ன கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் ரவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் கல்லூரி நிர்வாகி ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நிறுவனர் ரவி, பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Jacob Ravi, Nela, Kala and others

22-03-2019 அன்று நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே, நளினிகலா உள்ளே: ரவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், போலீசார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் அவர், விடுதலை ஆனார். அவர், விடுதலை ஆன அதே நாளில் நாகர்கோவில் அருகே உள்ள பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியைகள் இருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைதானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் இரண்டு பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Jacob Ravi

பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?: நிர்மலா தேவிக்குப் பிறகு, வருகின்ற இந்த நீலா மற்றும் கலா என்கின்ற அந்த நிறுவனத்தின் டைரக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள், இத்தகைய, கீழ்த் தனமான வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளது திகைப்படையச் செய்கிறது. இது அபயா வழக்கையும் ஞாபகப் படுத்துகிறது. ஏனெனில், அங்கு ஒரு கன்னியாஸ்திரி பாதிரிகளுடன் உடலுறவு வைத்ததை தற்செயலாகப் பார்த்ததினால், அபயா கொலை செய்யப் பட்டாள். இப்பொழுதும், பிஷப் முலக்கல் வழக்கு அமுக்கப் படுகிறது. அந்நிலையில் ஜேக்கப் ரவி வழக்கு உருவகியுள்ளது. பிரச்சினை மதரீதியிலாக அலசப்படாமல் இருந்தாலும், ஏன் நிறைய கிருத்துவர்கள் இத்தகைய பாலியல் வன்மங்களில். செக்ஸ் கொடுரங்களில் இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்தாலும், ஏதோ காரணங்களுக்காக, அவையெல்லாம் அமுக்கி வாசிக்கப் படுகின்றன, அமுக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன என்றே தெரிகிறது. அரசியல், பணம், அதிகாரம் போன்றவை இருக்கின்றன என்பதும் தெரிகின்றன. பொதாகுறைக்கு சினிமா, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாகவே விளம்பரப் படுத்தி வருகின்றன. நர்ஸ் என்பவள் கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறாள். பெண்ணியம் பேசும் கூட்டங்களும் மௌனம் காக்கின்றன.

© வேதபிரகாஷ்

21-03-2019

Jacob Ravi, Nela, Kala and others-5.jpg

[1]  Blessings Life Foundation Trust Blessings Life Foundation Trust – http://www.blftindia.org/aboutus.aspx

[2] Dr. J. Ravi , President of the BLESSINGS LIFE FOUNDATION TRUST has whole heartedly devoted his life for the development of the organization having a vision to do good service for the depressed, the appressed and the deprived people of the society.

[3] தினத்தந்தி, பாலியல் புகாரில் கல்லூரி தாளாளர், 2 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டனர், பதிவு: மார்ச் 22, 2019 01:42 AM.

[4] https://www.dailythanthi.com/News/State/2019/03/22014202/Sexual-complaint-in-college.vpf

[5] புதிய தலைமுறை, ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிர்வாகி கைது, Web Team, Published : 20 Mar, 2019 10:26 pm

[6] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60710-college-professor-have-sexual-harassment-college-official-arrest.html

[7]  மாலைமலர், நாகர்கோவில் அருகே கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லைநிர்வாகி கைது, பதிவு: மார்ச் 21, 2019 12:21பதிவு: மார்ச் 21, 2019 12:21

[8]  The investigation has proved that some of the teachers and students had been sexually harassed by Ravi with the help of Nalini and Kala – joint directors Nalini, 30, and Kala, 28.

[9] https://www.maalaimalar.com/News/District/2019/03/21122156/1233332/Nagarcoil-near-college-teachers-and-students-harassment.vpf

[10] தமிழ்.ஒன்.இந்தியா, 20 மாணவிகள், 5 ஆசிரியைகள்காமலீலைகள் செய்த நாகர்கோவில் கல்லூரி நிர்வாகி கைது.. 2 பெண்களும் கைது, By D Suyambulingam,  Updated: Thursday, March 21, 2019, 13:08 [IST].

[11] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-para-medical-college-students-sexual-abused-by-college-administrator-344623.html

[12] விகடன், `பெண் ஊழியர்கள் உதவியுடன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை‘ – நாகர்கோவில் கல்லூரி நிறுவனர் கைது!, வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/03/2019) கடைசி தொடர்பு:17:45 (20/03/2019)

சிந்து ஆர், ரா.ராம்குமார் .

[13] https://www.vikatan.com/news/tamilnadu/152886-nagercoil-college-founder-arrested-for-sexual-abuse.html

பத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா?!

செப்ரெம்பர் 16, 2010

பத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா?!

ஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது[1]. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும். கிருத்துவர்களே இவர் மீது ஊழல் புகார் வேறு சொல்கின்றனர்[2].

பிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[3].

சின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை (15-09-2010) சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. வக்கீல்கள் விச்சரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.

உள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.

பாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[4]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தார் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ள சர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பா உள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத் தாக்கினர்[5].

சாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர்.    போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.    இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளீயே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒருவேலை, இந்த விதமாக விஷயத்தை அமுக்கப் பார்க்கிறாரோ என்னமோ?


[1] Archbishop Arulappa vs Acharya Paul – Madras High court 1985.

[2]http://www.ephesians-511.net/home.htm ;  http://www.ephesians-511.net/reports.htm

[3] தினமலர், டிவிகுழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561

[4] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=73219434-2107-4564-a1ad-76a3fd10d362&CATEGORYNAME=TCHN

[5] http://www.thenaali.com/newsinner.php?id=1374