Posts Tagged ‘தேர்தல்’

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா?

மார்ச் 22, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா?

தி இந்து கிருத்துவ அரசியல் கூட்டம் - படம். எல்.சீனிவாசன்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 13-03-2016: ஓட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியமான தலைவர்களை தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பேராயர் சின்னப்பா வேண்டுகோள் விடுத்தார்[1]. கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 13-03-2016 அன்று நடைபெற்றது. இதில், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: “நான் சிறுவனாக இருந்தபோது, அரசியல் கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டால் அது பாவமாக கருதப்பட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஊழல் இல்லாத தலைவர்களை, கையும், மனமும் கறைபடியாதவர்களை, சிறுபான்மையினரின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது கேவலம். நம் பணத்தை திருடி நம்மிடமே கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து, கண்ணியமான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”, என்று அவர் பேசினார்[2].

mediamen-detained-attacked-by-church

சின்னப்பாவும், வழக்குகளும்: இதே சின்னப்பா செப்டம்பர் 2010ல் ஊடகக்காரர்களை ஆள்வைத்து அடித்தார் என்பதை மறந்து விட்டிருப்பர்[3]. மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[4]. சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்[5]. சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[6].  இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர். ஆனால், இவர்கள் தாம் இப்பொழுது ஊழல் பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

dinamalar-16-sep-2010

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்இதன் பின்னணி: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பை நந்தபாக்கத்தில் இனிகோ இருதயராஜ் நடத்தி வருகிறார்[7]. இவர் முந்தைய தொழிற் அமைச்சர் டி.எம்.அன்பரசின் நெருங்கிய நண்பர், ஸ்டாலினுக்கும் வேண்டியவர். பல கம்பெனிகளின் டைரக்டராக இருக்கிறார். ஊழல் எதிர்ப்பு போலீஸார், அன்பரசு வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததால் நீலாங்கரையில் உள்ள இவரது வீடு மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் அலுவலகம் முதலியவற்றை சோதனையிட்டபோது, ஊழலுக்கான அத்தாட்சியாக இருக்கக் கூடிய பல ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்[8]. தான் செய்யும் ஊழலுக்கு இதனை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அவரது நண்பர்கள் கூறினார்கள். எது எப்படியாகிலும் கிருத்துவப் போர்வையில் உள்ள இயக்கம், அரசியலில் ஈடுபட்டு வருவது நோக்கத்தக்கது.

இனிகொ வீடு ரெயிட் 2011-12 அன்பரசு

இனிகோ இருதயராஜ் வீடுஅலுவலகங்களில் நடந்த ரெயிடு (2011-12): கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், சமீபகாலமாக, முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார்[9]. ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார்[10]. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார்[11]. நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் இவரது அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசகராக உள்ள இவர், வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தியுள்ளார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது[12]. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சில கிறிஸ்தவ அமைப்புகளை இவர் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தல் பிரசாரமும் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இனிகோ இருதயராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்[13]. ஆனால், இப்பொழுது மார்ச் 2016ல் இவர் தான் கருத்தரங்கம் நடத்துகிறார்.

© வேதபிரகாஷ்

22-03-2016

[1]தமிழ்.இந்து, தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் கண்ணியமானவர்களை தேர்ந்தெடுங்கள்: அரசியல் கருத்தரங்கில் பேராயர் சின்னப்பா வேண்டுகோள், Published: March 14, 2016 09:56 IST; Updated: March 14, 2016 09:56 IST.

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article8351300.ece

[3] தினமலர், டிவி குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561

[4]https://lawisanass.wordpress.com/2010/09/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

[5] தினமலர், சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்டகால ஒத்திகைக்கு கொடுத்தார், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=285959

[6] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.

[7] Indian Express, House of ex-minister’s friend raided, Published on Oct.13, 2011. 3.04 AM; Last updated: May 16, 2012. 6.47 PM.

[8] http://www.newindianexpress.com/cities/chennai/article352062.ece?service=print

[9] தினமலர், ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்ரெய்டு, அக்டோபர்.12, 2011. 22.44.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=330219&Print=1

[11] Address: 4/431, KAPALEESWAR NGR 1ST MN RD, NEELANKARAI, CHENNAI, 600041. Phone no. 044-24494488

[12] மாலைமலர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் வீடுஅலுவலகத்தில் அதிரடி சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை, மாற்றம் செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 3:27 PM IST; பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 11:49 AM IST.

[13] http://www.maalaimalar.com/2011/10/12114931/iniko-iruthayaraj-house-office.html

ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்வு செய்ய செக்யூலரிஸ சிவகாமியின் கம்யூனல் கோரிக்கை – சரி ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது”?

பிப்ரவரி 19, 2012

ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்வு செய்ய செக்யூலரிஸ சிவகாமியின் கம்யூனல் கோரிக்கை – சரி ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது”?

சிவகாமி தலித் பெண்ணிய எழுத்தாளர் – இப்பொழுது அரசியல்வாதி: “ஜனாதிபதியாக கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என, சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி கூறியுள்ளார். தலித் பெண்ணிய எழுத்தாளர் என்று சொல்லப்படும் இவர் 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது[1]. ஆனால், இப்பொழுது அரசியல்வாதியாக மாறிவிட்டார்[2].
செக்யூலரிஸ (மதசார்பற்ற) சிவகாமியின் கம்யூனல் (மதசார்புடைய) கோரிக்கை: செக்யூலரிஸம் பேசிக்க்கொண்டு மதரீதியில் சிந்திப்பது, பேசுவது, ஆதரவு தெரிவிப்பது முதலியவை ஏன் என்று ஆராய்ந்தால், அதன் பின் அத்தகைய மதவாதிகளின் பலம், தாக்கம், முதலியவை இருப்பது தெரிய வருகிறது. தினமலர், செய்தியாக வெளியிட்டிருப்பது கொஞ்சம், ஆனால், பக்கத்தில் இருக்கும் படம் வேறு கதை சொல்கிறது. ஆமாம், பாதிரிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான், அந்த சிவகாமி அம்மையார் அப்படி பொன்முத்துகளை உதிர்த்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி[3]: “நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை கிறிஸ்தவர் ஒருவர் தேர்வு செய்யப்படவில்லை. சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். அனைத்து மதங்களையும், இனங்களையும் சமமாக நடத்தும் இந்தியாவில், கிறிஸ்தவர் ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டுமென, நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம். முதல் கட்டமாக, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வர் நகரங்களில், இதற்கான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதையொரு இயக்கமாகவும் கொண்டு செல்ல விரும்புகிறோம். வேட்பாளரை நாங்கள் முன்னிறுத்தவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”, இவ்வாறு சிவகாமி கூறினார்.

இதற்கான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதையொரு இயக்கமாகவும் கொண்டு செல்ல விரும்புகிறோம்: இப்படி பன்மையில் பேசும் போது, இவரைத் தவிர யார் அந்த மற்றவர்கள் என்ற கேள்வி எழுகிறது. பக்கத்தில் பார்த்தால் சிலுவை அணிந்து கொண்டு ஒரு பாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி “தினமர்” ஒன்றும் கூறவில்லை. எனெவே, கிறிஸ்தவ கூட்டுடன் அத்தகைய கோரிக்கையை இட்டுள்ளபோது, அவரது மதசார்பற்ற நிலை கேள்விக்குறியாகிறது. செக்யூலிஸம் பேசிக்கொண்டு கம்யூனல் கோரிக்கை இடுகிறார் என்று ஐ.ஏ.எஸ் படித்த அப்பெண்மணிக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. ஆகவே, தர்ந்து கொண்டே அவ்வாறு பேசியிருப்பது அவரது கிறிஸ்தவ / கிருத்துவ சார்பு / ஆதரவைக் காட்டுகிறது. ஏற்கெனெவே கடந்த தேர்தலில், இவர் அத்தகைய உதிரு கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு போட்டியிட்டுள்ளார்.

“கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”: இப்படி சொன்னதில் முழுவதுமாக குட்டு வெளிப்பட்டு விட்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கிருத்துவப் பரிவு அவருக்குக் கட்டளையிட்டுள்ளது என்று தெரிகிறது. அதாவது, கிருத்துவம் என்றால் ஒரு மதம் என்று நினைக்க வேண்டாம், அதிலும் ஏ முதல் இஜெட் வரை 3,000ற்கும் மேலான பிரிவுகள் உள்ளன. ஜேஹொவாவை  ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, மேரியை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, ஏசுவை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, திரியேகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும்-ஏற்றுக் கொள்ளாத, என பிரிவுகள் உள்ளன. எனெவே, அமெரிக்கா பொரொடெஸ்டென்ட் பிரிவுகளை ஆதரிக்கும் நிலையில், சோனியா மெய்னோ கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ளார். அதாவது, வாடிகன் முழு அளவில் அவர் மீது அதிகாரம் செல்லுத்தி வருகிறது. அந்நிலையில் தான் இந்த சிவகாமி அம்மையார், “கிறிஸ்தவர் யாராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கிறோம்”, என்கிறார். “கத்தோலிக்கக் கிருத்துவராக இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்கிறோம்”,” என்றால் நடப்பதே வேறு.

 

மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்ட வகுப்புவாத-அடிப்படைவாத-மதவாத கோஷ்டிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது: சமூக சமத்துவப்படையின் நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., கெங்கவல்லி (தனி) சென்ற சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தில், ஐ.ஜே.கே., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. அதில், சமூக சமத்துவப்படை, யாதவ மகா சபை, தமிழ்நாடு வாணியர் பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், வ.உ.சி., பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சங்கங்கள் கூட்டணியில் இடம்பிடித்தன. அந்நிலையில் அந்த தொகுதிக்குட்பட்ட பெரிய புணவாசல் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடி முன்பு தி.மு.க. கொடி, டி. சர்ட் அணிந்து கொண்டு சிலர் தி.மு.க. வுக்கு ஓட்டு கேட்டனர். இதுப்பற்றி தெரியவந்ததும் சிவகாமி ஐ.ஏ.எஸ். அங்கு விரைந்து சென்று அவர்களுடன் எப்படி நீங்கள் கட்சி சின்னத்தை அணிந்து கொண்டு ஓட்டு கேட்கலாம் என்று வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவர் திடீரென வாக்குசாவடி முன்பு அமர்ந்து தர்ணா செய்தார்[4]. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் அங்கு தேர்தல் பார்வையாளர்கள் வந்தனர். அவர்களிடம் சிவகாமி ஐ.ஏ.எஸ். பரபரப்பு புகார் தெரிவித்து மனு கொடுத்தார்.

தலித் கிருத்துவ ஒதுக்கீட்டை ஆதரித்தது: தலித் போர்வையில் கிருத்துவர்கள் செய்து வரும் பொய் பிரச்சரத்தை அறிந்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை அறிந்தும், சிவகாமி தலித் கிருத்துவ ஒதிக்கீட்டை ஆதரித்து பேசி வருகிறார். முன்பு உமாசங்கர் என்ற அதிகாரி தான் கிருத்துவர் என்பதனை மறைத்து, “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். பிறகு உண்மை வெளிப்பட்டபோது, பதவி நீக்கம் செய்யப்பட்டார்[5]. அப்பொழுதும் சட்டப்படி, உண்மையைக் கூறாமல், உமாசங்கரின் தந்தை பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்[6], அவரது சகோதர்கள் தலித்துகள் என்றுதான் பேசினாரேத் தவிர, உண்மையைக் கூறவில்லை[7].

ஐ.ஜே.கேவின் கிருத்துவ முகம்: முன்பே ஐ.ஜே.கே கிருத்துவ கட்சியா அல்லது கிருத்துவர்களை ஆதரிக்கும் கட்சியா என்ற கேள்வி எழுந்தது. காமராஜர் அரங்கத்தில், கிருத்துவர்கள் சார்பாக ஒரு பெரிய கூட்டமே ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது பச்சமுத்து அவ்வாறில்லை என்று சொல்வதற்கு நிரம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் அவர் கோடிக்கணக்கில் செலவழித்தது, பலரை பிரமிக்க வைத்தது. தேசிய கட்சிகளே அவ்வாறு செலவு செய்ய முடியாத நிலையில், பச்சமுத்து பணத்தை வாரியிரைத்தது அதிசயமே. சிவகாமி அத்தகைய கட்சியுடம் கூட்டு வைத்தார். ஆகவே, இவர்களுக்குள் உள்ளகிருத்துவ அவர்கள் மறுத்தாலும், மறைத்தாலும் தொடர்பு விளங்குகின்றது.

ஏன் பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது?: அது சரி, ஏன் ஜனாதிபதி ஒரு பௌத்தர், ஜைனர், யூதர் என்றெல்லாம் இருக்கக் கூடாது? ஏன் அவர்கள் “சிறுபான்மை” மக்கள் இல்லையா? அம்மாதிரி ஏன் யாரும் நினைப்பதில்லை, பேசுவதில்லை, எழுவதில்லை, கோரிக்கை எழுப்புவதில்லை? அப்படி நினைக்க, பேச, எழுத – எது தடுக்கிறது? செல்யூலரிஸமா, கம்யூனலிஸமா? அது என்ன சித்தாந்தம்? இதென்ன முரண்பாடு? ஆக, இது சுயநினைவோடு, சுய-சிந்தனயோடு வருகின்ற எண்ணமோ, கோரிக்கையோ அல்ல யாரோ, ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் சொல்லி அல்லது வசதியோ, எதுவோ கொடுத்து பேச வைக்கும் வித்தையாக, யுக்தியாக உள்ளது. ஏதோ யாரும் சொல்லாதத்தை சொல்லி விட்டோம் என்றதல்ல, ஆனால், மறுபடியும் இந்தியாவை அடிமைத்தளையில் கொந்து செல்ல போடும் சதிதிட்டத்திற்கு உடந்தையாக, சிந்தனையை அடகு வைத்த நிலையாக உள்ளது. எப்படித்தான் இந்தியர்கள் முழித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தமிழக தலித் இயக்கங்கள், தலித் மேடைகள் பலவற்றிலும் பங்குபெற்ற இவர் 90களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய அடையாள நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர். தலித் நிலவுரிமை இயக்கத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் ஒருங்கிணைத்தார். பெண்கள் ஐக்கியப் பேரவையை ஏற்படுத்தினார். பெண்ணிய அடையாளம் பற்றிய உடலரசியல் நூலை எழுதியுள்ளார். அரசு அதிகாரியாய் இருந்தபோது தலித்துகள், பழங்குடியினர் சார்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தவர். தலித்தியம் குறித்த கருத்துப் போராட்டத்திலும் முன்னிற்கும் இவர் அண்மையில் தான் வகித்து வந்த ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமரி பொதுத் தொகுதியில் போட்டியிட்டார்.

http://www.kalachuvadu.com/issue-112/page25.asp

[2] contested the Lok Sabha election on a Bahujan Samaj Party (BSP) ticket from Kanyakumari in 2009, but lost. The same year in December, she floated her own political party, Samuga Samathuva Padai (Forum for Social Equality).

[6] As for the community status, Mr. Umashankar said that his father was a Hindu and belonged to the community of Pallar (Devendra Kula Vellar). His mother was a Christian. In the school leaving certificate, his [Mr Umashankar’s] religion was mentioned as Christianity and he was known as Ashok. In February 1984, his father got him “reconverted” into Hinduism. His name was changed as Umashankar. The change of religion and name was notified in the government gazette two months later. In March 1985, he got a SC community certificate issued by the Sankarankoil [Tirunelveli district] tahsildar.

http://www.thehindu.com/news/cities/chennai/article612029.ece

[7] Ridiculing the government’s justification for the suspension, former IAS officer P. Sivakami, a popular dalit activist, said, “Umashankar’s father is a dalit pallar and all his siblings are dalits. Where does the question of producing a false SC certificate arise? Did the government suspend the many other officers against whom similar charge of using fake SC certificate was levelled? Some of them are now in prominent posts.”