Posts Tagged ‘திருச்சபை’

நார்மன் பாஸ்கர், திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

மே 17, 2017

நார்மன் பாஸ்கர்,  திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

Trichy Norman Baskar arrested -VGP-16-05-2017-Vikatan photo.வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் மற்றும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை நிலம் வாங்கவிற்க போட்ட ஒப்பந்தம்: தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்தவ மோசடிகளில் இன்னொரு வழக்கு மூலம் விவரங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் பணப்பரிமாற்றம், நிலம் அபகரிப்பு, முதலிய விவகாரங்களில் அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி, ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து, வழக்குகளும் போடப்படுகின்ற நிலை உண்டாகி விட்டது. கோடிகளில் பணம் இருக்கும் போது, எல்லாமே மறக்கப்படுகின்றன. இந்த திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை விவகாரமும் அப்படித்தான் உள்ளது. திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச்  சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் 2011ல் போடப்பட்டது.

Trichy Norman Baskar arrested 16-05-2017-Vikatan photo

ஒப்பந்தம் போட்டு, பணம் கொடுத்த பின்னர், இடம் மாற்றிக் கொடுக்கப் படாதலால் புகார், வழக்கு: அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார்[1], “இந்த .ஜி சர்ச் என்பது மிகப்பெரிய திருச்சபை. நாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன[2]. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள், சபையின் முக்கிய நிர்வாகிகள், ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில், .ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டோம்[3]. அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம், சபைக்கு நாங்கள்  செலுத்தியுள்ளோம். மேலும், நிலத்தை எழுதித் தரும்போது மீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர் நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி, திருச்சபை நிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை. நாங்கள் பலமுறை நேரில் கேட்டோம். ஆனாலும் இழுத்தடித்தார். இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல், மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தோம்.

 Norman Baskar arrested for fraud -17-05-2017

ஒப்பந்தம் போட்டவர்களில்  நார்மன் பாஸ்கர் தவிர மற்றவர் ஒதுங்கிக் கொண்டது: தங்கையா மேலும் விவரித்தார், “திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள்[4]. நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவானார்[5]. அடுத்து, அவர் சபையை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். எங்களுடன்  போடப்பட்ட ஒப்பந்தப்படி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாக, திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்”” என்றார்[6].

Norman Baskar arrested for fraud -Trichy--17-05-2017

ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும், நார்மன் பாஸ்கர் கைது: இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார்[7]. இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை 16-05-2017 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்[8]. நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்[9]. என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

Norman Baskar AG--17-05-2017-facebook photo

திருச்சி நார்மன் பாஸ்கர் பின்னணி: பாஸ்டரான இவர், திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபையில் பிரபலமாக இருந்து வந்திருக்கிறரார். பேஸ்புக்[11], லிங்கெட்[12] என்று இணைதள செயல்பாடுகளில், தீவிரமாக இருந்து வந்திருக்கிறரார். பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கொண்ட்டாட்டங்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கில் கூட பிரச்சாரம் செய்துள்ளார். இளைஞர்களை வைத்து, சுற்றுல்லா, ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்ட என்று நடத்தியுள்ளார். ஆனால், இந்த நில விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார் போலும். இருப்பினும், இவ்வாறான மோசடிகளை செய்ய இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. “தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தலும், எப்படி பொறுத்துப் போகிறார்கள் என்று தெரியவில்லை[13]. பரபரப்பு ஏற்பட்டது என்றாலும், நிலைமை என்ன என்று சொல்லவேண்டுமே[14]. பாதிரியாரே இப்படி செய்யலாமே என்று கேட்டாலும், தொடர்ந்து நடக்கும் போது, கருப்பு ஆடுகள் ஏன் வழிப்படுத்தப் படவில்லை என்பதும்  தெரியவில்லை[15]. ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து, பரிசுத்த ஆவி, மேரி, கர்த்தர் என்று யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள், இவர் தொடர்ந்து இவ்வாறு அத்து மீறி மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[16].

VGP RAjadass arrsted for cheating - September 2010

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் முன்னர் நிலமோசடியில் சிக்கிக் கொண்டது[17]: விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன். ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார்.  2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார். அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[18]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[19]. ஒருவேளை, இது தெரிந்ததால் வந்த தைரியமா? கர்த்தருக்குத் தான் வெளிச்சம்!

© வேதபிரகாஷ்

17-05-2017

Norman Baskar AG--wife-17-05-2017-facebook photo

[1] விகடன், 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது! , சி.. ஆனந்தகுமார், Posted Date : 05:34 (17/05/2017); Last updated : 07:48 (17/05/2017)

[2] நக்கீரன், 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக போதகர் கைது, பதிவு செய்த நாள் : 17, மே 2017 (9:32 IST); மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (9:32 IST)

[3] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=191566

[4] மாலைமலர், நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி: திருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்கு, பதிவு: ஆகஸ்ட் 17, 2016 12:52

[5] http://www.maalaimalar.com/News/District/2016/08/17125251/1033058/Christian-priest-including-5-people-sued-for-rs-7.vpf

[6] http://www.vikatan.com/news/tamilnadu/89538-religious-preacher-arrested-in-trichy.html

[7] தினமணி, ரூ.6.88 கோடி மோசடி: மதபோதகர் கைது, Published on Wednesday, May 17, 2017, 01:41 [IST].

[8] http://www.dinamani.com/tamilnadu/2017/may/17/%E0%AE%B0%E0%AF%82688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2703372.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார், By: Amudhavalli, Published: Wednesday, May 17, 2017, 13:36 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/fraud-land-sale-christian-priest-arrested-282959.html

[11] https://www.facebook.com/trichycityag/

[12] https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735

[13] தமிழ்.முரசு, தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது , May 17, 2017.

[14]  http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107426

[15] அங்குசம், திருச்சி  கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது, May 17, 2017.

[16] http://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/

[17]  https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

[18] The Hindu, Held on charge of cheating, CHENNAI, SEPTEMBER 24, 2010 00:53 IST;  UPDATED: SEPTEMBER 24, 2010 00:53 IST

[19] http://www.thehindu.com/news/cities/chennai/Held-on-charge-of-cheating/article16044792.ece

 https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

தமிழகத்தில் ‘சர்ச்’கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது ஓட்டு – சுயாதீன திருச்சபைகளின் மாமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனை!

மார்ச் 7, 2011

தமிழகத்தில் சர்ச்கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது ஓட்டு – சுயாதீன திருச்சபைகளின் மாமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனை!

 

கிருத்துவர்கள் இப்படி அதிகார தோரணையில் கேட்டிருப்பது, உள்ளே ஏதோ விவகாரம் உள்ளது என்பதனையே காட்டுகிறது. ஏனெனில், இன்றைய நிலையில் நிலம் / ரியல் எஸ்டேட் தான் முக்கிய வியாபாரமாக இருந்து வருகிறது. கருப்பெல்லாம் வெள்ளையாக்குவதற்கு, நிலத்தைத் தான் உபயோகித்து வருகிறார்கள். காரணமே இல்லாமல், நிலத்தின் விலை ஏறிவர்கிறது, அதற்கேற்றாற்போல கட்டுமான பொருட்களின் விலையும் ஏறிவருகின்றன. இதில் அரசியல்வாதிகளின் பங்கு நன்றகவே உள்ளது. ஆனால், அரசியல்வாதிகளை கிருத்துவர்கள் இதில் மிரட்டுவது, சர்ச் கட்டுவதைவிட, அதகும் மேலான விவகாரம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

 

சர்ச்கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது ஓட்டு[1]; சென்னை : “தமிழகத்தில் ‘சர்ச்’கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே, எங்களது 50 லட்சம் ஓட்டுக்கள் போடப்படும், ” என, இந்திய சுயாதீன திருச்சபைகளின் மாமன்ற தலைமை பேராயர் பிரகாஷ் கூறினார். இந்திய சுயாதீன பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, தலித், இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டமைப்புகளின் சார்பில், நேற்று சென்னையில் வரும் சட்டசபைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்திய சுயாதீன திருச்சபைகளின் மாமன்ற தலைமை பேராயர் பிரகாஷ் கூறியதாவது:

 

தமிழகத்தில் 25 ஆயிரம் “சர்ச்கள் செயல்பட்டு வருகின்றன: ‘தமிழகத்தில் 25 ஆயிரம் “சர்ச்கள் செயல்பட்டு வருகின்றன[2]. தமிழகத்தை பொறுத்த வரை, எங்களது அமைப்புகளை சார்ந்த 70 லட்சம் பேர் வசிக்கிறோம். அதில் 50 லட்சம் பேர் ஓட்டுரிமையுடன் உள்ளோம். இருந்தும், ஆண்டுக் கணக்கில் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கிறிஸ்தவர்களின் கல்லறைக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ ஆலயங்கள் அமைப்பதற்கு சட்ட பூர்வமாக அனுமதி வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சொந்த இடம், பட்டா ஆகியவை இருந்தும் “சர்ச்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆகையால் தமிழகத்தில் “சர்ச்கள் கட்டுவதற்கு சட்டப் பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது 50 லட்சம் ஓட்டுகள் போடப்படும். முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்”, இவ்வாறு பிரகாஷ் கூறினார். நிகழ்ச்சியில் செயலர் லெஸ்ஸி, ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் மாமன்ற துணை பிரதம பேராயர் சத்தியகுமார், இந்திய அப்போஸ்தல திருச்சபைகளின் மாமன்ற பிரதம பேராயர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

 

கிறிஸ்தவர்களின் கல்லறைக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்:. மேனாடுகளிலேயே, குறிப்பாக எங்கு கிருத்துவர்கள் அதிகமாக உள்ளார்களோ, அங்கு இடமின்மை, சுற்றுப்புற சூழல் காரணங்களுக்காக கல்லறைகள் அடுகடுக்காகக் கட்டப் படுகின்றன, வாடகைக்கு விடப்படுகின்றன, அதாவது, அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் வைக்கப்பட்டிருக்கும். இல்லை உடலை எரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். ஆக இந்நிலையில், கல்லறைக்கு இட ஒதுக்கீடு என்று கேட்பது, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யத்தான் வலிகோலும்.

 

சொந்த இடம், பட்டா ஆகியவை இருந்தும் “சர்ச்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சொந்த இடம் எனும்போது, இந்த இடம் எப்படி வந்தது என்பதை பார்க்க வேண்டும் (எஸ்ரா சற்குணம் சொன்ன மாதிரி இருந்தால், விவகாரத்தை தாராளமாக அறிந்து கொள்ளலாம்). ஆகவே பட்டா இருப்பதில் / வவங்குவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உதாரணத்திற்கு, அச்சிறுப்பாக்கத்தில் மலைமீதுள்ள இடத்தை அப்படித்தான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, பிறகு தான், எல்லாமே சட்ட ரீதியாக கொடுக்கப் பட்டுள்ளது. இதே முறையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்றால், மற்றவர்கள் அதனை உன்னிப்பாஅக கவனிக்க வேண்டும்.

 

திராவிட கட்சிகளும், கிருத்துவர்களும், நிலமோசடிகளும்: நிலமோசடி[3], ஆக்கிட்ரமிப்பு, சட்டத்திற்குப் புறம்பாக விற்றல், குத்தகை, வாடகைக்கு விடுதல் முதலிய காரியங்களில், பிஷப்புகள் / பேராயர்கள் / ஆயர்கள் அளவிற்கு அதிகமாகவே ஈடுபட்டு வந்துள்ளனர்[4]. முன்பெல்லாம், மேலிடத்திலேயே, இவ்விவகாரங்கள் முடிவெடுக்கப்படும், பிரச்சினை வந்தால் விவாதிக்கப் படும் அதனால் மற்ற்வர்களுக்கு, இவ்விஷயங்கள் தெரியாமலேயே வந்துள்ளன. உன்மையில் சர்ச் அவ்வாறே கடைபிடித்து வந்தது. ஆனால், பதவி ஆசை, பண ஆசை, பெண்ணாசை முதலியவை மேலிடங்களில் அதிகமாக, அரசியல், மற்ற துறைகளிலுள்ளவர்களுடன் சகவாசம், கூட்டு முதலியவைகளும் வளர ஆரம்பித்தன. இத்தகைய கூட்டு கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், திமுகவுடன் இருந்து வந்துள்ளது என்பதனை, எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி – இப்பொழுது பிஷப் வெலிப்படுத்தியுள்லதை முன்பு எடுத்துக் காட்டியிருந்தேன்[5]. வசதிக்காக, விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[6]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[7] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[8] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

வேதபிரகாஷ்

07-03-2011


[1] தினமலர், சுயாதீன திருச்சபைகளின் மாமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனை, பிப்ரவரி 27,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196132

[2] ஆந்திராவில் சாமுவேல் ராஜசேகர ரெட்டி இருந்த போது, அத்தகைய அதிகமாக சர்ச் கட்டும் வேலை நடைபெற்றது. ஒருவேளை, தமிழகத்திலும் அத்தகைய திட்டம் இருக்க்றது போலும்.

[3] வேதபிரகாஷ், நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய்மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்குவிற்றுள்ளதாக குற்றச்சாட்டு!, https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[4] வேதபிரகாஷ், நிலமோசடியிலிருந்து முறைகேடு வரை: பிஷப்புக்கள் அளிக்கும் விளக்கம்!, https://christianityindia.wordpress.com/2010/09/27/land-grabbing-scam-explanations-given-by-the-bishops/

[5] வேதபிரகாஷ், நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!, https://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

[6] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[7] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[8] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

 

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

திசெம்பர் 4, 2010

கௌரவ டாக்டர் பட்டம், சர்ச், அரசியல், செக்யூலரிஸம்: சீரழியும் மதிப்புகள், மரியாதைகள், நாணயங்கள்!

நடிக்கும் அரசியல்வாதியும், அரசியல்வாதி-நடிகனும்: நடிகர் நடிப்பார், வசனம் பேசி நடிப்பார், அதுதான் அவரின் தொழில். அரசியல்வாதியும் அப்படியே. ஆனால், தமிழ்நாட்டில், இருவரும் ஒருவராக இருப்பதால், இவர்கள் பேசுவது இவர்களுக்கே தெரியாது எனலாம், அதாவது, குடித்து போதையில் உலறுவதைப் போல, ஏதாவது பேசுவார்கள். கருணாநிதி,” என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் / மழலைச் செல்வங்கள் “தாத்தா, தாத்தாஎன என்னை சூழ்ந்து கொண்டு கைகொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்”, என்று பேசியதற்கும்[1], விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றதும், விவேக் ஜோக் போல வேடிக்கையாக இருந்தது.

 

செக்யூலரிஸ போதையும், கிருத்துவ வன்புணர்ச்சிகளும்: செக்யூலரிஸம் என்று வந்துவிட்டால், இந்திய அரசியல்வாதிகளுக்கு கிரக்கம், பித்தம், பைத்தியம், போதை, இழுப்பு, ஞாபக மறதி என்ற சகல வியாதிகளும் வந்துவிடும். இவர்களே டாக்டர்களாகி விடுவர், டாக்டர்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவர். நர்ஸுகளின் கதி அதோகதிதான். ஆனால், “நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான்”, என்று பேசியபோது, ஏன் அத்தனை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற கிருத்துவர்கள், தமிழகத்திலேயே, லட்சக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை காமக்குரூர பாலியல் வன்புணர்வர்களுக்கு உடபடுத்தினார்கள்[2] என்று விளக்கவில்லை. அங்கு அன்பு இல்லையா, இல்லை, அன்பே காமமாக இருந்ததால், மயக்கத்தில் மறந்து விட்டாரா?. இவர்களுக்கு டாக்டர் பட்டங்களையும், சிறுவர்களுக்கு பைபிள்களையும் கொடுப்பதில்[3] என்ன விஷயம் உள்ளது?

நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்: சென்னையில், நடந்த நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய தேமுதிக தலைவர் விஜய்காந்த், “லஞ்சம், ஊழல் என நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன்”, என்றது வேடிக்கையாக இருந்தது. சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செயல்படும் சர்வதேச தேவாலய மேலாண்மை நிலையம் (ஐஐசிஎம்) விஜயகாந்துக்கு வழங்கியது. சென்னை எம்எம்சி வளாகத்தில் இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் சனிக்கிழமை[4] நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை நிலையத்தின் நிர்வாகி ஜான் வில்லியம்ஸ் பட்டத்தை வழங்கினார்[5].

சிறுபான்மையினர் இல்லை. நீங்களும் பெரும்பான்மையினரே. விஜயகாந்த் பேசியது: டாக்டர் பட்டம் வழங்கி என்னை கௌரவித்த திருச்சபைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வழங்கும் டாக்டர் பட்டம் தங்களுக்கே கிடைத்து விட்டதாக நினைத்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்த கட்சித் தொண்டர்களுக்கு இந்த பட்டத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.  சிறுபான்மையினர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். முதலில் சிறுபான்மையினர் என்பதே இல்லை. நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்களும் பெரும்பான்மையினரே. நீங்கள் பெரும்பான்மையினராகும் செய்தி இன்னும் 7 மாதத்தில் தெரிந்து விடும்.   எனக்கு இதுநாள் வரை டாக்டர் பட்டம் கிடைத்துவிடக் கூடாது என்று சிலர் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி இந்த திருச்சபை எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எப்படி வந்தது: இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, கிருத்துவத்தில் எதுவும் நடக்கும். அரசியல் ரீதியில் உலகம் முழுவதும் நடத்தப் படும் அந்த மதம் எதையும் செய்யக்கூடியது[6]. ஜெயலலிதாவிற்கு கொடுத்தபோது எப்படி கொடுத்தார்கள்? திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை[7]. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்[8].

இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார்: நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். எனக்கு இந்த டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இல்லாதவர்களுக்கு நான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்குகிறேன். இலவசங்களை எதிர்த்து பேசும் விஜயகாந்த் மட்டும் இலவசங்களை வழங்குகிறார் என்று என்னை பற்றி தவறாக சிலர் பேசுகின்றனர். ஆனால் நான் இல்லாத ஏழைகளுக்குத்தான் உதவி செய்கிறேன்.  நான் ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்பேன் என்று கூறி வருகிறேன். வறுமையை ஒழிப்பேன் என்றால் வருமானத்தை பெருக்குவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

என்னை யாராலும் அழிக்க முடியாது: என்னை எப்படியாவது அசைத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். நான் ஆலமரம். எனக்கு விழுதாக தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் அழிக்க முடியாது. அதே போல் நான் இருக்கும் வரை தொண்டர்களை அழிய விட மாட்டேன் என்றார் விஜயகாந்த்.  நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதிஷ், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஏசிஐ சபை பேராயர் எபினேசர், தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் எஸ். மைக்கேல் ராயப்பன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருத்துவர்கள் விஜய்காந்திடம் எதிர்பார்ப்பது என்ன? கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் “டாக்டர்” பட்டங்களை காசு கொடுத்தே / நிதியுதவி செய்தே / பணத்தை தானம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம். “டாக்டர் ஆஃப் டிவினிடி” என்று பட்டம் பெற்று “டாக்டர்” பட்டத்துடன் உலாவருவர். ஆக, அவர்கள் விருது போல கொடுக்கிறார் என்றால், ஏதோ எதிர்பார்த்து செய்கின்றனர் என்று தெரிகிறது. முன்பு ஜெயலலிதாவிற்கு படம் / விருது கொடுத்ததும் “மதமாற்ற”ச் சட்டத்தை திரும்பப்பெற்றுவிட்டார். இனி விஜய்காந்த என்ன செய்வார் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்[9].

வேதபிரகாஷ்

© 04-12-2010


[1] தினமலர், என்னை மொய்த்துக் கொண்ட மக்கள் கூட்டம் : முதல்வர் அறிக்கை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2010,23:27 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 04,2010,00:03 IS

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138913

[3] வேதபிரகாஷ், மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு , https://christianityindia.wordpress.com/2010/12/03/conversion-attempts-at-government-schools-tamilnadu/

[4] சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. ……என்றுள்ளது. சனிக்கிழமையே வரவில்லையே, அவ்வளவு அட்வான்ஸாக கொடுத்து விட்டார்களா, இல்லை நடு ராத்திரி கொடுத்தார்களா? ஒருவேளை அர்த்த ராத்திரி ஜெபநிகழ்ச்சியில் கொடுத்தார்களோ என்னமோ?

[5] தினமணி, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை குணப்படுத்துவேன், First Published : 04 Dec 2010; http://www.dinamani.com/edition/story.aspx?Title=………….SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

[6] “டா வின்சி கோட்” போன்ற படங்கள் அந்த உண்மைகளை வெளிப்படுத்திக் காட்டியதால்தான், அப்படங்கள் இந்தியாவில் தடைசெய்ய வேண் டும் என்று கலாட்டா செய்தார்கள் கிருத்துவர்கள். ஏனென்றால், அத்தகைய உண்மைகள் இந்தியர்கள் \அறிந்து கொள்ளக்கூடாது என்பதுதான் சர்ச்சின் திட்டம்.

[8] டாக்டர் பட்டம் இலவசமாகக் கொடுக்கப் பட்டதா, அல்லது விஜயகாந்த எவ்வளவு காசு கொடுத்தார் / பெற்றார், என்ற விஷயங்களை அவர்கள் தாம் சொல்லவேண்டும்.

[9] வேதபிரகாஷ், சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது!, https://christianityindia.wordpress.com/2010/11/25/doctorates-conferrerd-by-the-churches-on-indians/

பலான போதகர் மகனுக்கு ஆதரவாக தாயார் போராட்டம்!

மே 1, 2010

பலான போதகர் மகனுக்கு ஆதரவாக தாயார் போராட்டம்!

பாஸ்டரை கண்டித்து போதகரின் தாய் உண்ணாவிரதம்
மே 01,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18223

Mother-supporting-Sex-priest

Mother-supporting-Sex-priest

காமுக மகனும், பாசமுள்ள தாயாரும்: திருச்சி : திருச்சி செவன்த்டே அட்வென்டிஸ்ட் திருச்சபை போதகரை, பாலியல் புகார் காரணமாக பணியிறக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்த பாஸ்டரை கண்டித்து, போதகரின் தாயார் உண்ணாவிரதம் இருந்தார். திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் செவன்த்டே அட்வென்டிஸ்ட் திருச்சபை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் போதகர் சுதாகர் இருந்தார். அவர் மீது சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் கூறினார்.

செச்யூலரிஸ போலீஸை வாடிகன் நம்பவில்லை: ‘புகாரில் உண்மையில்லை’ என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக தெரிகிறது. ஆனால், திருச்சபை நிர்வாகம் நடத்திய விசாரணையில், சுதாகர் குற்றம் செய்ததாக கருதி, அவரை தலைவர் பதவியிலிருந்து பதவியிறக்கம் செய்தும், பணியிட மாற்றம் செய்தும் திருச்சபையின் தெற்காசிய மண்டல தலைவர் ஜான் உத்தரவு பிறப்பித்தார்.

கிருத்துவப் பிரச்சினையில் போலீஸ் சமாதானம் செய்யத்தான் உரிமை: போதகர் சுதாகரின் தாயார் கிரேஸி சாமுவேல், மகனை பதவியிறக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, நேற்று காலை, திருச்சபை அலுவலகத்தின் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். திருச்சபை அலுவலகத்தையும் இழுத்து பூட்டினார். அப்போது பணிக்கு வந்த அலுவலர்களுக்கும், கிரேஸி சாமுவேல் தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

கிரேஸி சாமுவேலிடம் “கிரேஸ்” இல்லை: அப்போது, திருச்சபை பணியாளர்கள் அலுவலகத்தை திறக்கக்கோரினர். அதற்கு உண்ணாவிரதம் இருந்த கிரேஸி சாமுவேல் ஒத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, போலீசார் முன்னிலையில், பூட்டை உடைத்து திருச்சபை பணியாளர்கள் அலுவலத்துக்கு உள்ளே சென்று பணிகளை கவனித்தனர். நிருபர்களிடம் கிரேஸி கூறுகையில், ‘திருச்சபை தலைவர் ஜான் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், என் மகனை பணியிறக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்துள்ளார். ஆகையால், அதைத் திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன்’ என்றார்.

உண்மையான கிருத்துவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்: உண்மையிலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் யாருக்குத் தான் அடங்குவார்கல், கட்டுப்படுவார்கள்? இந்திய போலீஸார், கோர்ட், சட்டங்கள்…………….இவையெல்லாம் இவர்களுக்குப் பொருந்தாதா? அப்படியென்றால், இவர்கள் இந்தியர்களா, அன்னியர்களா? எதற்காக இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்கள்? தமிழர் என்றால், தமிழ் தாய் என்றால், அம்மகனை கொன்றேயிருப்பாள். ஆனல், இந்த தாயோ, அவனது பாலியில் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல், அவனது வேலை, இடமாற்றம் என்றெல்லாம் சாக்கு வைத்துக் கொண்டு, ஏதோ ரௌடி கும்பல் செய்யும் வேலை போல – திருச்சபை அலுவலகத்தையும் இழுத்து பூட்டினார், அப்போது பணிக்கு வந்த அலுவலர்களுக்கும், கிரேஸி சாமுவேல் தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, …………………என்றெல்லாம் பார்க்கும்போது, நிச்சயமாக உண்மையான கிருத்துவர்கள் செய்யும் வேலைகளாகத் தெரியவில்லை.