Posts Tagged ‘தாம்பரம்’

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

திசெம்பர் 30, 2015

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

Indian pentacostal mission, Tambaram google map

Indian pentacostal mission, Tambaram google map

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு: பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூரில்,  உள்ள ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான கிருத்துவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். முதலில் தற்காலிகமாக கூரைப் பந்தல் போட்டுக் கொண்டு இக்கூட்டம் நடந்து வந்தது. கூரை ஓடக்கூடாது என்ற தடை வந்தவுடன், கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. அப்பொழுதும், சிறுபான்மையினர் என்றதாலும் அப்பகுதி ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை விற்க ஈடுபட்டவர்களுக்கும் இதில் லாபம் பெற விருப்பம் இருந்ததினால் மறைமுகமாக அமைதியாக அதரவு கொடுத்து வந்தனர்.

Pentacostal mission, Irumpuliyur, Tambaram - flooded Dec.2015

Pentacostal mission, Irumpuliyur, Tambaram – flooded Dec.2015

ஆனால், வழக்கு தொடரப்பட்டதினால், பென்டகோஸ்டல் மிஷன் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு சி.எம்.டி.ஏ மூலம் ஆணையிட பரிந்துரைக்கப்பட்டது[1]. இருப்பினும் பென்டகோஸ்டல் மிஷன் தடை உத்தரவு வாங்கி இழுத்து வந்தது. பாஸ்டர் மானஸா இதற்கு ஈடுபடுத்தப் பட்டிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான வேலை நடப்பதை ஒப்புக்கொண்டு, பிறகு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதாகவும் எடுத்துக் காட்டினார்[2]. சென்னை உயர்நீதி மன்றம் இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட்.27, 2014 அன்று ஆணையிட்டது[3].

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

பலசர்ச்சைகளில் சிக்கியுள்ள இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: இந்த சர்ச் கடந்த ஆண்டுகளில் பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், இவர்களால் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று புகார் அளித்தாலும், போல்லீஸார் மற்றும் இதர ஊராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கன்வென்ஷன் நேரத்தில் வரும் கிருத்துவர்கள் பலவிதங்களில் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். போதகுறைக்கு அந்நேரங்களில் தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டு கடைகளை வைத்து இடைஞ்சல் செய்கின்றனர். இதனால், கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலசங்கம் வழக்கும் தொடர்ந்தது. ஏற்கெனவே வழக்குகளில் சிக்கியுள்ள  பென்டகோஸ்டல் மிஷன், சட்டப்படி, தனது அந்தஸ்த்தைத் ஸ்திரப்படுத்திக் கொள்ள, இதிலும் ஈடுபட்டு வருகிறது. சுதர்சன் ராஜ் என்பவருக்கு 11.03.2015லிருந்து 15.03.2015 வரை கடைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால், வழக்கு போடப்பட்டது[4]. ஆனால், இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே கன்வென்ஷன் நடந்து முடிந்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து விட்டது[5]. பிரதிவாதிகளையும் மனுக்களை வாபஸ் பெற ஆணையிட்டது[6].

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாற்ற முயற்சி[7] (மார்ச்.2014): வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரியை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விஜயகுமாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வக்கீல் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார். பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப் பூர்வமாக எழுதித்தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்[8]. அதைத் தொடர்ந்து விஜயகுமாரி தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் ஐகோர்ட்டை நாடவுள்ளோம் என்றார்[9]. 2012ல் லட்சுமி பிரியா என்ற ஆந்திர மாநிலத்து பெண்ணை மதம் மாற்றியதில், சர்ச்சையில் சிக்கியது[10].

hindu-girl-forcefully-converted

hindu-girl-forcefully-converted

சி.எம்.டி.., ‘நோட்டீஸ் மதிக்காத இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை[11].

Irumpuliyur map

Irumpuliyur map

தமிழக அரசு வரன்முறை செய்து பிறப்பித்த உத்தரவும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளும்: சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்[12]:

  1. பத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.
  1. அந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.
  1. கட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும்.
  1. இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.
  1. அதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
  1. மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.
  1. வளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும்.
  1. திட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
irumpuliyuur church encroachment

irumpuliyuur church encroachment

இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார் அதாவது, ஏரி ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு என்றெல்லாம் நடந்த பிறகும், பென்டகோஸ்டல் மிஷனுக்கு சாதகமாக இத்தகைய உத்தரவு வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-12-2015

[1] Petition filed under Article 226 of the Constitution of India praying for issue of Writ of Mandamus directing the 1st respondent [The Member Secretary, Chennai Metropolitan Development Authority, Gandhi Irwin Road, Egmore, Chennai] to enforce the stop work notice dated 17.09.2013 and further direct the 1st respondent to seal and demolish the unauthorised constructions being carried out by the 3rd respondent [The Pentecostal Mission, Rep. By Pastor Maanasa, Roja Street, Irumbuliyur, Tambaram (East), Chennai] in Survey No.84 situate in Irumbuliyur, Tambaram Taluk, Chengalpet District. http://indiankanoon.org/doc/23860348/

[2] Learned counsel for respondent no.3, thus, concedes that a part of the construction is without planning permission obtained, though application is pending consideration for regularization before the concerned authority. http://indiankanoon.org/doc/23860348/

[3] Madras High Court, C.V.Ramadas vs The Member Secretary on 27 August, 2014; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.08.2014 – CORAM – THE HON’BLE MR.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and THE HON’BLE MR. JUSTICE M.SATHYANARAYANAN, W.P.No.28655 of 2013 and  M.P.No.1 of 2013

[4] Madras High Court, Kalaignar Karunanidhi Nagar … vs The District Collector on 30 June, 2015,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, Dated: 30..06..2015 Coram: The Honourable Mr.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM, W.P.No.6693 of 2015.

[5] Petition filed under Article 226  of the Constitution of India praying for the issue of a writ of Mandamus, forbearing the 2nd respondent from permitting the fifth respondent to put up shops in the Roja Street, K.K.Nagar, Peerkankarani, Srinivasan Nagar (Post), Chennai 600 063, from 11.03.2015 to 15.03.2015 during the period of convention conducted by the fourth respondent. http://indiankanoon.org/doc/168574778/

[6] The Order of the Court was made by The Hon’ble The Chief Justice) Learned counsel for the petitioner states that since the convention is over, though the problem is repeatedly created, in order to ensure that in future, such a situation does not come to pass, he will file a fresh petition specifically raising the plea that there cannot be any construction on the roadside, in view of the provisions of the Tamil Nadu District Municipalities Act, 1920. He thus submits that the issue is not one of not adhering to the terms of the license, but absence of any provision in law, whereby the respondent can do so. He seeks to withdraw the petition. http://indiankanoon.org/doc/168574778/

[7] மாலைமலர், மதம் மாறிய பெண் விருப்பப்படி செல்லலாம்: வேலூர் கோர்ட்டு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 27, 3:44 PM IST

[8]http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/03/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article2133233.ece?service=print

[9] http://www.maalaimalar.com/2014/03/27154434/woman-can-optionally-converted.html

[10] https://christianityindia.wordpress.com/2012/11/06/1206-christian-missioneries-targeting-indian-women-for-conversion/

[11] தினமலர்,தேவாலய வரன்முறைக்கு 8 நிபந்தனைகள், டிசம்பர்.28,2015.00.30.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1420374

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (1).

செப்ரெம்பர் 6, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (1).

T. Russel Raj, his wife Jeyakumari and mother-in-law Kanaka Joy arrested in June 2015

T. Russel Raj, his wife Jeyakumari and mother-in-law Kanaka Joy arrested in June 2015

குழந்தை காப்பகங்கள் மலிந்துள்ள மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றுள் பதிவு செய்தும், செய்யாமலும் உள்ள இல்லங்களும் உள்ளன. இதனால், அடிக்கடி, இந்த இல்லங்களின் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தை அடுத்த ஜெய்வந்த்புரம் பகுதியில் வயதான தம்பதியிடமிருந்து 3 பெண் குழந்தைகளை குழந்தைகள் நலக் குழுமத்தினர் ஜூன்.20, 2015 சனிக்கிழமை மீட்டனர்[1]. ஜெய்வந்த்புரத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி, வயதான தம்பதியினர் 3 பெண் குழந்தைகளை வைத்திருப்பதாக, காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்துக்குத் தகவல் கிடைத்தது[2]. இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் மணிகண்டன், உறுப்பினர் ஜகீருதீன் முகமது [Zaheeruddin Mohammed], சமூகநலத் துறை அலுவலர் சற்குணா ஆகியோர் ஜெய்வந்த்புரம் பகுதியில் உள்ள சீமோன் (60) மற்றும் கனகஜாய் (55) தம்பதியின் வீட்டில் சனிக்கிழமை 20-06-2015 அன்று ஆய்வு நடத்தினர்[3]. அப்போது, அவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 3 வயதுக்கு உள்பட்ட 3 பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது[4]. விசாரித்தபோது, அவர்கள் திருப்தியான பதில்களை சொல்லவில்லை.

20-06-2-15 மாடம்பாக்கத்தில் மீட்டெடுத்த மூன்று குழந்தைகள் - மாலைமலர் போட்டோ

20-06-2-15 மாடம்பாக்கத்தில் மீட்டெடுத்த மூன்று குழந்தைகள் – மாலைமலர் போட்டோ

ஆதரவற்றோர் தர்ம டிரஸ்ட் இல்லம் நடத்திவந்த ரஸ்ஸல் ராஜ் / ரசுல் ராஜ்[5]: டி. ரஸ்ஸல் ராஜ் [T. Russel Raj] என்பவர் ஆதரவற்றோர் தர்ம டிரஸ்ட் இல்லம் [Destitute Charitable Trust Home ] என்பதனை அனுமதி இல்லாமல் நடத்தி வருகிறார். குழந்தைகளை கடத்தி கொண்டு வருதல் முதலிய காரியங்களில் ஈடுபடுவதாக குழந்தை நல கமிட்டிக்கு தகவல்கள் வந்தன. இதனால், அவரது இல்லத்தை சோதனை இட்டனர். ஆனால், அங்கிருக்கும் குழந்தைகளை மீட்க முடியவில்லை. ஏனெனில், அதற்குள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்திற்குச் சென்று தடை உத்திரவை வாங்கி வந்துள்ளார்[6]. அவர் தாம் இந்த மூன்று குழந்தைகளை சீமோன் – கனக ஜாய் தம்பதியரிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது[7].

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.3

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.3

ரஸ்ஸல் ராஜின் / ரசுல் ராஜின் மாமியார் வீட்டில் தான் அந்த மூன்று குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டன (ஜூன்.2015): இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் ஜகிருதீன் கூறியதாவது[8]: “வயதான தம்பதியரிடம் விசாரணை நடத்தியதில், பெற்றோர் வெளிநாட்டில் இருப்ப தால் தங்களிடம் குழந்தை களை பார்க்கச் சொல்லி விட்டுச் சென்றதாக முதலில் தெரிவித்தனர். அதன்பின் குழந்தைகளின் பெற்றோர் மதுரையில் இருப்பதாகவும், அந்த குழந்தைகள் தங்களின் பேத்திகள் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து அவர் களிடமிருந்து குழந்தைகளை மீட்டோம். மீட்கப்பட்ட குழந்தைகளின் வயது 3 வயதுக் குள்தான் இருக்கும். இந்த தம்பதியின் மகள் ஜெயாவின் கணவர் ரஷல்ராஜ் என்பவர், அப்பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லம் [Destitute Charitable Trust ] நடத்தி வருகிறார்[9]. அந்த இல்லத்தில் பல ஆண்டுகளாக 9 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளன. அந்த குழந்தைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால், குழந்தைகளை மீட்க முடிய வில்லை”, இவ்வாறு அவர் கூறினார். குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது[10]. இதைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியிடமிருந்து 3 பெண் குழந்தைகளையும் குழந்தைகள் நலக் குழுமத்தினர் மீட்டனர்[11]. அக்குழந்தைகள் அங்கு கடந்த ஒரு வருடமாக இருக்கின்றன[12]. அதன்பின் மணப் பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இல்லத்தில் அந்த குழந்தைகளை ஒப்படைத்தனர்[13]. பிறகு போலீஸாரிடம் புகார் கொடுக்க அவர்களிடம் விசாரணையும் நடந்தது[14].அதிகாரிகள் கூறுகையில், ‘’குழந்தைகளுக்கான உரிய ஆவணங்கள் தம்பதியினரிடம் இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகள் கடத்தி வரப்பட்டதா? என விசாரித்து வருகிறோம்’’ என்றனர்[15].

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2

ரஸ்ஸல் ராஜை / ரசூல் ராஜைப் பற்றி போலீசாரின் விசாரணையில் தெரியவந்த பகீர் தகவல்கள் (ஜூலை.2015): பெண் சிசு கொலைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களுக்கு இந்த காப்பகத்தினர் செல்வார்கள். அங்கு, பெண் குழந்தைகளை நாங்கள் எங்கள் காப்பகத்தில் சிறப்பாக வளர்ப்போம். வெளிநாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு தத்து கொடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கு வளமான வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பெண் குழந்தையை கொல்ல மனமில்லாத சில பெண்கள், அந்த குழந்தைகளை இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒப்படைத்துள்ளனர்[16]. இதற்காக உசிலம்பட்டியில் பெண் சிசு கொல்லுவதை தடுக்கும் சிறப்பு முகாம் நடத்தினர்[17]. அதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அனுசரித்து நடந்தனர். இதுபோன்ற முகாம்களை நடத்த தமிழகத்தில் யாருக்கும் அரசு அனுமதி வழங்க வில்லை. குழந்தை வேண்டாம் என்றால் தொட்டில் குழந்தை திட்டத்தில்தான் போட வேண்டும். ஆனால், இவர்கள் இந்த குழந்தைகளை இலவசமாக வாங்கி வந்து, பெரிய பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதிகளுக்கு பல லட்சம் விலை நிர்ணயித்து விற்றுள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே, சட்டவிரோதமாக குழந்தைகளை காப்பகத்தில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து ரசுல் ராஜ், அவரது மனைவி ஜெயகுமாரி (48), மாமியார் கனகஜாய் (55) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.1

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.1

டி. ரஸ்ஸல் ராஜ், இந்த ரஸ்ஸல் ராஜ், ரசுல் ராஜ் எல்லொரும் ஒன்றா?: ரஸ்ஸல் ராஜ் என்று ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழ் ஊடகங்கள் ரசுல் ராஜ் என்று குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் டி. ரஸ்ஸல் ராஜ் என்ற பெயர் 2003லும், இன்னொரு வார இதழ் நடத்தும் விசயத்திலும் காணக்கடுகிறது. டி. ரஸ்ஸல் ராஜ் என்பவர் தியாகராஜன் என்பவர் தன்னை ஏமாற்றியதாக போலீஸாரால் புகார் கொடுத்தார்[18]. பொலீஸ் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[19]. தவிர செய்திதாள்கள்,பத்திரிக்கைகள் பதிவாளர்கள் இணைதளத்தில் இதே பெயர் கொண்டவர், “சென்னை குடிமகன்” என்ற வார இதழை நடத்துவதாக விவரம் உள்ளது[20]. அதன் சொந்தக்காரர் மற்றும் ஆசிரியர் T. RUSSEL RAJ என்றுள்ளது[21]. இந்த குழந்தை காப்பகம் விசயத்தில் உள்ளவரின் பெயரும் T. Russel Raj என்றுள்ளது. இவர்கள் எல்லோருமே வெவ்வேறான நபர்களா, ஒரே நபரா என்று தெரியவில்லை. இந்த T. Russel Rajஐப் பொறுத்த வரைக்கும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு எல்லாம் வாங்கியிருக்கிறார் என்றால் அவர் விவரமானர் என்றே தெரிகிறது. எனினும், ஜூலை.2015ல் கைதானார் எனும்போது, தடை நீக்கம் செய்யப்பட்டது, போலீஸார் புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றாகிறது.

வேதபிரகாஷ்

© 06-09-2015

[1] தினமணி, 3 பெண் குழந்தைகள் மீட்பு, By காஞ்சிபுரம், First Published : 22 June 2015 12:05 AM IST.

[2] மாலைமலர், வயதான தம்பதிகளிடம் இருந்து 3 பெண் குழந்தைகள் மீட்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 3:43 PM IST

[3] திமனமலர், மூன்று பெண் குழந்தைகள் மீட்பு, ஜூன்.21,2015.00.00.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1279402

[5] தமிழ் ஊடகங்கள் T. Russel Raj என்ற பெயரை ரசுல் ராஜ் என்று குறிப்பிடுகின்றன. இப்பிரச்சினையைப் பொறுத்த வரையிலும், ரஸ்ஸல் ராஜும், ரசுல் ராஜும் ஒரே நபர் தான் என்று தெரிகிறது.

[6] Divya Chandrababu, Child rescued from unlicensed home in Chennai, fourth in three days, TNN ,  Jun 24, 2015, 01.00 PM IST.

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/Child-rescued-from-unlicensed-home-in-Chennai-fourth-in-three-days/articleshow/47797478.cms

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7341382.ece

[9] “We suspect the involvement of another unlicensed child care home — Destitute Charitable Trust Children’s Home — in the same locality that is run by the elderly woman’s son-in-law. There are only girls in the home and the owner has obtained a stay from the Madras high court in a case filed against the home,” Mohammed said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/3-girls-illegally-kept-in-house-at-Madambakkam-rescued/articleshow/47752237.cms

[10]  தினகரன், கடத்தி வரப்பட்டவர்களா? முதியவரின் வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்பு, பதிவு செய்த நேரம்:2015-06-22 10:42:04.

[11] http://www.dinamani.com/edition_chennai/kanchipuram/2015/06/22/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article2879333.ece

[12] Divya Chandrababu, 3 girls illegally kept in house at Madambakkam rescued, TNN, Jun 21, 2015, 01.57 AM IST.

[13] தமிழ்.இந்து, மாடம்பாக்கத்தில் வயதான தம்பதி வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்பு, Published: June 22, 2015 07:24 ISTUpdated: June 22, 2015 07:24 IST

[14] http://www.maalaimalar.com/2015/06/21154356/3-year-old-girl-from-the-child.html

[15] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=465415&cat=504

[16] http://tamil.oneindia.com/news/tamilnadu/three-people-arrested-child-abduction-230606.html

[17] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் சிசுக் கொலை தடுப்போம்”- போலியான முகாம் நடத்தி குழந்தைகள் கடத்திய மூவர் கைது, Posted by: Vijayalakshmi, Published: Wednesday, July 8, 2015, 16:20 [IST].

[18] Justice V. Kanagaraj gave the direction on a petition filed by one T. Russel Raj and mandated the police to file a final report within 30 days from the date of receipt of a copy of the order…..The petitioner [T. Russel Raj] contended that Mr. Thyagarajan had `cheated him to the tune of Rs. 1.5 lakhs’ besides cheating the insurance company to the tune of Rs. 7 lakhs. Originally he had preferred a complaint with the Joint Commissioner of Police. Though it was forwarded to the jurisdictional police for action, the JJ Nagar police did not register any case. The Hindu, HC directive to JJ Nagar police, Thursday, August 28, 2003.

[19] http://www.thehindu.com/2003/08/28/stories/2003082808900300.htm

[20] T. RUSSEL RAJ editor and owner of a weekly “CHENNAI CITIZEN  चेन्नई सिटीजन”, 288/15, BARATH FLATS, BELLY AREA, ANNA NAGAR, CHENNAI-600 040. TAMIL NADU

[21] http://rni.nic.in/display_details.asp?regn=107138

கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்

ஒக்ரோபர் 11, 2013

கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்

தாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன்

தாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன்

தென்மாவட்டங்களில்கிறிஸ்தவர்களின்மதவெறியாட்டம்: கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில், கிறிஸ்தவர்களின் மதவெறியாட்டம் (Christian fundamentalism, fanaticism and terrorism put together) அதிகமாகவே இருந்து வந்துள்ளது. போர்ச்சுகீசியரின் மதவெறி பற்றி மதஒப்புமை ஆராய்ச்சியாளர்களுக்கு (Comparative religion researcher), இறையியல் வல்லுனர்களுக்கு (Theology experts) மற்றும் கத்தோலிக்க பண்டிதர்களுக்கு (Catholic theologians) நன்றாகவே தெரியும். அவர்களது குறிப்புகளினின்றே, அவர்களது மபப்பாங்கையும், அதற்கேற்றார்போல, அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் அறியலாம். முதலில் “உயர்ஜாதி” இந்துக்களை மதம் மாற்றினர், பிறகு மற்றவர்களை ஏமாற்றி மதம் மாற்றினர். இந்த இருகாலகட்டங்களில், முதலில் மற்றவர்களை ஏசினர், பிறகு முன்னவர்களை வசைபாடினர். அத்தகைய நடைமுறையில், இந்துமதம் தான் அதிகமாகத் தாக்கப் பட்டது. இன்றும், கிருத்துவர்கள், கிறிஸ்தவர்கள், மதம் மாறியவர்கள் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவர்களின் மதத்தை சாடி, வசைப்பாடி மற்றும் தூஷித்துத் தான், தம்முடைய மதத்தை வளர்க்கமுடியும் என்று கோமாளிக் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.

தாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன், ஆன்டி-கிரைஸ்ட் போல வேலை செய்கின்றவன்

தாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன், ஆன்டி-கிரைஸ்ட் போல வேலை செய்கின்றவன்

சென்னையைசேர்ந்ததாயப்பனின்துற்செய்தி: நடுவக்குறிச்சி சி.எஸ்.ஐ (Church of South India) சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ மதபோதகர் சென்னையை சேர்ந்த தாயப்பன் “நற்செய்தி” (Gospel) என்ற பெயரில் துற்செய்தியைச் (Evil-spel, Ghost-spel) சொல்லிக் கொண்டிருந்தார். ஊடகங்களுக்கு “நற்செய்தி” என்றால் என்னவென்று தெரியாமலே அவ்வார்த்தை பிரயோகத்தை செய்துள்ளது. அதாவது, அவர் இந்து மதத்தை பற்றியும், இந்துக்கள் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இதனைக் கேட்டவர்கள், முதலில் எச்சரிக்கை செய்தனர். ஆனால், அந்த கிறிஸ்தவரோ, வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். இந்த ஆள், போலி ஆராய்ச்சி மு. தெய்வநாயகத்தின் கூட்டாளி என்றும் தெரிகிறது. தெய்வநாயகத்தைப் போன்றே, கிறுக்குத்தனமாக பேசிவருவதை கிறிஸ்தவர்களே கண்டித்துள்ளனர். இப்பொழுது, இந்துக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

இத்தகைய மதமாறி கிருத்துவர்கள் முதலில் கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய மதமாறி கிருத்துவர்கள் முதலில் கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

புகார்கொடுத்தகிராமமக்கள்: இந்துக்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர், முதலில் தயங்கினாலும், பிறகு எப்.ஐ.ஆரைப் போட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டதோடு சரி. ஆனால் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. மக்கள் கேட்டதற்கும் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் மாவட்ட கலெக்ட்ரிடம் புகார் செய்ய தீமானித்து அங்கு சென்னர். கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது[1]. அவரை கைது செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று நடுவக்குறிச்சி கிராம மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நடுவக்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் பலர் தர்மகர்த்தா மகாராஜ் நாடார் தலைமையில் திரண்டு வந்தனர்.

Thayappan - different faces

தாயப்பனின் பல முகங்களா, இந்துவிரோதியின் பிம்பங்களா, சைத்தானின் நிழல்களா

மக்கள்கலெக்டரிடம்அளித்துள்ளமனுவில்கூறியிருப்பது: அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[2]: “நாங்கள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சாயர்புரத்தை அடுத்துள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி விநாயகர் கோயிலில் வைத்து 17வது அன்னதானம் நடந்தது. இதனை ஒட்டி 24ம் தேதி விளக்குபூஜை நடந்தது. அந்த சமயத்தில் எங்கள் ஊர் சி.எஸ். சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ மதபோதகர் சென்னையை சேர்ந்த தாயப்பன் நற்செய்தி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இந்து மதத்தை பற்றியும், இந்துக்கள் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக நாங்கள் போலீசில் புகார் செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த 27ம் தேதி தாயப்பன் மீது சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்..ஆர் போட்டனர். ஆனால் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. இந்துக்களை இழிவாக பேசிய அவரை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்”, இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மதமாறி மதத்தை ஏமாற்றியதா, குடும்பத்தை ஏமாற்றியதா

மதமாறி மதத்தை ஏமாற்றியதா, குடும்பத்தை ஏமாற்றியதா

போலீசாருக்கும், பொதுமக்களுக்கும்இடையேவாக்குவாதம்: ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, தனபால், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் பேசினர். மனுக் கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் திரண்டு நின்றதால் போலீசார் அவர்களை ஓரமாக நிற்குமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாதீர்கள். மனுக் கொடுக்க வந்த அப்பாவி மக்களை மட்டும் அங்கு நிற்காதீர், இங்கு நிற்காதீர் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம்”, என்று போலீசாரை பார்த்து பொதுமக்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது[3].

சாத்தான் வேதம் ஓதுகிறதா, சைத்தான் பைபிள் படிக்கிறதா, ஆன்டி-கிரைஸ்ட் பலி கொடுக்கிறதா, அவிக்குத்தான் தெரியும்

சாத்தான் வேதம் ஓதுகிறதா, சைத்தான் பைபிள் படிக்கிறதா, ஆன்டி-கிரைஸ்ட் பலி கொடுக்கிறதா, அவிக்குத்தான் தெரியும்

தாயப்பனின்உளறல்கள்: தாயப்பனின் முகவரி 12 ஜிடி நாயுடு தெரு, பாலாஜி அவென்யு-1, சேலையுர் அஞ்சல், சென்னை.600 073, தொலைபேசி எண்.044 22234526 email.id.: sakthiprabha@yahoo.com என்றுள்ளன. சென்னை கிருத்துவக் கல்லூரியில் உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்பருக்கும் தொடர்புள்ளது. இவரும் சித்தர்கள் ஆராய்ச்சி என்றெல்லம் செய்து வருகிறார். ஏற்கெனவே, ஞானசிகாமணி என்ற பழம் வேறு இருக்கிறது இப்படித்தான், இந்த கும்பல் வேலை செய்து வருகிறது. இந்த தாயப்பனின் உளறல்கள், தெய்வநாயகத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அவரது, கிறுக்குத்தனமான உளறல்களில் சில:

  • பிள்ளையார் (விக்னேஷ்வர்) – அது இயேசுவைத்தான் குறிக்கும்.
  • பிதா -குமாரன் – பரிசுத்த ஆவி – இவர்கள் திருமூர்த்திகள்.
  • முருகனும்இயேசுவும் ஒருவரே!
  • முருகனுக்கு 12 கைகள் – இயேசுவுக்கு 12 சீஷர்கள்
  • சூலாயுதமும் – சிலுவையும் ஒன்றுதான்
  • அந்த காலத்தில் பிதாவை ஒப்பிட்டு சிவனை உருவாக்கினார்கள்.
  • பரிசுத்தாவியை ஒப்பிட்டு சக்திவிஷ்ணுவை உருவாக்கினார்கள்.

இதைத் தவிர யூ-டியூப்பில் வேறு பொய்பிரச்சாரங்கள்[4] நடக்கின்றன[5]. பிறகு சிடி போட்டு விற்க ஆரம்பித்தபோது, கிறிஸ்தவர்கள் எதிர்த்துள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவர்கள், இதனைக் கேட்டு குழம்பி விட்டனராம். எல்லாமே ஒன்று என்றால், பிறகு ஏன் ஞான ஸ்நானம் செய்ய வேண்டும், பெயரை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். சிடி விற்பனையில், பணப்பகிர்வு விசயத்திலும், கிறிஸ்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கத்தோலிக்கப் பிரிவும், பெந்தகோஸ்தே பிரிவும்[6] சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபடுவது வினோதமாக இருக்கிறது. மேனாடுகளில் உள்ள இறையியல் வல்லுனர்ஃப்களுக்கு, இந்தியாவில் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இருந்தும், அதையும் மீறி, இக்குழுக்கள் வேலைசெய்வதிலிருந்து தான், அவை நாடகமாடுகின்றன என்று தெரிகிறது[7]. இந்துவாக இருந்து, கிறிஸ்தவராகி உள்ள இந்த தாயப்பனைப் பற்றி வித்தியாசமான டினாமினாசன்கள் (Denominations) எல்லாம் பிரச்சாரம் செய்வதும், அவர்களது இறையியல் வேசித்தனத்தைக் காட்டுகிறது[8].

அருப்புக்கோட்டை-பள்ளி-பைபிள்-விநியோகம்

இப்படித்தான் சத்தியம் பரப்பப் படுகிறதா – இது இறையியல் வேசித்தனமா, தேவனின் மகிமையா, பாதிரிகளில் விபச்சாரமா

சத்தியத்தைத்தேடிபுதிய CD[9]: ஒரு கிறிஸ்தவர், நொந்து போய், தனது இணைதளத்தில் இப்படி பதிவு செய்டுள்ளார், “சமீபத்தில் சத்தியத்தைத் தேடி என்ற குறும்படம் ஒன்று சக்கைப்போடு போடுகிறது. இந்து சமஸ்கிரத ஸ்லோகங்களை மிக அளவாக உபயோகித்து குறிப்பிட்ட கருத்துக்களுக்குமட்டும் சமஸ்கிருதத்தை உபயோகித்து அதை ஒரு கதையாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அருமையாக இருக்கிறது. சினிமா நடிகர் திரு.சாருஹாசன் அவர்களை மையமாக வைத்து மிக நன்றாக வசனத்தைவிட்டு வெளியேபோகாமல் ஒரு பிராமண குடும்பம் எப்படி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்து குறும்படமாக எடுத்துள்ளார்கள். அந்த குறும்படம் அநேக படித்த இந்து மதத்தினருக்கு நிச்சயம் பிரயோஜனப்படும. பல இந்துக்களின் உள்ளத்தில் நிச்சயம் கேள்விகளை எழுப்பும். ஆனால், இப்போது இந்த குறும்படம் திருட்டு சிடியாக பதிவு செய்து ஆயிரக்கணக்கில் சென்னை வீதிகளில் அமோக விற்பனையாகிறது. இதை அறிந்த அந்த படக்குழுவினரில் சிலர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த குறும்படத்தை (மொழிபெயர்ப்பு செய்து) டப் செய்து கொள்ளை லாபம் அடிக்க திட்டமிட்டுள்ளனர். இங்குதான் ஆபத்து பிசாசு ரூபத்தில் நிற்கிறது”.

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை -இவையெல்லாம் சாத்தானின் வெளிப்பாடா, சேவையா

மோசடியிலும்மோசடிஆமாம், இந்தசிடியைகாப்பியடித்துதிருட்டிசிடிபோட்டுவிற்கிறார்களாம்! ஒரு கிறிஸ்தவரின் கவலை, “அந்த குறும்படம் எடுத்தவர்கள் பிரமாண குலத்திலிருந்து உண்மையாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். தங்கள் பிரமாண குலத்தில் உள்ளவர் உண்மையை அறியவேண்டும் என்ற பெரும்பாரம் கொண்டு கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போதும் கடனாளியாகவே இருக்கிறார்கள். ஆனால் திருட்டு சிடி எடுத்தவர்கள் சம்பாதித்த லாபத்தை சிலர் அறிந்தவுடன்  ஊழிய சிந்தை மாறி, வியாபார சிந்தை வந்துவிட்டது. அந்த குறும்படம் எடுத்ததின் ஆழமான நோக்கம் மறைந்து போய்விடுமோ என்று பயத்தாலும், வேதனையாலும் இதை எழுதுகிறேன். சில சமயம் ஆராய்ச்சியும், சிந்தனையும், எதிர்ப்பார்த்தலும் எல்லை மீறிவிட்டால் கிறிஸ்து அங்கு இருக்கமாட்டார். வியாபாரமும், பணமும் மட்டுமே காணப்படும். அவர்கள் ஆத்துமா இயேசுவை விட்டே தூர தூர போய்விடும். ஜாக்கிரதை!”, என்று இவர் விளக்கியுள்ளார்.

பெண்கள்.போப்பை.வரவேற்பது

பெண்கள்.போப்பை.வரவேற்பது

ஜாதிகலவரம்தூண்டும்வகையில்பேசுகிறார்[10]: இது உள்ளூர் மக்களின் செய்தியாக உள்ளது. அதாவது, கலவரத்தைத் தூண்டுவது, பிறகு அதனால் பாதிக்கப் பட்ட மக்களை அணுகி அவர்களை காப்பாற்றுவது போல, உதவி செய்வது போல நடித்து ஆதாயம் தேடும் முறையை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. முசாபர்நகர் கலவரத்தில் எப்படி ஆசம்கான் முதல் மற்ற மதபிரச்சாரகர்கள் பங்கு கொண்டனரோ, அதே போன்ற போக்கு காணப்பட்டால், தமிழக அரசு இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

பிசாசு (Ghost), சைத்தான் (Satan), எதிர்கிருஸ்து (Anti-Christ): உண்மையில் கிருத்துவர்கள் செய்து வரும் மோசடிகளில், அக்கிரமங்களில், ஆபாசங்களில், தூஷணங்களில் தான் அவர்கள் சைத்தானுக்குத் துணை போய் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், அவர்களே, ஒருவருக்கொருவர் ஆதரித்தும், எதிர்த்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அறுவடை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால், சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இதில் பிஷப் முதல் பாஸ்டர் வரை லட்சங்கள்-கோடிகள் கிடைப்பதால், சந்தோஷமாக, விசுவாசமாக, பரிசுத்த ஆவி அவர்களின் உடல்களில் ஏறிவிட்டது போல வேலை செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

10-10-2013


[1] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,04:07 IST