Posts Tagged ‘ஞானபிரகாசம்’

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா?

ஜூன் 26, 2016

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி கர்த்தரின் செயலா?

இளவரசி - போட்டோ

பாதிரியிடம் ஜாதகம் கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொன்னால், நானே மாப்பிள்ளைதான் என்ற பாதிரி: செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் திலகவதி மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராம சர்ச் ஒன்றில் பாதிரியாராக வேலை செய்து வருகிறார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கூலியான கலியபெருமாள்-மல்லிகா தம்பதியரின் இரண்டாவது மகள் இளவரசி. கஷ்டப்பட்டு, இவர் பி.காம்., எம்.பில்., பட்டம் படித்துள்ளார். பெற்றோர் இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தை, ஜான்ஞானபிரகாஷ், பாதிரியிடம் கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். இதிலிருந்து, இளவரசி குடும்பத்தினரும் கிருத்துவர்கள் என்று தெரிகிறது. ஆனால், ஞானபிரகாஷத்திற்கே அவள் மீது ஆசை இருந்ததால், தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றாராம்! அதன் பிறகு நடந்ததை, இளவரசியின் மாமா ரவிக்குமார், மு. இராகவன் என்ற “தமிழக அரசியல்” இதழ் நிருபரிடம் சொன்னதாக இவ்வாறுள்ளது[1]. இங்கும், ஜாதகம் பார்க்கும் விசயத்தில் கிருத்துவத்தின் போலித்தனம் வெளிப்படுகிறது.

ஞானபிரகாசம் - ராகவன். போட்டோஎனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை என்ற பாதிரி!: “நான் ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது ஏன் வெளியில் தேடவேண்டும் என்று ஜான் ஞானபிரகாசம் வலிய பெண் கேட்டதால், கடந்த ஆண்டு 2015 ஜூன் 22ம் தேதியன்றவு அவர்கள் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தோம். முதல் நாள் இரவேநான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திருஎன்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலும் கூட இரவு தங்குவதில்லை. ‘ஏன் ஒதுங்கி செல்கிறீர்கள் என்று இளவரசி கேட்டதற்கு, ‘நீ அழகா இல்ல. மற்றவர்கள் மத்தியில் என்னுடன் ஜோடியாக வர உனக்கு தகுதி இல்லைஎன்று கூறிவிட்டார். நான்கு ஊர் பஞ்சாயத்து கூடி பாதிரியிடம் கேட்டபோது, ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லைஎன்று கூறி சென்று விட்டார். என்றாலும், மனம் திருந்தி வருவார் என இளவரசி அவரது வீட்டிலேயே வேலைக்காரியைப் போல உழைத்து எத்ர்பார்ப்புடன் காத்திருந்தாள். இந்த ஜூலை 22 முதல் திருமண நாள் வர இருப்பதால், அன்றாவது வருவார் என்று காத்திருந்தார் இளவரசி. ஆனால், வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் துடித்துப்போய் அந்த விரக்தியேலேயே தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால், மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி விட்டோம்”, என்று கூறி முடித்தார்.

பாதிரி பற்றிய விவரங்கள்பாதிரி சிறைக்கு சென்றது தற்கொலையைத் தூண்டியதாலா, வரதட்சிணை கேட்டதாலா?: இந்நிலையில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜான் ஞானபிரகாசம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசியிடம் பேசும் போது, “நான் வாழாவெட்டியாக தாய் வீட்டிற்கு திரும்புவதால் எனது தங்கைகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்பதால் அவருடனே வாழப் போராடினேன். பாதிரியார் என்ற வேஷத்தில் வேஷதாரியாய் இருக்கும் அவருடன் இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என் வாழ்வைக் கெடுத்த பாவத்திற்கு கர்த்தரும் அவனுக்கு மன்னிப்பு தரப்போவதில்லை. வாழ்வுதான் கிடைக்கவில்லை. சாகத்துணிந்தும் அதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவன் செய்த தவறுக்கு சட்டத்தின் தண்டனையை அனுபவிக்கட்டும்”, என்றார் கண்ணிர் மல்க. கர்த்தர் இளவர்சியை ஆசிர்வாதிப்பாராக என்று முடித்திருந்தாலும், வழக்கம் போல மற்ற தமிழ் ஊடகங்கள் சில மாறுபட்ட விவரங்களைத் தருகின்றன. வரதட்சிணை கேட்க சொன்னது தேவனா, கர்த்தரா, மாதாவா, பரிசுதத ஆவியா, யார்?

பாதிரி பற்றிய விவரங்கள்.ராகவந் இளவரசிஜான் ஞானபிரகாசம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினார்[2]: தினகரன், ஜான் ஞானபிரகாசம் மற்றும் இவரது மனைவி இளவரசி (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்[3]. கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் ஞானப்பிரகாசம், இவரது தாயார் திலகவதி ஆகியோர்  இளவரசியிடம்  வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து இளரவசி, 11-06-2016 சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்[4]. அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்[5]. இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்[6].

ஞானபிரகாசம் - ராகவன்

நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு: ஜான் ஞானபிரகாசம் இவ்வாறு சொல்லும் போது, யாரைக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டான், தாலி கட்டினான்……..என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா? அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள்! கேட்டால், எல்லாமே தேவனின் மகிமை என்றும் சொல்வார்கள் போலும்!

வேப்பந்தட்டை எங்ஜினியரிங் கல்லூரி தற்கொலை முயற்சி

இப்பகுதிகளில் அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களின் பின்னணி என்ன?:: அன்னமங்களத்தில் ரோமன் கத்தோலிக்க மற்றும் புருடெஸ்டென்ட் சர்ச்சுகள் உள்ளன. அவற்றில் டி;எல்.எல்.சி மற்றும் சி.எஸ்.ஐ புருடெஸ்டென்ட் என்று மூன்று பிரிவுகளின் சர்ச்சுகள் உள்ளன. மதம் மாற்றும் விசயங்களில் இவற்றிற்குள் போட்டி இருக்கிறது. கூகுள் மேப் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. அருகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள காத்தான்காடு போன்ற இடங்களும் உள்ளன. முஸ்லிம்களும் மதம் பரப்புவதில், தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இப்பகுதிகளில், அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவையெல்லாம், தெற்செயலாக நடப்பவையா அல்லது பின்னணியில், மதசார்புடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் முதலியவை உள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.

வேப்பந்தட்டை பள்ளி மாணவி சுபாஷிணி மாயம்இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா?:  அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி[7] ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மே 1, 2014 அன்று நடந்தது[8]. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம் ஜெபம் செய்து, விழாவை தொடங்கி வைத்தார்[9]. உதவி பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். அன்னமங்கலம் பங்கு தந்தை ஆல்பர்ட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜாலெமார்ஜி, பொருளாளர் நிக்கல்சன், உதவி தலைவர் மெர்லிஸ், பாலிடெக்னிக் முதல்வர் லோகர்செல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இங்கு, இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா என்ற கேள்வி எழுகின்றது. அன்னமங்கலம், அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம், கிருத்துவர்களால் நிர்வகித்து வரப்படும் அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி முதலியவை, அதை சுட்டிக் காட்டுகின்றன. பிறகு, அந்த சர்ச்சுக்கும், இக்கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்?

© வேதபிரகாஷ்

26-06-2016

Location churches in Annamanalam Google map

[1] மு. இராகவன், நீ அழகா இல்ல!…… மனைவியை தூக்கில் தொங்க வைத்த பாதிரியார்,. தமிழக அரசியல், 25-06-2016, பக்கம்.16.

[2] தினமணி, வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு, By மயிலாடுதுறை, First Published : 13 June 2016 07:31 AM IST

[3] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[4] தினகரன், மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு,
Date: 2016-06-13 11:34:53

[5]http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/06/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article3479962.ece

[6] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[7] Elizabeth College of Engineering and Technology, Annamangalam(po),
Vepppanthattai (TK), Perambalur(Dt), Tamil Nadu – 621102.http://elizabethcollege.in/

[8] தினமலர், எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி ஆண்டு விழா, பதிவுசெய்த நாள்: மே.2, 2014: 02.15.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=966479&Print=1

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

ஏப்ரல் 21, 2013

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

Sexy speaking Christian priest arrested 19-04-2013

2013  – மூன்று மாதங்களில் பல பாதிரிகளின் சட்ட மீறல்கள்,  கைதுகள்: ஆபாசபேச்சு பேசி வீட்டுக்க்கு அழைக்கும் பாதிரி, பணத்தைக் கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – இப்படி பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும் தமிழகத்தில் உலா வருவதும், குற்றங்களை செய்வதும், கைதாவதும், அதற்குப் பிறகு என்னாவாகிறது என்று ஒன்ற்ம் தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்த அளவிற்கு தைரியம் வருகிறது, துணிச்சலாக குற்றங்களை செய்து வருகிறார்கள், செய்தும் மறுபடியும் பணிகளில் வந்து அமர்ந்து விடுகிறார்கள், எப்படி வெளியே வருகிறார்கள், சட்டங்களின்று எப்படித் தப்பிக்கின்றனர் அல்லது அவர்கள் உண்மையிலேயே புனிதர்களாக இருந்து வெளியே வந்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, பாதிப்புக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கர்த்தர் ஒருவேளை மன்னித்து விடுவார் என்று, அவர்கள் மறுபடியும் பாவமன்னிப்புப் பெற்று, பாவங்களை செய்ய வருகிறார்கள் போலும். இதோ வந்துள்ள செய்திகளைப் படிக்கவும்:

Jogn Mark hristian priwst arrested

 

சர்ச்சிற்கு வரும் பெண்களிடம் ஆபாசப் பேச்சு பேசும்  பாதிரி கைது  (16-03-2013): கோவை, மார்ச். 17, 2013 கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க் (வயது 63). இவர் ஏற்கனவே கோபி, ஈரோடு, பெருந்துறை, கோவை கணபதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார்.  பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார்.  மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார்[1] என்றும் குறிப்பிட்டிருந்தனர். புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார். அவர் மீது 509 (பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு அழைப்பு விடுவது), 506(1) கைகள் மூலம் சைகையால் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைதான பாதிரியார் ஜான் மார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[2].

Sexy christianity - pastor sex India.2

பாதிரி வீட்டில் கொள்ளையடித்த பாதிரி கைது  (25-02-2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி..எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், .டி.. நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம். மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை .டி.., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி..எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது”, என்று தெரிவித்திருந்தார்[4]. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Christian priest loot money

பெண் எஸ்..,க்கு கொலை மிரட்டல்பாதிரியார் கைது  (07-01-2013): ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பெண் எஸ்.ஐ., சாந்தி ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த, பாதிரியார் ஞானபிரகாசம் கைது செய்யப்பட்டார். தங்கச்சிமடம் வலசை தெரு சேர்ந்த பாதிரியார் ஞானபிரகாசம், 62. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., சாந்தி ராணியிடம் தகவல் கேட்டுள்ளார்[5]. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.ஐ., சாந்தி ராணி புகார் கொடுத்தார். அவரது புகாரின்படி, பாம்பன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிந்து, பாதிரியாரை கைது செய்தார்[6].

 

வேதபிரகாஷ்

21-04-2013