Posts Tagged ‘ஜெயராஜ்’

பாஸ்டர் கட்ட ஜெயராஜ், கெட்ட ஜெயராஜாகி, இளம் பெண்ணை கற்பழித்ததால், பத்தாண்டு சிறை! வேலியே பயிரை மேய்ந்த குரூர கற்பழிப்பு!

நவம்பர் 6, 2017

பாஸ்டர் கட்ட ஜெயராஜ், கெட்ட ஜெயராஜாகி, இளம் பெண்ணை கற்பழித்ததால், பத்தாண்டு சிறை! வேலியே பயிரை மேய்ந்த குரூர கற்பழிப்பு!

Churches in Palaparru- Jararaju case-2017

பாலபர்ருவில் சர்ச்சுகள் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?: பாலபர்ரு [పాలపర్రు] என்பது வயல்வெளிகள் சூழ்ந்த அழகான ஒரு சிறிய கிராமம். பாலபர்ரு ஜில்லா, பெதநந்திபாடு [పెదనందిపాడు] மண்டலம், குண்டூர் மாவட்டம், ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. அதில், ஒரு சிவாலயம் இருக்கும் போது, ஹோஸன்னா மந்திர், சன் சர்ச் அன்ட் பெலோசிப், பாலபர்ரு பாப்டிஸ்ட் சர்ச், லூதரன் சர்ச் என்று பல சர்ச்சுகள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. மொத்த ஜனத்தொகை 3478, அதில் 1688 ஆண்கள் மற்றும் 1790 பெண்கள், அவர்கள் 940 வீடுகளில் வசித்து வருகிறார்கள். அக்கிராமத்தின் மொத்தப் பரப்பளவே 1237 ஹெக்டேர்கள் தாம்[1]. ஆயிரம் மக்களுக்கு ஒரு டாக்டர், ஆஸ்பத்திரி, போலீஸ் ஷ்டேசன், …..போன்றவை இருக்க வேண்டும் என்கிறார்கள், ஆனால், இவை – சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன? ஆக இக்கிராமத்தில் இத்தனை சர்ச்சுகள் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று அங்கு வரும் யாருக்கும் வியப்பாகத் தான் இருக்கிறது.  ஆந்திராவில், பலவித சர்ச்சுகள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தைல் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோடிகணக்கில் பணம் வருகின்றது. இதனால், கிருத்துவப் பாதிரிகளிடம் ஒழுக்கம் இல்லாமல், தறி கெட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

Palaparru village

கட்ட ஜெயராஜுவின் காமக்கண்கள் அமலாவின் மீது விழுந்தது: அக்கிராமத்தில் தான் “அமலா” [கற்பனை பெயர்] என்ற 13 வயது சாக்கலி செருவு அருகில் சிறுமி ஜில்லா பரிஷத் பள்ளியில்[2] ஒன்பதாவது வகுப்புப் படித்து வந்தாள். அதே கிராமத்தில் “செயின்ட் மார்க் சிறுவர் இல்லம்” என்று கட்ட ஜெயராஜ் என்கின்ற கே. ஜெயராஜு பாஸ்டர் நடத்தி வந்தான். இதில் 30 சிறுவர்-சிறுமியர்  [13 சிறுமியர் மற்றும் 17 சிறுவர்[3]] தங்கியிருந்தனர். அவன் “கட்ட ஜெயராஜ்” இல்லை மிகவும் “கெட்ட ஜெயராஜ்” என்று தெரிய வந்தது. ஏனெனில் அவன், சிறுமிகளிடம் தாறுமாறாக நடந்து வந்தான். அவனுக்கு அமலா மீது எப்பொழுதும் ஒரு கண்ணிருந்தது. இருமுறை பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான். ஆனால், அவள் சிக்கவில்லை. 2014 டிசம்பரில், கிருத்துமஸுக்கு முன்னால் எப்படியாவது அவளை வளைத்துப் போட வேண்டும் என்று திட்டம் போட்டான். பள்ளி தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன, அதற்குப் பிறகு, விடுமுறை வரும் என்பதால், பெற்றோர் இருக்கும் சிறுவர்-சிறுமியர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடுவர். அதனால், ஒரு நாள் அமலாவை தனியாக அழைத்துச் சென்று விவசாய நிலத்தில் வைத்து கற்பழித்தான்.

13-yr girl raped by pastor Hyderabad- 19-12-2014

மாணவி கற்பழிப்புப் பற்றிய செய்து வெளியீடுகள்: இதனால் பாதிக்கப்பட்ட அமலா பள்ளிக்குச் செல்லவில்லை. தேர்வுகள் நடைபெறும்போது, மாணவி பள்ளிக்கு வராதது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த அமலாவிடம் விசாரித்த போது, சரியாக பதில் சொல்லவில்லை. இதையெடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிரி ஜெயராக் தன்னை விவசாய நிலத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், ஏற்கெனவே இருமுறை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.  இன்னொரு செய்தியின் படி, கற்பழிப்பிற்குப் பிறகு, அவள் உடல் அசௌகரியம் அடைந்தாள், அதனால் அவள் பள்ளுக்குச் செல்லவில்லை, ஆஸ்டலுக்கும் அதாவது காப்பகத்திற்கும் செல்ல மறுத்தாள் என்றுள்ளது[4]. இதனால், விசயம் அறிந்த பெற்றோர் புகார் கொடுத்தனர் என்றுள்ளது. அவள் ஜெயராஜுவால் கற்பழிக்கப்பட்டது தெரிந்தது.

13-yr girl raped by pastor Hyderabad- 19-12-2014-modified

“கட்ட ஜெயராஜின்” மீது வழக்குப் பதிவும், தலைமறைவான “கெட்ட ஜெயராஜும்”: இதனால் பெற்றோர் போலீஸிடம் புகார் கொடுக்க தீர்மானித்து, டிசம்பர் 14, 2014 அன்று பெதநந்திபாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்[5]. போலீசார் தங்களது முறைப்படி, மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவள் கற்பழிக்கப் பட்டது உறுதியானது. இதனால், போலீஸார் அவன் மீது வழக்கு பதிவு செய்தது. ஐபிசி பிரிவு – யார் கற்பழித்தாலும் தண்டுக்கப்பட வேண்டும் [Section 376 of IPC (whoever commits rape shall be punished)] மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டப்பிரிவுகளில் [Protection of Children from Sexual Offences Act (POCSO)] வழக்குப் போடப்பட்டது. இதற்குள் விசயம் அறிந்து ராஜு தலைமறைவாகி விட்டான்[6].  இதற்கு முன்னர் பெண்ணின் பெற்றோரிடம் பேரம், சமரசம்….பேசினான் என்றும் ஊரில் சொல்லப்படுகிறது. இருப்பினும், வழக்குப் பதிவாகி விட்டதால் ஓடிவிட்டான் போலும்! இருப்பினும்,போலீஸார் தேடி பிடித்து விட்டனர், சிறையில் அடைத்தனர். இங்கு முக்கியமான விசயம் என்னவென்றால், ஜெயராஜு பெயரில், குண்டூர் மாவட்டத்தில் 30ற்கும் மேலான பாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்பதால், தங்கள் பெயருக்கு களங்கம் வந்து விடுமோ என்று நினைத்தனர் என்பதும் நிதர்சனமே. இன்றைக்கு, இணை தளம் மூலம், ஒருவரைப் பற்றிய விவரங்களை சுலபமாக எடுத்து விட முடிகின்றது. அதனால், இந்த “கெட்ட ஜெயராஜு” மாட்டிக் கொண்டான் போலும்!

13-yr girl raped by pastor Hyderabad- 19-12-2014-Deccan Herald

ஆங்கில நாளிதழ்களில் குழப்பமாக செய்திகள் வெளிவந்தது: இச்செய்தி பி.டி.ஐ.யில் வெளிவந்ததால், மற்ற தேசிய நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தன. இருப்பினும் இச்செய்தி வெளியிடுவதில் குழப்பம் உள்ளது அல்லது குழப்பத்தை உண்டாக்க ஆங்கில ஊடகங்கள் முயன்றுள்ளது தெரிகிறது. “அவுட்லுக்”, 13 வயது பெண் ஹைதரபாதில் ஒரு பாஸ்டரால் கற்பழிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது, என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது[7]. ஹைதராபாத் எங்குள்ளது, பாலபர்ரு கிராமம் எங்கிருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றால்[8], எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்.டி.டிவி, “ஆந்திராவில் ஒரு பள்ளி மாணவி ஹாஸ்டல் வார்டனால் கற்பழிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது,” என்று தனக்கேயுரிய பாணியில் செய்தி வெளியிட்டது[9]. ஆனால், அவன் பாஸ்டர் என்றோ, அந்த ஹாஸ்டலின் பெயர் “மார்க்” என்றோ குறிப்பிட்வில்லை[10].  18 வயதுக்கு கீழுள்ள இளம்பெண்களை, டீன்-ஏஜ் பெண்கள்குறிப்பிட்டு, ரொமான்ஸ் செய்திகள் வெளியிடுகிறார்கள், விளம்பரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில், பொறுப்புள்ள ஊடகங்கள், இத்தகைய சமூக-முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிட வேண்டும்.

The Hindu way of reporting -Palaparru village rape-Dec.2014

தி இந்துநாளிதழ் மற்றும் அந்தவிஷேச நிருபர்மீது கிருத்துவ ஆதிக்கம் உள்ளது: ஆனால், “தி இந்து” போன்ற நாளிதழ்களில் செய்தியை குறைத்து, உண்மையினை மறைத்து வெளியிட்டது[11]. “தி இந்து”, “மனிதன் மைனரை பாலியல் பலாத்காரத்திற்காகக் குற்றஞ்சாட்டப் பட்டான்” என்று தான் தலைப்பிட்டு, சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[12]. அதில், ஜயராஜுவை “பாஸ்டர்” என்றோ, காப்பகத்த்தின் பெயரை “மார்க் காப்பகம்” என்றோ குறிப்பிடவில்லை.[13] இவ்வாறு கிருத்துவக் குற்றங்களை, “தி இந்து” மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. “தி இந்து”க்கு மார்க்ஸ்சீய மற்றும் கிருத்துவசார்புகள் அதிகமாகவே இருப்பதாக, வெளியிடப்படும் செய்திகள், அவற்றின் தன்மை, போக்கு முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த “விஷேச நிருபர்” அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால், அவருக்கு யார் அவ்வாறு கட்டளை இட்டனர் என்றும் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக “தி இந்து” நாளிதழ் மற்றும் அந்த “விஷேச நிருபர்” மீது கிருத்துவ ஆதிக்கம் உள்ளது என்று நன்றாகத் தெரிகிறது.

Mariam Chandy and N Ram- marriage of convenience

மூன்றாண்டுகளுக்குப் பிறகுகெட்ட ஜெயராஜுக்குபத்தாண்டு சிறை தண்டனை: இந்த வழக்கு விசாரணை குண்டூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில் 03-11-2017 அன்று, நீதிபது என். நரசிங்க ராவ் முன்னிலையில் வந்தது. வழக்கு ஆவணங்களின் படி தெரிய வருவதாவது[14], “பாஸ்டர் ஜெயராஜு அவளை பலமுறைக் கற்பழித்துள்ளான். குறிப்பிட்ட நாளன்று கற்பழித்த பிறகு, அவளை வெளியே செல்லாமல், காப்பகத்திலேயே அடைத்து வைத்திருந்தான், பள்ளிக்கு செல்லவும் விடவில்லை. அப்பொழுது தான், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரை பெண் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று விசாரித்தபோது, எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். கடைசில் பாஸ்டர் காப்பகத்தில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டு பிடித்தனர். பிறகு தான் அவள் தான் கற்பழிக்கப் பட்டதை தெரிவித்தாள், போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.” இதனால், குற்றம் நிரூபிக்கப் பட்டதால், நீதிபதி, பாஸ்டருக்கு பத்தாண்டு சிறை தண்டனை, ரூ.5,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்[15]. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இவ்விவரங்களை தெலுங்கில் இங்கு கேட்கலாம்[16]. இன்று அமலாவிற்கு 16 வயதாகிறது. ஒருவேளை +12 படிப்பு முடித்திருக்கலாம். ஆனால், அவளது நிலை நமக்குத் தெரியாது. என்றாலும், அவள் வாழ்க்கையில் சிறக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம். கிருத்துவர்களால் நடத்தப் பட்டு வரும் பள்ளிகளில், காப்பகங்களில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்துவோம்.

© வேதபிரகாஷ்

06-11-2017

Jeyaraj rapist gets 10 yrs RI- Indian Express-05-11-2017

[1] http://www.onefivenine.com/india/villages/Guntur/Pedanandipadu/Palaparru

[2] Zphs Adusumalli, Address : adusumalli , parchuru , prakasam , Andhra Pradesh . PIN- 523169 , Post – Parchur. Palaparru Bus-stand is 6.7 kms from Adusumalli. Palaparru is a village situated under the Pedanandipadu mandal, Guntur district. It is 5 kms from Pedanandipadu.

[3] IndiaBlooms, NDTV News, Schoolgirl Allegedly Raped by Hostel Warden in Andhra Pradesh, Reported by Uma Sudhir | Updated: December 19, 2014 10:42 IST.

[4] IndiaBlooms, NDTV News, Schoolgirl Allegedly Raped by Hostel Warden in Andhra Pradesh, Reported by Uma Sudhir | Updated: December 19, 2014 10:42 IST.

A girl of class 8 was allegedly raped by her hostel warden in in Guntur district of Andhra Pradesh.The accused man, K Jeyraj, worked as a part-time pastor and was warden of St Marks Children’s Home in Palapatti village. There are 13 girls and 17 boys in the hostel, and they study in a government- aided school nearby. The girl fell ill and refused to go to the hostel. When her parents found out what had happened, they filed a police complaint.

http://www.indiablooms.com/ibns_new/news-details/N/6744/school-girl-allegedly-raped-by-hostel-warden-in-guntur.html

[5] A 13-year-old girl was allegedly raped by a pastor who is also an organiser of a children home at a village in Guntur district of Andhra Pradesh, police said on Friday. The accused, K Jayaraju, raped the minor twice this month on the premises of the children home located in Pedanandipadu village, after which the victim told her mother about it. The complaint was lodged on December 17, 2014 police said.

Deccan Herald, Andhra Pradesh: Teenage girl raped by a pastor, PTI, Published: Dec 20, 2014, 2:18 pm IST; Updated: Jan 10, 2016, 8:38 am IST.

[6] The victim, who is a class VIII student at the children home-cum-education institute, was sent for medical examination after the alleged incident, Sub Inspector of the Pedanandipadu police station Lokeshwar Rao said. A case under Section 376 of IPC (whoever commits rape shall be punished) and Protection of Children from Sexual Offences Act (POCSO) has been registered. The accused is absconding and further investigation is on, he said.

http://www.deccanchronicle.com/141220/nation-crime/article/andhra-pradesh-teenage-girl-raped-pastor

[7] Outlook, A 13-year-old girl was allegedly raped by a pastor in Hyderabad, 19 December 2014, Last updated at 11:56 pm.

[8] https://www.outlookindia.com/newswire/story/13-yr-old-girl-allegedly-raped-by-pastor-in-hyderabad/873612?utm_source=bottom_floater

[9] NDTV News, Schoolgirl Allegedly Raped by Hostel Warden in Andhra Pradesh, Reported by Uma Sudhir | Updated: December 19, 2014 10:42 IST

[10] https://www.ndtv.com/india-news/schoolgirl-allegedly-raped-by-hostel-warden-in-andhra-pradesh-715225

[11]  “The Hindu” could report only in this way, “A man who runs a children’s home at Palaparru village in Pedanandipadu mandal has been accused of molesting a minor girl. Pedanandipadu Sub-Inspector Lokeswara Rao on Friday said the man, identified as Katta Jayaraju, had been running the home with 30 inmates. The complainant told police that Jayaraju had molested her twice in December. Based on the complaint, police registered cases under the POSCO Act. The accused is at large.” The Hindu or its learned “Special correspondent” could not repeat the PTI report but dropped the status of the man, “pastor” and removed the name “St. Mark” of the “children’s home.”

[12] The Hindu, Man accused of molesting minor, STAFF REPORTER, GUNTUR, DECEMBER 20, 2014 00:00 IST,Updated: DECEMBER 20, 2014 05:56 IST.UPDATED: DECEMBER 20, 2014 05:56 IST

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/man-accused-of-molesting-minor/article6710558.ece

[14] Guntur First Additional District Judge N Narasinga Rao on Friday – 03-11-2017 handed 10 years imprisonment and Rs 10,000 fine to a pastor for raping a minor girl. The judge also suggested the District Collector to provide Rs 2 lakh as compensation to the victim’s family. According to the police, pastor K Jayaraju, a native of Adusumalli village in Prakasam district was running a children’s home at Palaparru with the help of donors. He is accused of raping a 13-year-old girl in December 2014, who was studying class IX by staying at the children’s home.

Indian Express, Pastor gets 10 years in jail for raping minor girl in Andhra Pradesh, By Express News Service  |   Published: 04th November 2017 10:48 AM Last Updated: 04th November 2017 10:48 AM

[15]

The pastor confined the girl in the children’s home and did not let her to go to school. The prosecution claimed that the pastor raped the girl several times. When the school teachers asked the parents about the whereabouts of their daughter, the parents searched every where and at last found their daughter at the children’s home. The girl revealed about the rape to her parents afterwhich they lodged a complaint with the Pedanandipadu police.

http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2017/nov/04/pastor-gets-10-years-in-jail-for-raping-minor-girl-in-andhra-pradesh-1691677.html

[16] https://www.youtube.com/watch?v=Ey7asb9U5iE

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

ஏப்ரல் 21, 2013

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

Sexy speaking Christian priest arrested 19-04-2013

2013  – மூன்று மாதங்களில் பல பாதிரிகளின் சட்ட மீறல்கள்,  கைதுகள்: ஆபாசபேச்சு பேசி வீட்டுக்க்கு அழைக்கும் பாதிரி, பணத்தைக் கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – இப்படி பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும் தமிழகத்தில் உலா வருவதும், குற்றங்களை செய்வதும், கைதாவதும், அதற்குப் பிறகு என்னாவாகிறது என்று ஒன்ற்ம் தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்த அளவிற்கு தைரியம் வருகிறது, துணிச்சலாக குற்றங்களை செய்து வருகிறார்கள், செய்தும் மறுபடியும் பணிகளில் வந்து அமர்ந்து விடுகிறார்கள், எப்படி வெளியே வருகிறார்கள், சட்டங்களின்று எப்படித் தப்பிக்கின்றனர் அல்லது அவர்கள் உண்மையிலேயே புனிதர்களாக இருந்து வெளியே வந்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, பாதிப்புக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கர்த்தர் ஒருவேளை மன்னித்து விடுவார் என்று, அவர்கள் மறுபடியும் பாவமன்னிப்புப் பெற்று, பாவங்களை செய்ய வருகிறார்கள் போலும். இதோ வந்துள்ள செய்திகளைப் படிக்கவும்:

Jogn Mark hristian priwst arrested

 

சர்ச்சிற்கு வரும் பெண்களிடம் ஆபாசப் பேச்சு பேசும்  பாதிரி கைது  (16-03-2013): கோவை, மார்ச். 17, 2013 கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க் (வயது 63). இவர் ஏற்கனவே கோபி, ஈரோடு, பெருந்துறை, கோவை கணபதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார்.  பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார்.  மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார்[1] என்றும் குறிப்பிட்டிருந்தனர். புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார். அவர் மீது 509 (பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு அழைப்பு விடுவது), 506(1) கைகள் மூலம் சைகையால் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைதான பாதிரியார் ஜான் மார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[2].

Sexy christianity - pastor sex India.2

பாதிரி வீட்டில் கொள்ளையடித்த பாதிரி கைது  (25-02-2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி..எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், .டி.. நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம். மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை .டி.., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி..எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது”, என்று தெரிவித்திருந்தார்[4]. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Christian priest loot money

பெண் எஸ்..,க்கு கொலை மிரட்டல்பாதிரியார் கைது  (07-01-2013): ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பெண் எஸ்.ஐ., சாந்தி ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த, பாதிரியார் ஞானபிரகாசம் கைது செய்யப்பட்டார். தங்கச்சிமடம் வலசை தெரு சேர்ந்த பாதிரியார் ஞானபிரகாசம், 62. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., சாந்தி ராணியிடம் தகவல் கேட்டுள்ளார்[5]. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.ஐ., சாந்தி ராணி புகார் கொடுத்தார். அவரது புகாரின்படி, பாம்பன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிந்து, பாதிரியாரை கைது செய்தார்[6].

 

வேதபிரகாஷ்

21-04-2013