Posts Tagged ‘ஜவாஹிருல்லா’

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

ஜூலை 14, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

Hebron church dedmilition stayed by SC - CHN_2017-07-14_maip1_23

வீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், கே.பி. எடிசன், தேவாலயம் – ஹெப்ரான் காஸ்டில் சர்ச் – மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டினார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி வீடு கட்டுவதற்காகத் தான் பெற்றார். ஆனால், வ்வறு செய்யாதலால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.  இந்நிலையில் தான், சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. அதற்குள் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைந்தேறின.

Hebron church dedmilition stayed by SC - TOI, chennai

உச்சநீதி மன்றத்தில் முறையீடு: சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. இதனால், கே.பி. எடிசன் அதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் அரியமா சுந்தரம் மற்றும் வி. பாலாஜி மூலம் முறையீடு செய்தார். 13-07-2017 வியாழக்கிழமை அன்று உச்சநீதி மன்றம் அந்த ஆணையை நிறுத்தியது[1].  2006லிருந்தே சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடித்தது தெரிகிறது. இது வெறும் சென்னை பெருநகர் அபிவிருத்தி அணையத்தின் வரைமுறைகளை மீறியதற்கான வழக்கு என்பது போலில்லாமல், ஏதோ சர்ச் இடிப்பு என்ற தோரணையில் மாற்றியிருப்பதும் தெரிகிறது, ஏனெனில், டெக்கான் ஹெரால்டு, அவ்வாறுதான் தலைப்பிட்டு, “SC stays demolition of N’bakkam Hebron church” செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் தேவாலயம் என்று குறிப்பிட்டது, புரியாமல் இருக்கலாம், ஆனால், இதில் சர்ச், அதிலு ஹெப்ரான் சர்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளராகவும் பாஸ்டர் கே.பி. எடிசன் பொறுப்பாளராக இருக்கிறார். அரசியல் பின்னணியும் இருப்பதால், போராட்டத்தையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

சர்ச் முன்பு போராட்டம்: 12-07-2017 அன்று அந்த சர்ச் முன்பாக உறுப்பினர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். சத்தியம் டிவி, கிருத்துவ செனல் ஆதலால், பிரச்சார ரீதியில் செய்தி வெளியிட்டது. கே.பி. எடிசன் ஒன்றுமே தெரியாதது போல, பத்தாம் தேதி தான் தனக்கு ஆணை கிடைத்தது, அதைத்தவிர ஒன்றும் தெரியாது என்று பேசியது வேடிக்கையாக இருந்தது. மேலும் நான்கைந்து பெண்களிடம், ஒருவர் வீடுகள் இருக்கும் இடத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்பதைப் போலவும், அப்பெண்கள், இல்லை என்பது போலவும் காட்டியது. வேடிக்கை என்னவென்றால் அப்பெண்கள் எல்லோரும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தது தான். சர்ச்சிற்குள் ஆர்பாட்டம் செய்த பெண்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டிருந்த போது, இவர்கள் ஏன் இந்துக்கள் போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இருப்பினும் எவ்வாறு செக்யூலரிஸ ஆட்டில் தனிப்பட்ட பிரச்சினையை, பொதுப்பிரச்சினையாக ஆக்கலாம், உள்மத பிரச்சினையை, மதங்களூக்கு இடையேயுள்ள பிரச்சினையாக்கலாம் என்றெல்லாம் எப்படி திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளல்லாம். அந்த பேட்டி எடுத்தவர், வீடுகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் இருக்கலாம், சர்ச் இருக்கக் கூடாது என்றும், ஏன் விபச்சாரமே நடக்கிறதே, அதெல்லாம் தொந்தரவாக இல்லை, சர்ச் இருப்பது தான் தொல்லையாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்[2].

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்: போதாகுறைக்கு, இன்னொரு வீடியோவில், வள்ளுவர் கோட்டத்தில் சீல் வைத்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியது, அரசியல்கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசியது முதலியவை காட்டப்பட்டது. ஜவாஹிருல்லா ஆதரித்து பேசுகிறார். இனிகோ இருதயராஜ், வன்னியரசு, விடுதலை சிறுத்தை கட்சி என்றெல்லாம் பேசுவதை காட்டியது. இதிலும், தமாஷா என்னவென்றால், ஜவாஹிருல்லா ஏற்கனவே கைது செய்யப்படாமல், பிணையில் இருக்கும் குற்றவாளி ஆவார். பிறகு, அவர் எப்படி எடிசனை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அதாவது, சட்டமீறலைப் பற்றி கவலைப் படாமல், இதனை அரசியலாக்கி, பிரச்சினையை பெரிது படுத்த முயன்றது நன்றாகவே தெரிகிறது. மேலும், மதரீதியில் மற்றும் சிறுபான்மை கோணத்திலும் திசைத் திருப்ப முயற்சிகள் நடக்கின்றன.  இதற்கான பின்னணியும் கடந்த கால அரசியல் திட்டங்களில் வெளிப்படுகிறது.

Hebron Castle chuch - protest

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு [அக்டோபர் 2016]: இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் சட்ட ஆணையம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பாஜக அரசின் இத்தகைய முயற்சிக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், எஸ்.டி.பி.ஐ உட்பட பலவேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவும் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் –

  1. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,
  2. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,
  3. திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,
  4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
  6. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
  7. தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
  8. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளர் பாஸ்டர் கே.பி. எடிசன்,
  9. கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ்,
  10. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்,
  11. இந்திய சுவிஷேச திருச்சபை தலைமை பேராயர் எஸ்றா. சற்குணம்

ஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருமாறும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணி திரளவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Hebron Castle chruch - protest-demo

கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[3]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது.  அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[4]. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லைபுரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்[5].

©  வேதபிரகாஷ்

14-07-2017

Hebron Castle chruch - Iniko - Jawahirullah--politicizing issue

[1]  Deccan Herald, SC stays demolition of N’bakkam Hebron church, J. Venkatesan, New Delhi, July 13, 2017.

[2]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[3] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/

[4] https://christianityindia.wordpress.com/2010/12/29/revocation-of-anti-conversion-act-appeasing-christians/

[5] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.

Advertisements