Posts Tagged ‘சேன்ஸலர் ஏன்ஜிலா மெரெல்’

கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

ஜூலை 7, 2010

கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

வாடிகனைப் பொறுத்த வரையில், கிருத்துவ போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோர் செக்ஸ், பாலியல், வன்கலவி, வன்புலவி, காமக்களியாட்டம், சல்லாபங்கள்…………….முதலியவற்றில் ஈடுபட்டுள்ளது, ஈடுவடுவது…..சகஜமான விஷயம் தான்.

ஒருபக்கம் பிரம்மச்சரியம் பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு, பக்கத்திலேயே கன்னியாஸ்தீரீக்களை உலாவரும்படி வைத்துக் கொண்டுள்ளதால், இருபாலரும் தங்களது செக்ஸ் உணர்வுகளை அடக்கி வைத்துக் கொண்டாலும், சமயங்களில் வெளிப்படும் போது, சுலபமாக காமத்தீ பற்றிக் கொண்டு விடுகிறது.

கிருத்துவத்தில், கன்னியாஸ்திரீக்கு ஏசுதான் உனது காதலன், கணவன்…………அவனுடந்தான் நீ உறவாடமுடியும்  என்றெல்லாம் போதனை சொல்லி மனத்தைக் கட்டுப்படுத்திவைக்க பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோர் அந்த காமம் பெருகும் வேளையிலே, “நாங்கள் தான் ஏசுகிருஸ்து, அதனால், என்னுடன் கூட, புனைவதால் எந்த பாவமும் இல்லை, மாறாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும், பரிசுத்த ஆவி எப்படி மேரியை புனிதப் படுத்தியதோ, அதே மாதிரி நீயும் புனிதப்படுத்தப் படுவாய்“, என்றெல்லாம் மனத்தை களைத்து, ஆடைகளை களைத்து, உடலுறவு கொள்கின்றனர். ஒருமுறை ருசி கண்ட பிறகு, எந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோரும், கன்னியஸ்தீரிக்களும் அதனை மறுபடியும் ருசிக்கத் தயங்குவதில்லை. ஆகையால் தான், இம்மாதிரியான செக்ஸ் விவகாரங்கள் நிறைய வெளிவருகின்றன.

The Vatican was last night at the centre of an unusually public sex scandal after acknowledging it had suspended a senior official who was filmed apparently propositioning a young man in his office.

Monsignor Tommaso Stenico, a capo ufficio, or section head, at the Vatican ministry responsible for the clergy, insisted yesterday he was not gay. He said he had posed as a homosexual to research a plot by satanists.

A programme broadcast on October 1 by La7 – the only national channel not owned by Silvio Berlusconi or the state – included a sequence it said had been filmed secretly in a Vatican office.

The six-minute sequence was said to have been captured by a young man who had come into contact with a Vatican official via an internet chatroom’ – The Guardian;

Tuesday, October 16, 2007

இங்கு, ஒரு பாதிரி தான் “ஓரின சேர்கை” ஆளல்ல என்று மெய்ப்பிக்க ஒரு பெண்ணுடன் காமக்களியாட்டத்தில் ஈடு பட்டார். இந்த வீடியோ வாடிகன் அலுவலகத்திலேயே எடுக்கப் பட்டது. ஆகையால், சில நேரங்களில் இது “வாடிகனின் செக்ஸ் மேனுவல்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

சில நிர்வாண புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவை உகந்தவையல்ல என்பதனால், நான் அவற்றைத் தவிர்துள்ளேன்.

http://iznewmania.blogspot.com/2007/10/vatican-sex-manual-plus-gay-news.html

விருப்பமுள்ளவர்கள், மேற்குறிப்பிடப் பட்ட தளத்தில் அவற்றைக் காணலாம்.

கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

மே 25, 2010

கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

வேதபிரகாஷ்

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி: கிருத்துவ மதபோதகர் கைது[1] (26-05-2010): தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற கிருத்துவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவரின் 9 வயது மகள் இந்த காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த மே 20ம் தேதி காப்பகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற ராஜ்ஜோஸ் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் ராஜ்ஜோஸ் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் ஜீவராணி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ராஜப்பன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடந்தி மதபோதகர் ராஜ்ஜோசை கைது செய்தார்.

கத்தோலிக்க மற்றும் இதர கிருத்துவர்களின் கற்பழிப்பு ஒரேமாதிரியாக இருக்கிறது: சிறுமிகளை குழந்தைகளாக இருக்கும்போதே வளர்ப்பது, தமது பணிவிடைசெய்ய உபயோகப் படுத்துவது, அவ்வாறே பழக்கப்படுத்தியப்பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் பயன்படுத்தப் படுகிறர்கள், வன்கலவியில் ஈடுபடுத்தப் படுகிறர்கள் என்பதனை அறியாமலேயே, வருகின்ற எல்லா பாதிரிகள், பாஸ்டர்களுக்கு “பணிவிடை” செய்து வருகிறார்கள். என்றைக்காவது, இக்கதையை வெளியே யாருக்காவது சொல்லி அல்லது தெரியவரும்போதுதான் உண்மை வெளிப்படுகிறது. வில் ஹியூமிற்கு பிறகு, பல பாதிரிகள் தொடர்ச்சியாக சிக்கிவருவது திகைப்பாக இருக்கிறது[2]. கிருத்துவர்களுக்கு சென்னை ஒரு செக்ஸ் தலைநகராகி, தமிழகம் அத்தகைய காமக்களியாட்டக் கூடமாகும் போல இருக்கிறது[3]. அனாதை இல்லங்ககள், பாதிரிகள், செக்ஸ், கற்பழிப்பு, இவையெல்லாம் சேர்ந்தே நடந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது[4]. அதில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் எல்லொருமே பாதிரியார்கள். இதுவரை, எந்த பாதிரியும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை!

வாடிகன் ஏன் செக்ஸ் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது? வாடிகன் பாலியல் குற்றவாதிகளுக்குத் துணை போவது அல்லது சட்டரீதியாக ஆதரவு கொடுப்பது வியப்பாக இருக்கலாம், ஆனால், அத்தகைய நிலை நெடுங்காலமாக இருந்து வந்துள்ளதுதான் உண்மை[5]. பத்தாயிரத்திற்கும் மேலாக அமெரிக்கக் குழந்தைகள் இந்த காமக்கொடூர பாதிரி-பிஷப்பு கோஷ்டிகளால் பாலியல் குற்றங்களுக்குட்படுத்தப் பட்டுள்ளார்கள்[6]. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ரீதியில் செயல்படும் வாடிகன் சட்டங்களை வளைக்கவேப் பார்க்கிறது[7]. இடைக்காலத்திலிருந்து, இப்பொழுது வரை, கன்னியாஸ்திரீ-பாதிரி மற்றவர்களுடனான செக்ஸ் விஷயங்கள் மேனாட்டில் தெரிந்தே இருந்து வந்துள்ளன[8]. இந்தியாவிலும் பாஸ்டர்கள், பாதிரிகள், பிஷப்புகள் தங்களது இடமாற்றங்களுக்கு ஏற்ப கன்னியாஸ்திரீக்களையும் அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்து வந்துள்ளது[9]. ஒரிஸ்ஸா விஷயத்தில் அது வெளிப்பட்டு விட்டது எனலாம். ஆனால், அந்த ஆஸ்திரேலிய பாதிரிகளால், அதிகமாகவே அசிங்கமாகி விட்டது[10]. பிறகு, தொடர்ச்சியாக, எல்லா மாநிலங்களிலும் அவர்களது செக்ஸ் விளயாட்டுகள் எல்லைகளை கடந்து விட்டன. அந்நிலையில்தான், கந்தமால் கலவரம் திசைத் திருப்பப் பட்டது[11]. ஆகையால்தான், இன்றும் இந்தியாவில் கத்தோலிக்க பிஷப் மாநாடு நடந்ததை மறைக்கவே பார்க்கிறது.

குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது[12] (22-05-2010): கிருஷ்ணகிரி: குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில், கடந்த 18ம் தேதி 2010, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரது நான்கு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற, கிருஷ்ணகிரி தனலட்சுமி மற்றும் சென்னையை சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் ஆட்டோ டிரைவர் சிவன் மற்றும் ராணி ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அல்போன்ஸ் சேவியர்குழந்தை கடத்தல் கும்பலின் தலைவன்: முன்பே குறிப்பிட்டபடி, கிருத்துவர்களுக்கு அந்த பெயர்களை வைத்தாலே அந்த குணம் வந்துவிடும் போல இருக்கிறது. அதாவது, டான் பாஸ்கோ[13] உண்மையில் ஒரு ஃபிடோஃபைல் (குழந்தைக் கற்பழிப்பாளி), ஆனால் கிருத்துவர்கள் அப்படியே அவன் ஒரு குழந்தைக் காப்பாளி மாதிரி ஆக்கிவிட்டனர். பிரான்ஸிஸ் சேவியர் கோவாவில் இந்துமக்களை கொன்ரு குவிக்க மததண்டனை அமூல் (இன்குயுஸிஷன்) என்ற கொடிய காரியத்தைச் செய்தவன். அதே மாதிரித்தான் இந்த சேவியரும், செல்வமும் குழந்தைகளை வேட்டையாடுகின்றனர்.

ராஜரீக மக்கள் கட்சியும், குழந்தைகள் கடத்தலும்: அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2009 டிச., 4ம் தேதி, கிருஷ்ணகிரி ஆர்.எஸ்., லட்சுமிபுரத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த செல்வராஜ் மகன் தேவா (3) என்ற சிறுவனை, தனலட்சுமி கடத்தி சென்று கிரிஜாவிடம் கொடுத்தது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னை சென்று நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் இரும்பூளியூர் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் (48), குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவராக இருந்தது தெரிந்தது. மேலும் இவர், “ராஜரீக மக்கள் கட்சி’ என்ற கட்சியை, ஓராண்டுக்கு முன் துவங்கி, கட்சியின் தலைமை செயலராக தன்னை அறிவித்து, கட்சிக்கு தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் நிர்வாகிகளை தேர்வு செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

அல்போன்ஸின் காதலி கிரிஜாயும் உடந்தை: குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான, பெரம்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கிரிஜா, ராஜரீக மக்கள் கட்சியின் பெரம்பூர் பகுதி மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கிரிஜாவுக்கும், அல்போன்ஸ் சேவியருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது[14]. கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி, கிருஷ்ணகிரியை சேர்ந்த சிறுவன் தேவாவை, தனலட்சுமி கடத்தி சென்று, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோவில் வந்த சிவா, கிரிஜா மற்றும் ராணியிடம் கொடுத்துள்ளார். சிறுவன் தேவாவை, கிரிஜா அல்போன்ஸ் சேவியரிடம் கொடுத்துவிட்டு, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். தேவாவை, அல்போன்ஸ் சேவியர், ராஜரீக மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலரான திண்டிவனம் இரட்டணியை சேர்ந்த பாதிரியார் செல்வம் (37) மூலம்,செஞ்சி தாலுகா, தேவதானப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரி மணி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

பாதிரி செல்வம் ஓட்டம்: இதையடுத்து, தேவதானம்பேட்டை சென்ற தனிப்படை போலீசார், மணி வீட்டில் இருந்த சிறுவன் தேவாவை மீட்டனர். மணி மற்றும் சிறுவனை விற்பனை செய்த பாதிரியார் செல்வம் ஆகியோர் தலைமறைவாகினர். மீட்கப்பட்ட சிறுவன் தேவா, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். குழந்தை கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்ட அல்போன்ஸ் சேவியரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

பிரசில்லாவை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபு[15]: இது ஒரு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி லதா. இவர்களது மகள் பிரசில்லா (3). கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்லும் நாட்களில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவசித்து மகன் ஷேக்ஸ்பியர் பாபு (25). என்பவரிடம் தங்கள் மகளை விட்டுச் செல்வர். ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவுடன் விளையாடிக் கொண்டிருப்பார். நேற்று முன்தினம் ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவை வீட்டிற்கு துõக்கிச் சென்று சிறிது நேரம் விளையாடினார். பின்னர் குழந்தையை கற்பழித்துள்ளார். மாலை வீடு திரும்பிய பெற்றோர்களிடம் குழந்தை அழுது கொண்டே கூறியுள்ளது. இது குறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபுவை கைது செய்து காட்டுமன்னார் கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குழந்தை பிரசில்லா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏன் குழந்தைகளை, சிறுமியரை, மைனர் பெண்களை கற்பழிக்கவேண்டும்? ஊட்டி பாதிரி அமெரிக்காவில் ஒரு டீன் ஏஜ் பெண்னை கற்பழித்து, மாட்டிக் கொண்டு, திருட்டுத்தனமாக இந்தியாவிற்கு வந்து மறைந்து கொண்டான். மதுரை மன்மத பாதிரியும் அவ்வாறே மாட்டிக் கொண்டான். சென்னையில் கூட பாதிரி அவ்வாறு கற்பழித்துள்ளான்[16]. இதெல்லாம், கிருத்துவப் பாதிரிகள், பஆஸ்டர்கள், பிஷப்புகளின் இவர்களின் வக்கிர காம மனப்பாங்கைக் காட்டுகிறது.

கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு[17], மதுரை:அரசு கூர்நோக்கு இல்லங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த முகமது அனீபா தாக்கல் செய்த பொது நல மனு:என் மனைவி சபீனா யாஸ்மின் திருமணத்தின் போது மைனராக இருந்ததால், அவரது பெற்றோர் புகாரின்படி, சேலம் அஸ்தம்பட்டி கூர்நோக்கு இல்லத்தில் ஒராண்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு மைனர் பெண்கள், ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது தெரிந்தது. அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஷகீலா பானு, மைனர் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தினார். துப்பரவு ஊழியர் சாந்தா, ஆசிரியர் தாமரைசெல்வனும் கொடுமை செய்தனர். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் நல வாரிய சேர்மனுக்கு புகார் செய்தனர். புகாரை விசாரிக்க ஷகீலா பானுவே நியமிக்கப்பட்டார். “எந்த கொடுமையும் இல்லை’ என சாந்தா அறிக்கை தாக்கல் செய்தார்.

பிறகு புகார் அடிப்படையில் சாந்தா, தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஷகீலா பானு மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் மைனர் பெண்களை அவர் கொத்தடிமையாக நடத்துகிறார். சேலம், மேலப்பாளையம் கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் பலாத்காரம், கொத்தடிமைத்தனம் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணன் ஆஜரானார்.நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “”சேலம், மேலப்பாளையம் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து துளிர் இயக்க நிர்வாகி வித்யாராவ், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என சமூக நல பாதுகாப்பு கமிஷனர், துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டது.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது: மீஞ்சூர், செப்.6, 2009- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

`சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்என்ற அனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

பெண்களைக் கற்பழிக்கும் சாது இம்மானுவேல்: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.  புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கற்பழிப்பு சாது கைது:  திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேதபிரகாஷ்

26-05-2010


[1] தினமலர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது, மே 26,2010,02:41 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6786

[2] வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[3] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[4] வேதபிரகாஷ், http://womanissues.wordpress.com/2009/11/18/பாதிரிகள்-கற்பழித்ததாக5/

[5] Nicole Winfield (AP), AP Exclusive: Vatican details US sex abuse defense, for details, see here,

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5iH9I3NH568g_9CE-MMStuwZ3jgfAD9FO4BR02

[6] Susan Campbell, Vatican Adopts An Old And Tired Defense Strategy In Sex Abuse Case, May 18, 2010, for details, see here,

http://www.courant.com/news/opinion/courant-columnists/hc-hc-campbell-vatican-state.artmay18,0,3904617.column

[7] Greg Burke, Sex Abuse Crisis: Can You Sue The Vatican?, for details, see here,

http://liveshots.blogs.foxnews.com/2010/05/17/sex-abuse-crisis-can-you-sue-the-vatican/?test=latestnews

[8] மேனாடுகளைப் பொறுத்த வரைக்கும் பல புத்தகங்கள், திரைப்படங்கள் அதிகமாகவே வந்துள்ளன.

[9] ஒரிஸ்ஸா பாதிரிகள், பாஸ்டர்கள் விவகாரங்களில் அது வெளிப்பட்டுள்ளது. மேலும் அபயா வழக்கு, ஒரு கன்னியாஸ்திரீ எழுதிய புத்தகம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன.

[10] செக்ஸ் டூரிஸம் போர்வையில் அதிகமாகவே விளையாடி கையும் களவுமாக ஒரிஸ்ஸாவில் பிடிபட்டனர்.

[11] கன்னியாஸ்திரீ கற்பழிப்பு என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப் பட்டு, விஷயம் வேறுமாதிரி செல்லும்போது, அமைதியாக அமுக்கிவிட்டனர். சமீபத்தில் கூட கைது செய்யப் பட்டவர்களில் ஒருவன் ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் பட்டான்.

One gets bail in Kandhamal nun rape case

http://www.ptinews.com/news/624695_One-gets-bail-in-Kandhamal-nun-rape-case

Cuttack, Apr 24 2010 (PTI) The Orissa High Court today granted bail to Gururam Patra who was arrested last year in connection with the alleged rape of a Catholic nun in Kandhamal district.
A single judge bench of Justice C R Dash granted bail to Patra after observing that although he was leading a mob in the aftermath of Swami Laxmanananda Saraswati’s murder in August 2008, there was no evidence of his involvement in the rape case. Patra’s bail applications were earlier rejected by two local courts of the district.
The 29-year-old nun was allegedly raped by a mob at K Nuagaon village under Baliguda police station area in Kandhamal on August 25, two days after killing of the VHP leader. Patra was arrested by the Crime Branch of police last year.

[12] தினமலர், குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=4451

[13] Don Bosco was a phedophile, but the Church writers had turned him into a savior of children and thus they started naming educational institutions in his name to whitewash his crimes committed in the name of Christ, Church and God of course.

[14] விடுதலை, கர்த்தரின்வேடிக்கை விளையாட்டோ! குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் கைது,  http://www.viduthalai.com/20100523/news02.html

இந்த செய்தி ஏற்கெனெவே தினமலரில் வந்ததுதான், தலைப்பை மட்டும் மாற்றி, விடுதலை போட்டுள்ளது!

[15] சேத்தியாத்தோப்பு: மூன்று வயது குழந்தையை கற்பழித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

[16] இதைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், அவர்கள் அத்தகைய முறையை தொடர்ந்து கடைபிடித்து வருவதுதான்.

[17] தினமலர், கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு, பிப்ரவரி 17,2010,00:00 IST, http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5205

கிருத்துவர்களின் கேவலமான செயல்கள் (மதம் மாற்றம், குழந்தை கடத்தல், கற்பழிப்பு)!

ஏப்ரல் 26, 2010

கிருத்துவர்களின் கேவலமான செயல்கள்

குழந்தைகளை கடத்திய பாதிரியார்:குண்டர் சட்டத்தில் கைதுக்கு பரிந்துரை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5008

கோவை, 23-05-2010:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம்பாடி செல்வதற்காக ராமக்காள் என்ற பெண், கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தனலட்சுமி, ராமக்காளிடம் பேச்சு கொடுத்தார். கையிலிருந்த குழந்தை அழுத போது, பால் வாங்கிக் வரச் சொல்லி, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பால் வாங்க சென்ற ராமக்காள் திரும்பி வந்த போது தனலட்சுமி, குழந்தையோடு மாயமானாள்.

காதலி மூலம் குழந்தைக் கடத்தும் பாதிரிகள்: ராமக்காள் புகாரின்படி, தனலட்சுமியை ஒரு சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று மாதக்குழந்தையை பெரம்பலூரைச் சேர்ந்த கிரிஜா, ராணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.கிருஷ்ணகிரி போலீசார் இரு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, தனலட்சுமியின் உறவினரான செல்வராஜின் மகன் மூன்று வயது சிறுவன் தேவாவை கடத்தி விற்பனை செய்ததும் தெரிந்தது.சிறுவன் தேவாவை 20 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தைச் சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சாவிடம் விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.

குழந்தைகளை வாங்கி விற்கும் பாதிரி: இதையடுத்து போலீசார், பாதிரியாரை கைது செய்து விசாரித்தபோது, செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேரி, மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். தகவலை தெரிந்து கொண்ட மணி, மேரி தம்பதியினர் சிறுவன் தேவாவை விட்டு விட்டு, தலைமறைவாகினர். சிறுவனை மீட்ட போலீசார், தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.பாதிரியார் உட்பட நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததாக சிவனாண்டி கூறினார்.

மதமாற்ற பிரசாரம் செய்த துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு
ஏப்ரல் 27,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18139

ஈரோடு : மதமாற்ற பிரசாரம் செய்த துணை தாசில்தார், அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு கலெக்டரிடம் சொட்டையம்பாளையம் பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர்.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், ஈரோடு அருகே, சூரியம்பாளையம் பஞ்சாயத்து சொட்டையம்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் மதபிரசாரம் செய்தனர். அவர்களை ஊர் பொதுமக்கள் சிறை வைத்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தாராக பணிபுரியும் ஜான்சன் உள்பட ஆறு பேர் பிடிபட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை மீட்டனர். அரசு பணியில் இருந்து கொண்டு மதமாற்ற பிரசாரம் செய்த துணைதாசில்தார் ஜான்சன், மற்றொரு பெண் அரசு ஊழியரான யெப்சிபா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சொட்டையம்பாளைய பொதுமக்கள், நேற்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், ‘அரசு ஊழியர்கள் ஜாதி, மதம், அரசியல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று, அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், துணை தாசில்தார் ஜான்சன், வீட்டு வசதி வாரிய ஊழியர் யெப்சிபா இருவரும் அரசு பணியில் இருந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

ஜூலை 22, 2010 அன்று இதே மாதிரி ஈரோட்டில் சொல்லியும் பிடிவாதமாக கிருத்துவர்கள் (Young Men’s Evangelical Fellowship, South Division) மதமாற்றப் பிரச்சார துண்டு நோட்டீஸுகளை கொடுத்தனர்.

மக்களே அவர்களை விரட்டியடித்தனர்!

மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தாரை சிறை பிடித்தனர் மக்கள்: ஈரோட்டில் பரபரப்பு
ஏப்ரல் 26,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

அரசு அதிகாரிகள் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்காதது குற்றமே: ஈரோடு:கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த தால், ஈரோடு அருகே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் நேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்றனர். அவரது வீட்டில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து, ‘மக்களாட்சி முடிவுறப் போகிறது; இனி தெய்வ ஆட்சி நடக்க உள்ளது. ஏசுவை பின்பற்றுபவர் மட்டுமே உலகில் நிலைத்திருப்பர்’ என்றனர்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கேசவன், ‘பிரச்னை எதற்கு செய்கிறீர்கள்; ஊருக்குள் சென்றால் பிரச்னையாகி விடும், திரும்பச் செல்லுங்கள்’ என்றார்.

கேவலமான பிரச்சாரம்: அதற்குள் மற்றொரு குழுவினர் ஊருக்குள் சென்றனர். குழுவைச் சேர்ந்த திருச்செங்கோடு தனியார் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன்(38), வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ்(65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம்(61), யெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி கவுசல்யா(28), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன் ஆகியோர் பிரசாரத்தை துவக்கினர். அப்பகுதி மக்கள், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அவர்களை சிறை வைத்தனர்.

2012 மாதிரியிலான பிரச்சாரம்: மேலும், அவர்கள் வந்த ஆம்னி வேன் பின் டயர் காற்றை இறக்கிவிட்டனர். சொட்டையம் பாளையம் ஜெயந்தி கூறுகையில்,”ஏசுவை கும்பிடு வோர் இந்த உலகத்தில் இருப்பர்; மற்றவர்கள் அழிந்து விடுவர்‘ என்று கூறி பயத்தை ஏற்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அவர்களை சிறை வைத்தோம்,” என்றார்.  ஒன்பதாம் வகுப்பு மாணவி நிவேதா கூறுகையில், எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், சாமியார்கள் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. ஏசு ஒருவர் தான் உலகை ரட்சிப்பவர்; ஏசுவை கும்பிட்டால் எந்த பிரச்னையும் வராது’ என்று கூறி பிரசாரம் செய்தனர்,” என்றார் [பாவம், கிருத்துவர்கள் சென்னையிலேயே எத்தனைப் பெண்களை கற்பழித்தனர், பாலியல் கொடுமை செய்துள்ளனர், ஊட்டி பாதிரியில் சல்லாபங்கள் இவற்றையெல்லாம் ஏன் சொல்லவில்லை?]. கவுரி சங்கர் என்பவர் கூறுகையில், நான் முதலில் ஏதோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் என்று நினைத்தேன். இறுதியாக துண்டு பிரசுரம் கொடுத்த போது தான், மதப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிந்தது.

மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது: அந்த துண்டு பிரசுரத்தில், மற்ற மதத்தினர் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டு, கிறிஸ்துவ மதத்தில் சேரும் படி இடம் பெற்றிருந்தன,” என்றார்.பைபிள் மாணாக்கர் குழுவினர் கூறுகையில், ‘இந்த உலகம் நிலையற்றது. கடவுளால் அழிக்கப்படும். ஏசுவை நம்புவோர் கைவிடப்படமாட்டார். எல்லா வேதங்களும் இதையே கூறுகின்றன என்று தான் கூறினோம். யாரையும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை‘ என்றனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ் பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது எனக் கூறிய போலீசார், அவர் களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். அதனால், அப்பகுதி மக்கள் சற்று சமாதானமாயினர்.

மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது: தனி துணை தாசில்தார் ஜான்சன் கூறுகையில், நான் இடம் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு வேண் டப்பட்டவர்களை பிடித்து வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்கும்படி கூறினேன். என்னையும் பிடித்துக் கொண்ட னர். இன்று நடக்கும் மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது,” என்றார் [கிருத்துவர்களில் மூளைசலவை செய்யப் பட்டு இவ்வாறு அலைந்து திரியும் ஆட்கள் உள்ளனர். உண்மையில் இவர்களுக்குத்தான் மனோதத்துவ ரீதியில் ஆலோசனைத் தேவைப் படுகிறது].

மதம் மாற்ற முயன்றவர்கள் விரட்டியடிப்பு
ஏப்ரல் 26,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18135

கடலூர்: கடலூர் அருகே கிராமத்திற்குள் ஜெபம் செய்ய முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கடலூர் அருகே உள்ள நாணமேடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிபதி கிருஷ்ணன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் அதிபதி கிருஷ்ணன் வீட்டிற்குள் வந்து ஜெபம் செய்தும், வேறு சிலரை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் சிலர், அவர்களை விரட்டியடித்தனர். ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போப்புக்கு நடக்கும் செக்ஸ் விவகாரங்கள் சரியாகச் சொல்லப்படவில்லையாம்!

ஏப்ரல் 11, 2010

போப்புக்கு நடக்கும் செக்ஸ் விவகாரங்கள் சரியாகச் சொல்லப்படவில்லையாம்!

குறிப்பு: இப்புகைப் படங்கள் குருமார்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்துப் போடவில்லை.

ஆனால், வழி நடத்தும் குருமார்கள், பெண்களிடமிருந்து விலகி இருந்தால் பிரச்சினைகள் வராது, ஒழுக்கம் இருக்கும்….என்பதனை உணர்த்தப் போடப் படுகிறது.

அனைத்தும் இணைத் தளங்களில் உள்ளவைதாம்!

வாடிகன் அதிகாரிகள் போப்புடன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் செக்ஸ் விவகாரங்களை வழக்கமாக பேசுவதில்லை என்பதனால், பல விஷயங்கள் தெரியாமல் போகின்றன. அதாவது முறையான பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள் முதலியவை இல்லாமல் போகின்றன. அதனால்தான் இந்த செக்ஸ் அவதூறை தடுக்க முடியாமல், அமெரிக்க ஆதரவாளர்களே  நொந்து போய் விட்டனராம் (இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஒரு செய்தி).

ஆனால் கத்தோலிக்க சரித்திரம் அவ்வாறு இல்லை. போபுகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. அப்படி சில கார்டினல்கள் தமதிச்சைக்குச் செயல் பட்டால், மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முக்கியமாக செக்ஸ் விவகாரம் எனும் போது, அதில் எல்லொருமே பலவீனமானவர்கள் தாம். ஆகையால் தான் கிருத்துவ மேலிடம் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது. ஏனெனில் நடவடிக்கை எடுத்தால், மற்ற விஷயங்கள் வெளிவந்து விடுமே என்ற பயம் தான்.

sexy-pope-john-paul-2

sexy-pope-john-paul-2

Note: A nightclub flyer showing Pope John Paul II clutching a bottle of beer and dancing with a blonde in a mini-skirt had been banned by watchdogs for causing ‘serious offence’. The ad, for Ipswich nightclub Club Fire, showed an image of the former Pontiff beneath a logo reading ‘Beserk’, and was aimed at those after an ‘alternative rock night – such as metallers, punks, goths and other similar subcultures’.

Sexy-pope-posing

Sexy-pope-posing

காற்றடித்து விலகியதா – தெரியவில்லை!

Kissing Pope

Kissing Pope

The Kissing Pope: One of the novelties in morality of Pope Wojtyla was to frequently kiss young women. In the picture above he seems quite involved with his action.  Never before had any Pope acted publicly in this way.

 

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

Watching a dancer during Mass at World Youth Day – 2000

பெண்கள்.போப்பை.வரவேற்பது

பெண்கள்.போப்பை.வரவேற்பது

அரை நிர்வாணப் பெண்களை வைத்து போப்பை வரவேற்பு செய்வது!

12-04-1984.பெண்கள்.ஆடுவதை.ரசிக்கும்,போப்

12-04-1984.பெண்கள்.ஆடுவதை.ரசிக்கும்,போப்

இதை மேனாட்டு நாகரிகம் என்று சப்பைக் கட்ட முடியாது. அளவுகோல் என்று வரும்போது, அதே மாதிரிதான் அளந்து பார்க்க வேண்டியுள்ளது.

On April 12, 1984, Catholic high schools of Rome brought together 1,200 young women in skintight apparel to perform for John Paul II, above left, wearing a red cape, at the olympic stadium.

 

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை

Papua New Guinea, May 8, 1984: The bare-breasted native woman leaves the Pope’s presence after presenting the Offertory gifts.

போப்புக்கு.பரிசளிக்கும்.அறை.நிர்வாண.பெண்

போப்புக்கு.பரிசளிக்கும்.அரை.நிர்வாண.பெண்

Papua New Guinea, May 8, 1984 –  A hefty nude native woman brings the Offertory gifts for the Supreme Pontiff’s Mass.
A new concept of Morals is being applied.

பயபக்தியுடன்.திரும்பி.போகும்.பெண்

பயபக்தியுடன்.திரும்பி.போகும்.பெண்

Papua New Guinea, May 8, 1984 – The nude native woman returns to her place after presenting the Offertory gifts to John Paul

கன்னியாஸ்திரீயின்.ஆட்டம்

கன்னியாஸ்திரீயின்.ஆட்டம்

இப்படி மார்பகங்கள் பட்டால், கிலுகிலுப்பு வராதா? மறுபடியும் தனியாக சந்திக்க ஆசைவராதா?

Cologne 2005, August 16 – 21 – Belgian Sr. Johanne Vertommen dances with missionary priest Fr. John
in two close-ups of World Youth Day 2005. These pictures were published by the Flemish daily Het Laatste Nieuws.

ஆட்டம்.போடும்.கன்னியாஸ்திரீ

ஆட்டம்.போடும்.கன்னியாஸ்திரீ

இந்த அளவிற்கு, பாதிரிகளையும், கன்னியாஸ்திரீகளையும் நெருக்கமாக இருக்க அனுமதிப்பது சரியா?

செக்ஸ் பிரச்சினைகள் வரும் எனும்போது, ஆண்-பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடைவிதிப்பது, அது செக்ஸ் உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கும்.

எல்லோரும் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி ரிஷி, முனி, யோகி…போல இருக்க முடியாது.

அவ்வாறு முடிந்தவர்கள் இருக்கலாம்.

முடியாதவர்கள், திருமணம் செய்து கொண்டு இருப்பதுதான் எல்லா பக்தர்களுக்கும் நல்லது.


கற்பழிப்பு-செக்ஸ் தொல்லைத் தாங்காமல் போப் ஆடிவிட்டாராம்!

மார்ச் 18, 2010

கற்பழிப்பு-செக்ஸ் தொல்லைத் தாங்காமல் போப் ஆடிவிட்டாராம்!

போப் கத்தோலிக்க செக்ஸ் என்ற மர்ஃபி அறிக்கையைப் பற்றி விவாதிக்கிறாராம்! போப் பெனிடிக் செயின்ட் பேட்ரிக் நாளை காரணமாக வைத்துக் கொண்டு ஐரிஸ் மக்களை ஆசுவாசப் படுத்த ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதி அதனைப் படித்துப் பார்க்குமாறு வேண்டினார். தான் “ஃபிடோஃபைல்” கத்தோலிக்க கற்பழிப்புப் பாதிரியார்கள், குருக்கள் முதலியோரைக் கண்டு ஆடிப்போய்விட்டதாகவும், கவலைப்படுவதாகவும் கூறுகிறார்!

மர்ஃபி அறிக்கை என்றால் என்ன? அயர்லாந்திலிலுள்ள டப்ளின் நகரத்தில் ஆர்ச்-பிஷப் வளாகத்தில் மற்றும் அதன் அதிகாரத்தில் வரும் பள்ளிகளில் 1975ம் ஆண்டு முதல் 2004 வரை, 42 பாதிரிகளால் 320ற்கும் மேலான சிறுவர்-சிறுமியர் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அத்தகைய குற்றங்களை சர்ச் மறைத்துவிட்டதாகவும் அறிக்கைக் கூறுகிறது. 700 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப் பட்டாலும் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பைப் பற்றி ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.  அப்படியென்றால் அந்த “சிறுவர்-சிறுமியர்” கதியென்ன என்பதனைப் பார்த்துக் கொள்ளலாம். அதாவது 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்படும் அவ்வறிக்கையில், பாதிக்கப்படவர்கள் இன்று 40 முதல் 50 வரை இருப்பர் என்றாகிறது! அவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது! [வில் ஹியூம் மற்ற கிருத்துவர்கள் இந்தியாவில் செய்த காமக்களரிகளை நினைவு கூரவும்]

The pope greets Cardinal Sean Brady of IrelandBenedict XVI met the head of the Irish Catholic church, Cardinal Sean Brady, at the Vatican to discuss a response to the Murphy report on clerical sex abuse. Photograph: Alessandra Tarantino/AP

ஸ்மித் என்பவனின் செக்ஸ் தொல்லை தாங்கமுடியவில்லையாம். அவனுடைய அட்டூழியங்கள் 1994ல் வெளிவந்த போதுதான்,  அவன் 12 வருடங்களாக 74 செக்ஸ் தாக்குதல்களை “டீன் ஏஜ்” சிறுவர்கள் மீது நடத்தியிருக்கிறான் என்ற உண்மை தெரிந்தது. [இதே மாதிரிதான் 30 ஆண்டுகளாக வில் ஹியூம் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்குத் தண்டனைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சென்னையில் ஜாலியாக சுகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!]
German Chancellor Angela Merkel makes a point during her speech at the German lower house of parliament Bundestag in Berlin, March 17, 2010. REUTERS/Tobias Schwarz

German Chancellor Angela Merkel makes a point during her speech at the German lower house of parliament Bundestag in Berlin, March 17, 2010.   Credit: Reuters/Tobias Schwarz

பலான பாதிரிகளின் செக்ஸ் கொடுமைகள் ஜெர்மனியிலும் தாங்கவில்லை: ஜெர்மனியிலும் இதே மாதிரியான கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் தொல்லைத் தாங்காமையால், சேன்ஸலர் ஏன்ஜிலா மெரெல் இதைப் பற்றியும் உண்மையும், தெளிவான விளக்கங்களும் தேவை என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். ஜெர்மானியக் கத்தோலிக்க தலைமை ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச் என்பார் பாதிரிகள் சிறுவர்-சிறுமிகளை செக்ஸுக்குட்படுத்தியதற்கு கடந்த வாரம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் இப்படி கேவலமாக வயது வந்த சிறுமியர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது, சிறுவர்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்துவது போன்ற மிருகத் தனமான வேலைகளை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், அந்த அசிங்கமான, ஆபாசமான, கொடூரமான செயல்கள் சரியாகி விடுமா? உடல்-மனம் ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன செய்ய முடியும்? அவர்களுடையக் கன்னித்தன்மைய மீட்டுத் தர முடியுமா?

ஜெர்மனியில் பிறந்த பெனிடிக் என்ன சொல்லப் போகிறார்? இந்த போப் பெனிடிக் ஜெர்மனியில் பிறந்ததாலும், ஜெர்மனியில் கத்தோலிக்கப் பாதிரிகள்-குருமார்கள் முதலியோரின் செக்ஸ் தொல்லைகள், மீறல்கள் அதிகரித்துள்ளதாலும், இந்த செல்ஸ் விஷயம் பெரிதாகிவிட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் தர்மமேயாகிலும் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பார்கள். அதாவது ஒழுக்கம் வீட்ட்லிருந்துதான் ஓம்பப்பட்டு வழிவழியாக வரும்! ஒழுக்கமற்ற அவர்களின் நடத்தைக் கேலிக்கூத்தாகி விட்டதுடன், கிருத்துவ நம்பிக்கையே கேள்விக்குள்ளாகி விட்டது.

உலகமே கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ்-உலகமயமாகிவிட்டது: கடந்த 20 வருடங்களில் ஜெர்மனியில் கத்தோலிக்கர் நடத்தும் பள்ளிகளில் 250க்கும் மேற்பட்டவர்கள் அத்தகைய செக்ஸ் கொடூரங்களுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள், என்று ஜெர்மானிய செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. உலகமுழுவதிலும் இத்தகைய செக்ஸ்-பாலியல் கொடுமைகள் கிருத்துவர்களால் நடத்தப் பட்டு வந்துள்ளது.  குறிப்பாக அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் அதிகமான மீறல்கள் பதிவாகியுள்ளன.  நெதர்லாந்திலும் 200ற்க்கும் மேற்பட்ட அத்தகைய கத்தோலிக்க செக்ஸ்-பாதிரிகள் பற்றிய விவரங்களைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள்.

கிருதுவர்களினால் ஏன் பிரம்மச்சரியம் காக்கமுடியவில்லை? இப்படி பாதிரிகள் ஒரு பக்கமும், மறுபுறம் கன்னியாஸ்திரீகள் அடுத்தப் பக்கமும் செக்ஸில் ஈடுபடுவது கிருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • ஏன் அவர்களால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கமுடிவதில்லை?
  • கிருத்துவத்தில் நம்பிக்கையற்றத் தன்மையின் மீது ஆதாரமாக தீட்சை அளிக்கப் படுகிறதா?
  • நம்பிக்கையில்லாமல், ஏன் அவர்கள் இத்தகைய காமத்தில் ஈடுபட்டு உழல்கிறர்கள்?
  • கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளே கேள்விக்குள்ளாகிறதா?
  • கன்னித்தன்மை ஏன் கேவலப்படுத்தப் படுகிறது?
  • கிருத்துவப் பெண்கள் ஏன் சீரழிகிறார்கள்?
  • கிருத்துவ ஆண்கள் காரணமா?
  • எங்கு தவறு நடக்கிறது?

12ம் நூற்றாண்டு திருமணத்தடை நீக்க வேண்டும்: இதனால், அந்த பழைய விவாதங்கள் மறுபடியும் ஆரம்பித்து விட்டது. ஸ்விஸ்நாட்டு இறையியல் வல்லுனர் கத்தோலிக்கர்கள் – அதாவது கடவுள் சேவையில் தீட்சைப் பெற்று வந்தள்ள கார்டினல், பிஷப், கன்னியாஸ்திரீ, கான்வென்ட், போர்டிங் ஸ்கூல் நிர்வாகி, முதலியோர் உட்பட-  திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற 12ம் நூற்றாண்டு தடை இன்றும் அமூலில் உள்ளதால் தான் இத்தகைய செக்ஸ்-ஊழல்கள் ஆபாசங்கள் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நெதர்லாந்து, அயர்லாந்து முதலிய நாடுகளில் பெருகியுள்ளன என்று எடுத்துக் காட்டியுள்ளார்.  அத்தகைய பிரமச்சரியம் கடைபிடிக்க இயலாத நிலை மற்றும் இத்தகைய செக்ஸ்-விவகரங்கள் அதிகரிப்பு முதலியவற்றிற்குள்ள சம்பந்தத்தையும் எடுத்துக் காட்டினார். ஆகையால், அத்தடை நீக்கப் படவெண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

பிரம்மச்சரியம்தான் இத்தகைய செக்ஸ்-குற்றங்களுக்குக் காரணம்: ஜாஸ்கெ என்பவர், “பிரம்மச்சரியம்  இந்த செக்ஸ் விவகாரங்களுக்கு காரணம் இல்லை, இருப்பினும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கைநிலை கொண்டவர்கள் இத்தகைய நிலையில் சரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மனத்தில் ஆசை / காமத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் துறந்தவர் போல நடிக்க முடியாது. இங்குதான் ஆபத்து வருகின்றது”, என்று விளக்கம் அளிக்கிறார். பேராசிரியர் கிளாஸ் பேயர், பாலியல் மற்றும் பாலியல் மருத்துவம் பிரிவின் தலைமை, சார்டி மருத்தவமனை, பெர்லின் கூருவதாவது, “இத்தகைய செக்ஸ் எண்ணங்கள் வயதுக்கு வரும்போது வருகின்றன. வளர்கின்றன. ஆகவே இதற்கும் பிரம்மச்சரியத்திர்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அத்தகைய பிரம்மச்சரியம்தான் ஃபெடோஃபல்களைக் கத்தோலிக்கச் சர்ச்சுகள் இழுகின்றன”, என்கிறார்! அதாவது, அங்கு டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியர்கள் இருப்பதால், தம்முடைய இச்சைகளை அங்கு சுலபமாகப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற குரூரக் காமம் மனத்தில் ஒளிந்து கொண்டிருப்பதால், அவர்கள் அந்த கத்தோலிக்கச் சர்ச்சுகள் பக்கம் இழுக்கப் படுகிறார்கள்! ஆகையால் ஜாஸ்கி சொல்வதவது, “ஒன்று மெய்ப்பிக்கப் பட்டவர்கள் துறவிகள் ஆக வேண்டும், இல்லை அவர்கள் மனந்து கொண்டு அந்த வேலைக்கு வரவேண்டும்”. கிழக்கத்தைய சடங்கு முறையினர் (The Eastern Rites of the Catholic Church) மற்றும் ஆசாரமுறை சர்ச்சுகள் ( the Orthodox churches) கல்யாணம் செய்து கொண்டு துறவிகளாக இருக்கலாம், ஆனால் பிஷப் ஆக முடியாது.  ஆங்கிலிகன் மற்றும் ப்ரொடஸ்ட ன் ட் கிருத்துவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள், ஆனால் பிஷப் ஆக முடியாது. சில பெண்கள் மட்டும் துறவியாக தீட்சைக் கொடுக்கப் படுகிறது.

போப் முடியாது என்கிறார்: ஆனால் போப்போ 12ம் நூற்றாண்டு அம்முறையை மாற்றமுடியாது என்கிறார். அது மட்டுமல்ல, அம்முறை மாற்றினால் கிருத்துவமே அழிந்துவிடும் என்று மற்ற ஆசாரமிக்க துறவிகள் கூருகின்றனராம். ஆகவே, இனியும் அதே மாதிரி பாதிரிகள் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள் போலும்! கன்னியாஸ்தீரிகளும் அதுபோலவே கலவியில் ஈடுபட்டு ஜாலியாக இருப்பார்கள் போலும்! பிறகு என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது. ஏற்கெனவே மேனாட்டுக் கலாச்சாரம் செக்ஸை வெலிப்படையாக்கி அதற்கு விடுதலையும் கொடுத்துள்ளார்கள். அந்நிலையில் இப்ப்டி கிருத்துவமும் அதர்கு துணைபோனால் என்னாவது? ஆகவே, இந்தியாதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான கன்னியாஸ்தீரிகளும், பாதிரிகளும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனராம்!

இந்தியாவிற்கு எச்சரிக்கை: இந்தியா இத்தகைய செக்ஸ்-பாதிரிகளால் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால், முடிந்த வரையில் சர்ச்-மேலிடங்கள் விஷயங்களை அமுக்கி விடுகிறார்கள். இந்தியாவில் “மர்ஃபி அறிக்கை” போன்று விசாரித்தால் 1947 லிருந்து 2010 வரை, ஒருவேளை ஆயிரக்கணக்கான கிருத்துவ பாதிரிகள்-பாஸ்டர்கள் சிக்குவார்கள் மற்றும் பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமியர்கள் மற்றும் இன்று வளர்ந்து விட்ட மற்றவர்களும் லட்சக்கணக்கா இருப்பர்! ஏற்கெனவே வில் ஹியூம், ஜோ, ஷாஜி, பால், பினு, முதலியோர் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது வழக்கில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கும்போது, இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது!