சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு: மேய்ந்த ஆட்டை, மறுபடி மேய விட்டதற்கு, மேய்ப்பவனின் பங்கும் உள்ளது!
மேய்ந்த ஆட்டை, மறுபடி மேய விட்டதற்கு, மேய்ப்பவனின் பங்கும் உள்ளது: மற்படியும், அதே பாஸ்டர், பாதிரி, கிறிஸ்தவ சாமி செக்ஸ் புகாரில் சிக்கிக் கொண்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. மேய்ந்து கொண்டிருக்கும் கருப்பு ஆடுகளை மேய விட்டுக் கொண்டிருந்தால், அவை மேயத்தானே செய்யும்? மேய்ப்பவனே இங்கு ஒழுங்கில்லாத நிலையுள்ள்ளது. இச்சர்ச் கத்தோலிக்க சர்ச் இல்லை என்று தப்பிக்கவும் முடியாது, ஏனெனில், சர்ச்சுகளில் செக்ஸ்-பாலியல் சில்மிஷங்கள், கொலைகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. சர்ச்சுகளில் இவ்வாறு செக்ஸ்-பாலியல் வன்ம போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்நாட்டு சட்டதிட்டங்களில் படி தண்டனை கொடுக்காமல், புகார் கொடுக்காமல், ஏதோ கட்டப் பஞ்சாயத்து போன்று அவர்களுக்குள்ளேயே, பேசி தீர்த்து, விவாகரங்களை முடித்துக் கொள்வது, சட்டங்களை ஏய்ப்பது மட்டுமல்லாது, குற்றவாளிகளை மறைப்பதும் ஆகும். அந்நிலையில் சர்ச்சில் உள்ள எல்லோருமே குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது மெய்ப்பிக்கப்படுகிறது.
இடம் மாறிய ஆடு, புதிய பச்சை–பசேலென்ற புல்வெளியைக் கண்டதும் மேய ஆரமொஇத்து விட்டது: துாத்துக்குடி நாசேரத் திருமண்டலத்திற்குட்பட்ட சண்முகபுரம் துாய பேதுரு ஆலயத்தில் சேகரகுருவாக இருப்பவர் செல்வின்துரை[1]. இவருக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருப்பதினால், சர்ச்சிற்கு வரும் பெண்கள் மீது தன் கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார். பல பெண்களிடம் ஆபாசமாக அழைத்துள்ளார்[2]. அவ்வாறு, திடீரென்று ஒரு பெண் இவர் கண்களில் பட அவரிரன் நைஸாக பேச்சுக் கொடுத்தார். அப்பெண்ணிடம் வாட்ஸ்நம்பர் வாங்கிக் கொண்டு, முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்தார். பேசி பழக்கமானதுடன், அவரிடம் ஆபாசமாக பேசி, பிறகு அழைப்பு விடுத்துள்ளார்[3]. அப்பொழுது அப்பெண் உசாராகி விட்டார். ஓஹோ, இந்த பாதிரி அபாயகரமான ஆள் என்று புரிந்து கொண்டார். உடனே, இது குறித்து அப்பெண் சபை நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார்[4]. ஆனால், சி.எஸ்.ஐ சர்ச் அதனை அமுக்கப் பார்த்தது. ஏற்கெனவே பல வழக்குகளில் பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை மாட்டிக் கொண்டு, அசிங்கப் பட்டு வருவதால், விசயத்தை அப்படியே அமுக்கலாம் என்று தீர்மானித்தனர் போலும்.
சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு: ஐயர் செல்வின் துரை பெண்களிடம் வாட்ஸ்நம்பர் வாங்கி சாட்டிங் செய்வது வழக்கமாகும்[5]. ஆனால் அவரிடம் மாட்டும் பெண்கள் அப்பாவிகள் அதிகம், அவர்கள் வெளியில்சொல்வது கிடையாது என்பதால் வலையை பல பேருக்கு வீசி உள்ளார். அதில் மீன் மாட்டாமல் துள்ளி என்று அங்குள்ள முக்கியஸ்தர் நம்மிடம் தெரிவித்தார், என்று ஒன்.தமிழ்.நியூஸ் கூறுகிறது[6]. சரி சர்சிற்குள் உள்ள பாலியல் சமரங்களை, வழக்கம் போல ஒப்புக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால், தீர்வு என்னவென்று கண்டு பிடிக்கும் முறை தெரியவில்லை. பெண்களின் கற்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்பு போன்றவை கிருத்துவத்திற்குத் தேவையில்லையா?
ஐயர் பிரயோகம் ஏன்?: இதெல்லாம் ஓரு பக்கம் இருக்க, “ஐயர்” இங்கு எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை! ஏன் “ஐயங்கார்” வரக்கூடாதா? இல்லை, காஜி, மௌலானா என்று கூட வரலாமே? ஏன் “ஐயரை” மட்டும் பிடித்துக் கிருத்துவகள் கொண்டிருக்கிறார்கள்? இதில் தான் ஊடகங்களின் குசும்புத் தனமும் வெளிப்படுகிறது. “தலித்” விசயத்தில் இரட்டை வேடம் போடும், இவர்கள், இங்கு “ஐயர்” பிரயோகத்தை விட “சூத்திரர்” என்றே குறுப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு செய்யாமலிருப்பதால், குற்றம் புரிந்து, கேவலமான நிலையில் இருக்கும் போது கூட, இந்துக்களைத் தாக்க வேண்டும் என்ற வக்கிரம் அவர்களிடம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறார்கள். இந்து-சந்நியாசியைப் போல திரியும் இவர்கள் நிச்சயமாக, மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தான், இவ்வார்த்தையை உபயோகிக்கின்றனர். “பார்ப்பன விரோதத்தையும்” இவ்வாறு வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், திகவினர், திருமா போன்றோரும், இதனை எதிர்ப்பதில்லை.
மேய்ப்பவன், மேய்ந்தவன் கூ ட்டம் போட்டு பேசினால் உண்டாகும் விளைவு: அதன் பேரில் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிசந்தர், துாத்துக்குடி சண்முகபுரம் பாஸ்ட்ரேட உறுப்பினர் புல்கான், நிர்வாக உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி. தேவசகாயத்திடம் [Rt. Rev. S.E.C. Devasahayam (2017-till date)] புகார் குறித்து தெரிவித்தனர்[7]. அதன் பேரில் நேற்றிரவு [27-12-2017] சம்பந்தப்பட்ட சேகரகுருவிடம் திருமண்டல பேராயர் விசாரித்ததில் செல்வின்துரை பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை ஒப்புக்கொண்டார். பின்னர், இன்று (28-12-2017) திருமண்டல சபை நிர்வாகிகள் கூட்டம் லே செயலாளர் ராஜன், திருமண்டல துணை செயலாளர் லுார்துராஜ் ஐயர், குருத்துவ செயலாளர் தேவராஜ் ஞானசிங், பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமுடிவில் பேராயர், சேகரகுரு செல்வின்துரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சபையிலுள்ள வீட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
கருப்பு ஆடுகளை எதிர்க்கும் மற்ற ஆடுகள்: சபையில் இருந்து சஸ்பெண்ட் என்பது வெறும் கண்துடைப்பு, அவர் மீது போலீசில் புகார் அளித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தால்தான், இனி இத்தகைய நடவடிக்கை தொடராது என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[8]. ஏனெனில், அவர்களுக்கு சர்ச் விவகாரங்கள் எல்லாம் நாறி வருகின்றன, ஒழுக்கம் சீரழிந்து வருகின்றது என்றெல்லாம் நன்றாக அறிந்து கொண்டு தான் உள்ளனர். மேலும், இந்த செல்வின்துரை ஏற்கனவே வடக்கூர் பேட்ரிக் சர்ச், டூவிபுரம் சர்ச்சில் சபை மக்களால் புகார் அளிக்கப்பட்டு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[9]. எனவே, சர்ச் குற்றவாளிகளை மூடி மறைக்கவே பார்க்கிறது என்று விசுவாசிகளுக்கும் புரிந்து விட்டது. 2014ல் நான் பதிவு செய்துள்ள ஒரு கட்டுரையில், இவரது புகைப்படம் உள்ளது[10]. அதிலிருந்து, இவர் பிஷப்பிற்கு நெருக்கமானவர் என்று தெரிகிறது[11]. தமிழ் பிஷப் தேவசகாயமே, பல வழக்குகளில் சிக்கியுள்ளார். சுங்கவரி மோசடி போன்ற விவக்காரங்கள் ஊடகங்களில் வந்துள்ளன[12]. இதற்காக இவர் 2014ல் கைது செய்யப் பட்டிருக்கிறார்[13]. நகரியில் உள்ள மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க, அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார். அதில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது[14]. போதாக்குறைக்கு பதவி சண்டைகள் வேறிருக்கின்றன[15].
© வேதபிரகாஷ்
01-01-2018
[1] ஒன்.தமிழ்.நியூஸ், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு, சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், வெள்ளி 29, டிசம்பர் 2017.
[2] http://www.onetamilnews.com/News/-ZALDLS
[3] http://www.onetamilnews.com/News/-ZALDLS
[4] தூதி.ஆன்லைன், வாட்ஸ்ஆப்பில் பெண்ணை அழைத்த சேகரகுரு சஸ்பெண்ட் : துாத்துக்குடியில் பரபரப்பு!, வெள்ளி 29, டிசம்பர் 2017 7:52:19 PM (IST).
[5] ஒன்.தமிழ்.நியூஸ், துாத்துக்குடியில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு, சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட், வெள்ளி 29, டிசம்பர் 2017.
[6] http://www.onetamilnews.com/News/-ZALDLS
[7] http://www.tutyonline.net/view/31_151264/20171229195219.html
[8] தினமலர், பெண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்‘பில் ஆபாச தகவல்கள்: பாதிரியார் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள். டிசம்பர் 30, 2017. 23:58 IST.
[9] http://www.dinamalar.com/district_detail.asp?id=1929608&dtnew=12/31/2017&Print=1
[10] https://christianityindia.files.wordpress.com/2014/03/tutocorin-diocese-2003-5.jpg
[11] https://christianityindia.wordpress.com/2014/03/26/case-filed-against-jebachandran-ex-bishop-for-fraud-etc/
[12] Anglican link, Indian bishop arrested on fraud charges, 20 Oct 2014
[13] The former Bishop in Madras of the Church of South India, the Rt. Rev. Vedanayagam Devasahayam has been arrested by police in Madras and charged with stealing funds donated to his diocese by the Episcopal Church of the USA to aid victims of the 2004 Indian Ocean Tsunami.
http://www.anglican.ink/article/indian-bishop-arrested-fraud-charges
[14] CSI Madras Diocese, Bishop Devasahayam Scandal, https://www.youtube.com/watch?v=rVopdB0ADu8
[15] Rt.Rev.Dr.V.Devasahayam Vs. St.George Cathedral Trust – Court Judgment, https://www.legalcrystal.com/case/1168089/rt-rev-dr-v-devasahayam-vs-george-cathedral