Posts Tagged ‘சிஎஸ்ஐ மண்டல பிஷப்’

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (2)

ஜூலை 28, 2018

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (2)

ECi, USA-Ezra

2014 தேர்தல் கூட்டணியில், கீழ்கண்டவர்கள் திமுகஅணியில் இருந்தனர். அதில் எஸ்ரா பங்கு வகித்தார்: 2014 தேர்தலின் போது, தமிழகத்தில், இந்தியாவில் கூட்ட கட்சிகள் அணிகள் மாறின. தேர்தல் கூட்டணி, சித்தாந்த இணைப்பணி என்று இவர்கள்  சேருவது செக்யூலைஸமா, என்னது என்று கவனிக்கலாம்.

  1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,
  2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி,
  4. மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  5. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி,
  6. எம்.ஜி.ஆர்.,கழகம் ஆர்.எம்.வீரப்பன்,
  7. பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்,
  8. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  9. இந்திய தேசிய லீக் திருப்பூர் அல்தாப்,
  10. பேராயர் எஸ்ரா சற்குணம்,
  11. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம்,
  12. உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து மற்றும்
  13. பொன் குமார்

ஆகியோர் பங்கேற்றனர். 2019ல் இவை / இவர்கள் எப்படி மாறுவார்கள் என்ற்று பார்க்கலாம்.

Ezra Sargunam, wife Mangalam, details

குடும்பத்தில்  ஈடுபட்ட கிருத்துவ பாஸ்டர், பிஷப்: பொதுவாக கிருத்துவ சாமியார்கள், திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள், ஆனால், கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவர்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை. ஆக, 24ம் வயதில், மங்களம் என்ற பெண்ணை 1962ல் கல்யாணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையை நடத்தினார். இரண்டு பெண்கள் பிறந்தனர். இரண்டு மகள்கள் மூலம் நான்கு பேரப் பிள்ளைகள் உள்ளனர். 08-01-1943 அன்று பிறந்த இவர், 46 வயது தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு, 29-02-2008  அன்று அவர் காலமானர். அவர் காலமானபோது, ஜே.எல். வில்லியம்ஸ் என்ற அமெரிக்க சர்ச்-பிளான்ட் கூட்டாளியும் வந்திருந்தார். விஜிபி.சந்தோசமும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நெருக்கங்களை கவனிக்க வேண்டியுள்ளது. முன்பு, ஜெருசலேம் பல்கலைக் கழகத்தில், “டாக்டர்” பட்டம் இவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டதை நினைவில் கொள்ளலாம்.

VGP Santhosam came to condole the death of Mangalam

50 வருடங்களில் 3,500 சர்ச்சுகளை உண்டாக்கி, வளர்த்த அதிசயக்கார பிஷப்: எஸ்ரா சற்குணம் ஜூலை 19, 1938ம் ஆண்டு, கிருத்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்களுக்குப் பிறந்தார்[1]. அதாவது இந்துக்களாக இருந்த குடும்பம் தான் மதம் மாறியுள்ளது. 17வது வயதில் ஏசுவை ஏற்றுக் கொண்டு, 1957ல், தனது 19 வது வயதில் பாஸ்டர் ஆனார். சர்ச்-வளர்த்தல் [church planting ] அதாவது, புதியதாக சர்ச் கட்டுவது என்ற வித்தையில் தேர்ந்தவராக இருந்தார். 1957-58களிலேயே, சென்னைக்கு வெளியே இருந்து போரூரில் சர்ச் கட்டினார். அத்ற்குப் பிறகு, அதனை மையமாக வைத்துக் கொண்டு, மற்ற சர்ச்சுகள் கட்டப் பட்டன. 1961-62ல், கும்பமேளாவிலேயே, கிருத்துவ நோட்டிஸுகளை விநியோகித்தார்[2]. அதாவது, அத்தகைய மதவெறி பிடித்தவாராக இருந்தார் போலும். கீழ்பாக்கம் சர்ச்சில் 1972ல் பாஸ்டராக இருந்த போது, 100 .  ECI சர்ச்சுகள் கட்ட திட்டம் போட்டாரம்[3]. உடனே ஜேஹோவா அவருக்கு அருள் கொடுத்து விட்டாராம். உடனே அதே 19972ம் ஆண்டு, அமெரிக்கா செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாம். அமெரிக்காவிலிருந்து நிறைய பணம் வந்ததால், 1998லேயே 1000-வது சர்ச்சை கட்டிவிட்டாராம். 2005ற்குள் இன்னொரு 1000 சர்ச்சுகளை உண்டாக்க, ஜேஹோவா வழி காட்டினாராம்[4]. மிஷின் – 2015 என்ற திட்டத்தின் படி, 1,00,000 சர்ச்சுகள் கட்ட மற்றும் 1,00,00,000 பேரை மதம் மாற்ற திட்டம் உள்ளதாம்[5]. நவீன இந்தியாவில் சர்ச்சுக்களை பெருக்குவது [Multiplying Churches in Modern India], மிஷன்தீர்மானமான திட்டம் [Mission Mandate], மத சகிப்புத் தன்மை மற்றும் சமூக ஒற்றுமை [Religious Toleration] and Social Harmony, பேராயர் நிரூபணங்கள், முதலிய புத்தகங்கள் மூலம், தனது திட்டங்களை அறிவித்துள்ளார். 

 JL Williams came to condole the death of Mangalam

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லைசொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[6]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கிப, உள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[7] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

ECI bishops

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்குஅதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[8] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! அப்படியென்றால், பட்டா, கட்டிட பிளான் முதலியவை அனுமதி கொடுக்கும் விசயங்களில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம், ஆனால், இங்கோ சித்தாந்த ரீதியில் திக-திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

© வேதபிரகாஷ்

28-07-2018

Ezra Sargunam, Karu health - 27-07-2018

[1] Bishop Ezra Sargunam is a second generation Christian. His father was a little boy when he and his non-Christian parents became Christians.http://www.ecionline.org/post/bishop-ezra-sargunam

[2] இங்கும் அவர் குறிப்பிடும் கதை ஒருதலை பட்சமாக இருக்கிறது. அதற்கான ஆதாரத்தை யாரும் கொடுக்க முடிய்யாது.

[3] It was in 1972 when Bishop Sargunam was a Pastor of the Church at Kilpauk that he prayerfully set the goal of the first 100 ECI churches. ECI had less than 32 churches at that time when God gave him the promise…. http://www.ecionline.org/post/bishop-ezra-sargunam

[4] Then God gave Bishop Sargunam the vision for another 1000 churches before AD 2005, which we have been able to achieve through the grace of God. But this has not quenched the thirst of this aggressive church-planter. His ultimate goal in life is to realise the God-given vision of planting one church among every responsive people group of India.

[5] He has given us at the moment, we are now prayerfully working towards the God-given goal of 100 thousand churches and 10 million ECI believers by 2056 our Centenary Year.

[6] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[7] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[8] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (1)

ஜூலை 28, 2018

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (1)

Ezra Sargunam, viduthalai 26-07-2018 cutting

தந்தை பேராயர் 80வது பிறந்த நாள்ஜூலை 19, 2018: எஸ்ரா சற்குணத்தின் “தந்தை பேராயர் 80வது பிறந்த நாள்,” ஜூலை 19, 2018 அன்று கொண்டாடப்பட்டது. இதை தனிமனிதர் பிறந்தநாள் விழா என்று கூட விட்டுவிடலாம். இதனால், தமிழகத்தில் எந்த பாதிப்பு என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஊடகக்காரர்கள் கூட, இதைப் பற்றி ஒன்றும் செய்திகளை வெளியிடவில்லை. ஆனால், நாத்திக திராவிடக கழகத்தின், “விடுதலை” வீரமணியின் பேச்சை முழுவதுமாக போட்ட போது, இதைப் பற்றி அறிவித்து, ஒரு புகைப் படத்தையும் போட்டுள்ளது. இது ஏதோ திமுக கட்சி நடத்திய விழா போல, அரங்கத்தின் பின்னணி பேனர் ஸ்டாலின் உருவத்துடன் காட்சியளித்தது. மேலே பைபிள் வாசகங்கள் இருந்தன. ஸ்டாலின் படத்திற்கு மேலே, பைபிள் வசனம் இருக்கலாம், ஆனால், நெற்றியில் குங்மம் இருக்கக் கூடாது. ஆக, திமுகவிற்கோ, ஸ்டாலினுக்கே இத்தகைய சேர்க்கைகள் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை போலும். எஸ்ரா சற்குணம் அரசியல் பேரங்களில் / கூட்டணி விவகாரங்களில் ஏஜென்டாக / தூதராக செயல்படுகிறார் என்றும் சொல்லப்பட்டது[1]. திமுகவிற்கும், இவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கருணாநிதியின் உடல் நிலையைப் பற்றி கூட, இவர் பலமுறை பேட்டி கொடுத்திருக்கிறார். “ஏசுவைப் போல உயிர்த்தெழுவார்,” என்று கூட ஒருதடவை சொன்னது வேடிக்கையாகவும் திகைப்பாகவுன் இருந்தது. இருப்பினும், திராவிட பேச்சுகளில் யாரும் அத்தகைய, போற்றல், உயர்வு-நவிர்ச்சி முதலியவற்றை கண்டுகொள்வதில்லை, மாறாக சிலர் ரசிப்பதுண்டு.

19-07-2018 - Ezra Sargunam 80th birthday celebration-1

நாத்திக வீரமணி எஸ்ரா சற்குணத்தை பாராட்டி பேசினது[2]:  19.7.2018 அன்று காலை நடைபெற்ற பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது போது, வழக்கம் போல சமூகநீதி, மண்டல் தீர்ப்பு, இடவொதிக்கீடு, மனு ஸ்மிருதி என்றெல்லாம் பேசியது புதியதாக இல்லை. ஆனால், திடீரென்று, “பிறப்பால் என்று பிறவி பேதம் கூடாது. இதிலே எங்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடு கிடையாது….”. என்றெல்லாம் சொன்ன போது, எத்தகைய பொய்யினை சொல்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்[3]. ஏனெனில், கிருத்துவர்கள் ஜாதி-இன ரீதியிலாக செயல்படுவது, உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகியுள்ளது. திராவிட கட்சிகளின், சித்தாந்திகளின் ஜாதியம், ஜாதியத்துவம், ஜாதிய அரசியல் அனைத்தும் அறிந்த விசயங்களாகி விட்டன. ஆனால், அரசியல், செக்யூலரிஸம் மற்றும் நாத்திகம் எல்லாவற்றையும் கலந்து மக்களை ஏமாற்றி வரும் நிலையில், உண்மை என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.

19-07-2018 - Ezra Sargunam 80th birthday celebration-2

செக்யூலரிஸ ரீதியில் நாத்திகமுஸ்லிம் தலைவர்கள் வந்திருந்து, பேசியது: முஸ்லிம் கட்சி தலைவர்கள், நாத்திக வீரமணி போன்றோர் வந்திருந்தது வாடிக்கை என்றாலும், வேடிக்கையாக இருந்தது.  செக்யூலரிஸ இந்தியாவில் எவ்வாறு இவர்கள் முரண்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கட்ட, இது குறிப்பிடப் படுகிறது. இந்துக்களை தூஷிப்பதில் இவர்கள் ஒன்று படுவதுதான், செக்யூலரிஸ போலித் தனத்தை எடுத்துக் காட்டி வருகிறது. நினைவு மலர் ஒன்றும் வெளியிடப் பட்டது. அவரை சிறப்புப் படுத்த, “ஒருங்கிணைந்த இறையியலை நோக்கி” [Towards an Integral Theology: Festschrift in Honour of Bishop Dr. M. Ezra Sargunam’s 80th Birthday, Author, Edited by Rev. Dr. Samuel Jayakumar and Rev. Dr. J. A. David Onesimu] என்ற கட்டுரைகள் அடங்கிய, தொகுப்புப் புத்தகமும் வெளியிடப்பட்டது[4]. இதிலும், கிருத்துவர்கள் எப்படி, இந்தியாவை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற தோணியில் தான் எழுதியுள்ளனர், என்பத்உ, கட்டுரை தலைப்புகளிலிருந்தே தெரிகிறது. திராவிட கழக வீரமணி பாராட்டி பேசினது, எல்லாவற்றையும் விட தமாஷான விசயம் எனலாம்.

19-07-2018 - Ezra Sargunam 80th birthday celebration-6- book

எஸ்ரா சற்குணம் புத்தகத்தில் உள்ள விவரங்கள்:

Contents

Foreword / The Rt. Rev. Dr. J. George Stephen

Preface / Rev. Dr. Samuel Jayakumar and Rev. Dr. David Onesimu

The Lagacy of Bishop Dr. M. Ezra Sargunam / The Most Rev. Dr. D. Sunder Singh –எஸ்ரா சற்குணத்தின் பாரம்பரியம்

My Bond and Ministry with Evangelical Church of India / The Most Rev. Dr. M. Ezra Sargunam –இசிஐயுடன் என்னுடைய பந்தம்-தொடர்புகள்

Part 1 
Biblical Perspectives

  1. Understanding the Term Misphat (Justice) and Its Usage in the Book of Proverbs / T. Aaron Martin – மிஸ்பத் என்ற வார்த்தையின் அர்த்தம் முதலியன.
  2. Messianic Imagination of the Poor in the Gospel of Luke / Arren Bennet Lawrence – லூக்கின் பைபிளில் ஏழ்மையைப் பற்றிய தீர்க்கதரிசன கற்பனை.
  3. Women and the Bible / Salome Solomon

Part 2 
Theological Perspectives

  1. Integral Theology : Towards Constructing Dalit Theology in India / J. A. David Onesimu – தலித் இறைய்யிலை நோக்கி – ஒருங்கினைந்த இறையியல்
  2. Integral Theology : Towards Reconstructing a Viable Theological Education in India / K. Vijayan – இந்தியாவில் ஏற்புடைய இறையியலை மாற்றியமைக்கும் முறை.
  3. Crossing Boundaries for Equal Partnership : A Feminist Theological Search / Baby Rani – பெண்மை இறையிலைப் பற்றிய ஆராய்ச்சி – வரம்புகளை கடந்த சமத்துவம்
  4. Rethinking Dialogue for Interreligious Cooperation in the Context of Religious Fundamentalism in India / Arpit Simon Mathews – மத அடிப்படைவாதம் நிலையில் மதங்களுக்கு இடையிலான உரையாடல் பற்றிய மறுநினைப்பு-ஆய்வு.

Part 3
Historical Perspectives

  1. The Impact of Reformation on Indian Renaissance “Mahatma Jyotiba Phule (1827-1890): The Martin Luther of India” / Samuel Jayakumar – மஹாத்மா பூலேவின் சமூக மாற்றம்: இந்தியாவின் மார்டின் லூதர் கிங்
  2. Radical Reformers of the 16th Century / D. Arthur Jeyakumar – 16ம் நூற்றாண்டின் சமூக சீரமைப்புவாதிகள்.

Part 4
Missiological Perspectives

  1. Faith in Action – Christian Holistic Mission / Martin Alphonse – நம்பிக்கை எவ்வாறு செயல்படுகிறது- கிருத்துவ மிஷனின் முழுமைப் பணிமுறை.
  2. Recent Trends in Evangelism and Church Growth / R. George Edward – சமீபத்தை மதமாற்ற முறைகள் மற்றும் சர்ச் வளர்ச்சி.
  3. Holistic Liberation in Bishop Sargunam’s Thought and Praxis / R. Isaac Mangalaraj – எஸ்ரா சற்குணத்தின் விடுதலை இறையியல், சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகள்.

Part 5 
Religious Perspectives

  1. Saffronization of Education in Secular India : Some Practical Issues / V. Kanagu Nelson – செக்யூலரிஸ இந்தியாவில் காவிமயமாக்கப் படும் கல்வி.
  2. Priesthood in the Jewish and Brahminic Traditions : Insights for Understanding Priesthood of all Believers in the Protestant Churches / K. Babu Jeyaraj – யூத மற்றும் பிராமண பாரம்பரியங்களில் புரோகிதர்கள்: கத்தோலிக்கல் அல்லாத சர்ச்சுகளில் சந்நியாசம் பற்றி புரிந்து கொள்ளுதல்.
  3. Religions and Secularism: Role of Judicial System in India / S. Samuvel – மதங்களும், செக்யூலரிஸமும்: இந்தியாவில் நீதித்துறையின் பங்கு.

Part 6 
Ministerial Perspectives

  1. Christian Ministry in the Context of Poverty / Chris Sugden – ஏழ்மையில் கிருத்துவ ஊழியம் பற்றிய நிலை.
  2. Gospel of Jesus, the Salt of Indian Politics / Moses Manohar – ஏசுவின் நற்செய்தி, உப்பு மற்றும் இந்திய அரசியல்.
  3. Theological Responses to the Challenges Faced by New Believers from Other Faiths / R. Paul Sigamony – கிர்ருத்துவம் அல்லாத மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வெளிப்படும் சவால்கள் மற்றும் இறையியல் ரீதியில் அவற்றை எதிர்கொள்வது.

© வேதபிரகாஷ்

28-07-2018

19-07-2018 - Ezra Sargunam 80th birthday celebration-4 - full

[1] தினமலர், தி.மு.., தூதர் எஸ்ரா சற்குணம் விஜயகாந்துடன் மீண்டும் சந்திப்பு, Added : ஜன 01, 2014 23:40. http://www.dinamalar.com/news_detail.asp?id=886313&Print=1

[2] விடுதலை, ஜூலை.26, 2018, http://www.viduthalai.in/page1/165666.html

[3] http://www.viduthalai.in/page1/165616.html

[4] https://www.ibpbooks.com/towards-an-integral-theology-festschrift-in-honour-of-bishop-dr-m-ezra-sargunams-80th-birthday/p/34717

சி.எஸ்.ஐ – மறுபடியும், கலாட்டா, அடிதடியில் – கிருத்துவ விசுவாசிகள் இம்முறை கைத்துப்பாக்கி, வீச்சரிவாள் சகிதம்!

ஜூலை 23, 2018

சி.எஸ்.மறுபடியும், கலாட்டா, அடிதடியில் – கிருத்துவ விசுவாசிகள் இம்முறை கைத்துப்பாக்கி, வீச்சரிவாள் சகிதம்!

Sadhu Sathiyaraj, Bishop, CSI, vellore

மீன் மார்க்கெட் அருகே சி.எஸ்.. மத்திய தேவாலயத்தில் கூச்சல், குழப்பம், கத்தல், கூப்பாடுகள்: சி.எஸ்.ஐ என்றாலே ஊழல், வழக்குகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்று வழக்கமாகி விட்டது. அவர்கள் நடத்தும் ஊரீஸ் கல்லூரியில் கூட ஊழல் நியமனங்கள் நடந்துள்ளன[1]. நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டு, சண்டைகளில் இறங்கி விட்ட நிலையில், நேரிலும் சண்டை போட்டுக் கொள்வதில் வியப்பிலை எனலாம். கோவட தெய்வஷாயம், பிஷப், ஜனவரி 2018ல் கைது செய்யப்பட்டார் [2]. ஆனால், இப்பொழுது துப்பாக்கிகள், கத்திகள் என்றெல்லாம் கொண்டு வந்துள்ளனர். “நான் அமைதியை எடுத்து வர வந்துள்ளேன், என்று எண்ன வேண்டாம், பட்டயத்தை, கத்தியை, வீச்சரிவாளை எடுத்து வந்துள்ளேன்,” என்ற ரீதியில், நம்பிக்கையாளர்கள், விசுவாசிகள் வந்துள்ளார்கள்[3]. அப்படியே செய்திகளும் வந்துள்ளன. வேலூர் அண்ணா சாலை பழைய மீன் மார்க்கெட் அருகே சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம் உள்ளது. இங்கு வழக்கம்போல் 22-07-2018 அன்று காலை 8.30 மணிக்கு ஞாயிறு தின ஆராதனை தொடங்கி, 10.30 மணிக்கு நிறைவடைந்தது[4]. அதைத்தொடர்ந்து தேவாலயத்தில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேவாலய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆயர் சாது சத்தியராஜ் தலைமையில் நடந்தது[5].  அப்பொழுது, வாதம்-விவாதம், கூச்சல், குழப்;பம், கத்தல், கூப்பாடுகள் என மாறின.

CSI cjurch vellore, where riot 22-07-2018

தேர்தலும், கணக்குக் கேட்டலும், சண்டையும்: இதில், தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் வருகிற தேர்தலில் போட்டியிட உள்ள உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்தாண்டு 2017-18 வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தணிக்கை செய்யப் பட்ட “பாலன்ஸ்-சீட்” வைத்துக் கொண்டு தான் விவாதம் ஆரம்பித்திருக்க வேண்டும். அப்போது காட்பாடி காந்தி நகரை சேர்ந்த தேவா என்பவருக்கும், வேலூரை சேர்ந்த இஸ்ரவேல் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்த இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது, அதாவது, வ்சய்பேச்சு, சண்டையானது. இதில் ஆத்திரம் அடைந்த தேவா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இஸ்ரவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க முயன்றுள்ளனர். அதைத்தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மோதிக்கொண்டனர். இதைக்கண்ட சபை உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

CSI, vellore church clash -Dinakaran- 22-07-2018.

சண்டை தீவிரமாகி, அடிதடியில் முடிந்ததால், போலீஸுக்கு புகார் கொடுக்கப்பட்டது: நிலைமை கட்டுக்கடங்காமல், மீறியதால், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினர் மோதலை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இருதரப்பை சேர்ந்த சுமார் 15 பேரை விசாரணைக்காக போலீசார் வேனில் ஏற்றி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் சரமாரியாக, பரஸ்பர புகார்கள் கூறிக் கொண்டனர். ஒரு கும்பல், அடுத்த கும்பலை தாக்க ஆயுதங்களுடன் வந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் தேவாலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேவாவின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனால், போலீஸாருக்கு திகைப்புண்டானது. அவற்றை போலீசார், காருடன் பறிமுதல் செய்தனர்.

CSI, vellore church clash 22-07-2018

துப்பாக்கி வைத்திருந்த கிருத்துவ சாமியார்கள், விசுவாசிகள்: அப்போது ஆலய வளாகத்தில் ஐந்து பேர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது[6]. காரிலும் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய சோதனையில் வெட்டுக் கத்தியும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் யோவான் (30), ஜான், வேதானந்தன் (44), சந்தோஷ் (28), தேவா (30), மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் (28) என தெரியவந்தது[7]. துப்பாக்கி எப்படி, யாரிடமிருந்து வாங்கப் பட்டது, லைசென்ஸ் உள்ளதா-இல்லையா போன்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர், இருப்பினும், சர்ச் வளாகத்தில், இவர்கள் ஏன் எடுத்து வந்தனர் என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதாக இல்லை.

Pistol, sword... recovered from car- John pandian party leader 22-07-2018

சர்ச் மூரப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டனர்: மேலும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து தேவாலயத்தில் இருந்து அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். பின்னர் தேவாலயத்தின் கதவுகளை இழுத்து மூடி பூட்டு போட்டனர். அத்துடன் தேவாலயத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தேவாலயத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர், மோதல் தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தேவா, அவரது ஆதரவாளர்கள் மற்றும் இஸ்ரவேல், அவரது ஆதரவாளர்கள் என 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். அதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதல் சம்பவம் வேலூரில் 22-07-2018 அன்று பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது[8]. தினகரன் பத்து பேர் கைது சேய்யப்பட்டதாக அறிவித்துள்ளது[9].

CSI, TMMK, John pandian party leader 22-07-2018

சர்ச்சுக்கும் ஜாதி கட்சிக்கும் என்ன தொடர்பு?: போலீசாரின் விசாரணையில் இருக்கும் தேவா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியாக உள்ளார்[10]. ஏற்கனவே காட்பாடி காந்தி நகரில் தொழிலதிபரை மிரட்டி காரை பறித்து சென்ற வழக்கில் விருதம்பட்டு போலீசார் இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்[11]. ஆனால் தற்போது சர்ச்சில் நடந்த தகராறில் அவரது காரில் கத்திகளுடன் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியை சப்ளை செய்தது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்[12]. மின்முரசு, தினகரன் செய்தியை அப்படியே போட்டுள்ளது[13].தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (Tamizhaga Makkal Munnetra Kazhagam) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திர மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் ஆவார். வன்முறையைத் தூண்டும், இக்கட்சிக்கும், சிஎஸ்ஐ சர்ச்சுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-07-2018

pistol recovered from car- John pandian party leader 22-07-2018

[1] Vigilance probe ordered against appointment of 20 Asst Profs in Voorhees College – http://indiaeducationreview.com/vigilance-probe-ordered-against-appointment-20-asst-profs-voorhees-college/

[2] http://www.virtueonline.org/chennai-church-south-india-moderator-arrested-embezzling-25-million

[3] “Do not think that I came to bring peace on the earth; I did not come to bring peace, but a sword – Matthew 10:34; For I have come to turn “‘a man against his father, a daughter against her mother, a daughter-in-law against her mother-in-law-Mathew 10.34.

[4] தினத்தந்தி, வேலூர் சிஎஸ்ஐ தேவாலத்தில் இருதரப்பினர் மோதல், பதிவு ஜூலை 23, 2018. காலை 4.30

[5] https://www.dailythanthi.com/News/Districts/2018/07/23000601/Vellore-CSI-In-the-central-church-In-regard-to-budget.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது, Posted By: Lakshmi Priya Published: Sunday, July 22, 2018, 15:27 [IST]

[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/5-were-arrested-bringing-pistols-vellore-church-325504.html

[8] தினகரன், வேலூரில் மத்திய சி.எஸ்.. தேவாலயத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: 10 போ் கைது, 2018-07-22@ 12:27:26.

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422047

[10] தினகரன், உறுப்பினர் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் தேவாலயத்தில் இருதரப்பினர் இடையே மோதல் : கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள் பறிமுதல் : 11 பேர் கைது, 2018-07-23@ 01:54:30

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422198

[12] மின்முரசு, உறுப்பினர் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் தேவாலயத்தில் இருதரப்பினர் இடையே மோதல் : கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள் பறிமுதல் : 11 பேர் கைது, 2018-07-23@ 01:54:30

[13]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/329227/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1], இரண்டு[2], பிறகு மூன்றாம் பதிவு தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

CSI Polytechnic college Samson Ravindran

அஸ்தம்பட்டி போலீஸ் ஷ்டேசனில் பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு (ஜூலை 2010)[3]: சிஎஸ்ஐ பிஷப் மாணிக்கம் துரை மற்றும், 12 இதர கிறிஸ்தவர்களின் மீது ஏகப்பட்ட பண கையாடல், மோசடி வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஸ்தப்பட்டி பொலீஸ் ஸ்டேசனிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. கென்னடி, இன்ஸ்பெக்டர், மூன்று கோடி மோசடி வழக்கு மற்றும் சிஎஸ்ஐ சேலம் பாலிடெக்னிக் ஊழல் விசயமாக, பிஷப் மாணிக்கம் துரை, அவரது மனைவ் மற்றும் இதர 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். கோயம்புத்தூர் மோசடி வழக்கில், சென்னை நீதி மன்றத்திலிருந்து ஏற்கெனவே பெயில் பெற்றுள்ளார்கள். இதனால், பால் வசந்தகுமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்[4]. பிறகு துரை வசந்தகுமாருக்கு எதிராக வழக்குகளைப் போட்டுள்ளார்[5].

CSI Polytechnic Samson Ravindran

அஸ்தம்பட்டிபகுதியில்தென்னிந்தியதிருச்சபையினர்அரசுக்குச்சொந்தமான 4.7 ஏக்கர்நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்: அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதனை ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களையும் சிறைப்பிடித்து தென்னிந்திய திருச்சபையினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தென்னிந்திய திருச்சபையினர் அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களை உள்ளே விடாமல் சி.எஸ்.ஐ நபர்கள் வெளியே துரத்தி அனுப்பினர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர வருவாய்த் துறை அலுவலர் ஸ்ரீதர், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்றும் ஆய்வு செய்யச் சென்றனர். அவர்களை திருச்சபை ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இது  தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சேலம் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலர்களை சிறைப்பிடித்து, பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சேலம் வட்டத்தில் இருக்கும் 80 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hasthampatti criminal case filed against Bishop Manickam Dorai

தம்பி. பால்தினகரனின்இனியுள்ளநிலை: பால் தினகரன் போன்ற மில்லியனர்-போதகர்கள் இங்கு வருவதும் வியப்பாக இருக்கிறது. ஒரு இணைதளத்தில், “சேலத்தில் அஸ்தம்பட்டி இம்மானுவேல் CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்”, என்று இன்னொரு கிருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார்.  அதாவது, தினகரன் மகன்-மகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி அவரது மகள் இறந்த செய்தியுள்ளது.

dgs dhinakaran family

அஸ்தம்பட்டியில்  உள்ள  சி.எஸ்..,   பாலிடெக்னிக்[6]  நிர்வாகி  மீது  பல  கோடி  ரூபாய்  மோசடி  வழக்கு  பதிவு: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான .எஸ்..டி.., மற்றும் சி.எஸ்.., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம்இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

CSI Polytechnic college Samson Ravindran

முதல்வர் முதல் மற்றவர்களின் மீது வழக்குப் பதிவு: தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா,

  • சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை,
  • கல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன்,
  • நிர்வாக மேற்பார்வையாளர் அனிபால்ட்,
  • ஏரியா சேர்மன் பால்ராஜ்,
  • கவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார்,
  • கவுரவ பொறுப்பாளர் அமிர்தம்,
  • உயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ்,
  • விரிவுரையாளர் ரவி மனோகரன்,
  • ஜோஸ்வா,
  • அசோக்,
  • ஜெபக்குமார்,
  • சூடாமணி

ஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

© வேதபிரகாஷ்


[4] A Criminal case was filed in Salem on Friday against Church of South India Bishop Manickam Dorai, who is already facing charges of misappropriation of CSI funds, and 12 others, a top police official said. The case was filed under seven sections of IPC including cheating in Hasthampatty police station. Inspector Kennedy said the case relates to misappropriation of funds totalling Rs. three crore.Besides the Bishop, a case was filed against his wife and 11 others including a CSI Salem polytechnic College Principal. The CB-CID is already investigating the alleged misappropriation of funds in Coimbatore, Udhagamandalam, Erode. The Bishop and his wife had already obtained anticipatory bail from the Madras High Court in the Coimbatore case. Following the alleged irregularities, Paul Vasanthakumar, Bishop of Tiruchi and Thanjavur Diocese had taken over additional charge of Coimbatore Diocese of the Church of South India.

http://www.hindustantimes.com/India-news/TamilNadu/Criminal-case-filed-against-Bishop/Article1-576418.aspx

[5] Madras High Court – Rt. Rev. Dr.M.Dorai vs 8 .Rt.Rev.S.Vasanthakumar on 5 April, 2013; Dated : 05.04.2013; http://www.indiankanoon.org/doc/121956762/

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

ஏப்ரல் 9, 2010

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கோவா இன்குஷிஷன் – மதவெறி ரீதியில் இந்துக்களுக்குத் தண்டனை அளித்து கொன்றது, கற்பழித்தது, குழைந்தைகள்-முதியோர் என்று பாராமல் கொன்று குவித்தது முதலியன – இன்றைய வரை கிருத்துவர்களின் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்……………….முதலியவை பெருமளவில் மறைக்கப் படுகின்றன. இதை உண்மைகளை மறைக்கும் சித்தாந்தம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனல், வெளிவரும் செய்திகளே மிகவும் கோரமாக, பீதியடையும், கவலைக் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றன.

ஊடகங்களில் / ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிருத்துவர்கள், கிருத்துவர்களின் ஆட்கள், அபிமானிகள்,…………………….என்பதனால் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வந்தாலும், அதன் பின்னணி, தொடர் நிகழ்வுகள், வழக்குகள், முடிவுகள்……………..முதலியவை வராமல் கவனித்துக் கொள்கின்றனர்.

செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல

தட்ஸ்தமிழ் – ‎7 ஏப்., 2010‎
சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார்.

விடுப்பில் சென்றார் கோவை சிஎஸ்ஐ பிஷப்

தினகரன் – ‎4 ஏப்., 2010‎
கோவை : திருமண்டல நிதியில் இருந்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக, கோவை சிஎஸ்ஐ மண்டல பிஷப் மாணிக்கம் துரை, மனைவி சூடாமணி, சகோதரர்கள் தனபால், மூர்த்தி, முன்னாள் செயலர் அமிர்தம்,

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் முன்னாள் நோர்வே கத்தோலிக்க

அலைகள் – ‎7 ஏப்., 2010‎
கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்கதைகளில் ஓரங்கமாக இன்று நோர்வேயின் முன்னாள் பிஷப் ஒருவருடைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக செயல்

பிஷப் ராஜினாமா ஏற்பு

ஆறாம்திணை – ‎24 மார்., 2010‎
அயர்லாந்து, மார்ச்.25 (டிஎன்எஸ்) அயர்லாந்து நாட்டில் பாலியல் முறைகேடு தொடர்பான சர்ச்சையில் அந்நாட்டு பிஷப் மாகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை போப்

தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் – மாற்றக் கோரி பிஷப்

தட்ஸ்தமிழ் – ‎24 மார்., 2010‎
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணலை பிரிப்பதில் பெருமளவில் ஊழல் செய்ததாக பாதிரியார் மீது குற்றம் சாட்டிய கிராம மக்கள், அவரை மாற்றக் கோரி பிஷப் அலுவலகத்தை

பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு கல்லூரி பேராசிரியர் கைது

தினகரன் – ‎19 மார்., 2010‎
கோவை & பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கல்லூரி இணை பேராசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் துரை என் கிற மாணிக்கம் துரை (62), திருமண்டல
இப்படி செய்திகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், அடுத்த நாள் இவ்விவரங்கள் எல்லாம் மறைக்கப் படும்!
ரூ.3 கோடி மோசடி வழக்கு: கோர்ட்டில் சி.எஸ்.ஐ., பிஷப் சரண்
பிப்ரவரி 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5258

Court news detail

மூன்று கோடி ஊழல் விசுவாச ஊழியர்:  மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சி.எஸ்.ஐ., திருச்சபை பிஷப், ஐகோர்ட் நிபந்தனைப்படி நேற்று கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் துரை. சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவர். எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் திருச்சபைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார். திருச்சபை அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் நிதியை மோசடி செய்து விட்டதாக, இவர் மீது புகார் எழுந்தது. இம்மோசடி குறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த திருச்சபை உறுப்பினர் பிரேம்குமார், போலீசில் புகார் கொடுத்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, பிஷப் மாணிக்கம் துரை, அமிர்தம், மூர்த்தி, தனபால் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஊழல் மாணிக்கம் சரண்: போலீசார் தேடுவதை அறிந்த பிஷப், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி சொக்கலிங்கம் டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “கோவை ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் சரணடைந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும். தவிர, தினமும் காலை 10.00 மணிக்கு கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும்’ என, நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கியது. நேற்று, கோவை ஜே.எம்.எண்-3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்த பிஷப் மாணிக்கம் துரை, ஐகோர்ட் நிபந்தனைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இவருக்காக மதுக்கரையைச் சேர்ந்த குணசிங், சங்ககிரியைச் சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் மற்றும் ஈரோடைச் சேர்ந்த தனபால் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஆவணங்கள் பரிசீலனைக்குப் பின், ஜாமீனில் செல்ல பிஷப்புக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.
பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரம்: பிஷப் மாணிக்கம் துரை, கோர்ட்டில் சரணடைந்தது குறித்த செய்தி சேகரிக்க நிருபர்கள், கோர்ட் வளாகத்தில் சூழ்ந்தனர். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த பிஷப்பை, போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது, பிஷப்புக்கு பாதுகாப்பாக வந்த இருவர், போட்டோகிராபர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து,கேமராவை தள்ளி விட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த போட்டோகிராபர்கள், சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட, பிஷப் சார்பில் ஆஜரான வக்கீல்கள் திடீரென கூட்டத்தில் புகுந்து, பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி, வாலிபரை அழைத்துச் சென்றார். இச்சம்பவம் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.