Posts Tagged ‘சர்ச்-கோவில்’

சர்வேஸ்வரன் கோவில் – சங்கரன் கோவில் வட்டம், சேர்ந்தமரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்-கோவில் விவகாரம் (1)

நவம்பர் 29, 2013

சர்வேஸ்வரன் கோவில் – சங்கரன் கோவில் வட்டம், சேர்ந்தமரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்-கோவில் விவகாரம் (1)

Surandai Amman templeஆக்கிரமிக்கப்  பட்டுள்ள  இந்துகோவிலை  மீட்கக்  கோரி  மக்களைத்   திரட்டி  போராட்டம்: திருநெல்வேலி மாவட்டம், சேர்ந்தமரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவிலை மீட்கக் கோரி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித்துள்ளது[1]. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலர் பி.எம். நாகராஜன், திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி[2]: சேர்ந்தமரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சர்வேஸ்வரன் திருக்கோவில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோவிலின் கருவறைக்கு முன் பகுதியில் அமைந்துள்ள கல்மண்டபத்தை ஆக்கிரமித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டியுள்ளனர். கருவறையின் கல்மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது. இந்தக் கோவிலுக்கு சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து இந்த கோவிலை மீட்க விசுவ இந்து பரிஷத் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனித் திருவிழாவை நடத்தவும், கோவிலை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்கவும் கோரி போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். சாதுக்கள், துறவிகள், சிவனடியார்களை அழைத்து இந்தப் பகுதியில் உள்ள 30 கிராம மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார் அவர். பேட்டியின்போது தமிழ்நாடு துறவிகள் பேரவை மாநில செயலர் சுவாமி ராகவானந்தா, விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Kutralanathan facebook - post with courtesy - blank wall - discussion with policeகிருத்துவ தரப்பில் சொல்லப்படுவதாவது (Sts Peter and Paul Church Dispute Rev Fr Antony Viagappan Interview 26 11 2013)[3]: “சங்கரன் கோவில் வட்டம், சேர்ந்தமரம் கிராமத்தில் சுமார் 400 ஆன்டுகள் பழமை வாய்ந்தது ராயப்பர் சின்னப்பர் ஆலயம் பாரம்பரியமாக சர்வேஸ்வரன் கோவில் என்றே வழங்கப் படுகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துகள், உடமைகள்  அனைத்துமே சர்வேஸ்வரன் கோவில் சொத்துகள் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறது. 400 ஆண்டுகாலமாக நடந்து வரும் ஆலய பணிகளை, சொத்துகளுக்கு ஏதாவது ஒருவகையில் இடையூறு செய்யவேண்டும் என்று சில மதவவாத மற்றும் சமூகவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்தமாதிரியான பிரச்சினைகளை இப்பகுதியில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆலயத்திற்கு முன்புள்ள ஒரு வீட்டின் சுவரில் ஒரு (சிவனின்) படத்தை வரைந்து, அதனை வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதை அறிந்தவுடன் காவல்துறைக்கு நாங்கள் முறையாக தகவல் கொடுத்து அதன் மூலமாக இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறோம். இந்த ஆலயத்திற்கும், ஆலயப் பணிகளுக்கும், சுற்றியுள்ள மக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று இம்மாவட்ட அதிகாரி தமிழக முதல்வர் முதலியோர் இப்பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும், சகோதர ஒற்றுமையோடு இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.”, இவ்வாறு ஒரு பாதிரி கூறுவது போல உள்ளது.

Kutralanathan facebook - post with courtesy - blank wallசொந்த  சுவற்றில்  விளம்பரம்  செய்ததில்  தகராறு: தினத்தந்தி இவ்வாறு குறிப்பிட்டாலும், கிருத்துவ பாதிரி ஒரு படம் என்ற்றாலும், அது என்ன என்று தெரியவில்லை. நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் ராயப்பர் சின்னப்பர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் இருக்கும் இடம் சர்வேசுவரன் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்[4]. இது தொடர்பாக 2 தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுபற்றிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு முன்பாக வேல்சாமி என்பவர் வீடு உள்ளது. அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகின்றார். அவரது வீட்டு சுவரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு விளம்பர படம் வரைவதற்காக நேற்று காலையில் ஆட்கள் வந்தனர்[5]. அவர்கள் சுவரில் சுவாமி சிவன் படம் வரையத் தொடங்கினார்கள்[6].

Kutralanathan facebook - post with courtesyபேச்சுவார்த்தை  நடந்து  கொண்டிருக்கும்  போது  கல்வீச்சு: இந்த நிலையில் ஒரு தரப்பினர் கிறிஸ்தவ ஆலய மணியை ஒலிக்கச் செய்து சுமார் 100–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். ஒருவர் தன்னுடைய வீட்டின் சுவரில் விளம்பரம் செய்கிறார், படம் வரைகிறார் என்றால், அதனை எப்படி மற்றவர்கள் எதிர்க்கலாம் என்று தெரியவில்லை. அவர்கள், கிறிஸ்தவ ஆலயம் எதிரே இதுபோன்ற விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறினார்கள். அதாவது, கிருத்ட்ஹுவர்கள் இதில் தீர்மானமாக இருக்கிறாற்கள் என்று தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊர் கோவில் / அதாவது சர்ச்சின் ஒலி பெருக்கி மூலம் தகவல் கொடுத்து ஊர் மக்களை திரண்டி கிறிஸ்தவ ஆலயம் அமைந்து உள்ள பகுதியில் குவிந்தனர். இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீர் என்று கூட்டத்தில் கல்வீசப்பட்டது. இதுவழக்கமான விசயம் தான்.

Silvestar Youth Movement Surandai - Antony church5 பேர்  காயம்: இந்த சம்பவத்தில் ஆறுமுகம் மகன் சங்கர் கணேஷ் (வயது 36), வேலுச்சாமி மகன் செந்தில் குமார் (24), செல்லப்பா மனைவி ராதா (29), கனி மனைவி ராமலட்சுமி (52) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும், யூசின் திலீப் (67) என்பவரின் கால் முறிந்தது. அவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரத்திற்கு குறைவாக ஒரு மோதல் ஏற்பட்டிருக்கிறது, ஆனால், மக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள் என்ரு தெரிகிறது. ஒரு வேளை, போலீசார் இருந்திருந்ததினால் கட்டுப் படுத்தினார்கள் போலும்!

Surandai - Antony churchபேச்சுவார்த்தை: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வானுமாமலை, தென்காசி உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, ஒரு தரப்பினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்வர்களை கைது செய்யக் கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்[7]. அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவத்தை அடுத்து அங்கு மேலும் பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிரடி படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பிரச்சினையை  சாதகமாக்கிக்  கொண்டு  தங்கசங்கிலி   பறிப்பு: கல்வீச்சு சம்பவம் நடந்த போது அங்கு நின்று கொண்டு இருந்த ஆறுமுகம் மனைவி ராமலட்சுமி என்ற சுமதி (35) கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ பறித்து விட்டதாக சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு கோவிலுக்குள் சென்று இந்துக்கள் பேசிக்கொண்டதாகத் தெரிகிறது[8].

 Swami Vivekananda pamphlet

ரூ.பலகோடிமதிப்புள்ளகோயில்நிலம்போலிஆவணம்மூலம்விற்றுமோசடி: பஞ்.தலைவர்,செயலர்உட்பட 28 பேர்மீதுவழக்குப்பதிவு: சேர்ந்தமரத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை போலி ஆவணம் மூலம் தயாரித்து விற்பனை செய்த பஞ்.,தலைவர் உட்பட 28பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் .நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தில் திருமூல விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் 76 சென்ட் நிலம் இருக்கிறது. நிலம் பல கோடி ரூபாய் மதிப்பு பெரும்.இந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் பால்ராஜ் (45) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்து தென்காசி மேலகரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ முத்துசாமி என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார். மேலும் நிலத்தை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.இது குறித்து சேர்ந்தமரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் ஜெயராஜ், செயலாளர் அமல்ராஜ் பாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் கோயிலையும், கோயில் நிலத்தையும் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர்நலக் கமிட்டி தலைவர் ஜெயராஜ் போலீசில் புகார் செய்தார். ஆக, இவ்வாறு கோவில் நிலத்தை கிருத்துவர்கள் அபகரிப்பு நடத்திவருவது தெரிகிறது.

புகாரின்  பேரில்  சேர்ந்தமரம்  இன்ஸ்பெக்டர்  முத்துராஜ்  விசாரணை  நடத்தினார். சேர்ந்தமரம் கஸ்பா பஞ்.,தலைவரும், தொகுதி சமக செயலாளருமான விசுவாசம், ஓய்வு பெற்ற பிடிஓ கருப்பையா, ஓய்வு பெற்ற விஏஓ முத்துசாமி, மேலநீலிதநல்லூர் ஒன்றிய சமக செயலாளர் மிக்கேல் அந்தோணி ராயப்பன், சேர்ந்தமரம் கஸ்பா பஞ்., செயலர் யோகநாதன், கடம்பன்குளம் தொழிலதிபர் முருகையா, பால்ராஜ் மனைவி கோமு, மணியன் மனைவி சரஸ்வதி, சுப்பிரமணியன் மனைவி பட்டம்மாள், ஆலகாலசுந்தரம் மனைவி முனியம்மாள் உட்பட 28பேர் மீது மோசடி செய்தல், நிலம் அபகரிப்பு செய்தல் போன்ற வழக்குகள் பதிவு செய்து 28பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பஞ்.,தலைவர், பஞ்., செயலர் ஓய்வு பெற்ற அதிகாரிகள், சமக பிரமுகர், பெண்கள் உட்பட 28 பேர்மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் சேர்ந்தமரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் காணவில்லை என்பது வேடிக்கையான விசயம். பதிவு நடந்திருப்பதால், அவர்களுடைய முழு விவரங்கள் ஆவணங்களில் இருக்கும்.

© வேதபிரகாஷ்

29-11-2013


[2] தினமணி, சேர்ந்தமரம்கோவிலைமீட்கப்போராட்டம், By திருநெல்வேலி First Published : 16 July 2013 02:54 AM IST,

[6] தினத்தந்தி, சுரண்டைஅருகேஇருதரப்பினர்மோதல்; கல்வீச்சில் 5 பேர்காயம், பதிவு செய்த நாள் : Nov 26 | 02:35 pm