Posts Tagged ‘சட்டமீறல்கள்’

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்! [2]

ஜூலை 16, 2018

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களாஇல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதாஇல்லையா, சிஎம்டிஏவை கலைத்து விட்டால் என்னகேட்பது உயர்நீதி மன்றம்! [2]

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[1]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது. அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லைபுரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்”.  சர்ச் கட்டிக்கொள்வதற்கு கருணாநிதி இடம் கொடுத்தார் என்பது திகைப்பாக இருக்கிறது. அரசியல் ஆதரவை வைத்துக் கொண்டால், சட்டங்களை மீறலாம் போன்ற செயல்பாடுகள், சமூகத்தில் அமைதியை உண்டாக்காது,

Hebron church, nungambakkam-politicized 2018

தனிமனித சட்டமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பாவார்கள்: எதற்கெடுத்தாலும், மோடியைத் தாக்குவது என்ற நிலைப்பாடுள்ளதும் விசித்திரமாக உள்ளது. இங்கு பொறுத்தவரை, 2006லிருந்தே பிரச்சினை இருக்கும் போது மோடி எங்கிருந்தார் என்று தெரியவில்லை. தனிமனித மற்றும் கிருத்துவர் – எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தொடர்ந்து சட்டங்களை மீறி வருவது, வாடிக்கையாக உள்ளநிலையில், அவற்றை மறைத்து, இன்னொருவர் மீது பழி போட்டு, நாடகம் ஆடுவது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், உண்மையில் இந்த சட்டமீறல்களில், குற்றங்களில், யார் தாக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். டிசம்பர் 2017ல் ஒன்றும் தெரியாத அப்பாவி போல, இதே எடிசன், மற்ற கிருத்துவ கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு [ஜான் தயாள் உட்பட] ஏதோ சர்ச்சுகள் எல்லாம் தாக்கப்படுகின்றன, உடனே நிறுத்துங்கள் என்று கூப்பாடு போட்டது தமாஷாக இருந்தது. அந்த அருமையான செய்தியை “தி இந்து” தான் வெளியிட்டது[2]. ஜான் தயாள் தமக்கே உரிய பாணியில், இந்தியாவில் சர்ச்சுகளுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் 250 நடந்துள்ளதாகவும், அவற்றில் 30 தமிழகத்தில் நடந்துள்ளதாக கூறியது வேடிக்கையாக இருந்தது[3].

Edison-henbron stopped tweeting

இதே சர்ச்சின் செயல்பாடு, வழக்கு பற்றி 2018ல் தி.இந்து செய்தி வெளியிடும் விதம்: இப்பொழுது, அதே “தி.இந்து” இப்பிரச்சினையைப் பற்றி, செய்தி வெளியிடும் போது[4], “It was during the hearing of a case related to the unauthorised construction of a multi-storey building in Nungambakkam here that the judges were told that the CMDA as well as Corporation officials lacked the manpower required to check unauthorised constructions. They were also told that the police officers seldom cooperated with the officials of the civic bodies,” என்று குறிப்பிட்டாலும், அது கே.பி.எடிசனின் மனு என்று குறிப்பிடவில்லை. ஆகவே, ஒரே நபர், ஒரே கட்டிடம், ஒரே – அதே வழக்கு, என்றாலும், இப்படி சாமத்தியமாக உண்மைகளை, அறியப்பட வேண்டிய சாதாரண தகவல்களை வெளிடாமல் இருப்பது, எத்தகைய பத்திரிகா தமத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.” hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai” என்று மற்ற ஆங்கில நாளிதழ்கள் வெயிட்டபோது, உண்மைகளை, மக்கள் அறிய வேண்டிய தகவல்களை, “தி.இந்து” மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் வேடிக்கை என்னவென்றால், என், ராமின் மீதே நில அபகரிப்பு புகார், வழக்கு உள்ளது, அதனால் தான், தற்காலிகமாக, பதவி விலகி இருப்பதும் தெரிந்து விட்டது. இதுதான் “தி.இந்து”வின் கிருத்துவ சார்பினை எடுத்துக் காட்டுகிறது. அது “மார்க்ஸியத்துடன்” சேர்ந்து கொண்டு, செக்யூலரிஸ போர்வையில் உலா வந்து கொண்டிருக்கிறது. அப்பாவி வாசகர்களை ஏமாற்றி வருகின்றது.

Edison-hebron - December propaganda 2017, The Hindu

தி.இந்து-கிருத்துவ-மார்க்ஸீய சார்புடையதாக இருக்கிறாதா-இல்லையா?: என். ராம் இப்பொழுது, மிரியம் சாண்டி என்கின்ற, “மாமன்-மாப்பிள்ளை” குழுமத்தின் பெண்ணை மனைவியாகக் கொண்டிருக்கிறார், சிபிசிஐ மாநாட்டில் பேசுகிறார், கிருத்துவத்திற்கு சாதகமாக இருக்கிறார் என்றெல்லாம் தெரிகிறது. இதெல்லாம் அவரது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை விருப்பு-வெறுப்புளாக இருக்கலாம். அவற்றைப் பற்றி மற்றவர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த விருப்பு-வெறுப்புகள்:  மற்றவரை, குறிப்பாக இந்திய மக்களை, சமூகத்தை  பாதிக்கின்றன, சித்தாந்த ரீதியில் இருந்து கொண்ட, குறிப்பிட்ட மக்களுக்கு சாதகமாக-விரோதமாக இருக்கின்றன, அத்தகைய கருத்துருவாக்கங்களில் ஆதிக்கம் செல்லுத்த வலுக்கட்டாயமாக உபயோகப் படுத்தப் படுகிறது, மற்ற கருத்துகளை அமுக்கி, மறைத்து, அவை செயல்படுகின்றன என்ற நிலயுண்டாகும் போது, மற்றவர்களும் லவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Hebron church, nungambakkam-CMDA-High Court

2018ல் நீதிமன்றம் கேள்விகள் எழுப்பியது: 11-01-2018 அன்று கே.பி.எடிசன் போட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் மாதம் வரை, விதிமீறல்களை சரிசெய்ய, கால அவகாசம் கொடுத்தது. ஆனால், எடிசன் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை போலும். இதனால், இப்பொழுது மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில், சிஎம்டிஏயின் மெத்தனப் போக்கே, 2015-டிசம்பர் வெள்ளத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டது. அந்நிலையில் ஹெப்ரான் சர்ச்சின் மனு மறுபடியும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பாக வந்தபோது[5], ஏற்கெனவே நடந்துள்ள வழக்கின் போக்கை அறிந்து, இவ்விசயத்தில், சிஎம்டிஏ இவ்வாற்று நடந்து கொள்வது ஏன், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டனரா[6], இப்படி வேலைசெய்யாமல் இருக்கும் இந்த சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன[7], என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் நீதிபதிகளால் எழுப்பப் பட்டன[8]. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன்பாக, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 2006லிருந்தே, ஹெப்ரான் சர்ச், இவ்வழக்கை இப்படி இழுத்து வருவதை கண்டு, நீதிபதிகள், இவ்வாறு கேள்விகளை எழுப்பினர். நீதிமன்றம் ஜூலை 16ம்தேதி தம்முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆணையிட்டது[9].

© வேதபிரகாஷ்

15-07-2018

Hebron -beyond all acts and rules

[1]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[2] The Hindu, Stop violence against churches: forum, SPECIAL CORRESPONDENT CHENNAI , DECEMBER 23, 2017 23:44 IST, UPDATED: DECEMBER 23, 2017 23:44 IST

[3] The United Christian Forum and various Christian organisations called for action to put an end to violence against churches and Christians in Tamil Nadu.Representatives of Christian organisations, including the Synod of Pentecostal Churches, told a press meet here on Saturday that the State government and the Centre must take steps to stop the communal violence that had instilled fear among Christians. Citing the recent attacks in Coimbatore, John Dayal, spokesman, United Christian Forum for Human Rights, said there were about 250 attacks against Christians throughout the country. This year, nearly 30 incidents of vandalism of churches and attacks on Christians occurred in Tamil Nadu. Synod’s general secretary K.B. Edison said the recent incidents had triggered a sense of fear among Christians ahead of Christmas celebrations. The State must take action to bring an end to the hate campaign against minorities being done by Hindu fringe outfits.The forum had launched a helpline 18002084545 to aid victims of violence and intimidation by any criminal or political group.

 https://www.thehindu.com/news/national/tamil-nadu/stop-violence-against-churches-forum/article22268998.ece

[4] The Hindu, HC summons Corporation, CMDA officials, by Mohamed Imranullah S. CHENNAI, JULY 13, 2018 01:38 IST; UPDATED: JULY 13, 2018 01:38 IST.

[5] The Madras High Court slammed the Chennai Metropolitan Development Authority (CMDA) for its lackadaisical approach in tackling with encroachments. The Court has asked why the CMDA shouldn’t be dissolved for its inaction[5]. The bench consisting of Justices N Kirubakaran and Krishnan Ramasamy was hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai. “Is the CMDA silent after accepting money from the violators? Why can’t the CMDA which does not take actions against the violators be dissolved?” the bench asked[5]. Pointing to the increasing number of encroachments in Chennai, the bench expressed its disappointment at the CMDA.

Prime Times.IN, Madras HC slams CMDA, says it hasn’t learnt lessons from 2015 Chennai floods, JULY 13, 2018.

[6] https://www.primetimes.in/news/249894/madras-hc-slams-cmda-says-it-hasnt-learnt-lessons-from-2015-chennai-floods/</p>

[7] பத்திரிக்கை.காம், சென்னையில் விதிமீறும் கட்டடங்களை இடிக்காத சிஎம்டிஏ தேவையா?….உயர்நீதிமன்றம், Posted on July 12, 2018 at 9:06 pm by vathimathi.

[8]  https://patrikai.com/chennai-high-court-ask-why-did-the-cmda-should-not-abolish-for-their-inability-to-take-action-against-illegal-buildings/

[9] It then directed the Member Secretary of CMDA and the Commissioner of Corporation of Chennai to appear before it on July 16 and provide an explanation to the issues raised.http://www.newindianexpress.com/cities/chennai/2018/jul/12/why-not-close-down-cmda-if-it-cannot-stop-illegal-constructions-asks-madras-high-court-1842424.html

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்! [1]

ஜூலை 16, 2018

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களாஇல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதாஇல்லையா, சிஎம்டிஏவை கலைத்து விட்டால் என்னகேட்பது உயர்நீதி மன்றம்! [1]

Hebron church, nungambakkam, in dispute

2006 முதல் 2018 வரை சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ள ஹெப்ரான் சர்ச்சும், எடிசனும்: ஆகஸ்ட் 2016லேயே நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர் [கே.பி.எடிசன்], தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது[1].

Hebron church, nungambakkam, in dispute-family

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி கூறியது: இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “கட்டட உரிமையாளர் தரப்பு விளக்கத்தை கேட்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நோட்டீஸ்அதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, ‘சீல்வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்று நடவடிக்கையை முடக்கினார். இந்நிலையில், கட்டட உரிமையாளர், குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின், கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது,” இவ்வாறு அவர் கூறினார்[2]. ஆனால், சுமார் இரண்டு வருடங்கள் ஆகியும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  2017ல் நாடகம் நடத்தப் பட்டது எனலாம். அதை எனது பிளாக்குகளில் விளக்க்யுள்ளேன்.

Hebron illegal church supported by islamic fringe groups

விசமத் தனமான செய்தி வெளியீடு, பொய் பரப்பும் இந்துவிரோதிகள்: “தமிழ்வலை” என்ற பெயை வைத்துக் கொண்டு பொய்யை செய்தி மாதிரி வெளியிட்டுள்ளது திகைக்கவைக்கிறது. அதை அப்படியே கீழே கொடுக்கப்படுகிறது. “வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத் தேவாலயத்தின் மேல் தளம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள் வழக்குத் தொடுத்தனர்[3]. உயர்நீதிமன்றம் 17 ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிற சூழலில், காவல்துறை உதவியோடு சென்னை மாநகராட்சியினர் தேவாலயத்தின் மேல் பகுதியை ஜூலை 10 அன்று இடிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, அப்துல் சமது, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் சென்று இடிக்கிற போக்கைத் தடுத்து நிறுத்தினோம்.பாசக, ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் களத்தில் நிற்போம் என்றும் கிறித்தவ மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்போம் என்றும் உறுதி அளித்தோம். காவல்துறை மற்றும் மாநகராட்சியின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகக் கிறித்துவப் பெருங்குடி மக்கள் அணி திரளுவது ஏரோது மன்னனுக்கு எதிராக அணி திரளுவதாகும்! மோடி என்னும் ஏரோது அரக்கனை ஒழித்துக்கட்ட கிறித்தவ மக்கள் களமாடுவது காலத்தின் கட்டாயம்! இது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு எழுதியுள்ள முகநூல் குறிப்பு. கிறித்துவ தேவாலயத்தைப் பாதுகாக்க இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லா முன்வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மதங்களைத்தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று முடிக்கிறது[4].

Jawahirullah support 2017

இது இந்துவிரோத கும்பலின் கூட்டம் என்று வெளிப்படுத்திக் கொண்டது: சென்ற வருடமே, இக்க்கோஷ்டிகளின் பின்னணியை எடுத்துக் காட்டினேன்[5].

வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத் தேவாலயத்தின் மேல் தளம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள் வழக்குத் தொடுத்தனர்[6].

பிறகு உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்றங்களுக்கு ஏன், எடிசன் செல்ல வேண்டும், மூக்குடைப்பட்டு வர வேண்டும்?

பாதிக்கப் பட்ட பொதுமக்கள், எப்படி, “இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள்” ஆவார்கள்? “பக்கத்து வீட்டு சொந்தக் காரர்கள் எல்லாம், சமூக விரோதிகள்” ஆவார்களா?

தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, அப்துல் சமது, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் சென்று இடிக்கிற போக்கைத் தடுத்து நிறுத்தினோம். இப்பொழுது, 12-07-2018 அன்று சீல் வைத்துவிட்டார்களே, போய் உடைக்க வேண்டியதுதானே?

இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகக் கிறித்துவப் பெருங்குடி மக்கள் அணி திரளுவது ஏரோது மன்னனுக்கு எதிராக அணி திரளுவதாகும்! மோடி என்னும் ஏரோது அரக்கனை ஒழித்துக்கட்ட கிறித்தவ மக்கள் களமாடுவது காலத்தின் கட்டாயம்!

 

ஆக, இது மோடி-எதிர்ப்பா, பிஜேபி அதிர்ப்பா, இந்து-எதிர்ப்பா, ஒட்டுமொத்த, இந்துவிரோதிகள் எதிர்ப்பா, என்று தீர்மானிக்க வேண்டும் போலிருக்கிறது!
இது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு எழுதியுள்ள முகநூல் குறிப்பு. கிறித்துவ தேவாலயத்தைப் பாதுகாக்க இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லா முன்வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று முடிக்கிறது[7]. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று பீழ்த்திக் கொள்வதிலிருந்தேம் துலுக்க-கிருத்துவ கோஷ்டிகள், இந்துக்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதை மெய்ப்பிக்கிறது. பிறகு எங்கிருந்து “மனித நேயம்” வரும்?

இப்பொழுது, பொத்திக் கொண்டி இருப்பது, அவர்களது, செக்யூல்ரிஸம், மனித நேயம் என்ற எல்லாவற்றையும் எடுத்துக் காட்டுகின்றன[8]. உண்மையில், இத்தகைய சமூகப் பிரிவினைவாதிகளால், மக்கள் எந்த பலனையும் பெறமுடியாது. மக்களை போதவிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று, தங்களது தனிமனித செல்வாக்கை வளர்த்து கொள்வார்கள். அவ்வளவுதான்!

© வேதபிரகாஷ்

15-07-2018

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

[1] தினமலர், தேவாலய கட்டடத்துக்குசீல்வைக்க உத்தரவு, Added : ஆக 10, 2016 22:54

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582840

[3] தமிழ்வலை, சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சிதடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர், ஜூலை 11, 2017.

[4] http://www.tamizhvalai.com/archives/11488

[5] வேதபிரகாஷ், ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலைசெக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?, 13-07-2017.

https://christianityindia.wordpress.com/2017/07/13/residence-turned-hebron-chruch-turned-kalyana-mantap-violation-of-law/

[6] தமிழ்வலை, சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சிதடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர், ஜூலை 11, 2017.

[7] http://www.tamizhvalai.com/archives/11488

[8] வேதபிரகாஷ், ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலைகே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?, 14-07-2017

https://christianityindia.wordpress.com/2017/07/14/illegal-construction-of-hebron-church-is-politicized/

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

ஏப்ரல் 20, 2017

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

DM cutting - Hill encroached by the Christians

கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியது: இதனை [கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை] அகற்றக்கோரி அழகுசமுத்திரம் கிராம மக்கள் வருவாய்த்துறையினருக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த மாதம் டிசம்பர் 26–ந் தேதி 2016 தாசில்தாரின் ஜீப்பை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரை செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டதையடுத்து 16-01-2017 அன்று காலை திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா தலைமையில் வருவாய்த்துறையினர் அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள மலைக்குன்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்கு வைத்திருந்த சிலைகள் மற்றும் சிலுவைகளை அகற்றினர். 10 ஏக்கர் நிலப்பரப்பில் அவ்வாறு சிலுவைகளை வைக்க வேண்டிய அவசியம், போக்கு என்ன என்று யோசிக்கத்தக்கது. அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

UCA prop[agandist news 17-04-2017

அனைத்துலக ரீதியில் பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கிருத்துவர்கள்[1]: இத்தகைய உண்மைகளை மறைத்து, 15-04-2017 அன்று நல்ல வெள்ளியின் போது, பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளன கேடு கெட்ட கிருத்துவ இணைதள ஊடகங்கள். “தலித் கத்தோலிக்கர்களை” பொது இடம் மற்றும் அரசுக்கு சொந்தமான மலைமீது வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. நல்ல வெள்ளி கொண்டாட தடுத்ததோடு, கன்னியாஸ்திரிக்களை தொட்டு, தள்ளுமுள்ளல் செய்யப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் அசிங்கமாக வர்ணித்தது. கத்தோலிக்கர்களில் எப்படி, “தலித் கத்தோலிக்கர்கள்” வந்தார்கள் என்று தெரியவில்லை. மாசிலா அடைக்கலம் ஜேகப் என்ற பாஸ்டர் இத்தகைய அபாண்டமாக புளுகியுள்ளான் [“Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish][2]. இவர்கள் எல்லாம் எப்படித்தான், இப்படி வெட்கமே இல்லாமல் பெயர்களை வைத்துக் கொண்டு, அப்படியே எதிர்மறையான சமூகவிரோத செயல்களை, கற்பழிப்புகளை, குற்றங்களை எய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. மாசிலா-என்று குறிப்பிட்டுக் கொள்ளவே யோக்கியதை இல்லாத இவனுக்கு, அழுக்கு, அசிங்கம், மலம் போன்றவைதான் அடைக்கலமாகியிருக்கின்றன. இவ்வாறு பாதித்தவர்களுள் அரசு அதிகாரிகள், போலீசார் முதலியோரும் அடங்குவோர் என்று கண்ணால் பார்த்த சாட்சிகள் சொன்னதாக சேர்த்துக் கொண்டுள்ளது[3]. தங்களுடைய பெண்களை இவ்வாறு மோசமாக சித்திரித்துக் கொள்ள எப்படித்தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என்று தெரியவில்லை.

Sogandi tamasha - Woman defying police 15-04-2017

தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளது: இன்னொரு கிருத்துவ இணைதளம், சடங்கு நடத்தவிடாமல் அபச்சாரம் செய்து விட்டது என்று புலம்பி வைத்துள்ளது[4]. அவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில், நடத்தினால் யார் தடுக்கப்போகிறார்கள், ஆனால், வேண்டுமென்றே மலைமீது நடத்துகிறேன் என்றது, அதிலும், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செய்வது, தாங்கள் சிறுபான்மையினர் / கிருத்துவர்கள், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் செயல்பட்டது, பிரச்சினையை  உண்டாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ளதும் தெரிகிறது. கலவரம் ஏற்படவேண்டும், அதனால், ஆதாயம் தேட வேண்டும் என்ற உள்நோக்கமும் புரிகிறது. இன்ந்தியன் எக்ஸ்பிரஸ் அதனால் தான், அத்தகைய ஜாதி-விளக்கத்தைக் கொடுத்தது போலும். அதாவது, தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளதும் தெரிகின்றது. சூசை தீர்ப்பில் தோல்வியுற்றப் பிறகு, இவ்வாறு கலாட்டா செய்வதும் தெரிகிறது.

UCA persecution- propagandist news 17-04-2017

இது மதப்பிரச்சினையா, ஜாதிப்பிரச்சினையா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கு ஒரு ஜாதி-விளக்கம் கொடுத்துள்ளது[5]. இந்த நிறுவனத்தில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக, சில நிருபர்கள், உதவி-ஆசிரியர்கள் இருப்பது, இருந்தது, இருந்து வருவது தெரிந்த விசயமே. தலித்-கிருத்துவர்களுக்கும், ஜாதி-இந்துக்களுக்கும் இடையிலான போராட்டம் போல சித்தரித்துள்ளது. மத சின்னங்களுக்கு இடையில் உள்ள போர் உச்சக்கட்டத்தை எட்டியது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[6].  அப்படியென்றால், கிருத்துவர்கள் ஏன் அத்தகைய அபாயகரமான விளையாட்டை அடிக்கடி செய்ய வேண்டும்? ஆக்கிரமிப்பு என்று ஒப்புக்கொண்டாலும், அத்தகைய சட்டமீறல், அத்து மீறல், முதலியவற்றை விடுத்து, ஜாதிப் பிரச்சினை போன்று விவரிப்பதும் திகைப்பாக இருக்கிறது[7]. கத்தோலிக்க இணைதளமே, இதனை, மதப்பிரச்சினையாகக் கருதுகின்றதே தவிர, ஜாதிப்பிரச்சினையாக குறிப்பிடவில்லை. அந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அவ்வாறான விளக்கம் கொடுத்துள்ளது, வேடிக்கையா இருக்கின்றது.

Sogandi tamasha - stage managed-2

அனைத்துலகப் பிரச்சினையாக்கி பிரச்சாரம் செய்யும் விஷமத்தனம்: போதாகுறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் அமைதியைக் குலைத்தது என்றும் சேர்த்துள்ளது[8].  இதில், ஆர்.எஸ்.எஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சட்டங்களை மீறி அரசுநிலத்தை எப்படி ஆக்கிரமித்துக் கொள்ளலாம், அங்கு எப்படி அத்துமீறி சிலைகளை வைக்கலாம், நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படலாம் என்றெல்லாம் மெத்தப் படித்த அந்த கிருத்துவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது போலும். ஆங்கிலத்தில் போடும் போது, கொஞ்சமாவது, அவர்களுக்கு அறிவு, புத்தி முதலியவையெல்லாம் தேவை என்று அவர்களும் யோசிக்காமல் பொய்களை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இப்பொய்களை, கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பது போல புனைத்து, கதை விட்டிருக்கிறார்கள்[9]. இனி ஒருத்தன் புளுகினாலே போதும், அது உண்மையாகி விடுகிறது என்று இன்னொருவன் புளுகியிருக்கிறான்[10]. அதனால், அபச்சாரம் என்றெல்லாம் சேர்த்து புளுகியிருக்கிறான்[11]. வீடியோக்களை முழுவதுமாக இல்லாமல், சிறியதாக-பகுதியாக போட்டும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்[12]. ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொள்ள, சமாளிக்க, எதிர்-பிரச்சாரம் செய்ய இந்துக்களுக்கு நிச்சயமாக ஞானம், வசதி, திறமைகள் இல்லை. அதனால் தான் கிருத்துவர்கள், அளவுக்கு படுமோசமாக நடந்துகொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

20-04-2017

Sogandi tamasha - stage managed-1

[1] Ucannews, Indian nuns ‘manhandled’ at Good Friday service, ucanews.com reporter, Chennai , April 17, 2017.

[2] http://www.ucanews.com/news/indian-nuns-manhandled-at-good-friday-service/78961

[3] Police arriving to stop Good Friday ceremonies of a parish in the southern Indian state of Tamil Nadu. Officials disrupted the services of the Dalit Catholics on the grounds that they had no permission to hold such services on the public hillock, a government owned property. Police and local civic officials forcibly stopped a Good Friday service being held on public land in the southern Indian state of Tamil Nadu. “Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish where the April 14 incident took place, told ucanews.com. The parish comes under Chingleput Diocese. Eye-witnesses said that the offending officials, including police, were led by the sub-district’s revenue officer.

[4] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

[5] Indian Express, Religious symbol war between two villages touches a new high, By Ram M Sundaram, Express News Service, Published: 19th March 2017 01:28 AM, Last Updated: 19th March 2017 05:26 AM

[6] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–1.html

[7] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–2.html

[8] Sacrilege at Sogandi, Diocese of chengalpet. Good Friday service conducted at the usual place, amidst hundreds of police peacefully was disturbed by RSS. Could not complete the Communion service. Altar and Holy commuion pulled, Priests and people, women, nuns and children aggressively pulled away from the hill. People are in dharna asking for justice and their right for worship Today. President of India extends Easter Greetings and asked to remove hatred.

[9] http://persecution.in/node/4257

[10] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

http://www.persecution.in/taxonomy/term/7200

[11] http://www.persecution.in/taxonomy/term/7200

[12] https://www.youtube.com/watch?v=kJPnTrPW-sU; https://www.youtube.com/watch?v=M-qFSsFM1yI

 

வேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்!

மே 10, 2011

வேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்!

 

குழந்தைகள் கடத்தல், முறையற்ற தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, குழந்தைகளை பிச்சைக்கு ஈடுபடுத்துதல் போன்ற பல குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டுவந்துள்ளது, மறுபடி-மறுபடி வெளிவந்த வண்ணம் உள்ளன[1]. தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் பெருகி வருவதால், போலீஸ்துறை விழிப்பாக இருக்கும்படி ஏப்ரல் 20, 2011 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது[2].

வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. சமீபத்தில் சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுப்பு விவகாரத்தில் இது ஈடுபட்டுள்ளது கண்டு, நால்வர் குழு திகைத்துள்ளது[3]. சிசுபவனம் என்ற அமைப்பு அனாதை குழந்தைகள் மையம் வைத்து நடத்துகின்றது. கடந்த ஆண்டுகளில் அனாதையாக கிடக்கும் குழந்தைகளை கிருத்துவ மருத்துவ மனை சிசு பவனத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால், சிசு பவனம் குழந்தைகளை சட்டத்திற்கு மீறி அக்குழந்தைகளை தத்திற்கு கிருத்துவ மருத்துவ மனைக்குத் தெரிந்தே கொடுத்துள்ளது[4]. கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறு எத்தனை குழந்தைகளை தத்தாக கொடுத்துள்ளது என்று கேட்டுள்ளது[5].

சி.எம்.சியின் பெயரைக் காப்பாற்ற அரங்கமேறும் நாடகங்கள்[6]: சிசு பவன் மற்றும் கிருத்துவ மருத்துவ மனை தெரியாமல் அத்தகைய சட்டமீறல்களை செய்துவிட்டது என்று அந்த நால்வர் கமிட்டியின் அங்கத்தினரே கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது[7]. அதாவது குற்றத்தைக் கண்டுபிடித்த கமிட்டியே அவாறான வெள்ளையெடிப்பு வேலை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இவ்வளவு நடந்தும் தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்து வருகின்றன[8].

“ஜஸ்ட் டயல் தததெடுப்பு: கர்நாடகத்தில் ஹோரமாவு என்ற நகரத்தில் கல்கரே என்ற இடத்தில் இருக்கும் அனாதை இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 2010ல் 19 அனாதை குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த செய்தி வெளிவந்த போதுதான் பதிவு செய்யாமல், ரீடா தாமஸ் என்பவர் அந்த அனாதை இல்லத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது[9]. ஜஸ்ட் டயல்.காம் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்திருந்தது. 2005ல் தொடங்கப்பட்டது. 12 குழந்தைகளை ததெடுக்கவும் கொடுத்திருக்கிறார்கள்; போலீஸ் மற்றும் குழந்தை பாதுகாப்பு இணையத்து அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு சென்றபோது 7 முதல் 12 வயது வரையிலுள்ள 29 குழந்தைகள் இருந்தன. ஆனால் எந்த ஆவணமோ, பதிவு புத்தகமோ வைத்திருக்கவில்லை.

மங்களூரில் ஜாய்-எலிஸபெத் ஜாலியாக செய்து வந்த வியாபாரம்: மங்களூர் நகரத்தில், ஹலெயங்காடி என்ற பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட இடத்தில், கே.ஜே. ஜாய் மற்றும் அவரது மனைவி எலிஸெபெத் எபினேசர் பிரேயர் ஹால் என்ற பெயரில், லைசென்ஸ் இல்லாமல், அனாதை இல்லம் மற்றும் குழந்தைகளை தத்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஏப்ரல் 2, 2011 அன்று போலீஸ் ரெய்ட் நடத்தியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன[10]. அதுமட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக இவ்வேலைகளை செய்து வந்ததோடு, மதம் மாற்றத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். குழந்தைகளை பராமரிப்பது, தத்து கொடுத்தது, போன்ற விவரங்களை வைத்துக் கொள்ளாதிருந்ததாலும், அவற்றை மறத்ததாலும், இருவரும் போலீஸாறல் கைது செய்யப்பட்டனர்[11].

தொட்டில் குழந்தைகளையும் விட்டு வைக்காத பாதிரி: அல்போன்ஸ் சேவியர் என்ற பாதிரி, படப்பை சென்னையில் அத்தகைய அனாதை இல்லத்தை நடத்தியதால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டான்[12]. அதுமட்டுமல்லாது, தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் வளர்த்து வரும் குழந்தைகளை விற்றும் உள்ளான். இதற்கு கூட்டாக வேலை செய்த் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.


[3] A four-member committee, which was constituted by the district court to conduct an inquiry into a case of illegal child adoption, has found that the famous Christian Medical College (CMC) hospital had sent two abandoned babies to Sishu Bhavan, a children’s home in Vellore, without informing the Child Welfare Committee (CWC) as per norms.

[4] The committee visited Shishu Bhavan, the CCI from where the children were given in adoption. The DWSO, Vellore, Gomathi, a member of the committee, told The Hindu that the panel confirmed that Shishu Bhavan had given the two children in adoption, though it was not an authorised adoption agency.

[7] Another committee member, speaking on condition of anonymity, said both CMC and Shishu Bhavan had taken the steps they did in the best interests of the children, but had inadvertently violated the JJA, which states that the children had to be produced before the district-level CCI, which has the powers of a First Class Magistrate to take decisions on placement of children in suitable homes for adoption.

கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு: ஒரு கன்னியாஸ்திரீக்குப் பிறகு, ஒரு இளைய பாதிரி சொல்லும் காமக்களியாட்ட விவரங்கள்!

செப்ரெம்பர் 10, 2010

கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு: ஒரு கன்னியாஸ்திரீக்குப் பிறகு, ஒரு இளைய பாதிரி சொல்லும் காமக்களியாட்ட விவரங்கள்!

இந்திய கிருத்துவத்தின் சீரழிவு: மேனாட்டு கிருத்துவ சீரழிவுகள் இந்திய கிருத்துவர்களையும் அப்படியே பாதித்துள்ளது வியப்பாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், உலகம் முழுவதும் மட்டுமல்லாது, குறிப்பாக இந்தியாவில் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கிருத்துவ பிஷப், பாதிரி, பாஸ்டர் முதலியோர்களது பாலியல் குற்றங்கள், சட்டமீறல்கள், அசிங்கக்கள், ஆபாசங்கள், காமக்களியாட்டங்கள் எல்லைகளை மீறி வெளிப்பட்டுவிட்டன எனலாம்[1]. முன்பெல்லாம், அத்தகைய குற்றங்கள் ஏற்படும் போது, கிருத்துவர்கள் தங்களது ஊடக சாம்ராஜ்ய பலத்தை, ஆதிக்கத்தை பயன்படுத்தி அமுக்கி மூடி விடுவர்[2]. கோடிக்கணக்கில் “நஷ்ட ஈடு” என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து அமுக்கியும் விடுவர்[3]. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் வந்து விட்டபடியால் அல்லது உலகளவில் அவரவர் சர்ச்சுகளுக்கேற்றபடி தங்களது விசுவாசங்களைக் காட்டிக் கொள்ளவேண்டிய நிலை வந்து விட்டப்படியால், விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன.

கிருத்துவத்தில் பாலியல் குற்றங்கள் ஏற்பட காரணம் பைபிள்: கிருத்துவத்தில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் ஏற்பட, பைபிள்தான் காரணம் என்று பைபிள் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஆண்புணர்வு இல்லாத குழந்தை பெற்றெடுப்பு (Immaculate Conception), பெண்கள் எல்லோரும் ஏசுவின் பெண்டாட்டிகள் (Brides of Jesus), ஜேஹோவின் அடிமைகள் (Slaves of Jehovah), முதலிய இறையியல் சித்தாந்தங்கள், கிருத்துவ மனங்களை தாராளமாக ஆட்கொண்டிருந்தன. உண்மையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான கிருத்துவர்கள் அவற்றை தவறாகவே நினைத்ததில்லை, மாறாக, அவற்றை புண்ணியமாக, தேவ மகிமையாக, இறைக்கடமைகாக் கொண்டிருந்தனர்.

கன்னியாஸ்திரீக்குப் பிறகு, ஒரு இளைய பாதிரி சொல்லும் காமக்களியாட்ட விவரங்கள்: கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு 2009, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் “ஆமென்’ என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார்[5].

கே. பி. ஷிபுவின் அனுபங்கள்: தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் கே. பி. ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் (வின்சென்டின் ஒருத்தக்குழுமம்[6])  13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த  24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, “ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்’ ஒரு வைடிகன்தே ஹிருதயமிதா (ஒரு கிருத்துவ துறவியின் இதயத்தில் / Here is The Heart of a Priest) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்[7]. தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.

கத்தோலிக்கச்சபை அவருக்கு உதவவில்லையாம்: “இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: “நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, “இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என[8], சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

பேபல் செமினரியில் பாலியல் ரீதியாக துபுறுத்தப் பட்டது: ஷிபு ஒரு அழகான, இளமையான பாதிரி. பார்ப்பதற்கு, இந்தித்திரைப்பட ஹீரோ மாதிரி இருப்பான். “உன்னழகைக் கண்டுக்கொண்டால், பெண்களுக்கே ஆசை வரும், பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்”, என்பது ஒரு பழிய தமிழ்த் திரைப்ப்படப் பாடல், அது ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடுவது. ஆனால், “உன்னழகைக் கண்டுக்கொண்டால், ஆண்களுக்கே ஆசை வரும், ஆண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்”, என்று பெண் பாடக்கூடிய அளவில் கவர்ச்சிகரமாக இருப்பவன் ஷிபு. ஆக, அவன் சொல்கிறான், “புனேயில் உள்ள, “பபல் செமினரியில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை. பயிற்சிக் காலத்தில், இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர்[9]. இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன[10]. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். 60% கிருத்துவ பாதிரிகள் முதலியோர் பாலியல் ரீதியில் பெண்களை நடத்துகின்றனர்”.

பெண்களும் விட்டுவைக்கப்படவில்லை: மேலும் தொடர்வதாவது, “அவர்கள் கன்னியாஸ்திரீக்கள், விதவைகள், மற்ற சமூகத்தைய பெண்கள் மற்றும் நம்பிக்கையுள்ள பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கல் விடுவதில்லை[11]. பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர்[12]. அது மட்டுமல்ல, ஓரின புணர்ச்சி மற்றும் தன்-புணர்ச்சி (கைமுட்டியடித்தல்) போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும்”,  இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


[1] இவற்றை என்னுடைய பதிவுகளில் காணலாம்: www.christinanityindia.wordpress.com, www.womanissues.wordpress.com, www.socialterrorism.wrdpress.com, etc.

[2] இந்தியாவின் 90% ஊடகங்கள் கிருத்து மற்றும் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுமட்டுமல்லாது, அவர்களுக்கு சொந்தமாகவுல் இருக்கின்றன. ஆகையால், அவர்கள் நினைத்தால், ஒரு செய்தியை வரச்செய்யலாம் அல்லது வராமலும் செய்துவிடலாம். அந்த அளவிற்கு அவர்க்லள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

[3] கடந்த 2009 ல் பாலியல் தவறுகளுக்கு 4500 கோடி நஷ்ட ஈடு கொடுக்கப் பட்டுள்ளது. இப்பணம் தவறு செய்தவர்களுக்காக, செய்தவர்களால் கொடுக்கப் படவில்லை, ஆனால், விஷயத்தை அப்படியே மூடி மறைப்பதற்கு சுர்ச்சுகளால் கொடுக்கப் பட்டவை. ஆனால் அவ்வாறு அனுபவித்த செக்ஸ் பாதிரிகளுக்காக எந்த தண்டனையும் கொடுக்கப் படுவது கிடையாது. இட மற்றம் என்ற பெயரில் மற்ற நாடுகளுக்கு, மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பர்.

[4] வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?, https://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களின்-பாலியல/

வேதபிரகாஷ்,கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!, https://christianityindia.wordpress.com/2010/07/01/கட்டாயப்படுத்தி-மதம்-மாற/

………………………………………………, புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!, https://christianityindia.wordpress.com/2010/07/04/புது-மணப்பெண்-முதலிரவிற/

[5] It may be recalled that a book by Sister Jesmi by name “Amen: Autobiography of a Nun” was also critical of life for Priests and Nuns.

[6] Vincentian Congregation is a clerical society of the Pontifical Right belonging to the Syro-Malabar Archiepiscopal Church in the Catholic fold. Fr. Varkey Kattarath founded this community in 1904 at Thottakom in the State of Kerala, India. It consists of priests and lay brothers who are primarily committed to the cause of evangelization of people especially the poor. This ministry is carried out primarily by the preaching of the Word of God through Popular Missions, Bible Conventions, Residential Retreat Programmes etc in different Retreat Centres and through other pastoral, educational and charitable activities.The Congregation draws its spirit and distinctive character from the life and works and the Common Rules of St. Vincent de Paul who is chosen as its Father and Patron. The Vincentian Congregation was started in 1904 at Thottakom, Vaikom, in the diocese of Ernakulam, Kerala, India.

[7] தினமலர், ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட பாதிரியார், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,23:34 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 08,2010,08:54 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79899

[8] இவையெல்லாம், மனோதத்துவ ரீதியில் கிருத்துவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கையாளும் யுகிதிகள் ஆகும். இருப்பினும், சில மனிதர்களின் மனங்களை அவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்க முடியாது அல்லது அவர்களது எதிர்மறையான எண்ணங்கள் ஒரு நாள் வெளிப்பட்டு, அவர்களை வெளியேற வைத்துவிடும்.

[9] சென்னையில் மாத்யூ, வில்ஹியூம் போன்றவர்கள் இத்தகைய முறைகளை அதிகமாக பலவழிகளில் கையாண்டனர்.

[10] http://www.indianexpress.com/news/after-nun-former-priest-writes-a-tellall-book-on-sexual-exploitation/675649/0

[11] After listening to the confessions of priests, Shibu claims he concluded that 60% of them had had sexual encounters with nuns, widows, society ladies or other faithful women. “Most celibates indulge in self pleasure,” he writes in one place. There were also those who took advantage of poverty of women, orphans and abused children, alleges the former priest, and says ragging of new comers to the order shamefully prevails in seminaries.  Read more: Ex-priest ‘exposes’ clergy’s sex secrets – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Ex-priest-exposes-clergys-sex-secrets/articleshow/6471601.cms#ixzz0z0LHxBdD

http://timesofindia.indiatimes.com/india/Ex-priest-exposes-clergys-sex-secrets/articleshow/6471601.cms

[12] http://www.zeenews.com/news652291.html